5. காதலும் வசப்படும்

0
585
Kadhalum Vasapadum

அத்தியாயம் 5

[color=purple]அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு[/color]

[color=blue]மனிதாபிமானம் இலார் மட்டும் பிறர் என்பும், சதையும்
தனதாய் எண்ணி பாவிப்பர்.[/color]

அதிகாலையில் ஸ்கூலுக்குப் புறப்பட்ட அந்தப் பெண் கூட்டி சுத்தம் செய்து கொண்டிருக்கும் தங்களை நோக்கி ஏன் வருகிறாள் என்ற கேள்வியோடு முகம் சுருக்கினர் பொன்னியும், முத்தம்மாவும்.

ஆயா, நம்ம ப்ரமி இருக்கில்ல அவளுக்கு ராத்திரி பூராவும் வயித்துவலி, அழுதுட்டே தூங்கிட்டு இருந்தா… என்றவளின் சொல்லுக்கு ஒருவரை ஒருவர் கலவரமாய் நோக்கினர் இருவரும்
ஆயா….

நீ ஸ்கூலுக்குப் போவாம இங்க என்ன செய்யிற போ, போ விரட்டினாள் முத்தம்மா.

சரி என்றவளாய் அங்கிருந்து நகர,

“ஏ புள்ள இங்க பாரு எனத் தன்னை அழைத்ததும் நின்றவள் கேள்வியாய் நோக்க, இத மேடம் கிட்ட, இல்ல ஸ்கூல்ல யாரு கிட்டயும் சொல்லக் கூடாது என்ன?

எனப் பொன்னி அவளை மிரட்டுதலாய் சொல்ல மிரள மிரள முழித்தவாறே தலையாட்டியவளாக அங்கிருந்து சென்றாள்.

நான் தான் உங்கிட்ட படிச்சு படிச்சு சொன்னேனில்ல, ரெண்டு மாத்திரைய வாங்கிக் கொடுன்னு, இப்ப பாரு முத்திடுச்சு போல

**அந்த கிழவி கலைக்கிறதுக்கு எவ்வளவு கேக்கும்னு தெரியலையே?


அந்த வாட்ச்மேன் பொன்னப்பன் கிட்டயே ரூவா வாங்கிக்கணும். அதெல்லாம் சரி அந்தப் பொண்ண கிழவிகிட்ட இங்கிருந்து எப்படிக் கூட்டிட்டுப் போறது?

ராத்திரின்னதும் மத்த ஸ்டாப் கண்ணுல படாம நாம நடத்திகிட்டோம். இப்ப?

இப்ப மட்டும் என்ன? கிழவிக்குக் கூடக் கொஞ்சம் ரூவா கொடுத்தா ராத்திரியும் பார்க்கும். வாட்ச்மேன்காகதான் நாம இதெல்லாம் செய்றது அப்புறம் நம்மளை அவன் வெளியே போக விட மாட்டானா என்ன?

**அவர்கள் இருவரின் பேச்சுக்களும் கடந்து சென்றவளின் காதுகளைப் போய்ச் சேர்ந்தாலும் வயதின் முதிர்ச்சியின்மையால் அதன் பொருள் விளங்கவில்லை.

:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:

[center]தென்றலை காதலிப்பவர்களே[/center]

[center]பெருமை கொள்ள வேண்டாம்.[/center]

[center]நானோ சூறாவளியை ரசிப்பவன்[/center]

[center]புயலாய் என்னைத் தாக்குபவளை[/center]

[center]அணு அணுவாய் நேசிப்பவன்.[/center]

[center]தென்றலை காதலிப்பவர்களே[/center]

[center]நீங்கள் சற்றும்[/center]

[center]பெருமை கொள்ள வேண்டாம்.[/center]

பெண்கள் இருவரின் கண்பார்வைக்குள் விழுந்தான் கதிர். 22 அல்லது 23 வயதினன் என்று யாரும் சொல்ல முடியாத அகன்ற மார்பினன், திண்மை உடல்வாகு கொண்டவன். ஆறடி உயரம் தொட்டவன், தொட்டு விட்டால் ஒட்டிக் கொள்ளும் அளவு கரிய நிறத்தினன், ஆனால் வசீகரன். கண்கள் மட்டும் ஸ்நேகித பாவனையில் சிரிக்க அதரங்களை அளவோடு பேசவே திறப்பவன் அவன்.

எம்புள்ள எங்க வீட்டுக்காரர் மாதிரியாக்கும், பெருமை பேசிய சந்திராம்மாவை விசேஷ பிரிவு ஜந்துவைப் போலப் பார்த்தவளுக்குத் தன் பெருமிதம் பிடிபடாமல் “ஆனா இவன் அவன் அப்பாரை விட வளர்த்தி” எனத் தொடர்ந்தார். வழக்கம் போல அவரின் தாய்மையின் விகசிப்பில் நெகிழ்ந்த சத்யாவின் முகம் புன்முறுவலை அணிந்து கொண்டது.

நீ வாய்யா நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்றவராக அவள் உள்ளறைக்குச் செல்ல, நிமிர்ந்தவள் எதிரில் வந்து கொண்டிருந்தவனை வெட்டவா குத்தவா? எனப் பார்த்து வைத்தாள்.

என்ன? என்றவனாக அவன் மிகவும் அலட்சியமாகத் தன் ஒற்றைப் புருவத்தை உயர்த்த, பதிலுக்கு அவனைத் தன் குட்டிக் கண்களால் உறுத்து முறைத்து விழித்தாள் அவள்.

உனக்கு என்ன தைரியம்? என்பதாகத் தன் சுட்டுவிரலை அவனிடம் பல்லைக் கடித்துக் கொண்டு நீட்ட, இதுவே விரல் நீட்டிப் பேசுவது வேறொருவராக இருந்தால் சட்டு சட்டென்று கோபம் தலைதூக்கும் அவனால் என்ன நடந்திருக்குமோ தெரியாது? ஆனால் அவனால் இப்போது அவளிடம் கோபப்பட முடியவில்லை, தன்னிடம் விளையாடும் சிறு பிள்ளையாகவே அவளைப் பார்த்தான் அவன்.

தான் இத்தனை எதிர்ப்பு காட்டியும் தன்னை நோக்கி முறுவலோடு வருபவனை என்ன செய்வது என்று சற்றும் அவளுக்குப் புரியவில்லை. கிட்டே நெருங்கியவனின் அந்த வெளிர் நிறச் சட்டையும், ஜீன்ஸிம் அமர்க்களமாய்ப் பொருந்தியிருக்க அவன் தன்னைக் கண்களால் விழுங்கி விடுவானோ என்கிற அச்சத்தை அவளால் தவிர்க்க முடியவில்லை.

என்னடா கருவாயா? எதுக்கு என்னைக் கடத்திட்டு வந்த? சீறலாய் தன்னை நெருங்கியவனிடம் மொழிய,

இங்க பாரு, ஆயிரம் முறை சொல்லியாச்சு, மரியாதையா பேசுன்னு ஒன்னு போட்டேன்னா… எனக் கையை ஓங்க முற்பட,

அடித்து விடுவானோ என்கிற அச்சத்தில் கண்களை இறுக்க மூடியிருந்தவள் சில நொடிகளில் தன் ஒற்றை விழியைத் திறந்து பார்த்தாள். எதிரில் கைகள் கட்டியவனாக அவளையே பார்த்துக் கோண்டிருந்தவன் உள்ளத்தில் ரசனை எழுந்தாலும் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் தவிர்த்தான். அந்தளவுக்கு அவள் மேல் பயம்.

“நீ என்னை ஏன் இப்படிப் பார்க்கிற?” என்று தன்னிடம் முதல் நாளே கேட்டவளல்லவா அவள்.:

என்னடி கருவாச்சி, நீ ரொம்பக் கலர்னு நினப்போ, நீ போடுற ஃபேர் & லவ்லி எல்லாம் போட்டா இப்படிப் புது நிறமாத்தான் காட்டும். அதுக்கு நீ வெள்ளக்காரி ஆகிடுவியோ? என்னைக் கருவாயன்னு சொல்லுற, நீ பெரிய இங்கிலாந்து இளவரசி டயானா… போடி” அவன் கூறியதில் கோபத்தில் மூக்கு விடைத்தவள்

நான் ஃபேர் & லவ்லி லாம் போடுறதில்ல,

அப்டீன்னா பாண்ட்ஸ் டப்பாவ கொட்டி கவுத்துவியோ?

இவன் பேச்ச மாத்துறான், இவனை விடக் கூடாது என்றெண்ணியவளாக,

அத விடு நீ என்ன ஆடு மாடு மாதிரி எதுக்குக் கை காலை கட்டி கடத்திட்டு வந்த இப்ப அதைச் சொல்லு? சிறுத்தையின் சீற்றம் அவள் குரலிலும் கண்களிலும்,

நானா கூப்பிட்டா எங்க ஊருக்கு நீ வந்திருக்கவா செய்வ? அதான் அப்படிப் பண்ணினேன். சற்றும் குற்றவுணர்ச்சி இல்லாதவனாய் அவன் பேச அவள் வெடித்தாள்.

உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லியா? நான் தான் அன்னிக்கே உன் கிட்ட சொன்னேன்ல உன்னை எனக்குப் பிடிக்கலைன்னு பின்னே எதுக்குடா இப்படிப் பண்ணுன? எனக்கு ரொம்பப் பயமா இருக்கு. நீ என்னை மறுபடியும் ஹாஸ்டல் கொண்டு போய் விட்டுருடா.
உணர்ச்சி மேலீட்டில் அவள் கண்களில் கோர்த்திருந்த துளிகள் இப்போது சிதறவா? சற்று நேரம் கழித்துச் சிதறவா? என்றிருக்க அதற்கு மேலும் அலட்சியமாய்ப் பேச இயலாதவன் அவளது பேச்சில் மறுபடி ஒருமுறை வெளிப்பட்ட தன் நேசத்திற்குக் கிடைத்த தோல்வி முள்ளாய் கீறி இதயத்தை வலிக்கச் செய்தாலும்,

இங்க பாரு உனக்கு என்னைப் பிடிக்குது பிடிக்கலைங்கிறது வேற, அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. அங்க இருந்தா உனக்குப் பாதுகாப்பு இல்லன்னு தோணுச்சு அதான் உன்னை ஊருக்கு கூட்டிட்டு வந்தேன். நானா கூப்பிட்டா நீ வந்திருக்கவும் மாட்ட… அதான் இப்படி ஆகிப் போச்சு… உனக்குப் பிடிக்குதோ பிடிக்கலியோ? உன்னோட லீவு முழுவதையும் எங்க ஊர்ல கழிக்கப் போற… அவ்வளவுதான் சொல்லிட்டேன்.

கட்டுப்பாடின்றி வழிந்த கண்ணீரை, தன் விரலால் சுண்டி எறிந்து விட்டு நிமிர்ந்தவள், அதெல்லாம் முடியாது, நீ இன்னிக்கே, இப்பவே என்னைத் திரும்பக் கொண்டு போய் விட்டுட்டு வர, இல்லின்னா நான் போலிஸுக்கு போவேன்.

எங்கூர்ல போலீஸ் கிடையாது…

அப்போ பஞ்சாயத்துக்குப் போவேன்…

எங்கப்பா தான் பஞ்சாயத்து தலைவர், நான் அவர் கிட்ட ஏற்கெனவே நாம ரெண்டு பேரும் உன் படிப்பு முடிஞ்சதும் கட்டிக்கப் போறதா சொல்லிட்டேன். முடிஞ்சா போய்ச் சொல்லிப்பாரு. நீ இவ்வளவு நேரம் அவங்களோட நல்லா பழகிட்டு திடீர்னு இப்படிப் போய்ச் சொன்னா உன் பேச்சை சின்னப்புள்ளைத்தனமா, என் மேல கோபத்தில பேசறதா விளையாட்டா எடுத்துக்குவாங்களே தவிரப் பெருசு படுத்த மாட்டாங்க…

சொல்லிவிட்டு அங்கிருந்து நகர, செய்வதறியாது அயர்ந்து நின்றிருந்தாள் அவள்.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here