19. காதலும் வசப்படும்

0
563
Kadhalum Vasapadum

அத்தியாயம் 19

அன்று…

[center]நவீன மருத்துவத்தில்[/center]

[center]இதயமாற்றுச் சிகிச்சை[/center]

[center]வெகு சாதாரணமாகி விட்டது[/center]

[center]அன்பே![/center]

[center]சொல் நாம்[/center]

[center]எப்போது[/center]

[center]மாற்றிக் கொள்ளலாம்?[/center]

அரையாண்டு பரீட்சைகள் முடிந்து சில நாட்கள் லீவு விட்டிருந்திருக்கக் கல்லூரி இல்லாவிட்டாலும் தன் ஹோம் ட்யூஷன்கள் தொடர்ந்து கொண்டிருக்க நண்பர்களைச் சந்திக்காவிடினும் பெரிதளவில் வித்தியாசம் தெரியவில்லை.

“பரவால்ல நாம வெட்டியா இல்லாம உபயோகமா தான் இருக்கோம்” என்று சத்யா எண்ணிக் கொண்டாள். அதே நேரம் கிஷோரும், துஷாரும் அழைத்த கோவா பிக்னிக் மறுக்க நேர்ந்தது குறித்து அதிகமாக வருத்த படுத்திக் கொள்ளவில்லை.

என்னதான் அவன் பயணச் சீட்டிற்குப் பணம் கொடுப்பதாகச் சொன்னாலும் மற்ற செலவுகளுக்கு அவளிடம் பணம் இல்லை. ஹரீஷ் அங்கிளிடம் கேட்டால் மாட்டேனென்று சொல்லாமல் ஏற்பாடு செய்வார் தான். ஆனால், தான் இருக்கும் நிலையை நன்கு தன் மனதில் பதித்துக் கொண்டவளுக்கு யாரிடமும் எதையும் இலவசமாகப் பெற்றுக் கொள்ள விருப்பமில்லை.

இலவசங்கள் எப்போதும் இலவசங்களல்ல எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு, இலவசத்தின் விலை என்னவாக இருக்கும்?. மாணவனுக்குக் கிடைக்கும் இலவசங்கள் அவன் தன்மானத்தை விலையாய் கேட்கலாம்?1 வாலிபத்தின் வாயிலில் இருப்பவளுக்குக் கிடைக்கும் இலவசங்கள் அவள் கன்னிமையை விலையாய் கேட்கலாம்?! வறுமையில் இருப்பவருக்கான இலவசங்கள் அவர் உழைப்பை விலையாய் கேட்கலாம்?! முதுமையில் இருப்பவருக்கான இலவசங்கள் அவர்களது உடைமைகளை விலையாய் கேட்கலாம்?! எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வறியவர்க்குக் கிடைக்கும் இலவசங்களிலும் கூட அவர்கள் காரணமாய் உதவி செய்வோர் அடையும் புண்ணியத்தை நாடுவதான விலையாய் இருக்கலாமே.

ஆக, இலவசங்கள் எப்போதும் இலவசங்களல்ல என்பது உண்மைதானே?

வாழ்வில் பட்ட அடிகளில் கற்ற பாடமே அவளைத் திசை திரும்பாமல் வழி நடத்தி இருக்க, ஊருக்கு சென்ற தோழி ஆர்த்தியிடம் நெட்வர்க் பிரச்சனையால் தொடர்பு கொள்ளக் கூட முடியாதவளாகப் பல நேரங்களில் தனிமையில் நாட்களைக் கழித்தாள் சத்யா.

லீவு முடிந்து கல்லூரி வந்த போது, இனி தனிமையின் கொடுமை இல்லை எனும் உவகை எழுந்தது என்னவோ உண்மை. பாட இடைவேளையில் வழக்கம் போல் துஷாரும், கிஷோரும் வர மற்ற தோழமைகளும் ஒன்று கூட அரட்டை ஆரம்பித்தது.

சொல்லி வைத்தார் போல அனைவரும் கிஷோரிடம் கோவா பயணம் குறித்துக் கேட்க, அவனும் துஷாரும் உதட்டைப் பிதுக்கி சோக முகம் காட்டினர். சொந்தத்தில் ஒரு துக்கம் நடைபெற்று விட்டதால் அவர்கள் குஜராத்திலுள்ள தங்கள் ஊருக்கு சென்று விட்டதாகத் தெரிவித்தனர்.

எங்கள் ஊரின் சில கிலோமீட்டர்களுக்கு அப்பால் பாகிஸ்தான் எல்லை இருக்கிறது. நாங்கள் எங்கள் வீட்டின் மாடியின் உயரத்தில் இருந்து பார்த்தாலே எங்களால் பாகிஸ்தானை பார்க்க முடியும் தெரியுமா? என ஊர் கதைகள் பேச, அவ்வளவு அருகாமையிலா பாகிஸ்தான் இருக்கிறது? என்று கண்கள் விரிய கதைகள் கேட்டு அனைவரும் அதில் லயித்து விட்டனர்.

சில நாட்களாக அவர்கள் குழுவில் ரமணி கல்லூரிக்கு வராதிருந்தாள், அவளது வீடு எங்கே நாம் பார்க்க செல்ல வேண்டும் என்று அவர்களுக்குள்ளாகப் பேசிக் கொண்டார்கள்.

கல்லூரி ஆரம்பித்ததும் சத்யாவிற்கான கதிரின் செக்யூரிட்டி வேலையும் மிக ஜோராக ஆரம்பித்து விட்டிருந்தது. சத்யா தனியாக என்றைக்குச் சிக்குவாள்? அவளிடம் தன் மனதை உரைக்க வேண்டும் என்று அவனுக்கு முடிவாகத் தோன்றி விட்டிருந்தது. படிப்பு நிறைவை எட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில் இருக்கும் அவனுக்குத் தன் காதலை இப்போது சொன்னால் ஒழிய பின்னால் சொல்ல வாய்ப்பு கிட்டாது என்பது தான் உண்மை.

இந்த லீவில் ஊருக்குச் சென்ற போது அவன் மாற்றத்தை அம்மா கண்டு பிடித்தது ஒரு பக்கம் அவரிடமாவது மழுப்பி விட்டு வந்து விட்டான். அப்பாவோ தோளுக்கு மேல் வளர்ந்தவனிடம் என்ன சொல்வது என்று நினைத்தாரோ என்னவோ? தனியே அவனைத் தன்னோடு தோப்பிற்கு அழைத்துச் சென்று, உட்கார வைத்து ஒரு மணி நேரம் இந்த வயதில் இருக்க வேண்டிய பொறுப்பு, அடைய வேண்டிய முன்னேற்றம், அதில் கவனம் வைப்பது, கவனத்தைச் சிதற விடாமல் காத்துக் கொள்வது எப்படி?, படித்துக் கொண்டிருப்பதைக் கவனமாய் எழுதி பாஸாவது எவ்வளவு முக்கியம்? என விடாது கருப்பு அளவிற்குக் காதில் ரத்தம் வருமளவும் சுற்றி, சுற்றி அதையே பேச என்னை யாராவது காப்பாற்றுங்களேன்? எனக் கதறும் அளவிற்கு அவன் நிலை ஆகிவிட்டது.

இதென்னடா கொடுமை? ஒரு மனிதனுக்குக் காதலிக்கக் கூட உரிமை இல்லையா? இப்படியா எல்லோரும் தோண்டி துருவி கேட்பார்கள்? விழி பிதுங்கி விட்டது.

சென்னை வந்த பின்னால் தான் அம்மாவின் சாமார்த்தியம் புரிந்தது. தன்னால் கேட்க முடியவில்லை என்று தேன்மொழி அக்காவிடம் கேட்க சொல்லி இருப்பார் போலும் அவரும் அவர் கணவரும் தூண்டி துருவி கேள்விகள் கேட்டதில் நொந்து போனவன் சில மாதங்கள் அவர்கள் வீட்டிற்குச் செல்லாமல் தவிர்க்க,

“நான் உன்னைய ஒன்னும் கேட்கலைடா ராசா, நீ வீட்டுக்கு வா” என வலிய கூப்பிடும் படி ஆனதும் சென்று வந்தான்.

படிப்பின் இறுதி சில மாதங்களே இருந்தன. ஏற்கெனவே தீர்மானித்தது படியே தன் நண்பனோடு கூடத் தொழில் துவங்குவதோடு கூடப் படிப்பையும் ஒருவாறு சமன் செய்து கொண்டிருந்தான் கதிர். உள்ளுக்குள்ளாக ஊசலாடிக் கொண்டிருந்தது அவனது காதல்.

காதல் என்பது யாதென அவனுக்குப் புரியவில்லை. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுதான் சத்யாவிற்கு ஒரு துன்பமும் ஏற்படாமல் காக்க வேண்டும், அவளுக்கு ஒரு அழகான வாழ்க்கையைக் கொடுக்க வேண்டும் என்பது தான்.

அந்த மருண்ட பார்வையாளை அரவணைத்து, நீ எதற்கும் பயப்படாதே, உனக்காக நான் இருக்கிறேன் எனச் சொல்வதொன்றே அவன் நோக்கம்.

மாறாக அவள் அவனைக் கண்டே மருள்வதும், மிரளுவதும் அதுதான் அவனின் சோகம். மானைப் போல மருளும் அவள் கண்கள் அவை ஏன் அவனை இவ்வளவாய் ஈர்க்கின்றது? காரணமே தெரியவில்லையே?

அவளுடைய கோபத்திலும், திட்டுக்களிலும் ஒளிந்திருக்கும் பயத்தை அவன் கண்டு கோண்டதால் வந்த இரக்கம் தான் காரணம் என்றால், அது காதலாகுமா?

வஞ்சியவள் அவனைக் கண்டாலே முறைப்பதாய் இருக்க, அவனது நேசத்தைப் பரிசாகக் கொடுத்தால் ஏற்றுக் கொள்வாளா? எட்டி மிதிப்பாளா? எதற்கும் கலங்கக் கூடாதென்றே பெற்றோர்களால் வளர்க்கப் பட்டவன் இந்த ஒரு நிராகரிப்புக் குறித்து மிகவும் கலங்கினான். அப்படி ஒன்று நிகழாமல், தன் வாழ்வில் காதலும் நலமாய் மலர ஆசைப்பட்டான்.

இல்லையென்று சொல்ல ஒரு கணம் போதும்,
இல்லையென்றச் சொல்லை தாங்குவதென்றால்,
இன்னுமின்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்ல போகிறாய்?

மனதின் ஆழத்தில் தோல்வியின் பயம் இசையாய் வெளிப்பட, தோல்வியை எண்ணுகின்றவன் தோல்வியையே அடைகின்றான் எனும் விதமாகக் கதிரின் மனப் பயங்களும், சத்யா கதிரின் மீது கொண்ட தவறான, அருவருக்கும் எண்ணங்களும் சேர்ந்து அந்த மாலை நேரத்தில் கதிரின் காதலை உடைத்து சுக்கு நூறாக்கியது.

தனிமையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவளை கவனித்தவன் அவள் அருகில் அமர்ந்தான். தன் தோழர்கள் இல்லாத நேரம் தன் அருகே உட்கார்ந்தவனின் தைரியத்தை உள்ளுக்குள் வெகுவாக அர்ச்சித்துக் கொண்டிருந்தாள் அவள்.

நாக்கில் மனதைக் கொல்லும் விஷ மருந்தை பூசலானாளோ?

சாப்பிட்டு டிஷ்யூவால் விரல் துடைத்து எழப் போனவளை கதிரின் குரல் தடுத்தது.

“சத்யா நான் உன் கிட்ட பேசணும்”

அதுவரை விலகி ஓடிவிட வேண்டுமென்றே திட்டமிட்டிருந்தவள் பல மாதங்களாக நடை பெறும் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு முடிவு வைக்க எண்ணி அங்கேயே அமர்ந்திருந்தாள்.

பதில் பேசாவிட்டாலும் எதிர்ப்பு இல்லாமல் அமர்ந்திருப்பதே கதிருக்குப் போதுமானதாக இருக்க,

சத்யா, எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். என்னைப் பத்தி உனக்கு எவ்வளவு தெரியும்னு தெரியல, நான் என் அம்மா அப்பாவுக்கு ஒரே பையன். தனியா பிஸினஸ் ஆரம்பிக்கிற ஐடியால இருக்கிறேன். இன்னும் ரெண்டு மூணு வருஷத்தில தொழிலை ஒரு வகையில் னிலை நிறுத்திப்பேன்.

………….

அதுக்குள்ள உன் படிப்பும் முடிஞ்சிடும், அதுக்கப்புறமா நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?

…………

புயலை அடக்கியதாக இருந்தது சத்யாவின் அமைதி. முன்பொரு முறை கோபத்தை அடக்க முடியாமல் இதே உணவகத்தில், இதே கதிரை திட்டி விரட்டியும் மறுபடியும் வந்திருக்கின்றானென்றால் அவன் எத்தகைய சந்தர்ப்பவாதியாக இருப்பான் என்று அவள் மனம் கணக்கிட்டது.

நீ சொல்லி முடிச்சிட்டியா?

ஆம் எனத் தலை ஆட்டினான் கதிர்.

ஆண்கள் அப்படி, இப்படி என்று பலவாறு அவர்களைச் சூப்பர் மேன்களாக உலகம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினாலும், தோல்வியுற்றால் தரையில் வீசி துண்டாடினாலும் ஆண்கள் ஒன்றும் இரும்பு மனிதர்கள் அல்லவே.

அவர்களும் சதையும், ரத்தமுமான மனிதர்கள் தானே. வலியும், துன்பமும், நிராகரிப்பும் அவர்களையும் மிகவாய் துன்புறுத்த கூடியதே. அதை உணராமல் தான் சமூகம் பல நேரங்களில் ஆண்தானே என்று பல வடுக்களை அவர்களுக்குப் பரிசாய் வழங்கி விடுகின்றது.

எதுக்கு இப்ப நான் சரின்னு சொன்னா என்ன செய்யறதா யோசிச்சிருக்கிற?

ம்ம்…. புரியாமல் முழிப்பது கதிரின் முறையாயிற்று.

உன்னோட கேடு கெட்ட கர்ள் ப்ரண்ட்ஸ் மாதிரி என்னையும் நினைச்சியோ?

நோ எங்கே கூப்பிட்டாலும் உன்னோடு வர்றதுக்கும், கூத்தடிக்கிறதுக்கும் நான் தான் கிடைச்சேனா? மனக்கண்ணில் அந்தக் காட்டில் கதிரோடு தோளோடு தோள் இணைந்த பெண்ணின் காட்சி ஓடியிருந்ததோ என்னமோ?

எனக்கு இந்தக் கல்லூரியில் இன்னும் 2 வருஷம் கழிக்க வேண்டியதிருக்கு என்கிற ஒரே விஷயத்துக்காகத் தான் நான் பிரச்சனை செய்யாம விடறேன். உன்னை மாதிரி கேடு கெட்டவன் இருக்கிற திசையைக் கூட நான் திரும்பி பார்க்க விருப்ப படலை. இதில காதலாம், கல்யாணமாம்.

உனக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடா?

வார்த்தைகளால் தீயை உமிழ்ந்தவள், எதிரில் இருந்து எழுந்து சென்றது கூட மனதில் பதியாமல் போக உறைந்து அமர்ந்திருந்தான் கதிர்.

உன்னிடம்
நான்
காதல் கேட்ட பொழுதில்


ஆம் என்று சொல்லி
என் இதயத்தில்
பூவை வார்த்திருக்கலாம்


இல்லை என்று சொல்லி
வருத்தத்தை மேவியிருக்கலாம்


ஏதேதோ சொல்லி
என் இதயத்தை ரணமாய்க் கீறியதேன்?

:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:

இன்று….

[center]ரோஜாப் பூ வண்ணம்[/center]

[center]உன் சேலையில் மட்டுமா[/center]

[center]உன் கன்னங்களிலும்.[/center]

பின் இருக்கையில் அம்மாவோடு அமர்ந்திருந்த சத்யாவை காரில் ஏறி அமர்ந்தவன் கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்துவிட்டு திரும்பி பார்த்ததோடு சரி, கர்ம சிரத்தையாய் காரை செலுத்தினான். அதைப் பார்த்த சத்யா,

“ஓ அம்மா, அப்பா முன்னாடி நல்லவன் மாதிரி வேஷம் போடுறான்” எண்ணிக் கொண்டவள் பதிலுக்குப் பதிலாக அவன் இருப்பதையே அறியாதவள் போலப் புறக்கணித்தாள்.

கோயிலுக்குள்ளே சென்று செய்ய எண்ணியிருந்த பூஜைகளைச் செய்து முடித்து வெளியே வந்து நின்றனர். கணவரும் மகனும் யாரோடோ மிக முக்கியமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்களை நோக்கி சத்யாவையும் அழைத்துக் கொண்டு விரைந்தார் சந்திரா.

அத்த… அழைப்பிற்குத் திரும்பினார் அங்கே ரதியும் அவளருகே பெரியவர்களும் இருந்தனர். அது ரதியின் அம்மா, அப்பாவாக இருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டாள் சத்யா. முன்பெல்லாம் குடும்பமாக யாரையும் பார்க்கும் போது மனதில் எழும் வெறுமை உணர்வு தற்போது இல்லாததை ஆச்சரியமாய் உணர்ந்தாள். தனக்கென்று ஒரு குடும்பச் சூழ்நிலையை அமைத்து தந்த சந்திராம்மாவை, சுந்தரம் மாமாவை பார்க்க இது எல்லாம் இவர்கள் தந்ததல்லவா என்ற நண்றியுணர்வு எழுந்தது… ஆனால், இந்தக் குடும்பச் சூழலை தனக்குத் தர காரணமானவனை மட்டும் அவளால் நல்லதாய் எண்ண முடியவில்லை.

சிந்தனையினின்று திரும்பியவள் இன்னும் அதிகமாய் அழகாய் மிளிர்ந்து கொண்டிருந்த ரதியை ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். எப்போதும் தாவணி அணிகின்றவள் அன்றைக்குச் சேலை அணிந்ததன் காரணமாக இருக்குமோ? அப்படித்தான் போல? பொன் மேனியாக மின்னிக் கொண்டிருந்தாள் ரதி.

அக்கா, எதிர்பார்க்கவே இல்ல. இன்னிக்கு எப்படிக் கோயிலுக்கு ஆச்சரியமாய்ச் சந்திராம்மாவிடம் வினவி கொண்டிருந்தார் ரதியின் அப்பா.

அவர்கள் தொடர்ந்து அளவளாவத் தொடங்க, அவர்களது தொடர்ந்த பேச்சில்,

“நாங்க கல்யாணப் பத்திரிக்கையைக் கோயில்ல வச்சு பூஜை செய்யறதா வந்தோம், நாளைக்குத் தான் நம்ம வீட்டுக்கு வந்து கொடுத்துட்டு, மத்த சொந்த பந்தங்களுக்கும் கொடுக்கிறதா இருந்தோம்” என மகிழ்ச்சியாய் சொல்லவும்தான்,

“ரதிக்குத் திருமணம் போலிருக்கிறது” என்று புரிந்துக் கொண்டாள் சத்யா

அப்படின்னா ரதி இந்தக் கருவாயன கட்டலியா? மனதிற்குள்ளாக வண்டொன்று குடைய ரதியின் உற்சாகமான குரல் அவளைத் தட்டி எழுப்பியது.

அத்தான்ன்… ரதியின் குரலுக்குக் கதிர் மட்டுமல்ல சுந்தரமும் அவர்களோடு கூடப் பேசிக் கொண்டிருந்த மற்றொரு பெரியவரும் திரும்பிப் பார்க்க,

ரதி, இப்படியா கத்துவ? கடிந்து கொண்டார் ரதியின் தாய். அவருக்குத் திருமணப் பெண்ணான தன் மகள் குறித்து யாரும் தப்பாக எண்ணி விடுவார்களோ என்று கவலை.

“அதுக்கென்ன அவ அவளோட அத்தான தான கூப்பிடறா? சும்மா கூப்பிட்டுட்டு போகட்டும் விடு” சந்திராம்மா சமாதானப்படுத்த,

அப்பாவை அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த நபரோடு விட்டு விட்டு, அனுமதி கேட்டு இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான் கதிர். வெகு பாந்தமாக அந்த வேஷ்டி சட்டை அவனுக்குப் பொருந்தியிருந்ததைக் கவனித்துக் கொண்டிருந்தாள் சத்யா. அது மட்டுமா? ரதியைக் கண்டதும் பளிச்சிட்ட அவன் முகத்தையும், முகம் விகசிக்கச் சிரித்தவாறே வந்த பாவனையையும் தான்.

அதெப்படி கல்யாணம் நிச்சயமான பொண்ணு இவ்வளவு உரிமையாய் அவனை அழைக்கிறாள்? அவள்தான் அழைக்கிறாள் என்றாலும் இவன் இப்படிப் பாய்ந்தோடி வருவானேன்? உள்ளுக்குள்ளாக ஏதோ ஒரு உணர்வு எழுந்து அடங்கியது.

என்ன வாலு? எப்படியிருக்கக் கல்யாணப் பொண்ணு? விசாரித்தவன் முகத்தில் ரதியின் திருமணம் குறித்த அதிருப்தியை தேடி ஏமாந்தாள் சத்யா.

மூச்சுக்கு முன்னூறு தரம் ,”என் அத்தான்” என்று அன்றைக்கு இவளிடம் மிரட்டிக் கொண்டிருந்தவள் கூடக் கதிர் அவளிடம் “கல்யாணப் பொண்ணு” என்றதும் வெட்கப்பட்டுக் குனிந்து நிமிர்ந்தாலொழிய அவனைத் திருமணம் செய்ய முடியவில்லை எனும் ஏக்கம், வருத்தம் இன்ன பிற உணர்வுகளைக் கண்டாளில்லை.

‘இனி நானும் மெட்ராஸ்காரியாக்கும், ஞாபகம் வச்சுக்கோங்க” தன் புகுந்த வீடு சென்னையில் இருப்பது குறித்த பெருமை மிளிர்ந்தது ரதியின் முகத்தில்,

“இருந்துட்டுப் போ, எனக்கென்ன நான் இந்த ஊர்க்காரன்தான்பா, மெட்ராஸ்ல என்னிக்காவது ருசியா சாப்பிட ஆசை வந்தா போய்ச் சாப்பிட தேன்மொழி அக்காக்கு பிறகு, இன்னொரு வீடு கடைச்சிடுச்சு. நல்லா சமைக்கக் கத்துக்கிட்டல்ல. இல்லன்னா கத்துக்கச் சரியா?”

“நீங்க சாப்பிட வர்ற அன்னிக்கு சாப்பாட்டுல பேதி மாத்திரை கலந்து வைக்கிறேனா இல்லியா பாருங்க”

மாறி மாறி பேசிக் கொண்டிருந்தவர்களை ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தவளை நோக்கி என்ன? எனப் பார்வையால் கேட்டான் கதிர்.

அவள் பார்வையில் விதிர்த்தவள் சட்டென்று அங்கிருந்து நகர்ந்து சந்திராம்மாவின் அடுத்தப் பக்கத்தில் போய் நின்றுக் கொண்டாள். சிறு குழந்தைப் போன்ற அவளின் செயலில் கதிர் முறுவலித்ததை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஒருவழியாக ரதியின் வீட்டினர் கோயிலுக்கு உள்ளே செல்ல, அவர்களிடமிருந்து விடைப் பெற்று அங்கிருந்து புறப்பட்டுக் கலகலப்பான பேச்சுக்களோடு வீடு திரும்பினர்.

சத்யா கதிரிடம் வம்பு வளர்க்காமல் ஒதுங்கினாள். அவனது வீட்டிலேயே தங்கி உண்டு உறங்கி எழுந்து, அவன் மூலமாக வந்த உடைகளையே உடுத்து , அவன் அம்மா அப்பாவோடு உறவு கொண்டாடி இருந்து கொண்டு அவனிடமே மூர்க்கமாய் மோதுவது உணர்வளவில் அவளுக்குச் சாத்திய படவில்லை.

ஒருபக்கம் தன்னைக் குறித்தே இழிவாகவும் தோன்றியது. என்னை எதற்குக் கடத்தினாய்? என்று ரோஷக்காரியாகச் சண்டையிட்டவள் அன்றே கிளம்பியிருக்க வேண்டும். அப்படிக் கிளம்பி இருந்தால் அது அவளது தன்மானத்திற்குச் சான்றாக இருந்திருக்கும். அதை விடுத்து, ஏதோ சுற்றுலா வந்தவள் போல இத்தனை காலம் இந்த ஊரிலேயே தங்கி விட்டு சென்னைக்குச் சில நாளில் திரும்பச் செல்லும் தருணத்தில் திடீரென அவனிடம் சண்டைப் போடுவதில் என்ன பெருமை இருக்கிறது?

அதுவரை சுகமாய் இருந்ததனைத்தும் இப்போது முள்ளாய்க் குத்தியது. வெட்கமுற்றவளாக வீட்டிற்கு வந்ததும் உள்ளறைக்குள்ளாக ஒடுங்கிக் கொண்டாள். உடுத்திருந்த சேலையைக் களைந்து மடித்து வைத்தவள் அந்தச் சேலையும் கூடத் தன்னைப் பார்த்துச் சிரிப்பதாகப் படவே கழிவிரக்கத்தில் கண்கள் நீர் கோர்க்க, திறந்து கிடந்த சாளரத்தின் வழியாக வெளிப்புறக் காட்சிகளைக் கண்டவாறு அமர்ந்திருந்தாள்.

சக்திம்மா……

சந்திராம்மாவின் குரல் எங்கிருந்தோ ஒலிக்க விரைந்தாள் சத்யா.

என்னம்மா?

இந்த காபியக் கொண்டுபோய்க் கொஞ்சம் கொடுத்திடு கண்ணு…

கதிரு பயலை கூப்பிட்டா செவிடன் காதில சங்கூதுன மாதிரி உக்காந்திருக்கான்.அவன் கூட்டாளி வந்தா போதும் காது கேக்கமாட்டீங்கு அவனுக்கு” எனக் காஃபி ட்ரே யை அவள் கையில் கொடுத்தவர் முன்னறை நோக்கி போகச் சொல்லி விட்டு தன் வேலையில் மூழ்க,

ட்ரே யை வாங்கியவள் அதனைக் கதிருக்குக் கொடுக்கச் செல்ல வேண்டும் என்பதே மனதிற்குள்ளாகப் புயலை கிளப்பி விட்டுச் சென்றிருக்க, மெதுவாக நகர்ந்து முன்னறைக்கு வந்தாள். வந்தவள் பார்த்த காட்சியில் கால்கள் நகர மறுத்தன.

கதிர் தன் கைகளை அந்த நபரின் தோளோடு சுற்றிப் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான். அந்த ரப்பரில் கட்டப் பட்டிருந்த எலிவால் முடி கொண்ட நபர், தான் கல்லூரியின் காட்டினுள்ளே பார்த்த நபர் பக்கவாட்டில் கொஞ்சம் தெரிந்தாலும் யாரென்று அறிந்து கொள்ள, முழு உருவத்தையும் பார்ப்பதற்காக வெகு சிரமத்தோடு கால்களை நகர்த்திக் கொண்டு, காபி ட்ரேயை ஏந்தியவளாய் அவர்கள் முன்னே வந்து நின்றாள் சத்யா.

லேட்டஸ்ட் ஸ்டைலாய் முடியை வளர்த்து ரப்பர் மாட்டியிருந்த ஆண்மகன் அவன், பெண் அல்ல. அவன் உடையும் , உடல்வாகும் அவனைப் பெண்ணாய் காட்டி இருந்தது போலும். ஏதோ கலகலப்பாய் பேசிக்கொண்டிருந்தவர்கள் கதிர் தன் கரத்தை அவன் தோளிலிருந்து எடுக்கக் காஃபியை எடுக்கத் தயாரானவர்களுள் முதலில் அவன்,

“தேங்க்யூ சிஸ்டர்” என்றவனாகக் காபியை எடுத்துக் கொண்டான். கதிரும் முறுவலோடு காஃபிக் கப்பை தூக்கிக் கொள்ள மறுபடியும் அவர்கள் அளவளாவல்கள் தொடர்ந்தது.

சத்யாவிற்கு மனதிற்குள்ளாக ஏகத்திற்கும் கலக்கம் சூழ்ந்து கொண்டது. கதிர் மேல் அவள் கொண்ட அருவருப்பு, கோபம், ஆத்திரத்தின் சுவர்கள் ஒவ்வொன்றாய் பலமிழந்து சரிந்துக் கொண்டிருந்ததை உணர்ந்தாள் அவள்.

அதில் முதலாவதாக அன்று சுவரோரம் போய் நின்று தன் உடை முழுக்க எறும்பு அப்பிக் கொண்டு நின்ற குழலி பாப்பா மற்றும் அவளது உடையைத் தட்டி விட்ட சந்திராம்மா, அதன் பிறகு, எங்களில் ஒருவர் தான் கதிர் அத்தானை கட்டிக்கப் போகிறோம் என்று தீவிரமாக மிரட்டிச் சொன்ன ரதி தன் கூற்றுக்கு முரணாக வேறொருவருடனான தன் திருமணம் குறித்துக் கதிரிடமே மகிழ்ச்சியாக அளவளாவியது. இப்போது, தான் காட்டில் கதிர் பெண்ணோடு தனிமையில் உலாவியது குறித்த அருthவருப்பில் இருக்க அந்த நபர் பெண்ணல்ல ஆண் அதுவும் அவனது நண்பன் எனத் தெரிய வந்தது எனப் பல்வேறு நிகழ்வுகளின் தாக்கத்தில் அயர்ந்து அமர்ந்திருந்தாள்.

அவ்வளவு போதாதென்று, அன்றிரவே அவளுக்காக வந்திருந்த தொலைபேசி அழைப்பு ஒன்று அவளை முற்றிலுமாய் நிலைக் குலைய செய்திருந்தது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here