2. காதலும் வசப்படும்

0
686
Kadhalum Vasapadum

அத்தியாயம் 2

[center]மலருக்கும், மொட்டுக்கும்,[/center]
[center]பேதம் தெரியாத- தேசத்தில்[/center]
[center]ஏன் பிறந்தேன்?[/center]


[center]இரவிலும் பகலிலும்[/center]
[center]பொல்லாத சிற்றின்ப வேட்டை[/center]
[center]கொண்டோர் பூமியில்[/center]
[center]ஏன் உதித்தேன்?[/center]

[center]பெண் என்னும் ஜென்மம் ஒவ்வொன்றிலும்[/center]
[center]காமம் மட்டும் தேடும்[/center]
[center]பொல்லா மனிதருள்[/center]
[center]ஏன் ஜனித்தேன்?[/center]

[color=brown]“வயசுக்கு வராத பொண்ணுங்கதான் கிக்கு தெரியுமா?.. வீரியம் ஜாஸ்தியாம்…….துண்டு துண்டாக இருவர் பேசிக் கொண்டிருக்கும் வார்த்தைகளும், ஹீனமான குரலில் ஒரு பெண்ணின் முனகலும் அன்றைய தினம்தான் அந்த ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டிருந்த அந்தப் பதின்ம வயது குழந்தைக்குக் கேட்டது. தெரியாத இடத்தில் தன்னுடைய இயற்கை உபாதையைக் கழிக்க, கழிவறையைத் தேடியவள் தன்னை அறியாமல் வாசலருகே சென்றிருக்க அவசரமாய் அந்த இருட்டுக்குள் இவள் எதிரில் வந்து நின்றவனின் ஈயென இளிப்பும், கர்ணகடூரமான அந்த முகமும், பெரிய மீசையும், கரு கரு நிறமும், மிரட்ட வீலென வீறிட்டாள் அவள்.[/color]

:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:

[center]ஆசையை அடக்க வேண்டுமாம்[/center]

[center]தேவையை அடைய வேண்டுமாம்[/center]

[center]நீ என் சுவாசக்காற்று என்கிறேன் நான்[/center]

[center]அப்படியானால்,[/center]

[center]நீ என் ஆசையா?[/center]

[center]தேவையா?[/center]

வேர்த்து விறுவிறுத்திருந்த சத்யா தனக்கு அருகில் தாக்குவதற்கு ஏதுவாக எதையும் காணாமல் தன் உடலைக் காத்துக் கொள்ளுபவள் போல அருகிருந்த தலையணை எடுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டவளாகக் கதவை கலவரமாய் நோக்கினாள்.

அந்த அதிகாலை வேளையில் தலைக்குக் குளித்துத் துண்டோடு மங்களகரமாய்த் தாய்மை பரிவோடு இருந்த அந்தப் பெண்மணி உள்ளே வரவும்,

என்ன செல்லம்மா எழுந்துட்டீங்களா? என அவளை நோக்கி முகம் விகசிக்கக் கேட்டார்.

தன்னை அழுத்திக் கொண்டிருந்த அத்தனை பய உணர்வுகளும் துளி துளியாய் குறைய, தனக்கு முற்றும் தெரியாத ஒரு இடத்தில் இருக்கிறோம் என்ற எண்ணம் முற்றிலும் மறைந்து விடத் தாயை தேடும் சேயைப் போல ஏக்கத்தோடு அந்தப் பெண்மணியின் ‘செல்லம்மா’ என்னும் அழைப்பில் அவர் முகத்தில் நிலைத்து விட்டது சத்யாவின் கண்கள்.

அருகில் வந்தவர், “என்னம்மா? சீக்கிரம் எழுந்துட்டியோ? களைப்பா இருந்தா இன்னும் தூங்கிக்கோ? கதிரு அவ களைச்சிருப்பாம்மா இப்ப போக வேணான்னு தான் சொன்னான். நான் தான் உன்னைப் பார்க்க ஆசைப்பட்டு வந்தேன்”.

அவள் முகத்தை வாஞ்சையாய் வருடின அவர் விரல்கள். அவரது கரத்தைப் பற்றிக் கொள்ள அவசரப்பட்ட தன் கரத்தை அவரது “கதிரு” என்ற அழைப்பே கட்டிப் போட்டது.

மயக்க மருந்து கொடுத்து கையைக் காலைக் கட்டி கூட்டிக் கொண்டு வந்தவன் பேசியிருக்கிற பேச்சப் பாரு… உடனே அவன் தாயிடம் மகனைப் பற்றிய உண்மையைச் சொல்லிவிடலாமா? என மனம் பரபரக்க உள்ளுக்குள்ளாக வேறு திட்டம் தீட்டினாள் அவள்.

தான் எத்தனையோ சொல்லியும் தன் பேச்சைக் கேளாதவன், எனக்கு உன்னைப் பிடிக்கவே பிடிக்காது எனச் சொல்லியும் தன்னை ஆட்டை மாட்டைப் போலக் கட்டி தன் வீட்டுக்கே அழைத்து வந்திருப்பவனிடம் உங்க அம்மா அப்பாக்கிட்ட உண்மையைச் சொல்லிடுவேன் பாரு என்று மிரட்டினால் என்ன செய்வான் மனம் கெக்கலித்தது.

தவறானவன் என்றால் தன் வீட்டிற்கா அவளைக் கடத்தி வந்திருப்பான் என அவள் யோசிக்கத் தவறி விட்டாள் அது மட்டுமா? இவ்வாறு செயல்பட அவனுக்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும் என்பதையும் தான் அவள் கணிக்கத் தவறி விட்டாள்.

சரி சரி போய்க் குளிச்சுட்டு வா சக்திம்மா… புட்டு செஞ்சு வச்சிருக்கேன் வந்து சாப்புடு…என்றவராய் அங்கிருந்து நகரப் பார்த்தவர்………

அவரது சக்திம்மா எனும் அழைப்பிலும், குளிக்கச் சொல்கிறாரே மாற்றுத் துணிக்கு எங்குப் போவது என்ற திகைப்பிலும் அப்படியே நிற்க……

என்னாச்சு… உன் துணியை எங்க வச்சிருக்கான்னு அவன் சொல்லலியா?

போன வாரம்தான் என் கிட்ட சொன்னான், நான் தான் நம்ம பக்கத்து வீட்டு ராஜியில்ல ராஜி அவளையும் கூப்பிட்டுட்டு டவுன் போயி உனக்காக வாங்கிட்டு வந்தேன். என அழுத்தமான நிறங்களில் விலை கூடுதலான உடைகளை எடுக்க, அந்த அடுக்குகளின் அருகாமையில் இருந்த துணிகளைப் பார்த்ததும் புரிந்தது அவை கதிரின் உடைகளென்று.

விபரம் தெரிந்த நாள் முதலாகத் தான் உடுத்த ஆடைகளெல்லாம் எப்போதும் பிறர் உடுத்து கிடைத்த ஆடைகள் தான். ஆசிரமத்தில் அவ்வப்போது பைகள், பைகளாகப் பற்பல நிறத்தில், அளவில் பிறர் உபயோகப் படுத்திய பின் பகிர்ந்து கொண்ட ஆடைகள் வரும். அதனை ஆசிரம நிர்வாகிகள் அங்கிருக்கும் குழந்தைகளின் அளவிற்கேற்ப பிரித்து வைத்து பகிர்ந்து கொடுப்பார்கள்.

ஒரு சில நேரங்களில் அப்படிக் கிடைக்கும் ஆடைகள் அழகானவையாக அமைந்து விடும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஒரு சில நேரங்களிலோ தான் விரும்பிய ஆடைகள் அளவு பொருந்தாதன் காரணமாகவோ இல்லை வரிசையில் முன் பின்னாக நிற்பதாலோ பிறருக்கு சென்று விடும் போது மனம் கூம்பி விடுவதும் உண்டு. அதெல்லாம் சில மணித்துளிகள் மட்டும் தான் அதன் பின்னர் அந்த எண்ணம் மாறி விடும். அப்படியே வாழ பழகியிருந்தார்கள் அவர்கள்.

தன்னிடம் இருப்பதில் நிறைவு கொள்ளும் குணம் சத்யாவிடத்தில் ஏற்கெனவே இருந்தது. தான் படித்து முடித்து வேலைக்குச் சென்றதும் தனக்காகப் புத்தம் புதியதாய் உடைகள் வாங்க வேண்டும் என்பதே அவளது மிகுதியான ஆசையாக இருந்திருக்கின்றது. அவ்வாறு இருக்க, தான் மிகவும் வெறுக்கும் ஒருவனிடமிருந்து புதிய உடைகள் பெற்றுக் கொள்ள அனுமதிக்காத அவள் தன்மானமும், தான் பார்த்தேயறியாத தாய்மையின் உருவாய் நிற்கும் பெயர் அறிந்திராத பெண்மணியின் ஓயாத அருவியாய் கொட்டும் அன்பை மறுக்க இயலாத இயலாமையுமாய்க் கண்ணில் நீர் சேர்ந்து விட்டது அவளுக்கு……

என்னாச்சு சக்திம்மா? …. இந்தச் செவப்பு நிறம் உனக்குப் பிடிக்கலியா? அந்தக் கிளிப்பச்சை நல்லாருக்கா? என்றவரிடம்,

பதிலே பேசாமல் அவர் கையில் இருந்த உடையை அமைதியாக வாங்கிக் கொண்டு குளிக்கச் சென்று விட்டாள் அவள்.

சத்யாவின் மாறுபட்ட முகபாவனைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் அங்கிருந்து நகர்ந்தார் சந்திரா கதிரின் அம்மா.
குளித்துக் கொண்டிருக்கும் போது தான் லொட லொடவெனப் பேசிக் கொண்டிருந்த கதிரின் அம்மா சொன்னது ஞாபகம் வந்தது சத்யாவிற்கு…

“என்னைக் கடத்துவதாக ஒரு வாரம் முன்பே அவன் திட்டம் போட்டு விட்டானா? அதைத் தன் தாயிடம் சொல்வானேன்? அவளது தொடர்ந்த சிந்தனையைக் கலைத்தது களைத்துப் போன அவள் உடலும், விட்டால் குடலையே தின்று விடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருந்த பசியும். ஆம், முன்னிரவு உணவு கூட அவள் எடுத்துக் கொண்டிருக்க வில்லையே? கருவாயா…. சத்யாவின் பற்கள் கோபத்தில் நற நறத்தன
கதிர் எதற்காக என்னைக் கடத்த வேண்டும்? என்ற விடைத் தெரியாத கேள்வியைக் குழப்பிக்கொள்ள அப்போது நிச்சயமாய் அவளிடம் தெம்பில்லை.

அறையை விட்டு வெளியே வந்தவளுக்கு அந்த மிகப் பெரிய வீட்டைப் பார்த்துப் பிரமிப்பு ஏற்பட்டது. அந்த வீடு கிராமிய முறையில் காற்றோட்டத்தோடு கட்டப் பட்டிருந்தது.எங்கு பார்த்தாலும் சுத்தம் , சுத்தம் அப்படியொரு சுத்தம். எங்கோ “ம்மா” எனும் மாட்டின் குரலும், கீச்சுக் கீச்செனப் பறவைகள் நாதமும்….அவளுக்கு அந்தச் சூழ்நிலையே மனதை கொள்ளை கொள்வதாக இருந்தது.

சக்திம்மா… வா வா உக்காரு… பிள்ளைக்குப் பசிச்சிருக்கும்… என்றவராக அவசர அவசரமாகப் பரிமாற அதற்குக் குறையாத பசியோடு அவளும் சாப்பிடலானாள்.

சட்டென்று புரையேற “கடங்காரன் என்னை நினைக்கிறான் போலிருக்கு, எப்ப என் பின்னாடி வந்தானோ அன்னியிலிருந்து தினமும் புரையேறுது” உள்ளுக்குள்ளாகக் கதிரை திட்டிக் கொண்டே திணற ஆதூரமாய் அவளை ஆசுவாசப்படுத்திய சந்திராம்மா, அவள் கண்களினின்று வெளியேறிய கண்ணீரை தன் முந்தானையால் துடைத்து முதுகை நீவி விட, அந்த அரவணைப்பில் அவரைத் தன்னை மறந்து கட்டிக் கொண்டவளாய் “அம்மா” வென்று அவர் இடுப்போடு ஒட்டிக் கொண்டாள்.

மற்றொரு அறையிலிருந்து அந்தக் கடங்காரன் அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here