10. இந்திரனின் காதலி

0
912
Indranin Kadhali

அத்தியாயம் 10

இவனுக்கு இன்றைக்கு என்னவாயிற்று? முகத்தில் முறுவலோடு நின்றாள் எழிலரசி.

அவள் முன்பாக அந்தச் சரத்திலிருந்து ஒற்றை மொட்டை உருவினான். இடதுக்கையில் சரத்தை வைத்துக் கொண்டவன், வலதுக் கையில் பாதி மலர்ந்தும் மலராத அந்த மொட்டை நீட்டி அவள் முன் ஒருக்காலை மண்டியிட்டு நீட்டினான்.

லவ் யூ என் காதலி, நீ இந்தப் பூவை ஏற்றுக் கொண்டு இந்த இந்திரனின் காதலியாகச் சம்மதிக்கிறாயா?

ம்ம் என்றவளாக அந்த மொட்டை வாங்கிக் கொண்டாள்.

ஒரு அரும்பு வாங்கினா ஒரு முழம் பூ ப்ரீ…கண்ணடித்தவனாய் சரத்தையும் நீட்டினான்.

நான் தொடுத்தது தான் முனகினாள்.

ஆனால் நான் கொடுத்ததுடி…

ம்ப்ச்ச்…மொக்கை…

ம்ம் ரொம்பத்தான்… ஏ அழுவாச்சி, இனி அழ மாட்டீல்ல… ஏதாச்சும் சொல்லுடி?

என்ன சொல்லறது அத்தான்? உங்க கூட இருக்கப்ப எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு, சிரிக்க வைச்சுட்டே இருக்கீங்க, நான் கொஞ்ச நாள் முன்னாடி கஷ்டப் பட்டதெல்லாம் மறந்தே போச்சு. ஏதோ சொர்க்கத்தில இருக்கிற மாதிரி தோணுது. உங்களுக்காக என்ன செய்யலாம்னு மனம் பரபரக்குது. ஒன்னுமே செய்ய முடியலியேன்னு வருத்தமா இருக்குது. நான் உங்களுக்கு நல்ல பொண்டாட்டியா இருக்கணுமேன்னு மனசு பாடா படுத்துது.

அதான் நீ இப்ப இந்த இந்திரனின் காதலின்னு சொன்னேன்ல, நம்பிக்கை இல்லையாடா?

உங்க மேல நம்பிக்கை இல்லாமலா? நீங்க சொல்லறது கேட்கும் போது நல்லாதான் இருக்கு. ஆனா காலா காலத்தில நமக்குக் குழந்தை பொறக்கா விட்டால் மத்தவங்க என்ன சொல்வாங்க? வேற யாரும் வேணாம் எங்க அம்மாவே கூட…. அதற்கு மேல் சொல்லவியலாமல் உணர்ச்சிவசப்பட்டவளாய் இருக்க…

அட லூசு…இன்னொரு தடவை டேமை திறந்து விட்டிராதே… அதட்டினான்.
இப்பக் கேளு நான் சொன்னது சொன்னதுதான், அதில் மாற்றமில்லை. எனக்கு மட்டும் ஆசையில்லையா? நான் என்னோட அம்மா அப்பா மாதிரியே ஒரு அழகான, திட்டமிட்ட வாழ்க்கை வாழ விரும்பறேன். யார் என்ன சொல்லுவான்னு எல்லாம் யோசிச்சு என்னால வாழ் முடியாது. அது தேவையும் இல்லை.

…………

எனக்காக என்னவெல்லாம் செய்யணும்னு மனம் பரபரக்குதுல்ல அப்ப நான் சொல்லுறதை நீ கேட்டுத்தான் ஆகணும். இப்ப நாம லவ்தான் பண்ணப் போறோம் இந்திரனின் காதலியா இருக்க நிறையக் கண்டிசன் இருக்கு…

முதல்ல எந்தச் சூழ்நிலை வந்தாலும் இந்திரனோட காதலி அழ மாட்டா…சிரிச்சுட்டே இருப்பா… ஓகேவா

பட்டெனெ தன் துளிர்க்காத கண்களைத் துடைத்துப் பளீரெனச் சிரித்தாள் அவள்.

அடுத்ததா என்னோட லவ்வர் பத்தாம் வகுப்பில கணக்குப் பாடத்தில எத்தனை மார்க்கு எடுத்தா உனக்குத் தெரியுமா?

நூத்துக்கு நூறு… இப்போது வழிந்த கண்ணீர் தன் கனவுகளைப் பறிக் கொடுத்த நாளை எண்ணி வழிந்ததாக இருந்தது. அதை அழுந்தி துடைத்தவன்

‘அதனால என் காதலி மேல படிக்கப் போறா…’ எப்படிப் படிக்கப் போகப் போறான்னு அவதான் சொல்லணும்…பதினொன்று , பனிரெண்டு படிக்க எங்கேயாவது சேர்த்து விடட்டுமா? எப்படி? கண்ணடித்தான். தனது படிப்பு மீண்ட ஆனந்த உணர்வில் தத்தளித்துக் கொண்டிருந்தாள் அவள்.
நீ பத்தாம் வகுப்பு படிச்சு உன் ரிசல்ட் பத்தி ஊரெல்லாம் பேசிக்கிட்டு இருந்தப்போ நீ மேல படிக்கப் போறன்னு நான் நம்பிக்கிட்டு இருந்தேன். அந்த வருஷம் தான் அம்மா, அப்பாவை இழந்திருந்தேன், அடிக்கடி ஊர் பக்கம் வர முடியவில்லை.

அப்ப ஒரு நாள் ஒருத்தர் நீ மேலப் படிக்கலைன்னதும் எனக்கு ரொம்பச் சங்கடமாப் போச்சு. அம்மா இருந்தாலும் கூட அம்மா மூலமா உன்னைப் படிக்க வைக்கச் சொல்லி இருப்பேன். நான் வந்து ஏதாச்சும் சொன்னா தப்பா எடுத்துப்பாங்கன்னு என்னால ஒன்னும் சொல்ல முடியலை. சொல்லு எந்தக் கல்லூரிக்குப் போய்ப் படிக்கலாம்னு இருக்கிற?

நான் கரெஸ்ல படிக்கிறேன் அத்தான்…எனக்கு இப்ப அதுக்கான வயசு ஆனதால நேரடியா பண்ணிரெண்டாம் வகுப்புப் பரீட்சை எழுத நினைக்கிறேன்,

ஏன் அப்படி?

படிப்பு, படிப்புத்தானே அதை எங்கே இருந்து படிச்சா என்ன? கல்லூரி போய்தான் படிக்கணுமா? பக்கத்தில் பாடங்களைத் தெளிவு செஞ்சுக்க ட்யூசன் வேணா போய்க்கிறேன். பரீட்சைக்கு மட்டும் ஃபாரம் நிறைக்க எனக்குத் தெரியலை அது கொஞ்சம் சொல்லித் தரணும்… ம்ம்… கணவனைக் கண்கொண்டு பார்த்துக் பேசிக் கேட்டுக் கொண்டிருந்தாள் அவள்.
தெளிவா பேசற, தேறிட்டப் போ.

அடுத்து என்ன கண்டிஷன் இந்த இந்திரனோட காதலிக்கு… ஆங்க் சொல்லுங்க நிறைவேத்திடுவோம். காணாமல் போன எழிலின் துடுக்குத்தனம் மீண்டு வந்திருந்தது. அவன் நெஞ்சில் ஒரு விரல் வைத்து அழுத்தி ‘இந்த இந்திரனின் காதலிக்கு…’ என்ற அவளின் மிடுக்கில் மயங்கியவன் அந்த விரலை அப்படியே பிடித்துக் கொண்டான்.

இப்படித்தான் பயப்படாம இருக்கணும், துடுக்கா பேசணும். உன் புருஷன் இந்த ஊர்ல இருந்தாலோ, இன்னொரு ஊர்ல இருந்தாலும் கூட எந்நேரமும் உன் நினைப்பாதான் இருப்பான்னு நம்பணும். உனக்கு ஒரு கெடுதல் வர விடமாட்டான்னு தைரியமா இருக்கணும். வாசல்ல ஒருத்தன் வந்திட்டு விரல் நீட்டி பேச முடியாத அளவுக்குத் திடமா இருக்கணும். இருப்பியா?
ம்ம் உறுதியாய் தலையாட்டினாள்.

யாரா இருந்தாலும், ஏன் உன் அம்மாவாகவே இருந்தாலும், எதையாவது தேவையில்லாததைச் சொன்னா காதில போட்டுக்கக் கூடாது.
மாட்டேன்… தலையசைத்தாள்.

ஏன் குழந்தைப் பெத்துக்கலை, மந்திரவாதிக் கிட்ட போறியா? மாந்திரீகத்துக்குப் பார்க்கிறியா? டாக்டர்ட போறியான்னு தொணதொணத்தா என் புருஷன் நம்பர் தாரேன் அவன் கிட்ட பேசுங்கன்னு சொல்லணும்.

புன்னகை மலர்ந்தது, மண்டையை ஆட்டி வைத்தாள்.

இந்திரனுக்கு எதுவும் கண்டிஷன் உண்டா அஞ்சும்மா… என் அஞ்சாப்பு அஞ்சும்மா…

அஞ்சும்மா புருஷன் சீக்கிரமே என்னை அவங்களோட கூட்டிக் கொண்டு போகணும், இல்லேன்னா இங்கேயே என் கூட வந்திடணும்…

ம்ம் சரி…

தினம் என் கூடப் பேசணும்…

சரி…

அதற்கடுத்துச் சொல்ல முடியாமல் கண்கள் தளும்பி விட்டிருக்க, என்னடா? எதுக்கு அழுகை?

என்னை விட்டுட்டு போகாதீங்களேன், என்னால உங்களை விட்டுட்டு இருக்க முடியாது தேம்பினாள்.

இன்னிக்கு நீ அளவுக்கு மீறி அழுதிட்ட அஞ்சும்மா… அதான் சீக்கிரம் எல்லாத்தையும் மூட்டைக் கட்டிட்டு நம்ம ஊர் பக்கமே போஸ்டிங் கேட்டுட்டு வந்திடலாம்னு இருக்கேன்னு சொன்னேன்ல…

ம்ம்…

சரி நான் வரும் வரைக்கும் நீ இப்படி அழுதிட்டே இருப்பியா? இல்லை ஏதாவது உருப்படியா செய்ய நினைச்சிருக்கியா?

நான் இந்திரனின் காதலில்ல…

அதுக்கு?

சொல்லிட்டுச் செய்ய மாட்டேன், செஞ்சிட்டு தான் சொல்லுவேன்.
அடியே… உரத்துச் சிரித்தான் அவன்.

லீவு முடிந்திருக்கப் புறப்பட்டவனுக்கு அழாமல் விடைக் கொடுத்தாள் அவள். இந்திரன் அவள் பாதுகாப்புக்காகத் தனது உறவுக்கார தாத்தாவை அடிக்கடி தன் வீட்டிற்குப் போய்ப் பார்த்து வரச் செய்திருந்தான்.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here