6. இந்திரனின் காதலி

0
912
Indranin Kadhali

அத்தியாயம் 6

தன் அருகில் அமர்ந்து இருந்த அவளைப் பார்த்தான் அவன். இது அவன் பார்த்து வளர்ந்த சின்னக் குட்டியா? என ஆச்சரியபட்டான். குட்டி பொம்மை போல அழகு சேலை கட்டி அமர்ந்திருந்தாள் எழில். தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் தாலியை மிகவும் ஆச்சரியத்தோடு அவ்வப்போது தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அருகே அமர்ந்திருந்த, சற்று நேரத்திற்கு முன் மிகவும் பிடித்தமானவனாய் மாறிவிட்டிருந்தவன் மேல் அவள் கண்கள் படிந்து மீண்டன.

சிறு குருத்தை போன்று தன் அருகில் அமர்ந்து இருப்பவள் அழகில் சொக்கிப்போன அவன் இம்முறை தான் ஊருக்கு லீவுக்கு ஊருக்கு வரும் போது, இப்படி ஒரு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று கனவிலும் நினைத்தானில்லை. ஆனால், இப்போதோ அவனுக்கும் மனதிற்கு மிகவும் பிடித்த தூரத்து சொந்தமான அத்தை மகளே மனைவியானது குறித்து மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தான்.

சுவாதீனமாக அங்குக் கொடியில் தொங்கிக் கொண்டிருந்த சில துணிகளை மடித்து அடுக்கி கொண்டிருந்தவளிடம் அருகில் வந்து நின்றான்.

‘அஞ்சுமா நான் உதவி செய்யட்டுமா?’

கேட்டதும், கணவனிடமிருந்து கேட்ட அந்தப் பிடித்தமான விளிப்பில் அவள் முகம் மலர்ந்தது.

‘இவ்வளவுதான் அத்தான் கொஞ்சம் துணி தான் நானே மடிச்சுக்குவேன்’ என்றாள்.

என் பேரு அஞ்சுமா இல்ல எழில்…என்றாள் மோகனமாக….

அதுதான் எனக்குத் தெரியுமே? சரி என் பேர் என்ன சொல்லு?

கூச்சமாய் நிமிர்ந்தாள், சொல்லு என ஊக்கவும்

இந்திரன்… என்றாள். உன் பேருக்கு கொஞ்சமாச்சும் பொருத்தமா இருக்கா?

அவசரமாய்த் தலையசைத்தவள் உங்களுக்கு…. உங்களுக்கு…. என்னைப் பிடிக்குமா? எனக் கணவனின் கண்கள் கலந்து கேட்டுக்கொண்டிருந்தாள் எழில்.

எழிலுக்கு எழிலான மணவாளன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

என்னடா புதுசா கேக்குற எனக்கு உன்னைப் பிடிக்கும், உனக்குத் தெரியாதா? என முறுவலித்தான்.

கேட்டவள் பதறினாள்.

‘இல்ல இல்ல நீங்க கல்யாணம் நடந்த பின்னாடி, ரொம்ப நேரமா முதலில என்னிடம் பேசவே இல்லையே? அதனால என்னைத் திருமணம் செஞ்சுகிட்டது அது உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோன்னு கேட்டேன்’ அதற்குள்ளாக அவளின் மேலுதட்டில் பதட்டத்தில் வியர்வை பெருகி இருந்ததைக் கனிவோடு பார்த்தான்.

இங்கே வாடா… தயங்கியவாறு எதிரில் வந்து நின்றாள் எழில்.

இங்கே உட்காரேன், சொன்னவன் அருகில் தயங்கி அமர்ந்தாள். அது அவர்கள் மச்சு வீட்டின் அறை. திறந்திருந்த சாளரங்கள் ஊடாகக் காற்றுச் சுதந்திரமாக அங்கே உலவி கொண்டு இருந்தது. அருகில் அமர்ந்தவளை கனிவுடன் பார்த்தான். அவள் வியர்வை அரும்புகளைத் தன் கைக்குட்டையால் துடைத்தான்.

ஏன் அப்படி நினைச்ச எழில்? பிடிக்காம யாராச்சும் கல்யாணம் கட்டிப்பாங்களா என்ன?

என்றதும் எழிலின் முகம் மலர்ந்தது.

நான் உன்கிட்ட நிறைய விஷயம் பேச வேண்டி இருக்கு. கொஞ்ச நேரம் கிடைக்கட்டும், நாம பேசுவோம். இப்போ உள்ள சூழல் ரொம்ப இடைஞ்சலா இருக்கு… அவன் சொல்லி முடிக்கும் முன், கதவு படாரெனத் திறக்கப் பட்டது. இது ஏழாவது முறை, சங்கடமாக முறுவலித்துக் கொண்டான்.

அவசரமாய் உள்ளே நுழைந்தார் குமுதா. மாப்பிள்ளைக்கு நான் கொடுத்ததைக் கொடுத்தியா?

மகளிடம் வந்து நின்றார். பலியாடு போலத் தலையாட்டினாள் எழில்.

நீங்க சாப்பிட்டிங்களா மாப்பிள்ளை?

என்று விசாரித்தார். அருகில் இருந்து இரண்டு நிமிடம் பேசிவிட்டு சென்றார், ‘இவளுக்கு அவ்வளவு கூறு காணாது, அதான் கேட்க வந்தேன் என்றவராகப் படீரென்று கதவை அடித்து விட்டு, திரும்பச் சென்று விட்டார். அது அவர்கள் முகத்தில் அடித்தார் போலவே இருந்தது.

வெகு தூரம் அன்று காலையே ஊருக்குப் பயணம் செய்து வந்திருந்த இந்திரனுக்கு வந்தது முதலாக ஆசுவாசமாய் உட்காரவும், கொஞ்ச நேரம் படுக்கவும் கூட அங்கே யாரும் நேரம் தரவில்லை.

ஷப்பா…

நொந்து கொண்டான். தான் இவ்வறையில் இருக்கும் வரையில் ஓய்வும் கிடைக்காது, ஏக்கத்துடன் புது மனைவியைப் பார்த்தான். இன்றைக்கு இவளுடன் நிம்மதியாய் பேசிய மாதிரிதான் பெருமூசெழுந்தது.

நீ இங்கே இருடா, களைச்சுப் போயிருப்ப ஓய்வெடுத்துக்கோ… நான் கொஞ்சம் கீழே போய் வாரேன் மனைவியின் கன்னத்தைத் தட்டிவிட்டு அங்கிருந்து சென்றான் இந்திரன், எழிலின் இந்திரன்.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here