10. காதலும் வசப்படும்

0
585
Kadhalum Vasapadum

அத்தியாயம் 10

[center]நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு[/center]

[center]எல்லோருக்கும் பெய்யும் மழை –ஔவையார்[/center]

[color=purple]தன்னை அழைத்தவரிடம் தயங்கி தயங்கி போய் நின்றாள் அவள். அவளுடன் பேசிய ஹரீஷ் அவளுடைய மிரட்சியைக் கண்டு அவளுக்கு மெதுமெதுவாகத் தன்னம்பிக்கை ஊட்டினார்.அதிகமாக அவளைக் கேள்வி கேட்காமல் அந்தக் குழந்தையின் மன நிலைக்கேற்ப நடந்து கொண்டார்.[/color]

[color=purple]அடுத்த நாட்கள் பரபரவெனக் கழிந்தன வாட்ச் மேன் பொன்னப்பனும் அவனுடைய கூட்டாளிகளும், பொன்னியும் கடும் விசாரணைக்கு உள்ளாகினர். தங்களுடைய தவறான செயல்களை ஆசிரம நிர்வகத்திற்கு வெளிப்படுத்தியது யார் என்று அவர்கள் மிகத் தாமதமாகவே தெரிந்துக் கொண்டனர்.[/color]

[color=purple]பொன்னியோடு பணி புரிந்த முத்தம்மா தான் அந்தத் தவறுகளை மேலிடத்துக்கு வெளிப்படுத்தியிருந்தார். தான் நேரடியாக எந்தச் செயலிலும் ஈடுபடாவிட்டாலும் வேலை செய்யுமிடத்தில் செல்வாக்காக இருக்கும் பொன்னியை எதிர்க்க துணியாமல் ஆமாம் சாமி போட்டுக் கொண்டிருந்த பொன்னிக்கு ப்ரமியின் இறப்பு அல்லது கொலை எனச் சொல்ல வேண்டுமோ? அந்த மரணம் மனதை உலுக்கி விட்டது என்றே கூறலாம் அதனால் தானோ என்னவோ அதன் பின்னர்ப் பொன்னிக்கு ஆதரவாக அவள் நடந்து கொள்ளவில்லை. தன்னுடைய வீட்டிலும் பெண்பிள்ளைகள் இருக்கத் தான் ஒரு மன நிலை சரியில்லாத பெண்ணுக்கு இப்படி நடக்க எப்படி உறுதுணையாக இருந்தோம்? என்பதே மனசாட்சியை உறுத்த கடந்து போனவைகளை நினைக்காமல் இருக்கவே முனைந்தாள்.[/color]

[color=purple]ஆனால் எப்போது தாங்கள் செய்ததைத் தவறாக எண்ணாமல் மற்றொரு பெண்ணையும் நாசமாக்க துணிந்தார்களோ அன்றே அவர்களை எப்பாடு பட்டாவது தடுக்க எண்ணினாள் முத்தம்மா. அனால், ஒரு பெண்ணாக இருந்தும் அதைப் பணத்தின் மயக்கத்தில் பொன்னி உணர்ந்தாளில்லை.[/color]

[color=purple]வேறு வழியில்லாத காரணத்தால் தங்கள் ஆஃபீஸில் இருந்த தலைமையக எண்களைத் தேடிப்பிடித்து மறைவாகச் சென்று தகவல் கொடுத்து விட்டாள் முத்தம்மா. அவள் தகவல் கொடுத்தது முக்கியமில்லை, அந்த அதிகாரி ஹரீஷ் இதனை மிக முக்கியமாகப் பாவித்து அதற்கேற்ப வியூகம் அமைத்து சரியான நேரத்தில் வந்து கையும் களவுமாக அனைவரும் பிடிப்பட்டது மிகப் பெரிய விஷயம். ஹரீஷ் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் தான் சத்யா காப்பாற்றப் பட மிக முக்கியமான காரணம்.[/color]

[color=purple]தான் எவ்வளவு முயன்றும் அந்தக் குழந்தை தன்னிடம் சகஜமாகப் பேசாதிருப்பது மூலம் குழந்தையின் மனநிலை ஹரீஷ் சவுஹானிற்குப் புரிந்தது. அந்தக் குழந்தைக்கு மன ரீதியாக ஏதோ பிரச்சினை என்று அறிந்தவர் அனாதைச் சிறுமி தானே, காப்பாற்றியதோடு தன் கடமை நிறைவடைந்து விட்டது என்று தட்டிக் கழிக்காதவராக அக்கறையோடு அவளைத் தன்னுடைய நேரிடையான பாதுகாப்பில் வைத்துக் கொண்டார்.[/color]

[color=purple]அதே இல்லத்தில் அவள் தொடர்ந்து இருந்தால் அந்த மோசமான சம்பவத்தில் கைதானவர்களின் குடும்பத்தால் அவளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று எண்ணியதால் தன்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்ட மற்றொரு இடத்திற்கு அவளை மாற்றினார். அவளது மன அழுத்தத்தைப் போக்க சிறப்பு மன நல மருத்துவரிடம் சிகிச்சை பெறச் செய்தார். அங்கே சத்யாவிற்கு அறிமுகமானவர் தான் மருத்துவர் கல்பனா.[/color]

[color=purple]சற்று மன நிலை தேறியபின்னர் சத்யாவிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ப்ரமீளா மரணம் குறித்த தகவல்கள் வெளிவர, அது வரை சாட்சியாளராக இருந்த முத்தம்மா ப்ரமிளாவின் மரணம் குறித்த கேஸில் சேர்க்கப் பட்டார். உப்பைத் தின்றவன் தண்ணீரை குடித்தே ஆக வேண்டுமல்லவா?. பொன்னி, பொன்னப்பன் மற்றும் இருவர் எல்லோர் மீதும் இப்போது ப்ரமீளாவின் கொலை வழக்கும் பதியப்படப் பல வருடங்களாகத் தாங்கள் செய்த தவறுக்கான தண்டனையையும் சமூகத்தின்பால் தங்கள் மதிப்பை இழந்தவர்களாகவும் ஆகினர்.[/color]

[color=purple]சத்யாவின் இருப்பிடத்தை வெகுவாகப் பத்திரப்படுத்திய ஹரீஷ் அவளுக்கு வளர்ப்பு தந்தை போலவே மாறினார். அவரது வேலை காரணமாக மாநிலம் விட்டு மாநிலம் மாறினாலும் மாதம் ஒரு முறையாவது அவளுக்குத் தொலைபேசியில் அழைக்காமல் இருக்க மாட்டார்.[/color]

[color=purple]தனக்குள்ளே மருகி பயந்து நடுங்கிக் கொண்டிருந்த சத்யா இப்போது மாறி விட்டிருந்தாள். மருத்துவர் கல்பனாவின் பயிற்சியே அதற்குக் காரணம். அவரது பரிந்துரைக்கேற்ப தன்னம்பிக்கை தரும் பல விஷயங்களில் அவளை ஈடுபடுத்த நாளாக நாளாக அவள் மிளிர்ந்தாள். ஆனால், தன்னுடைய உள்மன பயங்களிலிருந்து அவள் முற்றிலுமாக விடுபடவில்லை. புதியவர்களிடம் பழக அவள் காட்டும் தயக்கத்தைக் கண்டவர் தன்னம்பிக்கை ஊட்டும் வாசகங்களை தினம் பயிற்சி செய்யக் கூறினார். அவளது தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்காகக் கராத்தே பயிற்றுவிக்க அதில் முதன்மை மாணவியாக மிளிர்ந்தாள்.[/color]

[color=purple]தாங்கள் குழந்தைகளின் விழிப்புணர்வுக்காக நடத்தும் “புன்னகை” என்னும் அமைப்பில் சத்யா தன் படிப்பு தவிர்த்த மற்ற நாட்களில் தானாகவே முன்வந்து உதவ விரும்ப, கல்பனா அவளது ஆர்வம் கண்டு அவளது போக்கில் விட்டு விட்டார்.[/color]

[color=purple]பன்னிரண்டாம் வகுப்பு முடிந்த சமயம் தான் சத்யா தன்னுடைய அனாதை ஆசிரம வாழ்க்கை நிறைவுற்றுத் தற்போது டெல்லியில் பணிபுரியும் ஹரீஷின் வழிகாட்டுதலின் பயனாகக் கல்லூரி ஹாஸ்டலில் தங்கி படிக்கலானாள். அவரது பணிச்சுமை காரணமாக அடிக்கடி இவளோடு பேச இயலாவிட்டாலும், அவளது அனைத்து செலவுகளும் அவரே ஏற்றுக் கொண்டிருந்தார்.[/color]

[color=purple]கல்பனா இந்தியாவிலிருந்து விடைப்பெற்று தன்னுடைய மகனோடு வெளி நாட்டில் போய்த் தங்கினார்.தனக்கு உறுதுணையாக இருந்தவர்களான ஹரீஷ் அங்கிள், மற்றும் டாக்டர் கல்பனா பிரிவு அவளை வாட்டினாலும் பிறந்ததிலிருந்து தனிமையே துணையாகக் கொண்ட சத்யாவால் அதனை எப்படியோ ஏற்றுக் கொள்ள முடிந்தது.[/color]

[color=purple]ஹரீஷ் அங்கிள் தனக்குச் செய்த அத்தனை உதவிகளுக்கும் பிரதி உபகாரம் செய்ய இயலாது எனத் தெரிந்தாலும் அவருக்குச் சிரமம் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே தன்னுடைய மற்ற செலவுகளைத் தானே கவனிக்க முயன்றாள்.[/color]

[color=purple]ஹாஸ்டலில் அனுமதி பெற்றுத் தனக்குத் தெரிந்தவர்களிடம் பேசி சில குழந்தைகளுக்கு அவர்கள் வீட்டிற்குச் சென்று ட்யூஷன் எடுத்து வருவாள். அந்த வருமானத்தில் தன்னுடைய தேவைகளை ஒருவாறாகச் சமாளித்து வருவாள். எவ்வளவு தான் மற்ற வேலைகளில் ஈடுபட்டாலும் தன் படிப்பை சிறப்பாகக் கவனித்துக் கொள்வாள். தனக்காகச் செலவழிக்கும் ஹரீஷ் அங்கிளுக்கு இதுதான் தான் செய்யும் மரியாதை என்பதே அவளது மனவோட்டம்.[/color]

[color=purple]அப்படி ஒரு நாள் ட்யூஷன் சென்று திரும்புகையில் தான் அவள் கதிரை முதன் முறையாகப் பார்த்ததும் அவன் செய்த செயலால் கோபம் கொண்டதும்.[/color]

(சத்யாவின் சிறுவயது பகுதி இங்கே நிறைவு பெறுகின்றது)

:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:

[center]கொலை குற்றவாளிக்கும்[/center]

[center]தன் பக்க விளக்கத்தைச் சொல்ல[/center]

[center]ஒரு முறை அவகாசம் உண்டல்லவா?[/center]

[center]உந்தன் நீதி மன்றத்தில்[/center]

[center]குற்றம் செய்யாமலே[/center]

[center]குற்றவாளியாய் நானிருக்க[/center]

[center]என் தரப்பு விளக்கம் கேட்காமலே – நீ[/center]

[center]எனக்கு[/center]

[center]தண்டனை அளித்து நியாயமா?[/center]

வீட்டை விட்டு சென்னைக்குத் தொழில் நிமித்தமாகப் புறப்பட்டிருந்த கதிரின் பயணம் பாதித் தூரம் கடந்திருந்தது. நண்பனோடு சேர்ந்து சொந்த தொழில் துவங்க சில வருடங்களாக அவன் முயற்சித்துக் கொண்டிருந்ததை இப்போது செயலாற்றவிருக்கிறான். அவனுடைய படிப்பு நிறைவுற்று இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. ஆனால், சொந்த தொழில் தொடங்குபவனுக்கு எதற்குத் தேர்வு முடிவுகள் எல்லாம் இல்லையா? அதனால் தான் தன் திட்டங்களுக்கேற்ப செயற்பட ஆரம்பித்து விட்டான்.

மறுபடி சத்யா குறித்த நினைவுகள் ஆக்கிரமிக்க அன்று சத்யாவை முதன் முதலாகக் கண்டபோது இந்தச் சின்னப் பெண்ணுக்கு இவ்வளவு தன்னம்பிக்கையா? என்னும் வியப்பே அவனது மனதில் இன்றும் கூட எழுந்திருந்தது.

தன் அக்கா மகளுக்கான டிஃபனைக் கொடுத்து வீட்டுக்கு வந்த பின்னர்த் தேன்மொழியிடம் வாய் ஓயாமல் அவளைக் குறித்தே பேசிக் கொண்டிருந்தான்.

ஆமா கதிரு, “புன்னகை” ன்னு ஒரு அமைப்பு வச்சிருக்காங்க. அங்க இருந்து இப்ப கொஞ்ச நாளா ஒவ்வொரு வகுப்புக்கும் இப்படி விழிப்புணர்வு கொடுக்கிறாங்க, சின்னப்பிள்ளைங்களைக் கூட இப்பல்லாம் யாரும் விட்டு வைக்கிறதில்ல பார்த்தியா? எத்தனை மோசமான நிகழ்ச்சியெல்லாம் நாம பார்த்திட்டு வர்றோம்? வெளியில தெரிய வந்தது இவ்வளவுன்னா, தெரியாம எத்தனை நடக்குதோ? இப்படியெல்லாம் நடக்கிறதால தானே கள்ளங்கபடமில்லாத இந்தப் பிஞ்சு மனசுக்குள்ள குட் டச் பேட் டச் லாம் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கு. சின்ன வயசிலேயே சக மனிதன் மேல சந்தேகம் கொள்ளவும், மத்தவங்களை எச்சரிக்கையா பார்க்க வைக்கிற நிலைமைக்கும் கொண்டு வர வேண்டி இருக்கு வெகுவாக வருந்தினாள் தேன்மொழி.

ஆமா அக்கா, ஆனா என்ன செய்யிறது? நாம எல்லா நேரமும் குழந்தைகளைக் கவனிச்சுகிட்டே இருக்க முடியாது இல்லையா? குழந்தைகளுக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டியது காலத்தின் தேவையா போச்சு? வர வர எப்படித்தான் நாட்கள் போகுமோ? படிச்சவங்களே அறிவில்லாம நடந்துக்கிற போது யாரை தான் நொந்துக்கிறது. குழந்தைகளுக்குக் கூடப் பாதுகாப்பில்லாம நம்ம நாடு மாறிட்டு வர்றது ரொம்பக் கொடுமை அவனும் வருந்தியே பேசினான்.

சத்யாவின் பெயர் தெரியாமலே அவள் மேல் பிரமிப்புக் கொண்டவன் சில மாதங்கள் கழித்தே அவளைப் பார்க்க நேர்ந்தது அதுவும் தேன்மொழியின் அபார்ட்மெண்டிலேயே,

அன்று வார இறுதி அவனின் பைக்கை நண்பனொருவன் கடன் கேட்க தன்னை அக்கா வீட்டிற்கு விட்டுச் செல்ல சொல்லி கதிர் அவனுக்குத் தன் பைக்கைக் கொடுத்தான்.

வார இறுதியில்தான் தேன்மொழியின் கணவர் தமிழன்பனும் குழந்தை குழலியும் வீட்டில் இருப்பார்கள். அவர்களைச் சந்தித்துப் பேசி வருவது ஊரிலுள்ள தாய் தந்தையைப் படிப்பிற்காகப் பிரிந்து இருக்கும் அவனுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்றாகும்.

மதியம் முதல் சாயும்காலம் வரை அக்காவின் வீட்டில் பொழுதை பேசி கழித்தவன் தன் நண்பனுக்குத் தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு அலைபேசி வழியாக அழைப்புக் கொடுக்க அந்த நண்பனோ தான் உடனே அவனை அழைத்துச் செல்ல வருவதாகவும் வார இறுதி நாள் முடிந்த அடுத்த நாள் தான் சமர்ப்பிக்க வேண்டிய ப்ராஜக்ட் ஒன்றில் அவனுக்குக் கதிரின் உதவி வேண்டும் என்றும் அவசரமாகக் கூற தான் உதவுவதாக உறுதி அளித்தான் கதிர்.

நாள் முழுவதும் ஊர் சுற்றி விட்டு இரவு ஆகும் போது தான் அடுத்த நாள் குறித்த வேலை நியாபகத்திற்கு வரும் போலும் என நண்பனைக் குறித்துச் சலித்துக் கொண்டாலும், பெரும்பாலானவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டவன் தான் முன் தினமே செய்ய வேண்டியவற்றைச் செய்து விட்டது குறித்து நினைவு கூர்ந்தான்.

அவன் அக்கா, அத்தானிடம் விடைப்பெற்றுப் புறப்படுகையில் கதிரோடு கூடக் குழலி வருவதாக அடம்பிடிக்க, அக்கா நான் கேட்டில பாப்பாவ விட்டுறேன் எனக் குழந்தையைத் தூக்கிக் கொண்டான்.

அருகாமையிலிருந்த கடையில் திண்பண்டங்கள் வாங்கிக் கொடுத்தவன் வாயிலருகே வரவும் அவளைக் கீழே இறக்கி விட்டான். வாயிலின் வெளிப்பக்கம் தன் நண்பனுக்காக அவன் காத்துக் கொண்டு நின்றிருக்கக் குழலியின் கையை விட்ட தருணம் குழந்தைகளுக்கே உரிய ஆர்வத்தில் ஏதோ பூச்சி ஒன்றைப் பார்க்க சுவற்றோரம் போய் நெருங்கி நின்ற குழலி சுவரை ஒட்டி நின்ற தருணம் அவள் உடையில் சுவற்றிலிருந்த எறும்புகளெல்லாம் தொற்றிக் கொண்டன.

குழந்தை என்ன செய்து கொண்டிருக்கிறாள்? எனப் பார்க்க திரும்பியவன் அவள் உடையெங்கிலும் எறும்பைக் கண்டு பதறி தட்டி விடலானான். ஆனால், குழந்தைக்கோ தன் உடையிலிருந்து உடலுக்குள்ளாகச் சென்றிராத எறும்புகளால் பயமெதுவும் இல்லாமல் தன் கைகளிலிருந்த சாக்லேட்டை சுவைப்பதிலேயே கவனம் இருந்தது.

அவன் அத்தனையும் தட்டி விடவும், வழக்கம் போல் சொல்லும் பை மாமா எனச் சொல்லி கையசைக்க விடாமல் கைகளிலிருந்த திண்பண்டம் தடுக்க அவன் கண்பார்வையிலிருந்து அவள் நகர, எதிரில் வந்து கொண்டிருந்தவளின் மேல் அவன் பார்வை பதிந்தது.

அட இந்தப் பெண் அந்தப் புன்னகை அமைப்பிலுள்ளவள் அல்லவா?, தான் முதன் முதல் பார்த்த போதே தன் மனதைக் கவர்ந்தவளை, தன்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியவளை இங்குச் சந்திப்போம் என எதிர்பார்க்காததால் கண்ணைத் தட்டி விழிக்காமல் அவளைப் பார்க்க,

அவளோ அவனருகே வந்தவுடனாக மிரட்டலாய்,

“நீ என்னை ஏன் இப்படிப் பார்க்கிற?” எனக் கேட்க திகைத்தான்.

அவளது நேரடிக் கேள்வியில் தடுமாறியவன், அவள் தன்னைத் தவறாக எண்ணிக் கொண்டாளோ? நான் உன்னை ஏற்கெனவே பார்த்திருக்கிறேன், அன்று நீ நடத்திய வகுப்பு மிகவும் அருமையாக இருந்தது .என்று தன்னுடைய விளக்கம் சொல்லும் முன்னதாக அவனருகே அவன் நண்பனின் பைக் வந்து நின்றது.

“ஸாரி மச்சி லேட்டாயிடுச்சு, வா சீக்கிரம் போகலாம் இப்ப போனா தான் சரியான நேரம் போய்ச் சேர முடியும்” என்றவனாய் அவனும் தன்னுடைய ப்ராஜக்டுக்காக இவனை அவசரப் படுத்த நண்பன் முன்னால் ஒரு பெண்ணோடு பேசுவது அவ்வளவு சரியாக இராது என்று அவமுக்கு தோன்ற அவளுக்கு விளக்கம் சொல்ல இயலாமலேயே கதிர் கண்களாலேயே அவளிடம் விடைப்பெற்றுச் சென்றான்.

ஏய் பதில் சொல்லுடா… என அவள் கத்தியது அவனுக்குக் கேட்டது.

அவளிடம் தான் தன் மனதில் எண்ணியதை சொல்ல ஒரு போதும் வாய்ப்பு கிடைக்காது என்பதையும் அவளது வெறுப்புத் தன்னை விடாமல் துரத்தப் போவதையும் அன்று அவன் அறிந்திருக்கவில்லையே?


[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here