6. காதலும் வசப்படும்

0
541
Kadhalum Vasapadum

அத்தியாயம் 6


[center]மனதிற்கு[/center]

[center]சாட்சிகள் உண்டாமாம்[/center]

[center]அப்படியென்றால்,[/center]

[center]அவை,[/center]

[center]குற்றமிழைப்போர்[/center]

[center]தவறுகளுக்கு[/center]

[center]சாட்சி பகர ஏன் வருவதில்லை?[/center]

[color=red]காச் மூச்சென்ற சப்தத்தில் கண்விழித்தாள் அவள், இந்த ப்ரமிக்கு இதுவே வேலை, அவள் கட்டிப் பிடித்துத் தூங்கும் பொம்மையை எடுத்தாலே இப்படித்தான் கத்தி தொலைப்பாள். தூக்க கலக்கத்தில் அரைக் கண்ணில் பார்க்க அவளறையில் பொன்னியும், முத்தம்மாவும், பார்த்தாலே அவளை நடுங்க வைக்கும் அந்தக் கன்னங்கரு உருவத்தினனான பொன்னப்பனும் நிற்க, தூக்க கலக்கத்திலிருந்த ப்ரமியை எழுப்பிக் கொண்டு இருந்தனர்.[/color]

[color=red]அவள் எழுப்பிய சப்தத்தில் பக்கத்திலிருந்த பொம்மையை அவள் கையில் திணித்து அவளிடம் ஏதோ அமைதியாகப் பேசி, சமாதானப் படுத்தி அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள். அதற்கு மேல் பார்க்க அவளை அனுமதியாமல் தூக்கத்தில் அவளது கண்கள் மூடிக் கொண்டன. காலையில் விழித்தபோது தன் அறைத்தோழி அமைதியாய்த் துயிலுற்றிருக்க, அவளது பொம்மை எங்கோ தூரத்தில் கண்டாள்.[/color]

[color=red]இனி அந்தப் பொம்மையின் துணை தேவையில்லாதது போல அவள் மீளாத்துயிலில் ஆழ்ந்திருந்தாள். அவளது காலின் கீழே பெருகியோடியிருந்தது குருதி.[/color]

:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:

[center]அந்த அலைப்பாயும் கண்களை – நான்[/center]

[center]அணைத்து அமைதியுறச் செய்ய ஆசை[/center]

[center]அந்த ஏக்கப் பெருமூச்சுக்களை மாற்றி[/center]

[center]துள்ளலாய் அவளை மாற்றி விட ஆசை[/center]

[center]எப்போதும் பயத்தில் துடிக்கும் அவள் இதயத்தை[/center]

[center]என் அருகாமையில் சுகராகம் மீட்டச் செய்ய ஆசை[/center]

[center]அவளோ எந்தன்[/center]

[center]முடிவில்லா ஆசை.[/center]

கதிர் உணவருந்திக் கொண்டிருக்கப் பக்கத்திலிருந்து பேசிக் கொண்டே பரிமாறிக் கொண்டிருந்தார் சந்திராம்மா. அவனோ தலையைத் தலையை ஆட்டுவதும் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது கொஞ்சம் பேசுவதுமாக இருந்தான்.

மனதிற்குள்ளாக முடிவெடுத்தவளாக அவர்கள் இருவரையும் நெருங்கி வந்தாள் சத்யா.

வா சக்திம்மா…

அம்மா அவ சத்யா…

தனக்குச் செல்லப் பெயர் வைத்துக் கூப்பிடுபவரை தடுக்கும் கதிரைப் பார்த்து சத்யாவிற்குக் கோபம் வந்தது. ஆனால், அதை வெளிக்காட்டாமல் தான் வந்த வேலையைச் செய்யலாம் என்றெண்ணியவளாக அமைதியாய் அவர் அருகில் வந்து அமர்ந்தவள்.

“அம்மா” என அழைக்கவும் என் அம்மா இவளுக்கு அம்மான்னா இவ எனக்குத் தங்கச்சி முறையா? கடுப்பானவன் “அவங்க என் அம்மா” அவளிடம் வெடுவெடுத்தான்.

சட்டென்று உள்ளுக்குள் ஏதோ உடைந்தவாறு அவள் முகம் சோர்ந்து போக அதைப் பார்த்த கதிர்,

“அச்சோ, இதை அவ வேற மாதிரி எடுத்துப்பாளோ? இப்ப என்ன செய்யறது?” எனத் திகைத்தான்.

அந்த இறுக்கமான சூழ்நிலையை அழகாய் மாற்றினார் சந்திரா,
“அவன் எப்பவுமே இப்படித்தான் கண்ணு , நீ தப்பா நினைக்காத. என்னை யாரும் அம்மா சொன்னா அவனுக்குக் கோபம் வந்துடும், ஒத்தைக்கொன்னா வளர்த்தா இப்படித்தான் கடுகடுன்னு பேசும் போல மகனை முறைத்தவர்.

எங்கூட்டுக்காரரு மாமான்னா, நான் உனக்கு அத்தை முறையாச்சு சரிதானே… நீ என்னை அத்தம்மான்னு கூப்புடு” எனச் சொல்ல
பேச்சே எழாமல் சரியெனும் பாவனையில் தலையை இடம் வலம் அசைக்க, இவளா நம்மோடு கொஞ்ச நேரம் முன்பு சண்டைக்கு நின்றவள் என்று அவனுக்கே அவள் மேல் பரிதாபமாய் இருந்தது.
இன்னும் அவள் முகவாட்டம் குறையாதிருக்க, ஏன் தான் அப்படி வெடுக்கென்று பேசினோமோ? என்று உள்ளுக்குள்ளாக அவனுக்கு ஏக வருத்தம் ஆனாலும் அதை வெளிக்காட்டாதவனாய் இருந்து கொண்டான்.

அங்கிருந்த தண்ணீரை கொஞ்சமாய்த் தனக்கு ஊற்றிக் குடித்துக் கொண்டு சுதாரித்துக் கொண்டவள், பெரியவர்கள் முன்னால் கேட்டால்தான் கதிரின் குறுக்கீடு இருக்காது என எண்ணியபடி பேச ஆரம்பித்தாள்.

“அத்தம்மா, நான் நாளைக்கே ஊருக்கு போகட்டுமா? ஏன்னா, என் நண்பன் ஒருத்தன் எனக்கு இந்த விடுமுறை சமயத்தில 2 மாதமும் செய்யிறதுக்கு வெளியூர்ல வேலை பார்த்து வச்சிருக்கிறதா சொன்னான். அதான் உங்களை எல்லாம் பார்த்திட்டேன்ல நாளைக்குப் புறப்பட்டுட்டேன்னா வேலையில போய்ச் சேர்றதுக்குச் சரியாயிருக்கும்” எனக் கேட்க,

அம்மா முன்னால் அவளை முறைக்க முடியாமல் இருந்தாலும் அவனால் இயல்பாகச் சாப்பிட இயலாமல் முகத்தின் தசைகள் இறுக கோபத்தை வெளிப்படுத்த இயலாமல் கைகளைக் கட்டுப் படுத்திக் கொண்டு அமைதியாய் உணவை அளைந்து கொண்டிருந்தான்.

அப்படியா சக்திம்மா, இவன் என்னமோ நீ இந்த லீவுல ஊர் பிள்ளைங்களுக்குக் கராத்தே கத்துக் கொடுக்கப் போறன்னு சொல்லிட்டு இருந்தான். அப்படியில்லயா? எனவும் சத்யா திடுக்கிட்டாள்.

நான் கராத்தே கத்துக்கிட்டு இருப்பது இவனுக்கு எப்படித் தெரியும்? எனக்காக எதுக்கு இவன் இவங்க ஊர்ல வேலையெல்லாம் பார்த்து வைக்கணும்?

கதிர் அவளுக்கு எப்போதும் ஒரு புரியாத புதிர்தான் போலும். எப்போது அவள் வாழ்வில் வந்தான்? ஏன் அவள் எண்ணுவதற்கு மாறாக எல்லாவற்றையும் அமைக்கிறான்? அவனுக்கு என்னிடம் வேண்டியதுதான் என்ன? ஒன்றும் புரியாமல் வழக்கம் போலவே திகைத்து நின்றாள்.

ஏன் சக்திம்மா நீ அங்க போயி வேலை செய்யிறதுக்கு இங்க இருக்கலாம்ல?, இதுவும் கூட நல்ல வேலைதான கண்ணு. ஊர்ல இருக்கிற பொண்ணுங்க எல்லாம் நீ எப்ப வருவேயின்னு தினமும் கேட்டு குடைஞ்சு எடுத்துட்டாளுக. இப்ப என்னன்னா நீ இப்படிச் சொல்லுற?

என்ன சொல்வதெனப் புரியாமல் நின்றவளின் பதிலை எதிர்பாராமலேயே அவர் தொடர்ந்தார், ஆம் அது அவருக்கு வழக்கமான ஒன்றுதானே.

இந்தப் பையனும் இன்னிக்கு ராத்திரியே சென்னைக்குப் போறான். எப்பவும் லீவு நாளுலயாவது வீட்டுல இருப்பான். வாய்க்கு ருசியா பொங்கிப் போடுவேன். இந்த வருஷம் அவன் தான் வேலை விஷயமா போறான், அவன் பக்கத்தில இல்லாட்டியும் கூட நம்ம வீட்ல ஒரு பொம்பளப் புள்ள நம்ம கூட இருக்குமே, ஆசையா அலங்கரிச்சுப் பார்க்கணும்னெல்லாம் யோசிச்சு வச்சிருந்தேன். நீ என்னன்னா… எனத் தொடர்ந்து புலம்பிக் கொண்டிருந்தவரிடம் நெருங்கி அமர்ந்து சின்னக் குழந்தைப் போல அவர் தோளில் சாய்ந்து மறுபடியும் தன் வயத்தில் இல்லாதவளாக,

“நான் லீவு முழுசும் இங்கயே இருக்கிறேன் அத்தம்மா, எங்கேயும் போகலை சரியா…. இப்ப நீங்க வருத்தப்படக் கூடாதாம்”

என்றவளாக அவரது கன்னத்தைத் தன் கரத்தால் தாங்கி உதடுகளைச் சிரிப்பது போல் விரித்துவிட அவரும் நொடியில் முகம் மலர்ந்து சிரித்தார்.

நிகழ்ந்ததை எல்லாம் சம்பந்தமே இல்லாமல் ஒரு பார்வையாளன் போலப் பார்த்துக் கொண்டிருந்தவன் ஒருவாறாகச் சாப்பிட்டு முடித்து உள்ளே செல்ல,

அத்தம்மா, நான் அங்க வேலைக்கு வரலைன்னு கிஷோர் கிட்ட சொல்லணும், இங்க போன் எங்க இருக்கு? எனக் கேட்டுக் கொண்டிருக்கக் கிஷோர் என்னும் பெயரிலேயே கோபத்தில் இறுகினான் கதிர்.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here