20. அமிழ்தினும் இனியவள் அவள்

0
567
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 20

[center]புதிதாய் உணர்ந்தேன்[/center]

[center]பூவுலகும், ஆகாயமும்.[/center]

[center]
[/center]

[center]புதிதாய் நுகர்ந்தேன்[/center]

[center]மழை மண்வாசமும், மலரின் சுகந்தமும்.[/center]

[center]
[/center]

[center]அலையாய் மிதந்தேன்[/center]

[center]உன் காதலில் நானும்.[/center]

[center]
[/center]

[center]எனையே உணர்வேன்[/center]

[center]எனக்கு அவகாசம் தருவாயா? *[/center]

[center]
[/center]

[center]** அன்பனே?!![/center]

மதிய நேரம் ஆயிற்று அதற்க்குள்ளாக எவ்வளவோ விஷயங்களை ரூபன் செய்து முடித்திருந்தான். தன்னுடைய தொழிற்சாலை விஷயமாகத் தொடர்புகள் இருந்த சில பெரிய மனிதர்கள், போலீஸ், வக்கீல் எனத் தன்னிடமிருந்த தொடர்பு எண்களில் தன்னுடைய குடும்பத்தினர் முக்கியமாக அனிக்காவின் குடும்பத்தினருக்கு சம்பந்தப்படாத ஆட்களாகத் தெரிவு செய்து பட்டும் படாமல் விபரம் தெரிவித்து ஆலோசனைக் கேட்டான்.

அதில் ஒருவர் பரிந்துரைச் செய்த டிடெக்டிவ் ஏஜென்ஸியை அணுகினான். அவனுக்கு ஏற்கெனவே அந்தக் கூட்டத்திலிருந்த நபர்கள் யாராவது தவறானவர்களோ?! என்கிற சந்தேகம் இருந்ததால் பிறர் அறியாதவண்ணம் வெளிப்படையாகப் பேசாமல் பெரும்பாலும் மெஸேஜிலேயே தகவல் பரிமாற்றம் வைத்துக் கொண்டான்.

போன் கால்களில் பிறருக்கு புரியாதவிதமாய் நறுக்குத் தெரித்தார் போலப் பேசினான். அங்கிருந்த யாருக்கும் இது குறித்து எதுவும் பெரிதாகத் தோன்றாதவாறு பார்த்துக் கொண்டான்.

உடனே விசாரிப்பது பலன் தரும் என்பதாலும், துப்பறியும் நிறுவனத்தினர் அலுவலகம் அருகாமையில் என்றதாலும் வெகு விரைவாக வெகு சாதாரண உடையில் துப்பறியும் நிபுணர் வந்து விட்டிருந்தார். பார்க்க இளவயதாக இருந்ததால் பரேஷை அங்கு யாருக்கும் வித்தியாசமாகத் தெரியவில்லை. அதிலும் அவரை ஜீவனுடைய நண்பனைப் போலக் காட்டிய வாறு ரூபன் எந்தச் செயலிலும் தலையிடாமல் தம்பியை முன்னே விட்டு செயல் புரிந்து கொண்டிருந்தான்.

அனிக்கா கடலில் மூழ்கிய போது அவளோடு கடலில் குழுவாக விளையாடிக் கொண்டு இருந்தவர்கள் மிகக் குறைவே என்பதால் ஜீவன் பரேஷைக் கூட்டிக் கொண்டு அவர்களை விசாரிக்க அழைக்கச் சென்று வந்தான். பரேஷ் அவர்களுடன் மிகவும் தோழமையோடு பேசிய பாங்கில் யாருக்கும் அவன் பேச்சு நெருடலாகத் தோன்றவில்லை.

நடந்த சம்பவத்தை யாரும் அனிக்காவின் வீட்டிற்க்கு தெரிய படுத்தவேண்டாம். தெரிந்துக் கொள்ள நேர்ந்தால் அவர்கள் பயந்து விடுவார்கள் என்று சொன்னதன் பேரில் அனிக்காவின் தோழமைகள் தாங்களாக எதுவும் சொல்ல மாட்டோம் என்று ஏற்றுக் கொண்டனர்.

அவர்களைப் பொறுத்தவரையில் அனிக்கா கடலில் மூழ்கிய அந்நிகழ்வு மிகச் சாதாரணமான ஒன்று. அனிக்காவின் மயக்கம் பயத்தின் காரணமாகவே என டாக்டரும் குறிப்பிட்டு இருந்ததால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பரேஷின் விசாரணையைக் குறித்துக் கூட ஜீவன் அனிக்கா விஷயத்தில் அளவிற்க்கு அதிகமாகப் பதட்டப் படுவதாக அவர்கள் மட்டில் தோன்றியது. அது அவர்களுக்கிடையேயான உரையாடலிலும் கூட வெளிப்பட்டது, மிக முக்கியமாகத் திவ்யாவிற்க்கு அவனுடைய செயல்கள் ஒன்றுமே சரியானதாகத் தோன்றவில்லை.

பரேஷ் விடைப் பெற்றுச் சென்றதும் திவ்யா ஜீவனிடம் வந்தாள்.

 இப்ப வந்தாங்களே அவங்க யாரு ஜீவன்?”

 அவனா அவன் பரேஷ் …”

 அவங்க பேர் தெரியும் ஆனா அவங்க எதுக்குத் துளைச்சு துளைச்சு எங்கிட்ட கேள்வி கேட்டாங்க.?

 அவங்களுக்கு ஏதோ சந்தேகம் அதான்  ;

 எது நாங்க அவளைத் தள்ளி விட்டுருப்போம்னா?”

இதென்ன புது விதமாய்க் கதை போகிறன்து? என்றெண்ணியவன் அவளைச் சமாதானப் படுத்திய எண்ணியவனாய் ,

 ஏ திவ்யா அப்படியெல்லாம் எதுவுமில்லை. அது சும்மா தான் கடற்கரைனா நீங்க மட்டுமா? இன்னும் எத்தனை பேர் அதே நேரம் கடல்ல குளிக்கிறாங்க  உங்களைச் சந்தேகப்பட்டு இல்லை. அது வேற யாராவது …”

 அப்படி அவ பெரிய இவளா இருந்தா அவ வீட்டிலயே நீச்சல் குளம் கட்டி குளிக்க வேண்டியது தானே? எதுக்கு இங்கே வந்து எங்க கழுத்தை அறுக்கணும்?”

ஏ திவ்யா, நீ என்ன சொல்ற அவ உன் ஃபிரண்ட் தானே?  நீ ஏன் திடீர்னு இப்படில்லாம்? 

 அவ என் ஃபிரண்ட்னா யாரும் எதையும் வந்து என் கிட்ட விசாரிக்கிறதையெல்லாம் நான் எதுக்குப் பொறுத்துக்கணும்? நீயெல்லாம் அப்படித்தானே? அவ பணக்காரின்னு தானே அவ பின்னால சுத்துற?  

கடகடவெனப் பேசி அங்கிருந்து அவள் நகர்ந்து விட்டாள். ஜீவன் திகைத்துப் போய் நின்றிருந்தான்.

சொல்லுங்க பரேஷ்  போனில் ரூபன் பரேஷிடம் பேசிக் கொண்டிருந்தான்.

அந்த இன்சிடெண்ட் நடந்தப்போ அதிகாலை நேரம் என்கிறதுனால கடல்ல நிறைய ஆட்கள் இல்லை பெரும்பாலும் அங்கே இருந்தவங்க எல்லாம் உங்க க்ரூப் ஆட்கள் தான். அதில திவ்யான்னு ஒரு பொண்ணு அவங்க கடல்ல விளையாடிட்டு இருக்கப்போ சம்பவம் நடக்கிறதுக்குக் கொஞ்சம் முன்னாடி ஒருத்தரைப் பார்த்ததா கொஞ்சம் அங்க அடையாளம் எல்லாம் சொன்னாங்க.

 ம்ம்

முகத்தை சரியா பார்க்கலைன்னு சொன்னாங்க. நான் கொஞ்சம் அதிகமா கேள்விக் கேட்டது அவங்களுக்குப் பிடிக்கலை போலிருக்கு… அதுக்கப்புறம் அவங்க வாயை திறக்கவே இல்லை. முடிஞ்சா அவங்க கிட்ட விபரம் கேட்டுச் சொல்லுங்க, அவங்க பார்த்த நபரை ஸ்கெட்ச் வரைய உதவி செய்வாங்களான்னும் கேட்டு சொல்லுங்க.

 ம்ம்… வேற க்ளூ ஏதாவது? 

குறிப்பிட்டுச் சொல்ற மாதிரி க்ளூ கிடைக்கலை. இது பப்ளிக் ப்ளேஸ், அப்ப இருந்ததுக்கு இப்ப பார்த்தீங்களா எவ்வளவு கூட்டமா இருக்கு. இதில யார் யாரை எல்லாம் சந்தேகப் படுறது? இதில பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கிட்டயும் பேசித் தெரிஞ்சுக்கணும். அவங்க தூங்கிட்டு இருக்காங்கன்னு சொன்னதால இப்ப புறப்படறேன். அவங்களுக்குச் சரியானதும் என் கூடப் பேசச் சொல்லுங்க. நான் கிடைச்ச விபரங்களை வைச்சு அடுத்து என்ன செய்யணும்னு யோசிச்சுட்டு சொல்றேன்.

பரேஷ் அந்த இன்சிடெண்ட் நடந்தப்போ நான் ஸ்பாட்ல இருந்ததாலச் சொல்றேன் இது கொலை முயற்சியா தான் இருக்கணும். எனக்கு இதுக்கொரு தீர்வு கிடைச்சாதான் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க முடியும். எனக்குத் தெரிஞ்ச வரை நான் எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன்.உங்களுக்கு வேற என்ன உதவி வேணும்னாலும் சொல்லுங்க. …என்றான் ரூபன்.

நீங்க கவலையே பட வேண்டாம் , சீக்கிரமே நான் உங்களுக்குக் கண்டுபிடிச்சு சொல்றேன் சார்.

பரேஷிடம் பேசி முடித்ததும் ஜீவனிடம் வந்தான் ரூபன். ஜீவன் இன்னும் திவ்யா வீசிய வெடிகுண்டு பாதிப்பிலிருந்து வெளிவரவில்லை. ரூபன் ஜீவனிடம் பரேஷ் கூறியவற்றைத் தெரிய படுத்தினான். அதைக் கேட்ட ஜீவன் தான் எப்படியாவது திவ்யாவிடம் பேசி ஸ்கெட்ச் வரைய சம்மதம் வாங்கி விடுவதாக உறுதிப் படச் சொன்னான். இன்னும் அண்ணனின் முகம் தெளியாததைக் கண்டு என்னவென விசாரிக்க,

 இல்ல நாம வீட்டுல யாருக்கும் இந்த விஷயத்தைத் தெரிவிக்காம செய்றது சரியான்னு யோசிக்கிறேன்?”

 இது சரிதாண்ணா… முதல்ல இது நீங்க நினைக்கிறமாதிரியா இல்லை ஒன்னுமே இல்லாத ஒரு விஷயத்தை நாம பெரிசாக்குறோமான்னு க்ளியர் பண்ணிக்கனுமே? 

 பதில் சொல்லாமல் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பவனிடம்

நீங்க சொல்றதை நான் நம்பறேன், ஆனா பொதுவா யாருமே இதை ஒரு பெரிய விஷயமா எடுத்துக்கலை, அனி மேல யாரும் இவ்வளவு கோபம் வச்சிருக்க வாய்ப்புமில்லை, நான் அதை வச்சிச் சொன்னேன் அதுக்கு உங்களை நம்பலைன்னு அர்த்தம் இல்லை. இப்போதைக்கு இதை வீட்டில தெரிய படுத்தாம இருக்கிறது தான் நல்லது. சொன்னா வீட்ல எல்லோரும் பயந்திடுவாங்களே அண்ணா…

ம்ம்… எல்லோரும் பயந்திடுவாங்கதான். தம்பியின் இரண்டாவது கருத்தை ஆமோதித்த ரூபன், தன்னுடைய உள்ளுணர்வை ஜீவனோ இல்லை யாருமோ நம்பினாலும் சரி இல்லை நம்பாவிட்டாலும் சரி, இந்த விஷயத்தில் முடிவு தெரியும் வரையிலும் முடிந்தவரை அனிக்காவின் பாதுகாப்பை கவனமெடுக்கத் தீர்மானித்துக் கொண்டான்.

பிக்னிக் வந்த எல்லோரும் சிறு சிறு குழுவாக விளையாட்டுகளில் ஈடுபட்டிருக்க மதியவேளை சாப்பாட்டு நேரமும் ஆரம்பித்து இருந்தது. அனிக்கா இன்னும் தூக்கத்தினின்று விழித்திருக்கவில்லை. ரூபன் உணவு உட்கொள்ள மனமின்றியே கடற்கரை நீளத்தை அளந்தவாறு நடைப் பயின்றான். சற்று நேரத்தில் அவன் நட்ட நடு வானத்தில் ஏறி நின்று, வெயிலால் சுட்ட பகலவனால் களைத்துப் போகத் தான் வந்த பஸ்ஸில் ஏறினான். ஆளரவமற்று வெறித்துக் கிடந்த பஸ்ஸின் பின்பகுதியில் சென்று இளைப்பாற இடம் தேடினான்.

அதே நேரம் “பந்திக்கு முந்து” என்கிற பழமொழியை மிகக் கண்ணும் கருத்துமாகப் பின்பற்றும் ஜீவன் தன்னுடைய கையில் உணவை ஏந்தியவனாகத் திவ்யாவைத் தேடி அவள் அருகில் அமர்ந்தான். அவள் அவனைக் கண்டு வெடுக்கென்று எழும்பி முன்னே செல்ல, அவனும் அவளைப் பின்தொடர்ந்தான். அவள் தோழிகள் அவனை விசித்திரமாகப் பார்த்தனர்.

தன்னையே பின் தொடரும் ஜீவனால் திவ்யா சலித்துப் போய்க் கடைசிப் பகுதியில் ஓரமாக இருந்த டேபிளில் தன் உணவைக் கொண்டு சென்று அமர்ந்தாள். தன்னெதிரே அமர்ந்து தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜீவனைப் பார்த்து முறைத்தாள்.

என்னை நிம்மதியா சாப்பிட கூட விடமாட்டியா நீ?

இப்போ நான் என்ன செஞ்சேன், உன் தட்டையா பிடுங்கினேன். சும்மா சீன் போடாத உட்காரு. எழும்பி இன்னும் போய்ட்டிருந்தா கடற்கரைக்குப் போகணும், இல்லன்னா பின்னே கடலுக்கு நடுவில தான் சாப்பிடப் போகணும்.

சீன் போடறேனா? திவ்யாவிற்க்குள் இருந்த டெமோன் விழித்துக் கொண்டிருந்ததை அறிந்தும் அலட்சியப் படுத்தியவனாகச் சிக்கன் லெக் பீஸை கர்ம சிரத்தையாய் ரசித்து, ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

என்ன பார்க்கிற? லெக் பீஸ் வேணுமா? என நீட்டியவனிடம் ……… 

ச்சீ …………

ஹேய் லெக் பீஸ் வேணுமான்னு கேட்டா , நான் இதைத் தரப் போறேன்னு அர்த்தமில்லை., இது என்னோடதாக்கும். உனக்கு வேணும்னா வேற லெக் பீஸ் அங்கே போயி வாங்கித் தரேன்னு சொன்னேன். அதுக்கென்ன ச்சீ  ன்னு சொல்ற என… அவள் பேச்சை அலட்சியப் படுத்தியவனாகத் தன் சாப்பாட்டை ஒரு பருக்கையும் மிச்சம் வைக்காமல் மொக்கினான். எதிரில் இருந்த திவ்யாவிற்க்கு தான் சாப்பிட முடியவில்லை, கொஞ்ச கொஞ்சமாகக் கொரித்துக் கொண்டிருந்தாள்.

சாப்பிட்டு முடித்துக் கை கழுவி வந்தவன் அவள் முழுவதும் சாப்பிடும் வரை பொறுமையாகக் காத்திருந்தான். அவளோ சாப்பிட்டு முடித்ததும் அவனை அலட்சியம் செய்தவளாகக் கடற்கரையோரம் நடைபயிலச் சென்றாள்.

அவளையே பின் தொடர்ந்து வந்த ஜீவனைப் பார்த்து அவளுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. ஏற்கெனவே, தான் பேசியது தவறோவென அவள் மனம் உறுத்திக் கொண்டிருக்க, அவனோ எருமை மாட்டில் மழை பெய்தது போல ஒன்றையும் கண்டு கொள்ளாமல் அவளிடம் பேச முனைவதை என்ன சொல்ல?

இப்போ எதுக்கு என் பின்னாலயே வர்ற நீ?

உன்கிட்ட பேசணும் 

என்கிட்டயா எதுக்கு?

நீ நிறைய விஷயம் தப்புத் தப்பா புரிஞ்சு வச்சிருக்க அதான்…

……………

அனிக்கா என்னோட சைல்ஹுட் ஃப்ரெண்ட் ………

……………

நாங்க ரெண்டு பேரும் கேஜிக்கும் முன்னாடியே க்ளோஸ்  ஏன்னா நாங்க ஃபைட்டிங்க் ஃப்ரண்ட்ஸ்  எப்படிச் சொல்லு?

அவ என் ரிலேட்டிவ், என்னோட அத்தை மக …… .

திவ்யாவின் முகத்தில் சற்றாக ஏமாற்றம் சூழ்ந்ததோ 

அவக்கிட்ட நான் கேர் எடுத்துக்கிறது அவ பணக்காரிங்கிறதால இல்லை…

அவன் வார்த்தையால் அடிப்பட்டவளாய் கேட்டுக் கொண்டிருந்தாள், சொன்ன வார்த்தை திரும்ப வரும் போது எப்படி வலிக்கும்? என்று அப்போது அவளுக்கு அப்போது புரிந்தது. மன்னிப்பை யாசிப்பவளாக அவன் கண் பார்த்தாள். அவனோ அவள் மீது கவனமில்லாதவனாகத் தொடர்ந்தான்.

நான் அவளை விடப் பெரியவன் … கொஞ்சம் தான் அதிகமில்லை புன்னகைத்தவன்  அதான் அவளை நான் நல்லா பார்த்துக்குவேன்னு வீட்ல எல்லோருக்கும் நினைப்பு. அத்தை எப்ப பாரு அவ கூட எங்க போனாலும் “அனிய பார்த்துக்கன்னு  சொல்லாமல் இருந்ததில்லை அதனால தான் நான் அப்படி அவக் கூடயோ இல்ல அவ பின்னாடியோ இருக்கிறது…அண்ட் அதனாலத்தான் எங்களை எப்போதும் சேர்ந்து பார்த்துக்கிட்டிருந்த உனக்கு அப்படித் தோணிருக்கும்னு நினைக்கிறேன்.

பேசி முடித்தவன் அவள் கண் பார்த்தான் அவளின் கண்களில் இருந்த மன்னிப்பின் யாசிப்பை பார்த்து புன்னகைத்தவன்,

நீ கேட்ட மாதிரி என்கிட்ட ஒரு சிலர் கேட்டிருக்காங்க, நான் அவங்களுக்கெல்லாம் பதில் சொன்னதில்லை. சொல்ல தேவையுமில்லை, எங்க ரெண்டு பேர் ஃப்ரண்ட்ஷிப்பை அப்படித்தான் ப்ரூவ் பண்னனும்னு அவசியமும் இல்லைனு அதையெல்லாம் அலட்சியப் படுத்திடுவேன், ஆனா, ஏனோ நீ என்னைத் தப்பா நினைக்கிறது எனக்குப் பிடிக்கலை. அதான் சொல்ல நினைச்சேன்.

என்ன சொல்வதென்றே தெரியாத நிலையில் இருந்தாள் திவ்யா, சென்ற இடம் தெரியாமல் அவள் டெமோன் எங்கேயோ காணாமல் போயிருந்தது.

நான் எதுக்கு இப்பவே வந்து உன்கிட்ட இவ்வளவு விவரம் தெரிவிச்சிட்டு இருக்கேன்னா? … எனக்கு உன் கிட்ட ஒரு உதவி தேவை அதான், இல்லைன்னா நாளைக்குத் தான் உன் போன் நம்பர் வாங்கிப் பேசறதா இருந்தேன்.

ஏதுடா நல்லவன் மாதிரி பேசினது உதவி கேட்கத்தானான்னு நீ நினைப்பியா இருக்கும். இந்த உதவி எனக்கில்ல என் அண்ணனுக்காக, அவனுக்கு அனி கடலில் மூழ்கினதுல யாராவது அதுக்குப் பின்னால காரணமா இருக்காங்களோன்னு ஒரு சந்தேகம். பரேஷ் அவன் ஏற்பாடு செஞ்ச ஆள்தான்.

……………

அண்ணாக்கு நம்ம ஃபிரண்ட்ஸ் எல்லோரும் அவ்வளவு பரிச்சயம் இல்லைன்னதும்தான் பரேஷை உங்க கிட்ட பேச வைக்கிறதுக்கு என் கிட்ட உதவி கேட்டாங்க, நானும் உதவி செஞ்சேன்.

அண்ணாவா? ஆச்சரியமாய் அது ஏன் என்கிற கேள்வி அவள் கண்களில் தொக்கி நிற்க,

உண்மையைச் சொல்லப் போனா நான் இப்போ இங்கே இதுக்குக் காரணம் சொல்லாம விடலாம், இல்லை பொய்யாக் கூட ஏதாச்சும் சொல்லலாம் ஆனா மறுபடிச் சொல்றேன், நீ என்கிறதால என்னால அப்படிச் சொல்ல முடியலை. அவளருகே வந்தவன்.

நான் சொல்லப் போற இந்த விஷயத்தை நீ நம்ம க்ரூப்பில யார்கிட்டயும் சொல்லக் கூடாது, அனிக்கா கிட்டயும் இது பற்றிப் பேசக் கூடாது  ஒ கே  சொன்னவன்… “என் அண்ணா அனிக்காவை லவ் பண்ணுறான்” அதான் என்றான்.

திவ்யாவிற்க்கு பேச்சே எழவில்லை தான் எத்தனை அவசரமாய்த் தப்பு தப்பாகத் தன்னுடைய மனதில் எண்ணி இருக்கிறோம்? தான் பேசிய வார்த்தைகள் எவ்வளவு தவறு?.. என்று மனசாட்சி அவளை இடித்துரைக்கவே மற்றெல்லாவற்றையும் தள்ளி வைத்து விட்டு அவன் கையில் தான் அனிக்காவிடம் எதுவும் சொல்லப் போவதில்லை எனும் விதமாய்த் தன் கையை வைத்தாள். ஜீவனோ அவளின் உள்ளங்கையின் மென்மையைச் சற்று பரிசோதித்த பின்னரே கரத்தை விடுவித்தான்.

சரி இப்ப சொல்லு… என்கிட்ட அண்ணாக்கு என்ன உதவி வேணும் ? காற்றிறங்கிய பலூனாக திவ்யாவின் குரல் ஒலித்தது.

நீ அனிக்கா மூழ்கிறதுக்கு முன்னாடி உங்க பக்கத்தில யாரோ இருந்ததாகவும், அவரைப் பக்கவாட்டுத் தோற்றமா பார்த்ததாகவும் சொன்னேன்னு பரேஷ் சொன்னார், உன்னோட உதவி இருந்தா ஸ்கெட்ச் வரையலாமேன்னு அவங்க அபிப்ராயம். உனக்கு அதுக்குச் சரிவருமா? அப்படின்னா எந்த நேரம் உனக்கு வசதிப் படும்ன்னு சொல்லு?

ம்ம்  சொல்றேன்  என்று கூறியவளை மேலும் சங்கடப் படுத்தாத விதமாகப் பேச்சை தொடர்ந்தான். அவளைச் சகஜமாக்க ஒரு சில மொக்கை ஜோக்குகளைப் பேச்சினூடாகப் போட்டுத் தாக்கினான். முன் போலப் படப் படப் பட்டாசாக அவள் மாற ஆரம்பித்ததை உணர்ந்தான்.

நீ இப்படி இருந்தா தான் நல்லாயிருக்கு திவி …… …என்று மனதில் எண்ணிக் கொண்டவன் விடைபெற யத்தனித்த போது,

ஜீவன் எனக்கு ஒரே ஒரு சந்தேகம் 

சந்தேகமா?… நியாயமா உன் மூளையை யோசிக்க விடக் கூடாதே? அது எனக்கு ஆபத்தாச்சே? என அவள் கூறியதை கேட்காதவாறு நகர முனைய 

‘மரியாதையா பதில் சொல்லிட்டுப் போ’ என அதிகாரமாய்க் கேட்டவளிடம் ஜீவன் வெகு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு திரும்பினான்.

சொல்லு திவ்யா 

இல்லை நீ அடிக்கடி எங்கிட்ட பேசும் போது “நீ என்கிறதால மட்டும் உன்கிட்ட உண்மைச் சொல்லுறேன்னு  ன்னு குறிப்பிட்டியே அதுக்கு என்ன அர்த்தம்?

அதுவா?.. கொஞ்சம் இடைவெளி விட்டான் ஜீவன், ஏனென்றால் பொருத்தமாக வாக்கியம் கோர்த்தாக வேண்டுமே?

அது தான் 

அது என்னன்னா?..

ம்ம் 

ஏன்னா நீ ஒரு நல்லவ, வல்லவ, நாலும் தெரிஞ்சவ 

அவன் வார்த்தையால் டைப் அடிப்பதை அக்கினியாய் கொதிக்கும் கண்களோடு நின்றிருந்தவளுக்கு அருகில் சென்றவன்  ஏன்னா?

……………… .

ஏன்னா நீ டெமோன் திவ்யாவாச்சே  எனக்கென்னவோ பேய்னாலே பயம் அதனாலத் தான் எனச் சொல்லி அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

அவன் செய்கையில் அவள் கோபம் எங்கோ போயிருக்கத் தன்னை மறந்து சிரித்து விட்டிருந்தாள் திவ்யா.

அனிக்கா தூக்கத்தினின்று எழுந்தாள். அவளருகே யாரும் இல்லை. வேளியே வந்தாள். உணவை பரிமாறிக்கொண்டிருந்தவர்கள் இவளைக் கண்டதும் அருகே வந்தனர்.

வா அனி, இப்போ உடம்புக்கு பரவாயில்லையா? கடல் அலை பெரிசா வந்ததும் ரொம்பப் பயந்திட்டியா? இப்போ பரவா இல்லையா?

ஆம் எனத் தலையசைத்தவள், இப்போ சரியாயிடுச்சு  என்றாள்.

உன் சாப்பாடு இங்கே இருக்கு எடுத்துக்கோ… சாப்பிடு, ரூபன் அண்ணாவும் சாப்பிடலை வேற எல்லாரும் சாப்பிட்டாச்சு, நீ அவங்களுக்குக் கொடுத்திடுறியா? நாங்க மறுபடியும் கடலுக்குப் போகப் போறோம்.

சரிண்ணா…

இருவருடைய உணவையும் கொண்டு அறையில் வைத்தவள் ரூபனுக்கு அழைக்கக் கூச்சம் தடுக்க, ஜீவனுக்கு அழைத்து ரூபனை சாப்பிட கூப்பிடலாமென்று விழைந்தாள்.

ஜீவனுடைய போன் நாட் ரீச்சபிள் காண்பிக்கவே வேறு வழியில்லாமல் ரூபனுக்குத் தயக்கத்தோடு அழைத்தாள். அவன் பஸ்ஸில் சென்று அமர்ந்து பலப் பல சிந்தனைகளில் களைத்தவன் அப்போதுதான் அரைத் தூக்கத்தில் இருந்தான். போன் ரிங்க் முழுவதும் அடித்து முடித்தபின் தான் கண்விழித்துப் போனை எடுத்தான்.

அனியா? என்னவாக இருக்கும்? கொஞ்சம் பதற்றம் இருந்தாலும் மறுபடி கால் செய்ய விசையை அழுத்து முன் சட்டென்று மெஸேஜ் வந்து அவன் இன்பாக்ஸில் குதித்தது  .” அத்தான், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?” என்ற சாதாரணமானதொரு மெஸேஜ் அவளுக்கு எதுவும் பிரச்சினை இல்லை என்பதை உணர்த்த ஆசுவாசமாய்,

 பஸ்ஸில்  என்று சுருக்கமாய் பதிலளித்தான் …… 

சாப்பிட வருமாறு அவனை அழைத்தது அடுத்த மெஸேஜ்,

 பசியில்லை  என்று பதிலளித்தவனுக்கு அவளது அன்பான விசாரிப்பு மிகவும் இதமாக இருந்தது. இதற்காகத் தானே அவளை அவனுக்கு அவ்வளவாகப் பிடிக்கும். குறிப்பிட்ட ஒருவர் என்றில்லாமல் எல்லாரிடமுமாய், ஐந்தறிவு மிருகங்களிடமும், ஓரறிவு தாவரங்களிலும் எல்லாவிடமும் ஒரே போல அவள் காட்டும் அன்பும் அக்கறையும் என மனதில் அவளைச் சிலாகித்தவன் அவளை நேசித்ததற்காகப் புளங்காகிதம் கொண்டான் தன் மனதை அவளைத் தேர்வு செய்ததற்க்காக மற்றொரு முறை பாராட்டிக் கொண்டான். அவளைக் குறித்த எண்ணங்கள் அவன் முகத்தில் புன்முறுவல் கொண்டு சேர்க்க அப்படியே மறுபடியும் தலைச் சாய்த்துக் கண்ணயர்ந்தான்.

அனிக்காவிற்க்கு என்ன செய்வது? என்று புரியவில்லை. முதலில் தன் பசிக்கு பதிலளிப்போம் என்றவளாக உணவை சாப்பிட ஆரம்பித்தாள். அதற்க்குள்ளாக அவள் மயங்கிய நேரத்தில் அவளைப் பரிசோதித்திருந்த அவர்கள் பள்ளிக்குழுவில் இருந்த அந்த மருத்துவர் அவளது தோழியர் சிலரோடு கூட வந்திருந்தார். ஒருவேளை அவள் சாப்பாடு வாங்கி வரும் நேரம் இவளைப் பார்த்த யாரோ இவள் விழித்து விட்டதாக, தகவல் சொல்லியிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அவள் உடல் நலத்தை விசாரித்தவர்கள் அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தனர்.

மறுபடி ஒருமுறை அவளைப் பரிசோதித்து விட்டு வலி நிவாரணி மட்டும் ஒன்று சாப்பிடச் சொல்லி மருத்துவர் விலகினார். அனைவருடைய அன்பில் கவனிப்பில் அவளுக்கு இதமாய் இருந்தது. ஜீவனை மறுபடியும் தொடர்பு கொள்ள முயன்றும் ஏனோ அவன் தொடர்பு கிடைக்கவில்லை. ரூபனுக்கு உணவை அனுப்ப வேண்டுமே என்று அவள் மனம் முரண்டியது. வெளியே எட்டிப் பார்த்தால் அங்கு யாருமில்லை. தன்னைப் பார்க்க வந்த தோழியரும் மாத்திரைச் சாப்பிட்ட பின் மறுபடி அவள் உறங்கப் போகிறாள் என எண்ணியவர்களாக அவன் ஜீவனுக்குப் போன் செய்ய முயலும் தருணம் திரும்பச் சென்றிருக்க அவர்களிடமாவது உணவை ரூபனிடம் சேர்ப்பிக்க உதவி கோரியிருக்கலாம் என்று மிகத் தாமதமாய் உணர்ந்தாள்.

பஸ் அருகில் தானே இருக்கிறது என்று எண்ணியவளாக ரூபனுக்காகத் தானே உணவை எடுத்துச் செல்ல கிளம்பினாள். காலையில் இருந்த கூச்சம் எங்கோ காணாமல் போய்த் தான் செய்ய எண்ணியவற்றைச் செய்யும் தீவிரம் மட்டும் அவளிடம் இருந்தது. சற்றுப் பின்னே யாரவன் இவர்கள் வயதை ஒத்த வாலிபன். ஒருவேளை நம் ஸ்கூலின் பழைய ஸ்டூடண்டாக இருக்குமோ? நமக்கு ஞாபகமில்லாத நபர் போலும் என்றெண்ணியவள்,

ஹாய் நீங்க xxx……School & college Reunion Group தானா? எனக் கேட்டு புன்னகைத்தாள்.

ஆமாம் என அவனும் புன்னகைக்க 

இந்த லன்ச் ஐ அந்தப் பஸ்ல ரூபன்னு ஒருத்தங்க இருக்காங்க அவங்களுக்குக் கொடுத்திருவீங்களா ப்ளீஸ் 

ஒ நோ  நான் கொஞ்சம் அவசரமா அந்தப் பக்கம் போகணும் கடந்து சென்றான் அவன்.

அப்படின்னா நான் தான் போகணும் போல உள்ளத்துத் தயக்கத்தை மறுபடி வென்றவளாக முன்னேறினாள்.

அவளை இன்னொருவன் பின்தொடர அவனைச் சட்டென்று மறித்தான் அனிக்காவிடம் சற்று முன்பு பேசியவன்.

எஸ் சர் 

வாட் 

இந்த அட்ரஸ் எங்கிருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா சர்? என்றவனாகத் தன்னுடைய மொபைலிலிருந்த ஒரு அட்ரஸைக் காட்டி விசாரிக்க 

திகைத்தவன் அங்கிருந்து நகரவும் இயலாமல் அவன் கேட்ட கேள்விகளுக்குப் பதில்கள் சொல்லவும் இயலாமல் திகைத்தான். அதற்க்குள்ளாக அனிக்கா பஸ்ஸில் ஏறி விட்டிருந்தாள்.

ச்சே  என மனதிற்க்குள் சலித்தவனாய், நான் இந்த ஏரியாவுக்குப் புதுசு  வேற யார்கிட்ட வேனும்னா கேளுங்க  என்று சொல்லி அங்கிருந்து அகன்றான் விக்ரம்.

அவன் மனதிற்க்குள் மறுபடி கனல் வீச்சு….

 அது ஏனோ தெரியவில்லை ரூபன் விஷயத்தில் மட்டும் தான் எடுத்த காரியம் ஒன்றையும் முழுமையாகச் செய்ய முடியாமல் போவது நினைத்து அவனுக்கு மிகவும் வேறுப்பாக இருந்தது. அதிகாலையிலேயே அவர்கள் பிக்னிக் வரும் மட்டும் பின்தொடர்ந்து வந்தது. சூரிய உதயத்தில் அவன் கண்கள் முன்னே நிகழ்ந்த ரூபனின் காதல் அரங்கேற்றம், அந்தப் பெண்ணின் கண்களின் வெட்கம் கூச்சம் எல்லாம் கண்டு அவன் வெந்து கொண்டிருந்தான்.

ஹாஸ்டலில் இருக்கும் வரையில் அவன் ஒரு போதும் ரூபனின் முகத்தில் புன்னகையைக் கண்டதில்லை. அந்த வெளிறிய, களையிழந்த முகம் அதுவே அவனுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. இங்கென்னவென்றால் புன்னகைத்துக் கொண்டு பூரித்தவனாக, மணிக்கணக்காக ரூபன் மெய் மறந்து இருக்கிறான்.

எனக்குத் தீமைச் செய்தவன் என் பற்களை உடைத்தவன் தனக்குப் பிடித்த பெண்ணோடு காதல் சொல்கிறான், மனம் விட்டுச் சிரிக்கிறான். ஆனால், என்னால் மட்டும் எந்த ஒரு பெண் முன்பும் மனம் விட்டு புன்னகைக்க முடியவில்லை. எவ்வளவுதான் நவீன முறையில் முன்பற்களை அவன் வடிவமைத்திருந்தாலும் அவன் மனம் விட்டு புன்னகைக்க இயலாமல் தாழ்வு மனப்பான்மை அவனைக் கொன்று கொண்டிருந்தது. இவ்வளவுக்கும் அவனது தோற்றம் அப்பழுக்கில்லாத ஆண்மை நிறைத் தோற்றம். நிலாவின் களங்கம் போல, அவனுருவில் வாழ்நாளைக்குமாய்க் கருப்புப் புள்ளியாக ரூபன் விக்ரமின் பற்களை மாற்றி அமைத்து விட்டான்.

அந்த கல்லூரி சம்பவத்திற்குப் பின்னர் எப்பொழுதும் அளவாக யோசித்துச் சிரிக்க வேண்டிய நிர்பந்தம் விக்ரமுக்கு ஏற்பட்டு விட்டிருந்தது. நெருங்கிப் பழகிய பின்னர் உண்மைத் தெரிந்து அது ஏன்?, எப்படி? என்று கேட்கும் போதெல்லாம் அவன் சிறு வயதில் தான் கீழே விழுந்து விட்டதாகக் கட்டுக் கதைகள் கூறி சமாளிப்பான்.

ஆனாலும் எப்படியாவது சிலர் உண்மைத் தெரிந்து வைத்துக் கொண்டு அவனிடமே நேரடியாகக் கேட்டிருக்கின்றனர். தான் தன்னுடைய குறைகளைப் பெரிது படுத்தும் வரை மட்டும்தான் பிறரும் தன்னை எள்ளி நகையாட முடியும். தனக்குத் தன்னுடைய குறைகள் நிறையாகத் தோன்றுமானால் அல்லது அவற்றைப் பெரிது படுத்தாமல் அலட்சியம் செய்தோமானால் தன்னை யாராலும் எவராலும் அவமானப் படுத்த இயலாது என்னும் உண்மையை உணராதவனாக, அவன் தினம்தோறும் பழியுணர்ச்சியில் துடித்துக் கொண்டிருந்தான்.

ரூபனை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தோன்றியதெல்லாம் ஒன்றே தான் ‘தன்னை ஆயுளுக்கும் சிரிக்க முடியாமல் செய்து விட்டு இவனுக்கெதற்கு இந்தச் சிரிப்பு?’

உன்னையும் என்னைப் போல ஆயுளுக்கும் சிரிக்க முடியாதபடி செய்கிறேன் பார்? எனச் சூளுரைத்தவன் பிறர் அறியாமல் ரூபனுடன் கடற்கரையில் கண்ட அந்தப் பெண் இருக்கும் கடல் பகுதி நோக்கிச் சென்றான். அவனுடைய நீருக்கடியில் நீச்சலடிக்கும் திறமையின் உபயத்தால் யாரும் அவனைக் கண்டு கொள்ள இயலவில்லை.

சம்பவம் நிகழ வேண்டுமென்று தான் குறித்திருந்த சற்று நேரம் முன்பு சில அடிகள் தூரம் நின்று தன் வேட்டைப் பொருளைக் கண்ணுற்று கணக்கிட்டவன் கடலினுள் நீச்சலடித்து மூழ்கி, அலை ஆவேசமாய் அவர்களைக் கடந்து செல்லும் சில நொடி நேரம் வாகாக அவளின் கால்களைக் கடல் நீரினுள்ளே இழுத்து சில அடிகள் தள்ளி இழுத்து மூழ்கடித்தான். அப்போது மூச்சுக்கு திணறிய அவளின் முதுகில் தன் முழுப் பலத்தைக் கூட்டி அவளை தண்ணீருக்குள் அமிழ்த்தினான்.

சட்டென்று ஏதோ தவறாய் தோன்றிட தன் வேட்டையைப் பாதியில் விட்டுச் செல்லும் மிருகமாய் ஏமாற்றத்தோடு அவளை விட்டுத் தள்ளிச் சென்றான். சற்றுத் தள்ளி நின்ற ஆடவர் குழுவில் தானும் நின்று கொண்டு அங்கு நிகழ்கின்றவற்றைக் கவனிக்க ஆரம்பித்தான்.

ஆச்சரியம் மேலிட்டது  ரூபன் தான்  இவ்வளவு சீக்கிரமாய் அவன் அந்த இடத்திற்கு எப்படி வந்திருப்பான்? அவனுடைய விழிகளின் தேடல், உடல் பாவனை அத்தனையும் அவளுக்கான அவனின் உணர்வுகளை தெரிவித்தது. அப்போதும் கடலுக்குள் ஆழ்ந்த அவள் அவனுக்குக் கிடைக்கக் கூடாது என்றே இவன் மனதிற்குள் கொக்கரித்தான். என்ன எண்ணி என்ன? கடைசியில் அவன் கண்டு பிடித்து விட்டானே?

அவனறியாமலே ரூபன் மறுபடியும் விக்ரமிற்க்கு தோல்வியை அளித்திருந்தான். இப்போதும் என்னைத் தோற்கடித்து விட்டான் உக்கிரமாய் விக்ரம் எண்ணினான் அவன் மனதில் வெஞ்சினம் பரவியது. அவனுக்குள் எழுந்த உக்கிரமான பழியுணர்ச்சி மீண்டும் பற்றி எரிந்தது.

ரூபனுக்குத் தண்டனைக் கொடுக்க வேண்டுமானால் தான் அந்தப் பெண்ணிற்க்கு தண்டனைக் கொடுப்பது மட்டுமே போதுமானது என்ற முடிவிற்க்கு அதன் பின்னர் நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் வரவழைத்து இருந்தது. விக்ரம் தான் எண்ணியவற்றை அன்றே ஈடேற்ற எண்ணினான்.

அதற்காகத் தகுந்த நேரத்திற்காகக் காத்திருந்தான். அவனுக்கு அங்கு நிகழ்ந்து கொண்டிருந்த ஓரிரு நிகழ்வுகள் ஏதோ உணர்த்தின. ஆனாலும். அவனுக்குத் தெளிவாக ஒன்றும் புரியவில்லை. அந்தப் பெண் மறுபடி வந்தால் யாருமில்லாத இடத்திற்க்கு கூட்டிச் சென்று ரூபனுக்கு எத்தனை துன்பம் தர வேண்டுமென்று எண்ணியிருக்கின்றானோ அத்தனையும் அவளுக்குப் பரிசளித்துக் கடலில் நிறைவேற்ற இயலாத தன்னுடைய வேலையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென்று காரை மறைவில் நிறுத்திக் காத்துக் கொண்டிருந்தான்.

ஆனால், தான் அவளை அணுகும் முன் தடுத்தாற்கொண்டு தன் எதிரில் வந்த அந்த நபர் யார்?.. அந்த அட்ரஸ் கேட்டவன்? நிச்சயமாய் அது சாதாரண நிகழ்வு அல்ல. அவளுக்கு முற்றும் முழுவதுமாய்ப் பாதுகாப்பிற்க்கு ஏற்பாடு செய்து விட்டுதான் இந்த ரூபன் அமைதியாக இருக்கின்றான்.

நான் உன்னைச் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருந்தேன் ரூபன், நீ அப்படி இல்லை போலிருக்கிறது.சபாஷ் அதையும் பார்க்கலாம், எனக்குச் சமமாய்ச் சவால் விடும் உன்னிடம் மோத எனக்கும் மிகப் பிடித்திருக்கின்றது. நீயா நானாவென்று பார்ப்போமா? காரின் மேல் சாய்ந்திருந்தவன் கண்களில் வெறி துலங்க, பற்கள் நெறிபட அகோரமாய் இளித்தான்.

அனிக்கா பஸ்ஸிற்க்குள் வந்து விட்டிருந்தாள். கையோடு கொண்டு வந்திருந்த உணவையும் தண்ணீரையும் நடுப் பகுதியில் இருந்த சீட் ஒன்றில் வைத்து விட்டு அவனைத் தேடினாள். சற்றுப் பின்னாலிருந்த சீட்டில் பாதுகாப்பற்ற குழந்தைப் போலத் தனக்குள்ளே ஒடுங்கியவனாகக் களைத்தவனாய் கண்கள் மூடிக் கிடந்தான் ரூபன்.

அத்தான் 

சட்டென்று எழும்பி அமர்ந்தவன் தன் கம்பீரம் அனைத்தையும் ஒரு நிமிடத்தில் மீட்டெடுத்தான்.

என்னம்மா?  .என்னாச்சு?  அவளுக்கு ஏதோ ஒன்று என்பது போல அவளைத் தலை முதல் கால் வரை ஆராய்ந்தான். பார்வையில் விகல்பம் இல்லையெனினும் அவளுக்குத் தான் சங்கடமாகப் போயிற்று. அவளுக்குப் அவன் இன்னும் அவளை உணர்வில்லாதவளாகப் பார்த்த நினைவினின்று வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருப்பது புரிந்தது. அவன் முன் அமர்ந்தாள்.

எனக்கு ஒண்னுமில்ல அத்தான், தூங்கி எழுந்ததும் ஃப்ரெஷ் ஆயிட்டேன்.

அவளது களைத்த முகம் இவனுக்குப் பார்க்க இயலவில்லை. இதுதான் உன் ஃப்ரெஷ்ஷா? என மனதிற்க்குள் நினைத்தவன் டாக்டர் வந்து பார்த்தாங்களா? எதுவும் மெடிசின் 

‘கொஞ்சம் பெயினா இருந்தது அதான் டாப்லேட் தந்தாங்க, நான் சாப்டேன்’ என்று வெள்ளந்தியாய் சிரித்தாள்.

அப்படின்னா ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே? இங்கே எதுக்கு வந்த?

நீங்க இன்னும் சாப்பிடல அதான்  என்று இழுத்தவளிடம் அவனால் கோபப்பட முடியவில்லை. அவசரமாய் எழுந்து பஸ்ஸின் கீழிறங்கி தன் கையைக் கழுவியவன் அவள் கொண்டு வந்திருந்த உணவை பசிக்காவிட்டாலும், கொண்ட துயரத்தால் தொண்டைக்குள் இறங்காமல் சண்டித்தனம் செய்தாலும் கட்டாயமாக ஒரு பருக்கை மிச்சம் விடாமல் தண்ணீரைக் குடித்தே விழுங்கி வைத்தான்.

நான் சாப்பிட்டேன், நீ போ … மாத்திரை வேற போட்டிருக்கப் போய்ப் படுத்து தூங்கு 

சரி அத்தான் 

தன்னுடைய சீட்டைத் தாண்டிச் சென்றவளை நிறுத்தினான்.

என்னவென்று பார்த்தவளின் தயக்கம் புரிந்தும் தன்னைத் தடுக்கவே இயலாமல் அவள் நெற்றியிலும், கழுத்திலும் தன் கரம் பதித்துக் காய்ச்சல் இருக்கின்றதோ? எனப் பரிசோதித்தான், இல்லையென்று அறிந்து திருப்தியுற்றான். சட்டென்று அவள் தலையில் பதிந்தது அவன் வலக்கரம் வலியுற்ற பகுதியை வருடிக் கொடுக்கும் ஸ்பரிசம் அது.

நான் உன் முடியைப் பிடிச்சு இழுத்திருந்தேன் அனி …… .உனக்கு தலை இப்போ வலிக்குதா?

பேச்சற்றவளாய் இல்லை எனத் தலையசைத்தவளை தன்னைக் கடந்து செல்ல அனுமதித்தான்.

அனிக்கா முன்னே செல்ல அவளுக்கு இடைவெளி விட்டு அவள் செல்லும் தூரம் முழுக்க அவளைப் பின்னே தொடர்ந்து கொண்டிருந்தான் ரூபன்.[center]என்னை விட்டுப் பிரிந்து[/center]

[center]அவ்வானம் கூட[/center]

[center]ஒருவேளை செல்லலாம்.[/center]

[center]
[/center]

[center]அவ்விண்ணின் தூரம் தொட்டு[/center]

[center]எனை ஏதோ ஒரு நாள்[/center]

[center]வெண்ணிலவும் கூடத் தவிர்க்கலாம்.[/center]

[center]
[/center]

[center]அந்நிலாவொளியில் வெளிவந்து நடமாடும்[/center]

[center]வண்டுகளும் கூட[/center]

[center]ரீங்காரத்தில் என்னைப் பழிக்கலாம்.[/center]

[center]
[/center]

[center]எத்தனை உதாசீனம் நேர்ந்தாலும்[/center]

[center]துன்பமில்லை[/center]

[center]பெண்ணே எனக்கு.[/center]

[center]
[/center]

[center]ஒரு சிறு துன்பம்[/center]

[center]உனை அணுகும்[/center]

[center]பொழுது மட்டும்…[/center]

[center]
[/center]

[center]என் உயிர் பிரியும்[/center]

[center]வேதனை தரும்[/center]

[center]
[/center]

[center]பெண்ணே எனக்கு[/center]

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here