3. காதலும் வசப்படும்

0
627
Kadhalum Vasapadum

அத்தியாயம் 3

[center]வலியவை பிழைக்குமாம்[/center]

[center]இவ்வுலகின் நியதி அது[/center]

[center]எளியவை சாக வேண்டுமென்பது[/center]

[center]எவ்வுலகின் நியதி?[/center]

[color=brown]
அன்றைய இரவின் அந்த விகாரமான முகத்தைக் கண்டதிலிருந்து இரண்டு நாட்கள் காய்ச்சலில் கிடந்து எழுந்தவளுக்கு எல்லாமே மசமசவென்றிருந்தது. இந்தப் பொண்ணு வந்ததும் வராததுமா இப்படிக் காய்ச்சல்ல விழுந்து வச்சுட்டே… நமக்குத்தான் இதைக் கவனிக்கிற வேலை கூடிப் போச்சு… ஆயாக்களின் குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தது.


ஏன் பொன்னி அந்தப் பொண்ணு பெரிய பொண்ணா ஆகலின்னு தானே அன்னிக்கு பொன்னப்பன் கூடத் தள்ளிவுட்ட, அது கிறங்கி கிறங்கி நிக்குறத பார்த்தா வயித்துல வாங்கிடுச்சு போலயே….எதுக்கும் நாளைக்கு வரும் போது ரெண்டு மாத்திரை வாங்கியா?


****ஆமா, அவன் தந்த ஐநூறுக்கு நான் மாத்திரை வேற வாங்கிக் கொடுக்கணுமா? அவனை வாங்கிட்டு வர சொல்லுவியா போடி…

[/color]

:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:

[center]நீ என்னைக் கண்டு[/center]

[center]மிரள்கையில் எல்லாம்- உந்தன்[/center]

[center]கண்களின் கருவிழி நடனத்தை ரசிக்கிறேன்.[/center]

[center]நீ என்னைக் கண்டு[/center]

[center]நாணமுற சற்றே விரியும்- உன்[/center]

[center]இதழ்களின் இடைவெளியின்[/center]

[center]முத்துப் பற்களின் ஒளியையும்,[/center]

[center]செவ்வான நிறம் கொள்ளும்[/center]

[center]கன்னத்தின் ஒளிர்வையும்[/center]

[center]காணவே காத்திருக்கிறேன்.[/center]

தன் இடுப்பைக் கட்டிக் கொண்டிருப்பவளின் முதுகை மேலுமாய் நீவி விட்டவர்….” கதிரு சரியாதான் சொன்னான்” என ஆரம்பிக்கவும் விலுக்கென நிமிர்ந்தவள் தன்னைச் சுதாரித்தவளாய் தான் செய்த செயல் குறித்து நாணியவளாகச் சங்கடமாய்ப் புன்முறுவல் கொடுத்தாள்.

என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்? இப்போதே இங்கிருந்து சென்று விட வேண்டும் என்று எண்ணியிருக்கக் கதிரின் அம்மாவிடம் கொஞ்சிக் கொண்டும் , இந்த வீட்டை ரசித்துக் கொண்டும், சாப்பாட்டை ருசித்துக் கொண்டும் இருக்கின்றேனே? என்றவளுக்கு உடனே கதிரை பிடித்து அவன் காலரை உலுக்கி சுரீரென உரைக்கும் படி நான்கு கேள்விகள் கேட்க வேண்டும் என்று தோன்றியது.

தன் மனவோட்டத்தை மறைத்தவளாய் அமைதியாய் சாப்பிட்டு முடித்தாள். சந்திராவோ கிராமத்து மனிதர்களுக்கான வெள்ளந்தி குணத்தோடு அவளிடம் பேசிக் கொண்டே இருந்தார்.

நீ சொன்னதும் நல்லதா போச்சு பார்த்தியா?

நான் என்ன சொன்னேன் எனச் சத்யா யோசிக்கும் போதே…
முதல்ல நான் உங்க வீட்டில இருக்கிறவங்க கிட்ட பேசி பழகி பார்க்கணும்னு சொன்னதால தானே இவன் கூட்டிட்டு வந்திருக்கான். இல்லன்னா நானே கூப்பிட்டாலும் இதுவரை ஒரு ஸ்னேகித புள்ளையையும் கூட்டிட்டு வர மாட்டானுல்ல.

அடப்பாவி, இப்படி ஒரு பொய்யி, அதில மகனைப் பத்தி தெரியாம இப்படிப் பெருமைப் படுற ஒரு அம்மா… விளங்கிடும்… இந்தப் பையனுங்களே அம்மாக்களைப் பொய் சொல்லி ஏமாத்தி வச்சிருப்பானுங்க போல அவன் அப்பா வரட்டும் அவர்கிட்ட சொல்லி நல்லா மிதிக்கச் சொல்லுறேன் மனதிற்குள்ளாகக் கருவிக் கொண்டாள்.

நாங்க நேத்து நீ வர்ற அன்னிக்கு வீட்ல இல்லன்னு வருத்தம் இல்லில்ல செல்லம்மா… சாப்பிட்டு விட்டு அந்தச் சமையற்கட்டின் ஓரத்திலிருந்த திண்டில் உட்கார்ந்திருந்தனர் இருவரும்

இதென்னடா வம்பா போச்சு… மனதிற்குள்ளாக மனோகரா பட வசனங்கள் ஓடின,

“அழைத்து வரவில்லை, இழுத்து வரச் செய்திருக்கிறீர்கள்”
தலையை நீவி விட்டுக் கொண்டாள். அது தெரியாமல் இன்றைக்கு நமக்குப் பேச புதிதாக ஒரு ஆள் கிடைத்து விட்டது என்று சந்திரா பேசிக் கொண்டே இருந்தார்.

‘ரொம்ப நாளைக்கு முன்னாடியே நாங்க திருப்பதி போறதா டிக்கெட் எல்லாம் எடுத்து வச்சுட்டோம்மா…. நீ வரப் போறதா ஒரு வாரம் முன்னாடிதான் தெரிஞ்சதா அதான் கதிர், நீங்க போங்கம்மா நான் அவளை அழைச்சிட்டு வரேன்னு சொன்னான். அவன் வெளியூரு போய் வந்ததும் பின்னே ஒரு நாள் நாம எல்லோரும் போய் வருவோம் சரியா?

அவளைத் தன் வீட்டு உறுப்பினரில் ஒருவராகவே எண்ணி பேசிக் கோண்டிருந்தவர் அன்பில் அவர் மூலமாகத் தனக்குத் தெரிய வந்த கதிரின் மொள்ளமாரித்தனம் தெரிந்தாலும் அதற்கு உடனே கோபப்பட வேண்டிய ஆத்திரம் பின்னாடி நின்றுப் போக,

‘அவன் வெளியூர் போகிறானா? எங்குப் போகிறான்? அதற்கு முன்னால்
‘என்னை மறுபடி நான் தங்கியிருந்த ஹாஸ்டலில் கொண்டு போய் விடு’


என்று சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தவை எல்லாம் முக்கியத்துவம் இல்லாதவைகளாகப் போய்விட,

“பின்னே ஒரு நாள் நாம எல்லோரும் போய் வருவோம்”

என்று தன்னையும் இணைத்து அவர் பேசியது, தனக்கு முதன் முதலில் கிடைத்திருக்கும் குடும்ப உணர்வு, தன்னை உறவாக எண்ணும் அந்தப் பெண்மணியின் அன்பில் நனைந்தவளாகச் சிறுபிள்ளையாய் மாறியவள்,

“நீங்க ரொம்ப ஸ்வீட்மா” என்றவளாய் சந்திராவின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“அது யாரு நான் இல்லாத நேரத்தில என் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுக்கிறது?”

கம்பீரக் குரலில் ஆனால் சொல்லில் வெளிப்பட்ட கோபம் முகத்தில் பிரதிபலிக்காமல் சிரிப்போடு, கரிய நிறத்தவராய், ஆஜானுபாகுவாய் வந்து நின்ற நபரைப் பார்த்ததும் சந்திரா முகம் மலர்ந்தவராய் எழுந்து நிற்க அவர் பின்னால் நடுங்கியவளாய் ஒளிந்துக் கொண்டாள் சத்யா.

தன் தாயிடம் ஒட்டிக் கொண்டவள் தன் தந்தையைக் கண்டதும் வெளிப்படுத்திய பயத்தையும் நடுக்கத்தையும் கண்டு நெற்றிச் சுருங்கினான் கதிர். அவன் நினைத்தது போல அனைத்தும் அவ்வளவு சுலபமானது இல்லை எனத் தோன்றலாயிற்று.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here