20. காதலும் வசப்படும்

0
547
Kadhalum Vasapadum

அத்தியாயம் 20

அன்று…

[center]உனக்கும் எனக்கும்[/center]

[center]இடையில்[/center]

[center]ஒன்றுமில்லையென[/center]

[center]பலமுறை உரத்துச் சொல்கிறாய்.[/center]

[center]யாருக்காக இந்த அறிவிப்பு?[/center]

[center]எனக்காகவா? –இல்லை[/center]

[center]அதை மனதளவில் ஏற்றுக் கொள்ளாத[/center]

[center]உனக்காகவே தானா?[/center]

அன்றைய நாளின் கதிரின் காதல் மற்றும் திருமண ப்ரபோசலுக்கும் சத்யாவின் மறுப்புக்கும் பின்பான காலக் கட்டத்தில் சத்யா வெகுவாகச் சிடுசிடுப்பாக மாறிப் போயிருந்தாள். கதிர் மீதான வெறுப்பை மிகவும் வளர்த்துக் கொண்டு, அவனைக் கண்டாலே இன்னும் அதிகமாய் வெறுப்பைக் கக்குபவளாக இருந்தாள். சொல்லப் போனால் கதிரின் அந்தத் துணிவான பேச்சுத்தான் அவலது ஆத்திரத்தை விசிறி விட்டிருந்தது. ஒன்றுமறியா அப்பாவி போலத் தன்னைக் காட்டிக் கொள்ளும் அவனின் பாவனையில் வெகுவாய் வெகுண்டிருந்தாள் அவள்.

அதற்கு முற்றும் மாறாகக் கதிர் முடங்கிப் போயிருந்தான். அன்றைய நாளின் காதல் நிராகரிப்பு தந்த வலியைத் தாங்கிக் கொண்டது ஒரு புறம் என்றால், தன்னைக் குறித்த அவளது மதிப்பீடுகளால்தான் வெகுவாக நொந்துப் போய் இருந்தான். தெருப் பொறுக்கி அளவிற்கு அவனை அவள் மதிப்பிட்டு வைத்திருந்தது தான் அவனுக்கு வெகுவாக வலித்தது.

தான் எப்போது யாரோடு சத்யா கூறியது போலத் தவறாக நடந்து கொண்டோம்? என அவன் யோசித்துப் பார்த்தான். நகரத்தில் பிறந்து வளர்ந்த தன் மற்ற நண்பர்களைப் போல அவன் அசட்டையான குணமுடையவன் அல்லன். எதைச் செய்தாலும் யோசித்துச் செயல்படுவான். ஏன் அன்றைக்குச் சத்யா அவனைக் காலையில், தனிமையில் சந்திக்க வந்த போது அவன் அவளை உடனே அங்கிருந்து போகச் சொல்லவில்லையா? என்ன?

எவ்வளவு யோசித்தும் அவனுக்குச் சத்யா அவனை வெறுக்கும் காரணம் புரியவில்லை. புரிய வந்த போதோ அவனால் கோபத்தைக் கட்டுக்குள் அடக்க முடியவில்லை.

அன்று மதிய நேர சாப்பாட்டிற்கான நேரம் உணவகத்தில் கூட்டம் நெருக்கித் தள்ளிக் கொண்டிருக்கச் சத்யாவின் மேல் யாரோ உடல் முழுவதும் படர மோதி, அழுத்தி உராய்ந்து தள்ளிச் சென்ற நிலை. தட்டுத் தடுமாறி சுதாரித்து வந்து வெளியே வந்தவள் தன் பின்னாக வந்து நின்றுக் கொண்டிருந்தவனைக் கண்டு ஆங்கார ரூபம் கொண்டாள்.

ஏய் கருவாயா?

ஆங்கார அழைப்பிற்குத் தன்னைப் பின்னிருந்து தள்ளிக் கொண்டிருந்தவனைக் கண்டித்துப் பேசிக் கொண்டிருந்தவன் அதிர்ச்சியாகி திரும்பினால் எதிரில் பத்ரகாளியாய் அவதாரமெடுத்து நின்றுக் கொண்டிருந்தாள் சத்யா.

தன் நிறம் குறித்ததான ஒரு பெயர், அதனை ஆத்திரமுடன் அழைக்கும் ஒருத்தி

என்ன வாய் கிழியுது? கோபத்தில் மூக்கு விடைக்க எதிர் கேள்வி கேட்டு நின்றவனைப் பயமில்லாமல் எதிர்கொண்டாள் சத்யா.

செய்யறதை செஞ்சுட்டு என்ன உனக்கு இவ்வளவு தைரியம்? எப்ப பாரு நான் சாப்பிட வரும் போது தான் என் கிட்ட தான் வம்பிழுக்கிற நீ. உன்னைப் பாவம் பார்க்காம அன்னிக்கே ப்ரின்ஸிபல் கிட்ட கம்ளெய்ண்ட் செஞ்சிருக்கணும். அவளது திமிருக்கு,

போடி போடி பெரிய வந்துட்டா, இங்கிலாந்து டயானாக்கு அடுத்த இளவரசி, கருவாயாவாம் கருவாயா? இவளை இடிக்கணும்னு தான் எனக்கு வேண்டுதல் போவியா? அலட்சியப்படுத்தி விட்டு சென்று விட்டான் அவன்.

ஆனால், அவன் மனதிற்குள் தெரிந்து விட்டது அவளுக்குத் தன்னைப் பிடிக்காததன் காரணம். அது தன்னுடைய நிறம்தான் வேறென்ன? எப்போதும் தன் நிறத்தைக் குறித்து அவனுக்குப் பெரிதான கவனம் இருந்ததில்லை.

பெற்றோரும் குண நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தனரே தவிர ஒரு போதும் எந்த விதத்திலும் உருவம் அல்லது தோற்றம் பற்றிய ஒப்பீடு அவர்களுக்கு இருந்ததில்லை. கதிரின் மனதிற்குள்ளாக அவனைக் கண்ட நாள் முதலாக வெறுப்பை உமிழும் காரணமும், கிஷோரைக் கண்டதும் அவனுடன் சத்யா உடனடியாக நட்பு பாராட்டியதற்கான காரணமும் புரிந்து விட்டது. ஆனால், அது அவ்வளவு ரசிக்கத் தகுந்த காரணமாக இல்லை என்பது தான் முரணானது.

கடைசியில் நீ அவ்வளவு தானா சத்யா? கராத்தே கற்றுக் கொடுத்தவள் அவன் கண்களுக்குள்ளாக நிழலாடினாள்.அந்த அவளிடம் என்ன ஒரு தைரியம். என்னவொரு நேர்மை குணம் இருந்தது. அவள் இத்தகையதொரு சல்லித்தனமான சிந்தனைக் கொண்டவளாக இருப்பாள் என்பதை அவனால் கற்பனையும் செய்து பார்க்க முடியவில்லை.

உணவகத்தில் அன்று எழுந்த பிரச்சனைக்குப் பிறகு சத்யா கதிரை எங்குக் கண்டாலும் சரி அவளது வாய் கோபத்தில் எப்போதும் முணுமுணுத்தவாறுதான் இருக்கும்.

இரண்டொரு முறை அதைக் கண்டு கொதித்தெழுந்தவன் நேரடியாகவே கேட்டு மோதிவிட அவர்களுக்கு இதுகுறித்துப் பிரச்சனைகள் எழலாயிற்று.

கடங்காரன், கடங்காரன் எப்ப பாரு என் கிட்டயே வம்பிழுக்கிறான் என அனலாய் தகிக்கும் சத்யாவை ஆர்த்தி முயன்று சமாதானப் படுத்துவாள். கதிர் தன்னுடைய ஸ்டடி ஹாலிடேஸிலும் அவ்வப்போது கல்லூரி வந்து செல்வான். அப்படி அவன் வரும் நாட்களில் எல்லாம் அவனுக்கும், சத்யாவிற்கும் ஏதாகிலும் ஒரு பிரச்சனை தவறாமல் நிகழும். இப்போதெல்லாம் இவர்களது சண்டைகளை யாரும் கண்டு கொள்வதில்லை. அதுதான் அடிக்கடி கண்டு கண்டு எல்லோருக்கும் அது சலித்துப் போய் விட்டதே.

சத்யாவின் முழுவருடப் பரீட்சைகள் நிறைவுறவிருந்தன. எப்போதும் லீவிலும் கூடத் தொடர்ந்து ஹோம் ட்யூஷன் எடுக்கும் இடங்களில், வேண்டாம் நாங்கள் சுற்றுலா செல்வதால் லீவு முடிந்து அடுத்தக் கல்வியாண்டு ஆரம்பித்த பின்னர் ட்யூஷன் எடுத்தால் போதும் என்று தகவல் கிடைக்க, லீவு நாட்களில் என்னதான் செய்வது? என்கின்ற அவளது சிந்தனைகளுக்குப் பதில் கொண்டு வந்திருந்தான் கிஷோர்.

அவன் மும்பை சென்று விடுமுறை நாட்களில் மாணவர்களுக்காகவே நல்ல சம்பளத்தில் கிடைக்கும் வேலையினுள் ஒன்றில் சேருவதாக இருப்பதாகவும், சத்யா விரும்பினால் அவளையும் அழைத்துச் செல்வதாகவும் அழைப்பு விடுக்க, அவளுக்கும் அந்த வாய்ப்பு மிகவும் பயன் மிக்கதாகத் தோன்றி இருந்தது.

உடனே ஹரீஷ் அங்கிள்க்கு சத்யா அது குறித்து விபரம் தெரிவிக்க, அவர் முதலில் அதெல்லாம் வேண்டாமென்று கூறி தன்னோடு லீவில் நாட்களைச் செலவழிக்க அழைப்பு விடுத்தார். தன்னால் அவர்கள் குடும்பத்தோடு ஒன்ற முடியாது என்று அறிந்து இருந்தவள் பிடிவாதமாக அங்கு வரவில்லை என்று மறுத்து விட்டாள்.

சரி பரவாயில்லை, உன் விருப்பம் போல வேலைக்குச் சென்று வா, கவனமாக இரு என்று அறிவுரை தெரிவித்தவர் செலவிற்குத் தான் அனுப்புகின்ற பணத்தை உபயோகிக்கச் சொல்லி அனுப்பி வைக்க, மன நெகிழ்வோடு அதனை எடுத்துக் கொண்டாள். மனதிற்குள்ளாக நிச்சயமாகத் தன் நன்றி கடனை எவ்வாறாவது ஒரு நாள் அடைக்க வேண்டும் என்று எண்ணினாள்.

அன்றிரவு கிஷோர் அவளை மும்பை அழைத்துச் செல்ல வருவதாகச் சொல்லி இருந்தான். துணிகளை எல்லாம் பெட்டியில் அடுக்கி வைத்தவள் ஹாஸ்டலிலிருந்து அருகாமையிலிருந்த கடை ஒன்றுக்குத் தனக்குப் பயணத்தின் போது தேவையான பொருள்களுள் ஒன்றை வாங்க வெளியே கிளம்பிய போது தான் கடத்தப் பட்டாள்.

(சத்யா, கதிரின் அன்று பகுதி நிறைவுற்றது)

:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:

இன்று

[center]உயிர்கள் வாழும் இப்பூமிப் பந்தில்[/center]

[center]ஒருவர் வாழ ஒருவர் வேண்டும்[/center]

[center]உறவாக, உதவியாக எனில்[/center]

[center]அனாதை எனும் பதம் அர்த்தமற்றதன்றோ?[/center]

சத்யாவிற்கு நாள் முழுவதிலும் படபடப்போடே கடந்து கொண்டிருந்தது. யாரிடம் என்ன கேட்பது என்றே புரியவில்லை. அவளைப் பார்த்து சந்திராம்மாவுக்கே வினோதமாகத் தோன்றிவிட,

“சக்திம்மா, உனக்கு உடம்புக்கு எதுவும் சரியில்லையா?” எனக் கேட்க அவள் பேச்சற்றவளாக மலங்க மலங்க முழிக்கவும்,

இங்க வா, எப்பவும் போல எனக்குக் காய் நறுக்கி தருவியாம்,
என அவளை ஒவ்வொன்றாக வேலை சொல்லி வாங்கிக் கொண்டிருந்தார்.

சொன்ன சொல்லுக்கு இயந்திரமாய்ச் செயல்பட்டவளைப் பார்த்தவர்,

“உனக்கு போன் வந்ததா கதிர் அப்பா சொன்னாங்க, யாரு உன் சினேகிதியா?” சாதாரணமாகத் தான் கேட்டு வைத்தார். கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியவளோ நடுக்கத்தில் விரலை வெட்டிக் கொண்டாள்.

என்ன பிள்ள இப்படிப் பண்ணிட்ட, பதறி அவள் விரலைக் கழுவி, மஞ்சள் வைத்து, துண்டு துணியால் சுற்றிக் கட்டுப் போட்டு சமையலறையிலேயே உட்கார வைத்துவிட்டுக் குடிக்கக் கொடுக்கத் தண்ணீர் தேடியவர் கண்ணில் சற்று முன்பு உடைத்த தேங்காயின் தண்ணீர் பட அதைத் தூசியை விலக்கி குடிக்கக் கொடுத்தார்.

சந்திராம்மா கொடுத்ததைக் குடித்து, வாயில் ஒட்டிக் கொண்ட தேங்காய் மூடியின் சிறு தூசிகளைத் தடவி விட்டு அப்புறப் படுத்திக் கொண்டவள்,

“ஸாரி அத்தம்மா கவனிக்கலை, அதான் வெட்டிடுச்சு”

குரல் அதல பாதாளத்திலிருந்தது. கண்டு கொள்ளாதவர் போல,

‘கதிர் பின்பக்கம் தோட்டத்தில இருப்பான் போல இருக்கு எப்ப புறப்படணும்னு விபரம் கேட்கணும்னா போய்க் கேட்கலாம்ல?”

அவராகவே கதிரிடம் பேச வாய்ப்புக் கொடுத்தார்.

இல்ல அத்தம்மா, அப்புறமா கேட்டுக்கிறேன், அந்தக் கதிர் பிரண்டு… இழுக்கவும்,

‘அவனா அவன் இங்க பக்கத்தில அவன் சொந்தக் காரங்களைப் பார்த்துட்டு வரேன்னு கிளம்பி போயிட்டான், மதியம் சாப்பாட்டுக்குத்தான் வருவான், கதிர் இப்ப ப்ரீயாதான் இருப்பான், ஒன்னும் பிரச்சனை இல்லை போ’ எனவும், அவளுக்கும் உள்ளுக்குள்ளாக அரித்துக் கொண்டிருந்த கேள்விகள் கேட்க வேண்டி இருக்கப் பின் வாசலை நோக்கி விரைந்தாள்.

கதிர் அந்த விஸ்தாரணமான வீட்டின் பின் பகுதியில் தூரத்தில் நெல்லி மரத்தின் கீழே நின்று கொண்டிருந்தது தூரத்திலிருந்தே தெரிந்தது. அந்த இடம் மிகவும் அழகானது. ஒரு கிணறு, அதன் அருகே தண்ணீர் தொட்டி ஒன்று இருந்தது. சுற்றிலும் வித விதமான மரங்கள் இருந்தன. ஓரத்தில் மாடுகள் கட்டப்பட்டிருந்தன. மாட்டுக் கொட்டகை வேலைக்கு இருப்பவர்களால் மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப் பட்டு வந்ததால் பார்க்கவே அழகாய் இருந்தது. அவ்வப்போது அவள் கன்றுக் குட்டியை, மாடுகளைப் பார்க்க அங்கு வருவாளென்றால், பல நேரங்களில் அந்த இடத்தின் குளுமைக்காகவும் கூட வருவாள்.

ஏகாந்தத்தில் அமைதியாக அமர்ந்திருக்க ஏற்ற இடம் ஆயிற்றே. அங்குக் கதிரும் ஏகாந்தத்தில் நின்றிருந்தான். அவனும் இப்படி அமைதியாகச் சிந்திப்பானா என்ன? எனத் தோன்ற தன் அபத்தமான சிந்தனையைத் தானே கடிந்துக் கொண்டாள் சத்யா.

கதிர்… அவள் குரல் அவனுக்குக் கேட்டதோ இல்லையோ முதலில் அவளுக்கே கேட்கவில்லை.

அவள் வந்திருப்பதைச் சருகுகளின் அசைவு கண்டே அறிந்திருந்தவன் திரும்பினான். அந்தப் பரந்த வெளியில் தூரத்தில் வேலை செய்து கொண்டிருந்த மாட்டுத் தொழுவைக் பராமரிக்கும் நபருக்கு இவர்கள் பேச்சுக் கேட்க சாத்தியமில்லை.

சட்டென்று திரும்பி அவள் புறம் பார்த்தவன் ஐந்தடி தூரத்தில் தன்னையே பார்த்து நின்றவளுக்கு என்ன? எனக் கேள்வியாலே பதில் கொடுத்தான்.

நான் என்னிக்கு புறப்படணும்? காலை முதல் அவளை அலைக்கழிக்கும் உணர்வுகளால் வெகுவாகக் காயம் பட்டிருந்தவளுக்கு இயல்பான திமிரான குரல் எழும்பவே இல்லை.

இன்னமும் கூட அவன் வீட்டில் தான் மாத கணக்கில் இருந்து அவன் அன்னை தந்தையின் அன்போடு கூட எல்லாவித சுகங்களையும் அனுபவித்தது குறித்த நெருடல் அவளைப் பேச அனுமதிக்கவில்லை. அவனிடம் கேள்வி கேட்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது? என்ற உணர்வே ஆட்கொண்டிருந்தது.

யாசகம் பெற்றவருக்குக் கொடுத்தவர் மீது நியாயத் தர்மங்களின் படி கோபப் பட முடியாமல் நன்றி கடன் அழுத்துமே அந்த நிலையில் இருந்தாள் அவள்.

என்னிக்குச் சென்னை போகணும்? சந்திராம்மா கேட்கச் சொன்ன கேள்வியைக் கேட்டு வைத்தாள் அவள்.

நாளன்னிக்கு காலைல 7 மணிக்கு ரெடியா இரு, சாயங்காலம் உன்னை ஹாஸ்டலில் விட்டிருவேன்.

கார்லயா?

ம்ம் ஏன் என்னாச்சு?

இல்ல, ட்ரெயின்ல டிக்கெட் எடுத்துக் கொடுத்தாலும் நான் போயிடுவேன்,

நலிந்து ஒலித்த குரல் கதிருக்குச் சலிப்பை ஏற்படுத்தியது. இதற்கு இவ பத்ரகாளி வேஷம் போடுறது பரவாயில்லை போலிருக்கு. உள்ளுக்குள்ளாக, இவளுக்குத் தான் இவளைக் கடத்தியதால் எழுந்த அவநம்பிக்கை போகவில்லை போலிருக்கிறது என்று எண்ணியவன், தான் செய்தது தவறென்று தெரிந்தே செய்திருந்ததால் அவனுக்குள்ளும் ஏற்கெனவே குற்ற உணர்ச்சி இருந்தது, எனவே அவள் பதிலால் வெகுவாகக் காயப் பட்டான் கதிர்.

“அப்படி ட்ரெயின் டிக்கெட் வாங்கணும்னா நான் எதுக்கு ஊருக்கு வர்ற வரை காத்திருக்கணும், அதான், போன வாரமே கராத்தே க்ளாஸ் முடிஞ்ச்சிடுச்சில்ல, அப்பா கிட்ட சொல்லி ட்ரெயின் டிக்கெட் எடுத்து போயிருக்கலாம்ல.”

சிடுசிடுத்தவனைப் பார்த்தவளுக்குக் கண்ணீர் சரசரவென்று வழியலாயிற்று. அதனை மறைக்கத் திரும்பி நின்றுக் கொண்டாள்.

பேசி முடித்தவன் தன் நெற்றியில் ஓங்கி அறைந்து கொண்டான். ஒரு பெண்ணை அவள் விருப்பம் கேட்காமலேயே கடத்தி வந்து, ஒரு வகையில் எமோஷனல் ப்ளாக்மெயில் செய்து இத்தனை காலம் அடைத்து வைத்தார் போல வைத்திருந்து அவளுக்கு அம்மாவின் அருகாமையைக் கொடுத்து, அவர் சொல்லை மீற விடாமல் பார்த்துக் கொண்டதனால் தானே அவள் இத்தனை வாரங்களாக அவனது திட்டத்தின் படி அங்கிருந்து செல்லாமல் இருக்கிறாள். இவனோடு செல்ல வேண்டுமென்பது அம்மாவின் கட்டளையாக இருப்பதால் தான் அவள் அவனை நாடி விபரம் கேட்க வந்திருக்க வேண்டும்.

ஆனால் இவனோ என்னவோ அவள் சுற்றுலா பயணம் வந்தது போல அல்லவா நீ ஏன் போகவில்லை? எனும் அர்த்தம் தொனிக்கப் பேசி விட்டான்? தன் செயல் கதிருக்கே வெகு தவறாகப் பட்டது.

பல நேரங்களில் எதையாவது நினைத்துச் சொல்லப் போக எதுவாகவாவது அது மாறி விடுகின்றது நொந்து கொண்டான்.

“ஸாரி சத்யா, மன்னிச்சுடு” நீ கார்ல என் கூட வர்றதுக்கு மறுத்ததும் கோபத்தில ஏதோ சொல்லி விட்டேன் என உடனே மன்னிப்புக் கேட்டான்.

கதிர்…… நமநமத்துப் போன குரலில் பெயர் சொல்லி அவனை அழைத்தாலும் அவள் குரலில் சற்றே துணிவு திரும்பி இருந்தது.

அழுது சிவந்த அவள் கண்களைப் பார்க்க கஷ்டமாக உணர்ந்தான்.

“இப்பவாவது காரணம் சொல்லுவியா ப்ளீஸ். நீ எதுக்கு அப்படிச் செஞ்ச? நீ எதுக்கு என்னைக் கடத்திட்டு வரணும்?”

என்றைக்காவது இந்தக் கேள்வியைத் தன்னால் தவிர்க்க முடியாத சூழலில் மறுபடி கேட்பாள் என்பதை அறிந்தே இருந்தான் கதிர். எகிறி எகிறி சண்டை இட்டவளிடம், “ச்சீ போ” என்று கடந்து விட முடிந்தது. கண்கள் கலங்கி கேட்பவளிட்ம் என்ன சொல்வதாம்?

அன்னிக்கு நீ என்ன சொன்னன்னு எனக்கு ஞாபகம் இருக்கு என்று தொடர்ந்தவளின் பேச்சில், என்றைக்கு நான் என்ன சொன்னேன் எனச் சிந்தனை வயப்பட்டான் கதிர்.

எனக்கு பாதுகாப்புக்காக நீ என்னை இங்கே கொண்டு வந்ததா சொன்ன சரிதானே? நான் அப்ப நீ சொன்னதை அவ்வளவு கவனமா கேட்கலை. இப்பவாச்சும் காரணம் சொல்லுவியா? நீ என்னை இங்கே விட்டுட்டுச் சென்னை போனவன் இன்னிக்குத்தான் திரும்பி இருக்க அப்படின்னா நிச்சயம் இது நீ என் கிட்ட ப்ரபோஸ் செஞ்சதையும், நான் மறுத்ததையும் பற்றி இருக்க வாய்ப்பில்லன்னு தோணிட்டே இருந்துச்சு, ஏன்னா நீ அந்தப் பேச்சை மறுபடி எடுக்கவே இல்லியே? அப்படியே நீ மறுபடியும் காதல், கீதல் கல்யாணம்னு என்னைத் தொல்லைப் பண்ணினாலும் நான் போலீசெல்லாம் போக வேணாம். அத்தம்மாட்ட, மாமாட்ட சொன்னாலே போதும் உன்னை ஒரு வழி ஆக்கிருவாங்கன்னு புரிஞ்சிடுச்சு.

அப்படின்னா எதுக்கு என்னை இங்க கடத்திட்டு வந்தன்னு இன்னிக்கு வரைக்கும் புரியல? உன்னை நல்லவனாவும் பார்க்க முடியலை, கெட்டவனாவும் ஏத்துக்க முடில ஏன் இப்படி நடந்துக்கிற?

நான் என்னிக்குமே உன்னைய மரியாதையா நடத்தினதில்ல, உன்னைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது. சொல்லப் போனா உன்னைக் கண்டா எனக்கு மனசுக்குள்ள ஒருவகையான பயம். அதனாலத்தான் உன்னைய கடிச்சு கொதறுவேன். என் கோபத்துக்கெல்லாம் காரணம் பயம் தான்னு இப்பத்தான் எனக்கே புரிஞ்சது

எப்படி புரிஞ்சதுன்னு நினைக்கிறியா? அதுக்கும் நீதான் காரணம். நீ என்னைக் கடத்திட்டு வந்தது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா? ஆனா, நான் இந்தச் சில மாசங்களில் வாழ்க்கைல கத்துக்கிட்டது நிறைய. உலகத்தைப் பார்த்தாலே மிரட்சியா இருக்கும், யார் கிட்ட பேசவும் பயமா இருக்கும். இப்ப என்னடான்னா யார் கிட்ட பேசறதுக்குப் பயந்து நடுங்குவேனோ அவன் கிட்டயே, அதான் உன் கிட்ட இப்ப தொடர்ச்சியா பேசறேன். எல்லாம் அத்தம்மா தந்த தைரியம் தானே.

பயம் என்னை விட்டுப் போகப் போகக் கோபமும் குறைஞ்சு போயிடுச்சு, நான் செஞ்ச தப்பெல்லாம் புரியுது. நீ மேரேஜ் ப்ரபோசல் பேசின அன்னிக்கு என் கிட்ட வந்து மரியாதையா தான் பேசின, நான் இல்லைன்னு சொல்லி விட்ருக்கலாம். அதிகமா பேசிட்டேன் மன்னிச்சிடு கைக் கூப்பினாள்.

நிறையத் தடவை உன்னைத் திட்டிருக்கேன் அதெல்லாம் கூட மன்னிச்சிடு, எனக்கு ஏதோ பயம் அதனாலத்தான் அப்படில்லாம். இந்த உலகத்தில எத்தனையோ நடக்குது? தனியா இருக்கோம் நமக்குத் துணையா யாருமில்ல, நாம தான் நம்மளை காப்பாத்திக்கணும்னு எண்ணம் வர்றப்போ, மனசுக்குள்ள வர்ற பாதுகாப்பின்மை உணர்வு தான் எல்லாம் என்னை அப்படிப் பேச வச்சிருக்கு.

இப்பவும் பாரேன் இதுவே நீ செஞ்ச வேலைக்கு நான் போலீஸுக்கு போயிருந்தேன்னா வெளில வந்திருக்க முடியும்னு நினைக்கிற? என்றவள் உடனே அடுத்த நிமிடமே “உனக்கு அம்மா அப்பா இருக்கிறாங்க, எப்படியும் உதவி செஞ்ச்சிருப்பாங்கதான் வந்திருக்கவும் செய்வ?” என உடனே தன் எண்ணத்திற்குப் பதில் எண்ணத்தைத் தாழ்ந்த குரலில் விதைத்தவளை ஆதூரமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்.

கேட்க ஆளில்லாதவத் தானேன்னு தானே என்னை உன் இஷ்டத்துக்கு நீ என்னைக் கடத்திட்டு வந்திருக்க?

இதுவே எனக்கும் ஒரு குடும்பம்னு இருந்திருந்தா உன்னால இப்படிச் செஞ்சிருக்க முடியுமா? கேட்க நாதியத்தவத் தானே தாய் தகப்பன் இல்லாதவத் தானேன்னு தான நீ இப்படிப் பண்ணின?

அவள் வார்த்தைகள் சுளீர் சுளீரெனச் சாட்டை அடிகளாய் கதிரை சாய்த்துக் கொண்டிருந்தது. பேசட்டும் என்று அவள் மடைத் திறந்தாற் போலப் பேசுவதைக் கண்டும் அனுமதித்திருந்தவனால் அதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியவில்லை.

உனக்குன்னு யாரும் இல்லைன்னு தானே சத்யா நான் உன்னை இங்க அழைச்சிட்டு வந்தேன். கடத்திட்டு என்னும் வார்த்தையே அவனுக்குக் கசப்பாக இருந்தது.

உனக்குன்னு யாரும் இருந்திருந்தா, அவங்க பார்த்துப்பாங்கன்னு ஒப்படைச்சிட்டு வந்திருக்க மாட்டேனா? வலியோடு வினவியவனை

அப்போ அதுக்காகத்தான் நீ கிஷோரை ஐ சி யூ ல சேர்க்குமளவுக்கு அடிச்சியா? என்று கேட்க நெற்றிச் சுருங்க அவளை நோக்கினான் கதிர்.[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here