21. அமிழ்தினும் இனியவள் அவள்

0
454
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 21

[center]என் காதலை உன்னிடம்[/center]

[center]சொல்லும் வரை[/center]

[center]கனத்திருந்தது என் மனது[/center]

[center]அக்காதலைச் சொல்லியே[/center]

[center]ஆன பின்னே இப்போது[/center]

[center]களைத்திருக்குது என் மனது[/center]

[center]ஒரு காதல் பார்வை…[/center]

[center]அதை நீ பார்ப்பாயா?[/center]

[center]ஒரு காதல் வார்த்தை…[/center]

[center]அதை நீ சொல்வாயா?[/center]

[center]ஒரே ஒரு சம்மதம் அதைத் தந்தே[/center]

[center]என் நெஞ்சினில் பூ பூக்க[/center]

[center]நீ செய்வாயா?[/center]

ஒரு நாளின் ஒரு பொழுதைப் போல ஒரு வாரம் அவசரமாய்க் கடந்து விட்டிருந்தது. பிக்னிக் அன்று அனிக்கா தனக்குக் கடலுக்குள் நிகழ்ந்த சம்பவத்தைக் கூறும் போது கொண்ட பயத்தையும், நடுக்கத்தைப் பார்த்த போது ரூபனின் கோபம் முன்னிலும் பன்மடங்காகி இருந்தது. அந்தச் சம்பவம் குறித்து அவள் மிகவும் பயந்து விடக் கூடாது என்பதற்காகவே அண்ணனும் தம்பியும் அதைப் பெரிது படுத்தாதவாறு வெளிக்காட்டிக் கொண்டார்கள், ஜீவன் அப்பேச்சை மாற்றி அவளைக் கலகலக்க வைத்தான். அவளுடைய பாதுகாப்பிற்கான ஏற்பாட்டைத் துப்பறியும் நிறுவனத்தின் பதில் கிடைக்கும் வரை தொடர ரூபன் கேட்டுக் கொண்டிருந்தான்.

அன்று டிடெக்டிவ் ஏஜென்சியினர் கேட்டுக் கொண்டவாறே ரூபனும் ஜீவனும் அனிக்காவின் அருகாமையில் இல்லாமல் தொலைவில் இருக்க , அவள் ரூபனைத் தேடி பஸ்ஸிற்கு வந்த அந்த மதிய நேரம் யாரோ ஒருவர் அவளைப் பின்தொடரவிருந்ததாகக் கிடைத்த தகவல் வேறு ரூபனை மிகவும் பதட்டப் படுத்தி இருந்தது.

ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி ஏராளமான ஆர்டர்களால் ஃபாக்டரியில் குவிந்திருந்த வேலைகள் ரூபனை மூச்சடைக்க வைத்தனவென்றால், இந்தப் புதுப் புதுப் பிரச்சினைகளும் மேலும் திணறடிக்கச் செய்தன.மற்ற பிரச்சினைகளோடு கூட அவன் அனிக்காவிடம் காதல் சொன்ன நேரம் முதலாக, அவள் தன்னிடம் யோசித்துச் சொல்கிறேன் என்று சொன்ன சொல்லுக்காக தினம் தோறும் எதிர்பார்த்து எதிர்பார்த்து அவன் ஏமாந்து கொண்டிருந்தது வேறு அவனைப் படுத்தி வைத்தது. ஏதோ எதிர்மறையாகச் சொல்லாமல் இப்படியாவது சொன்னாளே என்கிற ஆறுதல் ஒரு பக்கமும், சின்னதான சஞ்சலம் மறுபக்கமுமாய் அவனை வாட்டியது. ஏதோ கைப் பொருளை களவு கொடுத்து விடுவோமோ? என்பதைப் போன்ற பரிதவிப்பிலிருந்து விடுபட, சீக்கிரமாய் அனிக்காவை திருமணம் செய்வது ஒன்றுதான் வழி என்று அவனுக்குத் தோன்றியது.

அன்றிரவு வழக்கமான ஜீவனுடனான உரையாடலில் தன் எண்ணங்கள் அத்தனையையும் ரூபன் புலம்பி தள்ளினான்.

வழக்கம் போல ஜீவன் அதைக் கேட்டு கிண்டலாகச் சிரித்து வைக்க,

என்னடா உனக்குச் சிரிப்பாயிருக்கு?

உன் மேரேஜ் அரேஞ்ச்ட் ஆ தான் முடியும் நீ வீணா லவ் மேரேஜ் செய்ய ட்ரை செய்யாத 

எப்ப பார்த்தாலும் எடக்கு மடக்கா தான் பேசுவியாடா?  . என் மேரேஜ் அரேஞ்ச்ட் தான் லவ் கம் அரேஞ்ச்ட் மேரேஜ்… கண்களில் காதல் மின்ன சொன்னவனைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தவன்,

நாங்கள்லாம் உண்மைதான் பேசுவோம் அதான் உனக்கு எடக்கு மடக்கா தெரியுது 

நானே அவ எப்ப பதில் சொல்லுவான்னு பார்த்துட்டு இருக்கேன் நீ என்னடான்னா இப்படிச் சொல்லுற? 

உனக்கு பிடிச்ச ஆள் அப்படி, அதுக்கு நான் என்ன செய்யிறது. அவ சட்டுன்னு உன்னை எனக்குப் பிடிக்கும்னு உன்கிட்ட வந்து பதில் சொல்வான்னு நினைக்கிறியா? அது கொஞ்சம் கஷ்டம் தான். அவளுக்கு அவ அப்பா, அம்மா, அண்ணா எல்லோரும் தான் ரொம்ப முக்கியம், ஸ்கூல்லயே ரொம்பப் பயந்து தான் நடந்துக்குவா. நாம இப்படிச் செஞ்சா அவங்களை ஹர்ட் செய்யற மாதிரி ஆகிடுமோன்னு யோசிக்கிற குணம் வேற 

எனக்கு அவளைப் பத்தி நல்லா தெரியும் அதான் அப்படிச் சொன்னேன், அதுக்கு நான் உன் காதலுக்கு எதிரின்னு அர்த்தம் கிடையாதுண்ணா, என்னால ஓரளவுக்கு அவ மைண்ட ரீட் செய்ய முடியும் அத வச்சி அவ இப்ப எப்படி யோசிச்சிட்டு இருப்பான்னு சொன்னேன்.

ம்ம்  அப்ப அவ எனக்குச் சம்மதம் சொல்ல மாட்டாங்கிறியா? பெருமூச்செரிந்தான்.

எதுக்கெடுத்தாலும் ரூல்ஸ் பேசற ஆள் அவ, பின்ன எப்படி இருப்பா?,போன வாரம் அவ பெஸ்ட் ஃபிரண்ட் சில்வியா மேரேஜ்க்கே அவ போகலை 

ஏன் லவ் மேரேஜ்ங்கிறதாலயா? அவங்க பேரண்ட்ஸ் ஒத்துக்காத மேரேஜா? 

அப்படி இல்ல அது அரேஞ்ச்ட் மேரேஜ் தான். அந்த வெளி நாட்டு மாப்பிள்ளைக்கு ஒரு வாரம் தான் லீவு இருந்துச்சு, சர்ச் ஏற்பாடு எல்லாம் செய்ய குறைந்த பட்சம் இரெண்டு மூன்று வாரங்களாவது ஆகும் என்கிறதால நேரமில்லைனு சொல்லி ஹால்ல மேரேஜ் அரேஞ்ச் பண்ணிருந்தாங்க,

ம்ம்  அது தப்பா என்ன? …

என்னமோ அது தப்பாம் என்கிட்ட வாக்குவாதம் பண்ணிட்டு இருந்தா ஹோலி கம்யூனியன் (Holy Communion) க்ளாஸ்ல படிச்சதை மறந்திட்டியாடா ஜீவா? திருமணம் செய்யிறது எவ்வளவு பெரிய மண்டபமோ இல்லை ஆயிரமாயிரம் பேர் இருக்கிற பெரிய கூட்டமோ எதுவாக இருந்தாலும், சர்ச்ல கடவுள் முன்னாடி செய்யாத திருமணம் அங்கீகரிக்கபடாத திருமணம்னு ஃபாதர் நமக்குச் சொல்லி தந்தாங்கள்லன்னு என் மண்டையை உருட்டினா  அதனால சர்ச்க்கு விரோதமான திருமணத்துக்கெல்லாம் மேடம் போக மாட்டாங்களாம்.

ஹ ஹா எனக்கொன்னும் அப்படி எல்லாம் ஃபாதர் சொல்லி தந்தது இப்ப வரை ஞாபகத்தில இல்லை. நமக்குத்தான் என்ன படிச்சாலும் அடுத்த நாளே மறந்திடுமே? ஆனாலும் இவளுக்கு இவ்வளவு ஞாபகசக்தி இருக்கக் கூடாது? …

**(Holy communion class என்பது கத்தோலிக்கத் திருச்சபையில் 9, 10 வயதினருக்கான 1 வருட காலத்திற்கான திருச்சபை அடிப்படைக் கோட்பாடுகள், ஜெபங்கள் கற்றுக் கொடுக்கப்படும் மறைக் கல்வி வகுப்புக்கள் ஆகும்.அது நிறைவு பெற்றதும் சிறுவர் சிறுமியர் Holy communion எனும் திருவருட்சாதனம் பெற்றுக் கொள்வர்)

தம்பி அனிக்காவைக் குறித்து கூறியதைக் கேட்டு மென்மையாகப் புன்முறுவல் செய்தான் ரூபன்.

ஹோலி கம்யூனியன் அப்ப நமக்கு ஒரு 10 வயசு இருந்தாலே பெரிய விஷயம். அதையே இன்னும் இப்படிப் பிடிச்சு வச்சிட்டு இருக்கா. எல்லாத்துலயும் ரூல்ஸ் பார்க்கிறவ அவ இனிமே உன் புரபோசலை யோசிச்சு, முடிவெடுத்து அவ்வளவு தான். பேசாம நீ வீட்ல சொல்லி கல்யாண விஷயம் பேசச் சொல்லு 

ஹ்ம் சொல்லத்தான் போறேன், ஆனா அதுக்கு முன்னாடி அவளுக்கு என்னைக் கொஞ்சமாச்சும் பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்கு. டைரக்டா இல்லாட்டாலும் இன்டைரக்டாவது ஒரு சின்ன க்ளூ கிடைச்சிட்டாலும் கூடப் போதும்  கனவில் ஆழ்ந்து கொண்டு இருந்தவனிடம்

சரி சரி செய்யறதை சீக்கிரமா செய், உன்னால எனக்கும் மேரேஜ் லேட்டாயிரும் போலயிருக்கு எனப் பந்தா காட்ட,

உனக்கு இப்பவே மேரேஜ் கேட்குதா என ரூபனும் பதில் கொடுக்க, தொடர்ந்த உரையாடல்களில் ஒருவழியாகத் தன்னுடைய சிந்தனைகள் தந்த பாரத்தினின்று விடுபட்டான் ரூபன்.

அனிக்காவிற்கோ இன்னும் திகைப்பிலிருந்து வெளிவராத நிலைதான். ஆனால், மனம் என்னவோ ஆனந்தமாய் இருந்தது. ஷைனி ரூபனை நெருங்கி வரும்போதெல்லாம் அவளுக்கு ஏற்பட்ட அந்த ஒவ்வாமை உணர்வின் காரணம் முழுதாய்ப் புரிந்தது. தொடர்ந்து தீபனின் திருமணம் அன்று நிகழ்ந்த உரையாடலில் ரூபன் சொன்னவை ஞாபக பெட்டியினின்று வெளிவந்து ஆட்டம் போட்டது.

அன்று அவன் எடுத்த அந்தப் போட்டோ குறித்து அறிந்து கோபம் வந்தபோதும் அவனிடம் போய்ச் சண்டையிடாமல் இருந்தது ஏன்? கண்முன்னே அவர்கள் பேசுவதைக் கேட்டும், அதைக் கேட்டுக் கோபம் கொள்ளாமல், தன் வீட்டில் சொல்லாமல் இருந்தது ஏன்? புரிந்ததும் புரியாததுமான உணர்வில் அவள் திளைத்தாள்.

நான்கு வருடங்கள் ஆகிவிட்டது அவன் மாறியிருப்பான் என்று ரூபனின் தொழிற்சாலையில் பணி புரிய சேரும் முன்பு எண்ணியது ஞாபகத்தில் நிழலாடியது. அவன் மாறவே இல்லை, மாறவும் மாட்டான். சாதாரண வேலையிலிருந்தவன் தன்னை இவ்வளவாய் உயர்த்திக் கொள்ள நானா காரணம்? வியப்பாக உணர்ந்தாள் அவள்.

பல நாட்களாய் சிந்தனையில் கண்டு கொள்ளாமல் விட்டிருந்த பல்வேறு நினைவுத் துண்டுகள் மெதுவே ஒன்றாய் இணைந்தன. இணையும் போது அவற்றில் இருந்து எழுந்த சுகந்தம்… காதல் சுகந்தம் அவளை அடித்து வீழ்த்திச் சென்று கொண்டிருந்தது.

அதிலும் தனக்கொரு துன்பம் என்றதும் அவன் தன்னையறியாமல் பரிதவித்த விதம், இறுகிப் போனவனாக நின்ற தோற்றம். அவள் மேல் அவனுக்கிருந்த அளவில்லா அன்பை அதை விடவும் எப்படி அவனால் வெளிப்படுத்தவியலும்.[center]அன்பின் சுகமனைத்தும் அறிவேன்[/center]

[center]
[/center]

[center]எனை உன்[/center]

[center]உயிரின் மறுபாதியாய் அங்கீகரித்த[/center]

[center]
[/center]

[center]உந்தன் காதலின் சுகம் தனை[/center]

[center]மட்டும்[/center]

[center]
[/center]

[center]இன்றுணர்ந்தேன்.[/center]

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here