17. காதலும் வசப்படும்

0
496
Kadhalum Vasapadum

அத்தியாயம் 17

இன்று…


[center]பயம்[/center]

[center]காற்றைப் போல[/center]

[center]உருவமில்லாதது.[/center]

[center]பயம்[/center]

[center]பேயைப் போல[/center]

[center]பதற்றம் தருவது.[/center]

[center]பயம்[/center]

[center]நாமே சுயமாய்ப் பூட்டும்[/center]

[center]விலங்குச் சங்கிலி[/center]

[center]பயம்[/center]

[center]நம் கழுத்தை இறுக்கும்[/center]

[center]மாயச் சுருக்கு[/center]

[center]பயம்[/center]

[center]கழற்றி எறிய வேண்டிய[/center]

[center]வஸ்து.[/center]

[center]பயம்[/center]

[center]நீ அதனை வெல்வாயா?[/center]

[center]வாழ்வை உன் வசம் கொள்வாயா?[/center]

இரண்டு நாட்கள் கடந்து விட்டிருந்தது, மனைவியும், சத்யாவும் ஒரு வித அழுத்தத்தில் உழலுவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் சுந்தரம். சந்திரா இன்னும் சத்யா பகிர்ந்துக் கொண்டவற்றின் தாக்கத்தினின்றி முழுவதும் வெளிவந்திருக்கவில்லை. சத்யா கூறியவற்றைத் தன் கணவரோடு பகிர்ந்துக் கொண்டபோது தாள முடியாமல் பொங்கிச் சொரிந்த கண்ணீர் சுரப்பிகளின் செயல்பாட்டை அவரால் தடுத்து நிறுத்த இயலவில்லை.

சமையல்கட்டில், நான் எதுவும் வேலை செய்யட்டுமா அத்தம்மா? என்று வந்து நின்றவளிடம் இதோ இந்த வெங்காயம் எல்லாம் அரிஞ்சு வை” என்று சொல்லி கொடுக்க அமைதியாக வேலை நடந்து கொண்டிருக்கச் சுண்டெலி ஒன்று அந்தப் பக்கமாக வர சந்திராம்மா ஒரு பயக்குரல் எழுப்பியவராகத் துள்ளி நகர அவரது பயம் பார்த்து க்ளுக்கெனச் சிரித்து வைத்தாள் சத்யா.

ஏ வாலு என்ன கிண்டலா? என விளையாட்டாய் அதட்டியவர். நீ லாம் கரப்பான் பூச்சி, பல்லி, எலிக்கெல்லாம் பயப்பட மாட்டியாக்கும். இந்தச் சினிமாலல்லாம் அப்படித் தானே காட்டுறாங்க……

எப்படி அத்தம்மா?

ஹீரோயின் கரப்பான் பூச்சி பார்த்து கத்துவா, ஹீரோ அப்படியே பாய்ஞ்சு வந்து அதை விரட்டுவான்… அப்புடி

நீங்க நிறையப் படம் பார்த்து கெட்டுப் போயிட்டீங்க கிண்டலடித்தவள்.

எங்க ஆசிரமத்துல எங்களுக்கு இந்தப் பல்லி, கரப்பான் பூச்சி, எலி இதுங்க தானே எங்க பிரண்டு, அது பாட்டுக்கு வரும் போகும் அதுக்கெல்லாம் பயந்தா முடியுமா?

அதுங்க தன் வயித்துக்காகச் சமையறைக்கு வருதுங்க. நம்ம மேல அதுங்களுக்கு எந்த வன்மமும், விரோதமும் இல்லியே? மனுஷனுக்குத் தான் எப்பவும் சக மனுஷனோட உடலோடயும் உயிரோடயும் விளையாடுற கொடூர புத்தி…. என்று முடிக்கவும் மறுபடி சற்று இறுக்கமானது சூழல்.

சமையல் முடிந்திருக்க, மதிய சாப்பாட்டிற்கு நேரமிருக்க அவளைத் தன் வீட்டின் பின்புறம் மரங்களால் குளுமை அடைந்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

என்ன அத்தம்மா?

உக்காரு சொல்றேன்…

அவர் திண்டில் அமர, வழக்கம் போல அவர் மடியில் சாய வசதியாகத் தரையில் அமர்ந்துக் கொண்டாள் சத்யா.

இப்ப நீ பெரிய பொண்ணாகிட்ட, அந்த வேண்டாத சம்பவம் நடந்து 5 வருஷம் கடந்து போச்சு சரிதானே?

ம்ம்…

ஆனாலும் உனக்கு மனசுல அந்தப் பயம் இருக்கு அதனால தான் நீ என்ன தான் வீரமா பேசினாலும், கராத்தே படிச்சிருந்தாலும், மத்தவங்களுக்குச் சொல்லிக் கொடுத்தாலும் உன்னால ஒரு இக்கட்டான நிலைமையில சட்டுன்னு துணிச்சலா முடிவெடுக்க முடியலை. நான் சொல்லுறது சரிதானா?

ம்ம் என்று ஆமோதித்தவள் ஏதோ தவறு செய்தவளைப் போலக் குனிந்து அமர்ந்திருந்தாள்.

உனக்கு யானைக் கதை தெரியுமா சக்திம்மா………

நிமிர்ந்து அவர் முகம் பார்த்தவள் பாவனையில் ……

நான் சொல்றேன் கேளு, உனக்குத் தெரியுமா தெரியலியான்னு அப்புறம் பார்க்கலாம். யானையைப் பாகன் அது ரொம்பக் குட்டியா இருக்கப்போ கட்டிப் போட்டுருவாங்களாம். அது தினமும் அந்தக் கயிறை இழுத்து இழுத்துப் பார்த்துட்டு, செய்ய வேண்டிய முயற்சி எல்லாம் பண்ணிட்டு அந்தக் கட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாம, அங்கிருந்து ஓட முடியாம மனசு சோர்ந்து போயிடுமாம். இப்படியே தினமும் முயற்சி செய்யவும் தோற்கவுமா இருக்கவும் இருக்கிறப்போ அந்தக் குட்டி யானையோட மனசுல,

“இந்தக் கயிற்றை நம்மால இழுக்கவே முடியாது, நாம இங்கயே தான் இருந்தாகணும்னு “பதிஞ்சிடுமாம். அதுக்கப்புறம் யானை வளர்ந்து பலசாலி ஆகிடும். இப்போ அந்த யானைக்கு இருக்கிற பலத்துக்கு அந்தக் கயிறு ஒரு பெரிய விஷயமே இல்ல. ஆனாலும் அந்தச் சின்னக் கயிற்றுல தான் பாகன் அந்த யானையைக் கட்டி வைப்பான். பாகனுக்குத் தெரியும் இந்த யானை நம்ம கட்டியிருக்கிற கயிற்றை அவிழ்க்க கூட முயற்சி செய்யாதுன்னு. அது ஏன்னு தெரியுமா சக்திம்மா?

சிறந்த உளவியல் நிபுணர் போலப் பேசிக் கொண்டிருந்தவரை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த சத்யா தன் வாய்ப் பூட்டு அவிழ்ந்து,

ஏன்னா அதோட மனசுல தன்னால அந்தக் கயிற்றை இழுத்து, அறுத்து ஓட முடியாது. முடியவே முடியாதுன்னு பதிஞ்சிடுச்சி அதனால தான்.

அப்ப நான் அந்த யானைப் போலத் தேவையே இல்லாம பயப்படுறேனா அத்தம்மா?, அப்படின்னா நான் பயப்படத் தேவையில்லையா? அத்தம்மா மடியில் புதைந்தவளை தேற்றுவது போல அவள் தலையை வருடிக் கொண்டிருந்தார் இந்திரா.

அதுமட்டுமில்ல சக்தி… அந்த யானை வளர்ந்துட்டதைப் போலவே உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி ,உன்னோட ஆற்றல்கள் எல்லாம் வளர்ந்திடுச்சு. நீ உன் பலத்தை உணரணும். எந்த ஒரு இக்கட்டான நிலைமையிலும் மனம் தளர்ந்து போகக் கூடாது.

எது வந்தாலும் எதிர்த்து நின்னு பார்த்திடணும்னு ஒரு தைரியம் இருக்கணும். எப்போதுமே நாம யாரையாவது சார்ந்து இருக்க முடியாது இல்லையா?.

பெண்ணுன்னா ஆணுக்கு அடிமை, அவன் பின்னாலேயே ஒளிஞ்சுக்கணும்னு எந்தச் சட்டமும் கிடையாது. ஆண்தான் பெண்ணைக் காப்பாத்தணும்னு நாம எந்நேரமும் எதிர்பார்த்துக் கிட்டே இருக்க முடியாது இல்லையா?

அதுவும் இன்றைய காலகட்டத்துல அப்பா, அண்ணான்னு உறவு முறைகளை ஏற்படுத்திட்டு வாழற நம்முடைய சமூகத்தில இன்றைய நிலைமைமையைப் பார்த்தியா? பொறந்த குழந்தையைக் கூட அது பொண்ணு என்பதால உடலை சிதைக்கத் துணிகின்ற அளவுக்கு வக்கிரம் நிரம்பிப் போச்சு.

இறைவன் படைப்பில் ஆண் பெண்ணுன்னு பாராபட்சமில்லை. நமக்கும் உடல், மன வலிமைகள் பொதுதான். பெண்ணாக நாம நம்முடைய சிந்தனைகளில் வேணா ஒரு வேளை எளிமையானவர்களா இருக்கலாம் ஆனா நாம எளியவர்கள் (Weak) இல்லை. அதை நீ புரிஞ்சுக்கணும்.

நாலு பேருக்கு கத்துக் கொடுக்கிற நீயே இவ்வளவு பயப்படுறவளா இருந்தா எப்படி உன்னைப் பார்த்து யாரும் கத்துக்கிட முடியும்?

உன்னுடைய உள்ளத்திலிருக்கிற பயங்களை உதறிவிட்டு எழும்பாதவரை உன்னை நீயே கட்டிக் கிட்டு செயல்படாம முடங்கிக் கிடக்கிறது மாதிரி தான். புரிஞ்சுக்குவன்னு நினைக்கிறேன்.

சந்திராம்மாவின் சொற்கள் ஒவ்வொன்றும் உளியாய் மாறி சத்யாவை செதுக்குமா? அவளில் மாற்றம் வருமா பார்க்கலாம்.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here