4. காதலும் வசப்படும்

0
554
Kadhalum Vasapadum

அத்தியாயம் 4

[center]நரகம் ஒன்று[/center]

[center]பூமிக்கடியில் இருப்பதாக[/center]

[center]ஆராய்ச்சிகள் சொல்ல,[/center]

[center]ஆதரவற்றோருக்கு[/center]

[center]இப்பூமியே நரகம் என்பதாக – சில[/center]

[center]மனசாட்சிகள் சொன்னது.[/center]

[color=blue]ஒரு சில மாதங்கள் கழிய புது இடத்திற்குப் பழகி விட்டாள் அந்தச் சிறுமி. தன்னுடைய அறைத்தோழிகளோடு நட்பும் ஏற்பட்டது. சற்றே மன நிலை பிசகிய , எந்நேரமும் தன் கையில் பொம்மையோடு திரியும் அந்தப் பிரமிளா எனும் ப்ரமியின் பேச்சுக்களும் அவளுக்குக் கொஞ்ச்ச கொஞ்சமாய்ப் புரிய ஆரம்பித்தது. ஆசிரம குழந்தைகளுக்கான பள்ளியின் தன் படிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தாள் அவள்.


வயதிற்கேற்ப சற்று தன் சூழ்நிலை அறியும் வயது ஆதலால் படிப்பே தன் வாழ்க்கையை உயர்த்தும் என்கிற அறிவு வந்து விட்டிருந்தது. தன் பிறப்பையோ, தன் பெற்றோரையோ குறித்து யாரிடம் கேட்பது என்கின்ற அளவிற்கு ஒன்றும் புரியவில்லை. தான் அனாதையாக இருப்பது குறித்த எந்த வருத்தமும் இல்லை. வாழ்வின் இன்பங்கள் அறிந்தவர்க்கு அல்லவா துன்பங்கள் உரைக்கும். தான் வாழும் வாழ்வு மட்டும் அறிந்தவளுக்கு எந்த வித தாழ்வு மனப்பான்மையோ, துயரமோ தோன்றவில்லை.


தன் வீட்டுப்பாடத்தை எழுதி முடித்தபோது தான் ப்ரமி தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு வலியில் முனகிக் கொண்டே தூங்குவதைக் கவனித்தாள். இப்போது ப்ரமிக்காகச் சென்று உதவிக் கேட்டால் ஆயாவிடம் திட்டு வாங்குவது நிச்சயம். அதிலும் வலியோடு ப்ரமியும் தூங்கி விட்டதால் காலை அது குறித்து விசாரிக்கலாம் என்று யோசித்தவளுக்குத் தூக்கம் கண்களைச் சொக்கியது.[/color]

[center]அழகுகள் பலவிதம்[/center]

[center]
[/center]

[center]நான் உந்தன்[/center]

[center]
[/center]

[center]அக அழகுக்கு[/center]

[center]அடிமையடி[/center]

[center]
[/center]

[center]பெண்ணே![/center]

கதிரின் தந்தையின் குரலைக் கேட்டு, அதன் பின் உருவம் கண்டு பயந்து சந்திராம்மாவின் முதுகுக்குப் பின்னே நின்றவளுக்குத் தன் நடுக்கம் தீர வெகு நேரமானது.

“கதிர் அம்மா அப்பாக்கிட்ட அவனைப்பத்தி போட்டுக் கொடுத்து, அவன் அப்பா அவனைத் தூக்கிப் போட்டு மிதிக்கிறதை பார்க்கிறதா இருந்த வீரி, சூரி நீதானாம்மா?” என்று அவள் மனசாட்சி அவளைக் காறி துப்பியது.

அதைத் துடைத்துப் போட்டுவிட்டு மனதிற்குள்ளாகக் கல்பனாம்மா சொன்ன வார்த்தைகளை மந்திரம் போல ஜெபித்தாள். கொஞ்சம் தைரியம் வந்தார் போல இருக்கப் பழைய பட நாயகிகள் கதவிற்குப் பின்னால் நின்று எட்டிப் பார்ப்பதைப் போலச் சந்திராம்மா முதுகின் பின்புறம் இருந்து மெதுவாக எட்டிப் பார்த்தாள்.

‘என்னங்க நீங்க சின்னப்பிள்ளய வந்ததும் வராததுமா பயம் காட்டிட்டீங்க?’ சிரிப்பாய் கணவரிடம் பேசிக் கோண்டிருந்தார் சந்திரா.

“ஆமா இவ சின்னப்பிள்ள , நீங்கதான் சொல்லிக்கணும் இனி என்னல்லாம் ஆட்டம் போடுவாளோ? எங்கம்மா அப்பாவை நீங்கதான் காப்பாத்தணும் கடவுளே” மனதிற்குள் சிரித்தவனாக ஒரு வேண்டுதலை வைத்தான் கதிர்.

வாம்மா, நல்லா தூங்கி எழுந்தியா? காலை சாப்பாடு ஆச்சா? எனச் சத்யாவிடம் கேட்டார் கதிரின் தந்தை சுந்தரம்.

அவரது கேள்விக்கு அமைதியாகத் தலையசைத்துப் பதில் கொடுத்தவள். வராத முறுவலை வரவழைத்து “ஆச்சு அங்கிள்” எனப் பதிலிருக்க,

‘அதென்ன அங்கிள்ன்னுட்ட, மாமான்னு கூப்பிடனும். சரியா?’ என்றவரின் தோற்றம் மறுபடி பயமுறுத்த சிரித்தவாறே அங்கிருந்து நகர்ந்தார்.

நீ கொஞ்ச நேரம் இங்கிரு கண்ணு, நான் அவங்களுக்குக் காலை சாப்பாடு கொடுத்துட்டு வரேன் என்று நகர்ந்தார்.

சற்றும் அலுக்காத அந்த இயற்கை சூழலில், சுற்றுபுறத்தில் லயித்திருந்தாலும் கதிரை எங்கே போய்த் தேடுவது? என்று அவளுக்குப் புரியவில்லை. முன்பின் தெரியாத வீட்டில் அதிரடியாகப் போய்த் தேடுவது நாகரிகமாகவும் படவில்லை.கதிரும் அவள் கண்கள் அலைபாய்வதைக் கண்டு அவள் கண் பார்வையில் படாத விதமாய் உள்ளறைக்குள் சென்று விட்டான்.

சத்யாவுக்குக் கதிர் மேல் இருக்கும் கோபத்தைப் பெரியவர்களிடம் காட்டுவது ஏனோ முறையாகப் படவில்லை.

வயிற்றுப் பசியை விடப் பெரியது அன்பு பசி, தன்னைச் சொந்தமாக யாரும் எண்ண மாட்டார்களா? நமக்கென்று உறவுகள் ஏன் இல்லை? என்னும் பல வருட அன்பு பசி செல்லம்மா, கண்ணு, சக்திம்மா, ‘மாமான்னு கூப்பிடு’ என்னும் பதங்களால் நிறைந்து கொண்டிருக்க எங்கிருந்து அவள் கோபப்படுவாளாம்?

சற்றே அவள் சிந்தனை எனும் குரங்கு அடுத்தடுத்து மற்ற சிந்தனைகளுக்குத் தாவ திடீரென அவளுக்குக் கதிர் அம்மா அப்பாவின் உரையாடல்கள் நியாபகத்திற்கு வர, அதிலும் சந்திராம்மா கணவரைப் பார்த்த கனிவும் காதலுமான பார்வை குறித்து அவளுக்குத் தோன்றியது இதுதான்,

“இந்த அம்மா இவ்வளவு அழகா கலரா இருக்காங்க, இவங்க இவ்வளவு கருப்பா இருக்கிறவங்களை எப்படிக் கட்டிருப்பாங்க?”

அவளின் சிந்தனையைக் கலைப்பதற்கென்றே சந்திராம்மா அங்கு வந்து சேர, அவர் கையில் சில கொய்யாப் பழங்கள் இருந்தன.

சக்தி… இந்தா இந்தக் கொய்யா பழத்தை சாப்பிடு, ரொம்ப நல்லாருக்கும்… ம்ம்

அவைகள் சற்றுக் கடித்துக் குதறப்பட்டிருக்கப் புரியாமல் பார்த்தாள் அவள்.

இதெல்லாம் அணில் கடிச்சது, அதுங்க நல்லா ருசியா இருக்கிறதைதான் கடிக்குங்க. நான் கழுவிதான் கொண்டு வந்தேன் சாப்பிடு …எனச் சொல்ல ஒரு கடி கடித்தாள். ருசி பிரமாதம்.கண் மூடி ரசிக்கையில்……

ஏ கதிரு, ஏலே கதிரு நேரமா சாப்பிட வந்தா என்ன? எப்ப பாரு சாப்பிட கூப்பிட்டுட்டே இருக்கணும் சலித்துக் கொண்டார் அவர். அந்த அழைப்பிற்கு வரப்போகின்றவனைத் தாய்மை பரிவோடு இரண்டு கண்களும், கொலை வெறியோடு இரண்டு கண்களும் எதிர்பார்த்தன.


தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here