24. காதலும் வசப்படும்

0
560
Kadhalum Vasapadum

அத்தியாயம் 24

[center]என்[/center]

[center]வாழ்வின் சகி[/center]

[center]நீ[/center]

[center]இனி[/center]

[center]உன் இன்பமும்[/center]

[center]துன்பமும்[/center]

[center]சரி சமமாய்[/center]

[center]எனதல்லவா?[/center]

(கதிர் சத்யாவின் திருமணத்திற்குப் பல மாதங்கள் கழித்து…)

ப்ப்ச்ச்… வெகுநேரமாய்த் தன் மனைவியின் இதழ்களோடு தன் இதழ்களை ஒட்ட முயன்று தோற்றவன் விடுவித்தான்.

தோற்றக் களைப்பை விட முயன்றபோது கிடைத்த களிப்பே முகத்தில் பரவியிருக்கத் தான் கலைத்துப் போட்ட நிலையிலும் களையாய் தெரிந்தவளை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு நெருங்கினான்.

அவன் நோக்கம் அறிந்து முகமெல்லாம் புன்னகை பரவக் கன்னக் கதுப்புக்கள் கண்ணோரம் சிரிப்பில் குவிய தன் இதழ்களைக்காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் தலையை இடது பக்கம் சரித்தாள்.

அவள் எண்ணியது அதுவல்ல என்றோ என்னவோ? அவளது வலது கழுத்தோரம் குனிந்தவன் ட்ராகுலா போல ரத்தம் குடிக்க முயன்று அது தன் காதலியென்ற நினைவு வர வன்முறை தவிர்த்து மென்மையாய் கடித்து வைத்தான்.

இந்தக் கருவாயன பிடிச்சிருக்காடி?

தினமும் கேட்கும் கேள்வியை மனைவியிடம் கிறக்கமாய்க் கேட்டு வைக்கவும்…

ஆமா பிடிக்காமத்தான்…

செல்லமாய்ச் சலித்துக் கொண்டவள் திருமணம் முடிந்தும் ஒரு வருடம் நெருங்கப் போகிறது, இன்னும் இந்தக் கேள்வியை இவள் கணவன் விடவில்லை என்று நினைத்தாலும் அவனுக்கு வீம்பாய் முதுகு காட்டி படுத்தவள் மென்சிரிப்பு சிரித்து வைத்தாள்.

நீ என் அம்மாவுக்காக என்னைக் கட்டிக்கிட்டவதானே?

கேள்வி எழுப்புகின்றவனுக்கு அவளும் பதில் சொல்லி களைத்து தான் போய் விட்டாள். ஆனால், அவன் கேட்டால்தானே.

எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிகிட்டேன். என அவனிடம் சொல்லப் போனால்

“நீ என் கிட்ட ராக்கி கட்டி உன் தங்கச்சி ஆகவா? ன்னு கேட்டவ தானே என்று என்றோ விளையாட்டாய் சொன்னதைச் சொல்லி மடக்குவான்.

“இவனுக்கென்ன தெரியும் என் காதல்? தனக்குள் தாமதமாகவே மலர்ந்தாலும் மணம் பரப்பி நிற்கும் காதலை அவன் மறுத்தால் அவளும் தான் என்னதான் செய்வாள்?

சந்திராம்மா தன் மகனை திருமணம் செய்யச் சம்மதமா?

எனக் கேட்கவே இதுதான் தக்க சமயம் என்று உடனே ஆம் என்று சொல்லி அவன் மனைவியும் ஆகி விட்டாள்.

அவன் அவளைக் கண்களால் தூர நின்றே பின் தொடர்ந்தாலும், அவனைப் பெண்ணுக்கேயான உணர்வில் அவள் கண்டு கொண்டேதான் இருந்திருக்கிறாளே.

தன் முகம் பார்க்க மறுத்து தன் அம்மா தரும் திண்பண்டங்களைத் தந்துச் செல்பவனின் வீம்பிலும் கோபத்திலும் தான் அவள் மனதில் முதலில் காதல் மலர்ந்திருக்க வேண்டும்.

என்ன சொல்லி என்ன? நம்ப மாட்டேன்கிறானே? இப்போதெல்லாம் சொல்லால் உணர்த்துவதை விடச் செயலால் தன் காதலை உணர்த்துவதில் தான் சத்யா எப்போதும் முன் நிற்பாள் .

முதுகில் முகம் புதைத்துக் கட்டிக் கொண்டு கிடப்பவனிடம் கொள்ளை கொள்ளையாய் தான் சேர்த்து வைத்திருக்கும் காதலைக் கொட்டிவிட எண்ணியவள் திரும்பி தன் தொடர் முத்தங்களால் அவனை மூர்ச்சையாக்க முயன்றாள்.

போதும்டி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ

மனைவியின் செயலில் தன்னை இழந்தவன், சற்றுச் சிரிப்பு மீதூற அவளை இழுத்தணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.

ஏதோ அவன் நெஞ்சுக்குள்ளேயே புதைந்து விடுவதைப் போல எண்ணி, அவனுக்குள்ளாக ஒண்டியவள் சற்று நேரத்தில் நிர்சிந்தையாய் ஆழ்ந்த தூக்கத்தில் அமிழ்ந்தாள். தூங்கிக் கொண்டிருந்தவளை தன்னிலிருந்து சற்று விலக்கி முகம் பார்த்தான் அவன், அது கள்ளமற்ற குழந்தையை ஒத்திருந்தது.

“என் செல்லம்”

முணுமுணுத்தவன் அவளது தலையை வருடி, சில முத்தங்களிட்டு நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். ஆனால், தூக்கம் தான் வரவில்லை. தூக்கம் வராததற்கு மனம் வெகுவாய் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது காரணமாய் இருக்கலாம் இல்லை இன்னும் மனதிற்குள்ளாக முற்றுப் பெறாத சில கேள்விகள் குடி இருந்ததன் காரணமாகவும் இருக்கலாம்.

திருமணம் நிகழ்ந்த அன்றிரவு அவள் அவனை அணைக்க முயலவும் , அவளைக் கதிர் கணவனாய் ஆட்கொண்டான் தான். தொடர்ந்த நாட்களும் ஏன் இன்றுவரையிலுமே புத்தம்புது தம்பதிகளாய் அவர்களது தம்பத்யம் தொய்வில்லாமல் நிறைவாகவே இருக்கின்றது.

தேன்நிலவு என்று அம்மாவின் வற்புறுத்தலுக்கேற்ப மலைவாசஸ்தலம் சென்று வந்தனர். இயற்கை எழிலும், ஒருவர் ஒருவரை நாடும் அந்தப் புதுமணத் தம்பதிகளுக்கே உரிய புதுமைத் தேடலோடு கூட மனம் விட்டுப் பேசவும் கூட அவர்களுக்கு வாய்ப்புக் கிட்டியிருந்தது. தான் காதல் கொண்ட தருணத்தை கதிர் ஏற்கெனவே அவளிடம் பகிர்ந்திருக்க, தன்னுடைய உதாசீனங்களையும், புறக்கணிப்பையும் பாராமல் தன்னை நேசித்தவன் குறித்து அவள் நெக்குருகி போய் விட்டிருந்தாள் .

அவனிடம் தான் அவனைத் தவறாய் எண்ணி இருந்தது குறித்து எல்லாமே பகிர்ந்து சத்யா மன்னிப்பு கேட்டிருந்தாள் . தான் கதிரைக் குறித்துத் தவறாக எண்ணிக் கொண்டிருந்தவற்றைச் சொல்லும் போதே அவளுக்கு ஏற்பட்ட குற்ற மனப்பான்மையை அவன் உணர்ந்து கொள்ள, அவளை அவன் தான் தேற்ற வேண்டியதாக இருந்தது.

தான் கதிரை தவறாக எண்ணிய தருணங்கள் ஒவ்வொன்றாகச் சொல்ல, சொல்ல தன்னைத் தன் கணவன் திட்டுவானோ, வெறுத்து விடுவானோ? எனும் அவளின் மனநிலையை அவளது கண்களின் மருட்சி காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் கதிர் அவள் கூறியதில் எதையும் பெரிது படுத்தாமல் புன்னகையோடு கேட்டு அமர்ந்திருக்கவும் அவளுக்கே ஆச்சரியமாய்ப் போயிற்று.

ஏன் அத்தான், உங்களுக்கு என் மேல கோபமே வரலையா? கண்கள் மருள கேட்டவளுக்கு இல்லையெனத் தலையசைத்தான் கதிர்.

கருவாயன், கடங்காரன் எனும் பதங்களிலிருந்து விடுபட்டு கதிர் சத்யாவின் அத்தான் ஆக மாறிய கதை மிகவும் சுவாரஸ்யமானது.

திருமணத்திற்கு முன்னதாக,

சந்திராம்மா சத்யாவிடம் கதிரை திருமணம் செய்யச் சம்மதமா கேட்க விருப்பதாகக் கதிர் முன் தினமே சொல்லி இருக்க, அன்றிரவே ஹரீஷ் சவுஹானை தொடர்பு கொண்டு அவள் விபரம் தெரிவித்தாள் . வருடம் தவறாமல் சந்திராம்மாவை சந்திக்கச் செல்லும் போதும் எப்போதும் தன்னிடம் அனுமதி கேட்டுச் செல்லும் சத்யா தன் திருமணத்திற்கும் தன்னிடம் முதலில் கூறி அனுமதி கேட்டது குறித்து அவருக்கு மிகப் பெருமையே.

தான் தன் வேலைக் காரணமாக கதிர், சத்யா திருமணத்திற்கு முன் தினம்தான் வர முடியும் என்றும், சத்யாவின் திருமணத்திற்குக் கார்டியனாகச் செலவாகும் பணம் எவ்வளவென்றாலும் அளிக்க விரும்புகிறேன் என்றும் ஹரீஷ் கதிர் வீட்டினரிடம் கூறினார். பெண்ணின் தந்தை ஸ்தானத்திலிருந்து முன் நின்று திருமணத்தை நடத்திச் செல்ல மட்டும் அவரிடம் கேட்டுக் கொண்டனர்.பணம் ஒரு பொருட்டே இல்லை எனக் கதிர் வீட்டினர் அவரிடம் மறுத்தனர்.

திருமண வைபவங்களில் பெண்வீட்டாராகத் தன் தம்பிகளுள் ஒருவரையே சந்திராம்மா முன்னிறுத்தி அவரது வீட்டிலேயே சத்யா தங்கும் படி செய்தார். தன் கணவரோடும், மகனோடும் திருமணத்திற்காகச் சென்னையிலிருந்து தாய் வீடு வந்திருந்த ரதி, சில மாதங்களுக்கு முன்பே உள்ளூரில் திருமணமாகி இருந்த சிவானி மற்றும் இன்னும் திருமணமாகாத கருணாவுக்குத் தங்கள் வீட்டிலேயே அவள் வந்து தங்கவும், அவளைக் கிண்டல் செய்வது ஒன்றே வேலையாக ஆகிவிட்டது. இதுதான் இவர்களது சுபாவம் என்று சத்யாவும் இயன்றவரை அவர்களோடு ஒன்ற முயன்றாள்.

தங்கள் கிண்டல் கேலிகளுக்கு அவள் கோபப் படவில்லை என்பதை உணர்ந்ததும் அவர்கள் அவளோடு அக்கா, தங்கை என வயதிற்கேற்ப முறைச் சொல்லி நட்பு பாராட்டினர்.

சத்யாவின் படிப்பும், அறிவுக் கூர்மையும், அழகும் கூட அவள் மேல் அவர்களுக்கு மிகவும் மதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

“நம்ம அத்தான் கட்டிக்கப் போற பொண்ணு, இனி மரியாதையா பேசணும்” என்று தங்களுக்குள்ளாகப் பேசிக் கொண்டனர்.

அன்றைக்குத் திருமணம் நடக்க ஒரு வாரம் இருக்கையில்,

“உனக்கு என்னைத் திருமணம் செய்து கொள்ளப் பிடித்தம் இல்லை என்றால் மறுப்பு சொல்லி விடு, உனக்கு மறுப்பு சொல்ல தயக்கமாக இருந்தால் நான் நிறுத்தி விடட்டுமா?” எனச் சத்யாவிடம் கேட்க தன் மாமாவின் வீட்டுக்கு வந்திருந்தான் கதிர்.

அது அறியாத அவன் மாமா பெண்கள் மூவரும் இன்னும் அக்கம் பக்கம் சிலரும் ஏன் அவனுடைய மாமியுமே, அவன் சத்யாவை பாராமல் இருக்க முடியாது என்பதால் அவன் பார்க்க வந்திருப்பதாகத் தமக்குள்ளாகக் கிண்டல் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

கதிரின் வரவை அறியாத சத்யா உள்ளறையில் ஏதோ வேலையில் இருந்தாள்.

ஏ சத்யா அக்கா…

என்ன கருணா?

இங்க வாங்களேன்.

“அத்தான் உங்களைப் பார்த்து பேச வந்திருக்காங்களாம் உங்களைப் பின் கட்டுல கூப்பிட்டு விட்டாங்க” என்றதும்,

“அத்தானா? யாரு?”

என முழித்தவள் பின் கட்டை நோக்கி நடந்து கொண்டிருக்கத் தூரத்தில் கதிர் சட்டை வேஷ்டி அணிந்து கிராமத்து அழகனாய் நிற்க,

“ஓ கதிரா?”

எனச் சற்று குரல் உயர்த்தியே சொல்லி விட்டிருப்பாள் போலும், தன்னைக் கருணா கவனிப்பதை அறியாதவள் வீட்டின் உள் இருந்து பேசாமல் எதற்குப் பின்கட்டில் இருக்கும் வெட்டவெளியில் நிற்கிறான் எனும் எண்ணத்தோடு விரைந்தாள்.

அழகாய், நளினமாய்த் தன்னெதிரில் நடந்து வருகின்றவளைக் கண்டு உள்ளம் பரபரத்தாலும் தன்னையே அடக்கி கொண்டவனாய் மறுபடி ஒரு முறை அவளிடம் உனக்கு விருப்பம் இல்லாத இந்தத் திருமணத்திற்கு மறுப்புச் சொல்லிவிடு என்று பேசிப் பார்த்தான்.

கதிரின் கூற்றுக்கெல்லாம் மறுத்து ,

“எனக்கு உங்களைத் திருமணம் செஞ்சுக்கிறதுல விருப்பம்தான்”

என உறுதியாகச் சொல்லி திரும்ப வருகையில் தான் இங்கு மூவரும் இவளை கோபமாக உறுத்து விழித்துக் கொண்டிருப்பது புரிந்தது.

என்னாச்சு கருணா? உங்க எல்லோருக்கும் என்னாச்சு? என் மேல எதுவும் கோபமா? புரியாமல் விழித்தாள் சத்யா.

“எங்க அத்தானை எல்லோரும் எவ்வளவு மரியாதையா கூப்பிடுவாங்க தெரியுமா? ஒருத்தி ஆரம்பிக்க,

“நீ என்ன கதிரு கதிருன்னு பேரச் சொல்லிக் கூப்பிடுற? எல்லாம் எங்க அத்தை கொடுக்கிற இடம். என்னவோ இவிங்க தான் பெத்து பேரு உட்ட மாதிரி ” இன்னொருவள் சடைத்தாள்.

இங்க பாரு அக்கா முதல்ல ஒரு மனுஷனுக்குப் பொண்டாட்டி மதிப்பு கொடுக்கணும் , அப்பத்தான் ஊரு உலகம் மதிப்பு கொடுக்கும், ஏன் பெத்த பிள்ளையும் மதிப்பு கொடுக்கும். இனிமேலருந்து மரியாதையா பேசணும் சரியா? என மற்றொருத்தி மிரட்டினாள்.

மூவரும் சேர்ந்து நடத்திய அரை மணி நேர அறிவுரையில் அவளுக்குத் தலைச் சுற்றிப் போய் விட்டது.

“சரி, சரி நான் அவனை ஸாரி அவங்களை இனிமேல் அத்தான்னு தான் கூப்பிடுவேன். மரியாதையா பேசுவேன்.” காதைப் பிடித்துக் கொண்டாள் சத்யா. இனி அவளாவது அவனை மரியாதைக் குறைவாகப் பேசுவதாவது.

ஏன் அத்தான், உங்களுக்கு என் மேல கோபமே வரலையா?

தேன் நிலவில் தன் மனதின் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட பின்னர், எதிர்வினையாகக் கணவனிடமிருந்து எதிர்பார்த்த கோபமும், வெறுப்பும் காணக் கிடைக்காமல் சத்யா கேட்டாள். மனைவியின் உள்ள உணர்வுகளை முற்றிலும் அறிந்துக் கொண்டிருப்பவனுக்கு அவளிடம் எவ்வாறு கோபம் வரக் கூடும்?

பதிலுக்காகக் காத்துக் கொண்டிருப்பவளுக்கு ஏதாவது சொல்லி தேற்றினால்தான் அவளது மனப்பாரம் குறையும் என்று எண்ணியவன் பேச ஆரம்பித்தான்.

நம்ம குழலி பாப்பா விஷயத்தில மூணாவது மனுஷியா நீ என்னோட செயலைப் பார்த்துச் சந்தேகப்பட்டது என்னைப் பற்றி முழுசா தெரியாததனால இருக்கலாம் சத்யா. என்ன செய்ய இன்றைய காலக் கட்டத்தில சின்னப் பிள்ளைங்களையும் வக்கிர புத்தியோட பார்க்கிறவங்களும் இருக்கிறாங்களே?

ஒரு பொண்ணு தப்பு செஞ்சா, தப்பு செய்யாத மற்ற மொத்த பெண்குலத்தையே சாடுறவங்க எத்தனையோ பேர் இருக்காங்க? அது போல யாரோ செஞ்ச தப்புக்கு நான் பலியாகி இருக்கிறேன்னு மட்டும்தான் நீ இதைச் சொன்னப்போ எனக்குத் தோணிச்சு. இதை எல்லாம் நீ மனசில போட்டு புழுங்க வேண்டிய அவசியம் இல்லைடா விட்டுடு.

அந்தக் காலேஜ் கர்ள்ஸ் எல்லாம் என்னோட ப்ரெண்ட்லியா பேசறவங்கதான், அன்னிக்கு உன் முன்னாடி என் கிட்டே அப்படி க்ளோஸா நடிக்கச் சொல்லி எனக்கு ஆப்பு வச்சவன் சச்சின் என்று முறுவலித்தான்.

ஓ எனக் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு அந்தப் பெண்கள் இவனோடு நெருக்கமாய்ப் பேச நமக்கு ஏன் கோபமாய் வந்தது? என மனதில் கேட்டுக் கொண்டாள். பதில் தான் தெரியவில்லை.

அடுத்து என் மாமா பொண்ணுங்க எப்போவுமே அப்படித்தான் என் கிட்ட கிண்டலா பேசுவாங்கடா, அது ஊர் வழக்கம் உனக்கொன்னும் கோபம் இல்லையே? எனக் கேட்க இல்லையெனத் தலையாட்டினாள்.

எல்லாத்தையும் விட ஹைலைட் எது தெரியுமா?

எது? எனப் பார்வையால் வினவியவளிடம், போயும் போயும் அந்த வினய் கூட என்னைக் கோர்த்து வச்சுச் சந்தேகப் பட்டியே அதுதான் என வெடித்துச் சிரிக்கவும்,

“போங்க நீங்க, நான் அதுவரைக்கும் முதுகு வரை நீளமா முடி வளர்த்திருக்கிற ஆம்பளைங்களை அவ்வளவா பார்த்ததில்ல, அது மட்டுமில்ல கர்ள் ப்ரெண்டை அணைச்சுருக்க மாதிரி எந்த ஆம்பளை பசங்களாவது தன்னோட ப்ரெண்டை அணைச்சுப்பாங்களா?

முகம் தூக்கிக் கொண்டு அமர்ந்திருப்பவளை குனிந்து தலையால் முட்டியவன்,

“சரிடா, இனி உன்னை மட்டும் அப்படி அணைச்சுக்கிறேன்”
என விஷமமாய்க் கண்ணடிக்கக் கோபத்தில் அவள் அவன் கன்னம் கடித்து வைக்க ஆவென அலறினான் அவன்.

ஷ்ஷ் ஆ வெனக் கன்னம் தடவியவன் உன்னைப் பார்த்துக்கிறேன் என்று பொய்யாய் விரல் நீட்டி எச்சரித்தான்.

அது என்னன்னா சத்யா அவன் அதான் வினய் என் ஸ்கூல்லருந்தே க்ளோஸ் ப்ரெண்ட், நம்ம ஊர்தான். பேஷன் டிசைனிங்க் மாடலிங்க்னு அவனோட கேரியர் அமைஞ்சுப் போக அதுக்குத் தகுந்த மாதிரி அவன் இருக்கிறான். என்னதான் உலகத்தைச் சுத்தினாலும் ஏதாவது நல்லது கெட்டதுன்னா என் கிட்டதான் வந்து நிப்பான்.

மனசுக்கு நெருக்கமான நட்பு லிஸ்ட்ல என்னை வச்சிருக்கான். எனக்கும் அவன் அப்படித்தான். அதனால இந்த க்ளோஸா இருக்கிறது எல்லாம் தன்னாலயே நடக்கிறது தான் . இனி அவன் கிட்டே டிஸ்டன்ஸ்லயே பழகுறேன், கேட்டான்னா என் பொண்டாட்டிக்கு பிடிக்கலைன்னு சொல்லிடறேன் போதுமா? என,

அதெல்லாம் வேண்டாம், நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் முணுமுணுத்துக் கொண்டு நகர்ந்தவளை கைச் சிறையில் பிடித்துக் கொண்டான்.

தன்னுடைய மனதின் உறுத்தல்களைக் கதிருடன் பகிர்ந்துக் கொண்டதாலோ என்னவோ சத்யாவிற்கு அதன் பின்னர் எந்த நெருடலும் இல்லாமல் போயிற்று. ஆனால், இன்னும் கூடக் கதிரின் உள்ளத்தில் சில முரண்பாடான எண்ணங்கள் இருப்பதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மனைவியின் மனதிலிருந்தவை வெளிப்பட்டது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் பகிர்ந்துக் கொண்டவை எல்லாம் அவன் ஒரு போதும் உணராதவையே. இப்படி எல்லாமா என்னைப் பற்றி அவள் யோசித்துக் கொண்டிருந்திருக்கிறாள்.

:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:

“கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” எனும் கூற்று தன் வாழ்வில் நிகழ்ந்திருப்பது குறித்து வியப்படைந்தான்.
                

5 வருடங்கள் முன்பு…
சத்யா தன்னை வெறுப்பதன் காரணத்தை அவளது கருவாயா எனும் திட்டுக்களிலிருந்து தான் கருப்பாக இருப்பதால் தான் அவளுக்குப் பிடிக்கவில்லை என்று அறிந்து வைத்திருந்தான் கதிர்.

அவள் நட்பு பாராட்டியவர்கள், சகஜமாகச் சிரித்துப் பழகியவர்கள் எல்லோரையும் பார்த்தால் அவர்கள் கருமை நிறம் கொண்டவர்களாக இல்லாமல் வெள்ளைச் சருமத்தினராக இருக்கக் கண்டான். நட்புக்கள் மட்டுமா ஏன் அவனது வெள்ளை நிறம் கொண்ட அம்மாவிடம் ஒன்றியவள் அவன் அப்பாவைப் பார்த்து மிரண்டு ஒளியவில்லையா?

அவளைக் கடத்தி ஊரில் சேர்த்த அன்று அவள் கதிரின் அம்மாவும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் சட்டென்று அவன் அப்பா அங்கே வந்து நிற்க அவள் பயந்து , மிரண்டு தன் அன்னையின் பின் ஒளிந்து நின்ற காட்சியைக் கண்ட பின்னர்தான் கதிருக்கு சத்யாவுக்குக் கறுப்பு நிறத்தினர் பிடிக்காதா? இல்லை கறுப்பு நிறத்தினரைக் கண்டாலே பயமா? என மாறுபட்ட சிந்தனை தோன்றலாயிற்று.

சத்யாவை பெற்றோரின் பாதுகாப்பில் விட்டு விட்டுச் சென்னை வந்து கிஷோர் , துஷார் விஷயத்தில் போலீசோடு அலைந்து திரிய, சில நாட்கள் கழித்தே முழுமையாக அவன் தன் வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினான். நாள் முழுவதிலும் வேலை வேலை என்றே கழிந்தாலும் அவனுக்குச் சத்யாவின் அந்த மிரண்ட பார்வை அடிக்கடி மனதிற்குள்ளாக வந்து இம்சை செய்து கொண்டிருந்தது.

இரண்டொரு நாட்களில் அவன் மனமே அவனைப் படுத்திக் கொண்டிருக்க வேறு வழியில்லாமல் சத்யா குறித்து மேலும் அறிந்து கொள்ள ஹரீஷ் சவுஹான் கொடுத்த மனநல மருத்துவர் கல்பனா அவர்களின் அயல் நாட்டு எண்ணை அவன் தொடர்பு கொண்டான்.

முதலில் அவன் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டதும், அவருக்கு ஹரீஷ் சவுஹான் இப்படி ஒருவன் தன்னைத் தொடர்பு கொள்ளக் கூடும் என்று சொல்லி வைத்தது நினைவுக்கு வரவே, எளிதில் எவருடனும் பகிர்ந்திராத சத்யாவின் சிறுவயது நிகழ்வுகளை கல்பனா அவனோடு பகிர்ந்து கொண்டார் .

ஹரீஷ் சவுஹானுக்குக் கதிரின் சத்யா மீதான ஈடுபாடு குறித்தும், அவளது நலம் நாடும் அவனது எண்ணங்கள், நல்லதொரு குடும்பச் சூழ்நிலை குறித்து அறிந்ததும் எதிர்காலத்தில் சத்யா விரும்பினால் இவனை மணம் முடிக்கட்டுமே என்ற மன நிலை ஏற்பட்டிருந்தது.

தன்னிடமே ஒட்டாமல் அலைகின்ற அந்தச் சின்னஞ்சிறு பெண்ணுக்கு நல்லது செய்ய அவருக்கு மனதில் வெகுவாக ஆசை இருந்தது. ஓரளவிற்குத்தான் அவர் அவளுக்கு எதிலும் ஆலோசனை சொல்வார். அவளை அவர் எதற்கும் கட்டாயப் படுத்தியதில்லை. தான் அவள் படிப்பிற்குச் செய்வதையே என்றாவது ஒரு நாள் திரும்பத் தந்து விடும் உத்வேகம் இருப்பவள் அல்லவா? அவளுக்கு ஏதாவது செய்யப் போக அதை எவ்வாறு எடுத்துக் கொள்வாளோ எனத் தயங்குவார். அவளது சுயமரியாதை குணம் குறித்து அவருக்கு மகிழ்ச்சியே.

நூறிலொரு வாய்ப்பாகக் கதிர் மருத்துவர் கல்பனாவை அணுகி சத்யா குறித்து விசாரித்து உண்மை தெரிந்து கொண்டால் அவளது குணத்தை அறிந்து கொள்ள, அவளது மனப் பிரச்சனைகளை அறிந்து கொள்ளச் சந்தர்ப்பம் கிட்டும் என்று எண்ணித்தான் வலிய கல்பனாவின் எண்ணை அவனிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். கூடவே கல்பனாவிடமும் கதிர் எனும் ஒருவன் போன் வந்தால் எல்லாத் தகவல்களையும், அவளது மருத்துவ அறிக்கை முதலாகப் பகிரச் சொல்லி கேட்டிருந்தார்.

மொட்டிலேயே பல்வேறு துன்பங்களுக்கும், மன பாதிப்புகளுக்கும் ஆளாகிய அவளைப் பற்றி முற்றிலும் அறிந்த ஒருவன் மட்டுமே அவளுக்குத் துணையாக வரவேண்டும் என்றே சத்யாவை மனதில் மகளாக வரித்திருந்த அந்தப் பெறாத் தகப்பனின் அவா. அவளைக் குறித்து, அவளின் மனப் பயங்கள் குறித்து அறிந்த பின்னர் ஒருவேளை கதிர் அவளை விட்டு விலக எண்ணினாலும் சத்யாவுக்கு அதுவும் கூட ஒருவகையில் நல்லதுதான் என்று அவருக்குத் தோன்றிற்று. சத்யாவிற்கு தவறான ஒரு மண வாழ்க்கை, அதனால் விழையும் துன்பமும் துயரமும் வேண்டாமே என்பது அவரது எண்ணம்.

இப்போது கல்பனா கதிருடன் பகிர்ந்து கொண்ட சம்பவங்களுக்கு வருவோம்.

சத்யா 13 வயதில் சிறுவர்கள் அனாதை இல்லம் ஒன்றிலிருந்து இன்னொன்றில் மாற்றப்பட்டாள். அங்கு அவள் இரவு நேரங்களில் கேட்ட பல்வேறு இனம் புரியாத குரல்கள், பேச்சுக்களால் ஒரு வித பயத்தோடு நாட்களைக் கழித்து வந்திருக்கிறாள்.

அவளோடு அறையைப் பகிர்ந்து கொண்டிருந்த ப்ரமிளா எனும் ப்ரமி இரவில் எங்கோ அழைத்துக் கொண்டு சென்றப்பட்டதை அவள் கண்டிருந்திருக்கிறாள். ஒரு நாள் அதிகாலையில் ப்ரமிளா ரத்தம் அதிக அளவில் வெளியேறி பரிதாபமாய் உயிரை விட்டிருப்பதைப் புரிந்தும் புரியாத வயதில் சத்யா கண்முன்னால் கண்டிருக்கிறாள்.

அனாதை ஆசிரம ஊழியர்கள் ப்ரமிளாவின் சாவை மறைக்க என்ன செய்யலாம் எனப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு மனதில் பயமும் , பதற்றமும் சூழ இருந்திருக்கிறாள்.

சில பல மணி நேரங்கள் அந்த ப்ரமியின் ரத்தம் சூழ் உடலையே வெறிக்க வெறிக்கப் பார்த்தவாறு, தன் தடதடக்கும் உள்ளத்தை , பதறும் உடலை, மரத்துப் போன மனதோடு இருந்த அவளுக்கு ப்ரமிளாவின் மரணம் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தங்கள் மிக அதிகம் எனக் கேட்டதுமே உறைந்து போனான் கதிர்.

சொல்லிக் கொண்டிருந்த மருத்துவர் கல்பனா மறுபடி தொடர ஆரம்பிக்கவும்

இன்னும் என்ன வர இருக்கிறதோ? என்ற பதைபதைப்பில் இருக்க, அந்த ஆசிரமத்தில் இருந்த கயவர்கள் சத்யாவையே அடுத்த இலக்காக எண்ணி, சிறுமி என்றும், கேட்க நாதியற்ற அவளின் நிலையை முன்னிட்டு அவள் உடலை குறி வைத்து சூறையாடக் காத்திருந்தனர் என்பதையும் அந்தக் கயவர்களிடமிருந்து கடைசி நொடியில் அவள் காப்பாற்றப் பட்ட சம்பவத்தையும் சொன்ன போதும் எழுந்த உணர்வுகளை அவன் என்னென்று சொல்வான்?

சிறு பிள்ளையாக அவளது மன நிலை அப்போது எவ்வாறு இருந்து இருக்கும்? என்று எண்ணி அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இந்த நாட்டில் மன சாட்சிகள் மறத்து போய் விட்டனவா? இல்லை மரித்து விட்டனவா? என்று தான் முதலில் அவனுக்குத் தோன்றியது.

பெண்கள் கருணைக் கடல்கள் என்றிருக்க, அந்தக் குழந்தைகளை இந்த மாபாதகச் செயல்களுக்கு உட்படுத்திய பெண்கள் குறித்து மிகக் கேவலமாகவும் தோன்றியது.

தொடர்ந்து பேசிய மருத்துவர் கல்பனா,

தான் அவளுக்குக் கொடுத்த மருத்துவ ஆலோசனைகள் குறித்து மேலோட்டமாகக் கூறியவர். ஹரீஷ் சவுஹான் அவளின் கார்டியன், அவர் இந்தத் தகவல்களை நீ அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்பினார் என்பதால் மட்டுமே உன்னிடம் பகிர்ந்து கொள்கிறேன் எனக் தெரிவித்தார்…

“நான் இந்தத் தகவல்களை எனக்குள்ளாகப் பத்திரப்படுத்திக் கொள்வேன் மேடம், உங்கள் நம்பிக்கை வீண் போகாது”

என அவரிடம் கதிர் உறுதி அளித்தான். முதலில் தயங்கினாலும் அவன் கேட்பதாக இருந்த கேள்வியைக் கேட்காமல் அவன் விடவில்லை.

டாக்டர், சத்யாவுக்குக் கருப்பு நிறத்தவர்களைக் கண்டால் பிடிக்காதா? எனக் கேட்டான்.

அலைபேசியில் பேசுகின்றவனின் நிறம் அறிய இயலாதே அதனால் அவர் அவனது மனதை அறியாமல் உண்மையைக் கொட்டி விட்டார்.

ஏன் இந்தக் கேள்வி கதிர், நீ எங்காவது அவள் கருப்பு நிறத்தவரிடம் சண்டையிட்டு பார்த்திருக்கிறாயா?

அந்தப் பரிதாபத்திற்குரிய ஜீவன் தான் தான் என்று சொல்ல முடியாதவனாய் ஆம் என்று பதிலிருத்தான்.

உண்மைதான் கதிர், அவளுக்குக் கருப்பானவர்களைக் கண்டு மிகவும் பயம். அந்தக் கொடியவர்களின் முகம் அவள் மனதில் பதிந்ததோ இல்லையோ, அவர்களின் நிறம் பதிந்து விட்டது போலும். சிறு வயதிலேயே அவள் மருத்துவ ஆலோசனைக்கு வரும் போதெல்லாம் எங்கள் ஹாஸ்பிடலில் பணிபுரியும் ஒருவரைக் கண்டு பயத்தில் வீறிடுவாள். அவளை அந்தப் பயத்திலிருந்து வெளிக் கொண்டு வர எவ்வளவோ முயன்றும் முதலில் எங்களால் முடியவில்லை.

அவள் வரும் முன்பாகச் சில காலம் வரை அந்த நபரை நாங்கள் சற்று நேரம் பார்வையில் படாதவண்ணம் இருக்கக் கேட்டுக் கொண்டோம். அவள் தொடர்ந்து சிகிட்சையில் இருக்கவே அவளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகச் செயல்பட்டோம். அதன் பின்னர்த் தன்னுடைய பயத்தை அவள் கோபமாக மாற்ற கற்றுக் கொண்டாள் போலும்

பலமுறை அவள் ஆத்திரம் மிகச் சண்டையிடுவதாக எனக்குத் தகவல்கள் கிடைத்தன. அவள் சண்டையிடுவோர் அனைவருமே அவளுக்கு மனப் பயம் ஏற்படுத்தும் கருப்பு நிறம் கொண்டவர்களாக இருந்ததைக் கவனித்தோம். வயது கூடக் கூட மன முதிர்ச்சியில் அந்தப் பயமும் , கோபமும் குறைய வாய்ப்பிருக்கின்றது கதிர். அவள் நான் அவளுக்குக் கொடுத்திருக்கும் மனப்பயிற்சிகளைத் தினசரி செய்து வருவதாகக் கூறியிருக்கிறாள். இன்னும் முற்றிலுமாக அவள் அந்தப் பயத்தினின்று விலகி விட்டாள் எனக் கூற முடியாது, ஆனால் நல்லதையே எதிர்பார்க்கிறேன்.

இன்னும் சில பேசி, நன்றி சொல்லி அலைப் பேசி உரையாடல் முற்றுப் பெற்றது.

கதிர் மனதில் சத்யா தன்னை உண்மையாக விரும்ப வாய்ப்பே இல்லை என்ற எண்ணத்தின் வித்து விழுந்த இடம் அதுவே. மருத்துவர் கல்பனா கூறிய விஷயம் கண்டு மீதியையும் அவனால் இப்போது நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

எப்படிச் சத்யாவுக்குத் தன்னைத் துன்புறுத்த எண்ணியவர்கள் கருப்பு நிறத்தினர் அதனால் கருப்பு நிறத்தினரே மோசமானவர்கள் என்று மனதில் பதிந்து விட்டதோ அது போலவே ஹரீஷ் சவுஹான் எனும் வட மாநிலத்தவர் அவரது நிறம் நிச்சயமாகக் கருப்பாக இருக்க வாய்ப்பில்லை. அவர் அவளது கார்டியன், அவளை ஒரு இக்கட்டிலிருந்து காத்தவர். நிச்சயமாய் அவளைப் பொருத்தவரை ஹரீஷ் போன்ற வெள்ளைத் தோல் கொண்டவர்கள் நல்லவர்கள் என்றும் , கருப்பானவர்கள் பொல்லாதவர்கள் என்றும் பிம்பம் பதிந்திருக்கும். அதில் மாற்றம் இல்லை.

அதனால் தான் அவள் தன்னைப் பார்த்த நாள் முதலே கோபத்தை மட்டும் காட்டியதும், கிஷோர், துஷார் போன்ற வட மாநிலத்தவர்களுடன் இலகுவாய்ப் பழகியதும் என்கின்ற உண்மை மனதை தீயாய் சுட்டது.

என் காதல் என்றும் வசப்படப் போவதில்லை எனும் எண்ணம் துயரம் தந்தது. ஆயினும் , சத்யா கதிரின் அன்னையிடம் அன்புறவு பாராட்ட வேண்டி,

“நான் உன்னைத் திருமணம் செய்யச் சம்மதிக்கிறேன்” என்று சொன்னதும் அதன் கொஞ்ச நேரத்திற்குள்ளாகவே, “ ராக்கி கட்டி தங்கை ஆகிக் கொள்ளவா? எனக் கேட்டதும் அவன் மனதை வெகுவாகக் காயப் படுத்தியது.

முன்பு அவள் மறுப்புச் சொன்ன போதாவது பரவாயில்லை. இப்போது தன் அன்னையின் அன்பை தொடர்ந்து பெறுவதற்காக அவள் தன்னைத் திருமணம் செய்யச் சம்மதிப்பதாகக் கூறியது மிகவும் துன்புறச் செய்திருந்தது. வேண்டா வெறுப்பாக அன்னை தரும் பொருட்களை அவளுக்குக் கொடுத்து வருவான்.

அவளைப் பார்க்க துடிக்கும் கண்களை மட்டும் அவனால் கட்டுப் படுத்த முடிவதில்லை. அவள் பாராத நேரங்களில் பார்த்து, மனம் கேட்காமல் அவள் கல்லூரியின் பக்கம் வலம் வந்து அவளைக் கண்களில் நிரப்பிக் கொள்வதில் ஒரு சுகம். வலியுடனான சுகம்.

இப்போதோ திருமணம் செய்து அவனில் இரண்டற கலந்து கைகளுக்குள்ளாக வசப்பட்டுக் கிடக்கிறாள். தன் காதல் வசப்பட்டதா? எனப் புரியாமல் அவனோ அவளிடம் அடிக்கடி “இந்த கருவாயனை உனக்குப் பிடிச்சிருக்கா? எனக் கேள்விகள் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டும், நம்பிக்கையின்றி இருக்கிறான்.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here