7. காதலும் வசப்படும்

0
567
Kadhalum Vasapadum

அத்தியாயம் 7


பல நேரங்களில்
மனிதனின் சட்டங்கள், தீர்ப்புகளில்


குற்றங்கள்
மறைக்கப் படலாம்……


நீதி
நிலை பெறாது போகலாம்


ஆனால்,


இயற்கை எனும் நீதிபதியிடம்
உலகறியாத அத்துனை குற்றங்களுக்கும்


நீதி தீர்ப்பு உண்டல்லவா!?.

[color=maroon]“ப்ரமி ஏன் இப்படிக் கிடக்கிறாள்?” என ஒன்றும் புரியாதவளாக யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு ஒரு சில காலடி சப்தங்கள் தங்கள் அறையின் கிட்டே நெருங்கி வரவும், பயந்து வழமை போலத் தூங்குவது போல் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.[/color]

[color=maroon]அவளது மூடிய விழிகளின் சற்றே திறந்திருந்த வெளிச்சத்தில் இவளை தூங்குகிறாளா என்று கண்காணிக்கும் ஆயாக்கள் இருவர், மற்றும் செக்யூரிட்டி பொன்னப்பன், அவன் கூடவே இன்னொரு ஆண் இவர்களைக் கண்டாள். இவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என அவர்கள் அனைவரும் முடிவுக்கு வந்த பின்னர் அவர்களுக்குள்ளாக மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தனர்.[/color]

[color=maroon]“இந்தப் பொண்ணு மயக்கமா இருந்துன்னு தான படுக்க வச்சிட்டு போனோம், இப்ப உசிர விட்டுடுச்சு… நாம என்ன செய்யிறது?”[/color]

[color=maroon]என்னும் அவர்கள் பேச்சில் தாங்கள் செய்த தவறுக்கான குற்ற உணர்ச்சி சிறிதளவும் இல்லை. கேட்க நாதியற்ற உயிர்தானே என்கின்ற அலட்சியமும், இப்போது நிகழ்ந்த இந்தச் சம்பவத்திலிருந்து எப்படித் தப்பிப்பது என்னும் அவசரமும் மட்டும் தான் தென்பட்டது.[/color]

[color=maroon]இப்ப இந்த அறையில் இருக்கிற எதையாவது யாரும் தொட்டு வைக்க வேணாம், நம்ம மேல சந்தேகம் வராத மாதிரி நாம பார்த்துக்கணும் என முக்கியமான விஷயத்தை முதலில் பேசிக் கொண்டனர்.[/color]

[color=maroon]அவர்கள் யாருக்கும் ப்ரமியின் மரணம் குறித்து எதுவும் தெரியாத மாதிரியே காட்டிக் கொள்ளவும், அவர்களுள் பொன்னி மட்டும் ப்ரமி இரவு தூங்கச் செல்வதற்குச் சற்று முன்பு கால் தடுக்கி கீழே விழுந்ததைப் பார்த்ததாகச் சொல்ல வேண்டும் என்றும், ஆனால், அவள் கீழே விழுந்ததால் அவளது உயிருக்கே ஆபத்து வரும் என்று அவள் எண்ணவில்லை என்றும் கூற வேண்டும் முடிவெடுத்தனர்.[/color]

[color=maroon]முக்கியமாக ஒருவேளை ப்ரமியின் கர்ப்பம் குறித்து வெளியே தெரிய வந்து கேள்விகள் கேட்டால் அதைக் குறித்து எங்களுக்குத் தெரியவே தெரியாது என்று சொல்ல வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டார்கள்.[/color]

[color=maroon]அத்தனையையும் கமுக்கமாக அவர்களுக்குள்ளாகப் பேசி முடிவெடுத்தவர்கள் இன்னும் நன்கு விடியும் வரை ஒன்றும் தெரியாதது போல நடந்து கொள்ளும் விதமாக, யார் முதலில் ப்ரமியை பார்ப்பது போல வரவேண்டும்? யார் ப்ரமி இறந்து விட்டாள் என்று தலைமையகத்துக்குக் கூறி எல்லோரையும் அழைக்க வேண்டும் என்றெல்லாம் பேசி வைத்துக் கொண்டு கலைந்துச் சென்றார்கள்.[/color]

[color=maroon]அதுவரை புரியாததெல்லாம் அவளுக்குப் புரியவர அந்த அதிகாலை நேரத்தில் பக்கத்தில் ரத்த சகதியில் துயிலும் அவள் தோழி உயிரற்றவள் என்பதை அறிந்த நேரம் முதலாகத் தனக்குள்ளே பயம், நடுக்கம் பரவ, தன்னை இருள் போர்வையாய் கவ்வி கொண்டது போல உணர்ந்தாள்.[/color]

[color=maroon]தான் படுத்திருந்த நிலையிலிருந்து எழவும் முடியாமல், மனதில் பரவிய துயரத்தின் வெளிப்பாடாக ஓங்கி குரலெடுத்து அழவும் இயலாத விதம் அந்தக் கொடியவர்கள் குறித்த பயம் அவள் மனதை அழுத்த, ப்ரமியின் குற்றவாளிகள் திட்டமிட்ட படி நாடகம் நடை பெற வேண்டிய நேரம் வருமளவும் வைத்த கண் வாங்காமல் ப்ரமியை பார்த்தவளாகச் சிலையாகச் சமைந்திருந்தாள் அவள்.[/color]

:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:

[center]உன்னை[/center]

[center]காயப்படுத்தும்[/center]

[center]போதெல்லாம்,[/center]

[center]வெகுவாக[/center]

[center]காயப்பட்டு[/center]

[center]போகின்றேன் நான்.[/center]

[center]தினம்[/center]

[center]மனம் வருந்துகிறேன்…[/center]

[center]என்னுடைய ரோஜாவில் மட்டும்[/center]

[center]எதற்கு[/center]

[center]இத்தனை முட்கள்?[/center]

அத்தம்மா, நான் அங்க வேலைக்கு வரலைன்னு கிஷோர் கிட்ட சொல்லணும், இங்க போன் எங்க இருக்கு? எனக் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு

“நம்ம வீட்டு போன் வேலை செய்யலை சக்தி … உன் மாமா வேலையா வெளியே போயிட்டாரு, நீ கதிரு போன்ல போயி பேசு”

என அவளை மறுபடி கருவாயனிடம் மாட்டி விட்டு சென்று விட்டார்.

அத்தம்மா அங்கிருந்து நகரவும், மயக்கம் தெளிந்தது சத்யா பொண்ணுக்கு, தான் செய்ததெல்லாம் மிகவும் அதிகப்படியாகத் தெரியலாயிற்று.

என்ன செய்வது எல்லோருக்கும் கதா நாயகனை கண்டால் மயக்கம் வரும் நம் நாயகிக்கு கதா நாயகனின் அம்மாவைக் கண்டால் மயக்கம் வந்து தொலைக்கின்றது… அன்பு மயக்கம்.

மறுபடியும் தன்னைத் தானே தாம் செய்வது சரியா? என்று கேள்விகள் கேட்டுக் கொண்டாள். எப்போதும் தனக்கான முடிவுகளைத் தானே எடுத்து பழகி இருப்பவள் சந்திராம்மா ஒரு முறைச் சொன்னதும் கடந்த சில வாரங்களாகத் தான் முடிவு செய்து வைத்திருந்த அந்த வேலையைக் குறித்துச் சிறிதும் எண்ணாமல் இங்கு ஊரில் கராத்தே பயிற்சி கொடுக்கும் வேலையை ஏற்றுக் கொண்டாளே? அதுவும் லீவு முழுவதும் தான் இங்கேயே இருப்பதாக வேறு சொல்லியாகிற்று.

நமக்கு என்னவாயிற்று? அவளது கேள்விக்கு அவளிடம் பதில் எதுவுமில்லை. தான் இந்த ஊரில் தங்கும் நாட்களில் கதிர் இருக்க மாட்டான் என்பதே அவளுக்கு ஆசுவாசமாகிற்று. ஏனோ கதிரைக் கண்டாலே அவளுக்குப் பிடிப்பதில்லை. முதல் கோணல் முற்றும் கோணல் அது தான் கதிரைப் பொருத்தவரை அவளது நிலைப்பாடாக ஆகி விட்டது.

அவனை அவள் முதன் முறைப் பார்த்த பொழுது ……….

ச்சீய் அவளுக்கு அதை நினைவு கூற கூடப் பிடிக்கவில்லை. அது ஏழெட்டு வயது பெண் குழந்தையாக இருக்கும் அவளின் உடைகளில் படக் கூடாத இடங்களில் அவனது கரங்கள் பட்டு, துணியைத் தொட்டுக் கொண்டு இருந்ததைக் கவனித்தாள்.

அவன் வாங்கிக் கொடுத்திருந்த சாக்லேட்டை கையில் வைத்திருந்த அந்தச் சின்னப் பெண் அதை அறியாமல் அவனிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தது.

ச்சேய் என்ன வக்கிரம் இவனுக்கு? சின்னக் குழந்தை என்றும் பாராமல் இந்தச் சுவரோரம் என்ன வேலை இது? இவனை விடக் கூடாது என்றவளாக அவனை நோக்கி அவள் பயணப்பட,

அந்தக் குழந்தை அந்த இருப்பிடத்தின் வாயில் பகுதியிலிருந்து உட்புறமாக வந்து அவனிடமிருந்து தாண்டி இவளையும் தாண்டி உள்ளே சென்று விட,

கதிரோ அவளைக் கண்களை விரித்தவனாக ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். முன்பே அவளைக் கண்ட பாவனை அவனிடமிருந்தது.

அவனது பார்வை சென்ற விதத்தில் கோபமுற்றவள் தான் அந்தச் சிறு பெண்ணுக்காக நியாயம் கேட்க வந்திருக்கின்றோம்? என்பதை மறந்தவளாக மிகவும் கோபத்துடன் அவனைத் தன் கண்களால் எரித்து விடும் பாவனையில்,

“நீ என்னை ஏன் இப்படிப் பார்க்கிற?” எனக் கேட்டு வைத்தாள்.

அவளது நேரடிக் கேள்வியில் தடுமாறியவன் விளக்கம் சொல்லும் முன்னதாக அவனருகே அவன் நண்பனின் பைக் வந்து நிற்க,

“ஸாரி மச்சி லேட்டாயிடுச்சு, வா சீக்கிரம் போகலாம் இப்ப போனா தான் சரியான நேரம் போய்ச் சேர முடியும்” என்றவனாய் அவசரப் படுத்த கதிர் கண்களாலேயே அவளிடம் விடைப்பெற்றுச் செல்ல.

ஏய் பதில் சொல்லுடா… கத்தினாள் சத்யா… காற்றில் மறைந்திருந்தான் அவன்.

தலையை உலுக்கி தன் முந்தைய எண்ணங்களிலிருந்து வெளி வந்தவள் மறுபடியும் சுய இரக்கத்தில் ஆழ்ந்தாள். அவளுக்கு அப்போது வந்த சோகம் வேறொன்றுமில்லை மறுபடி போன் செய்வதற்காகக் கதிரிடம் போய் நிற்க வேண்டுமே என்பது தான்.

கடத்தினது தான் கடத்தினான் தன் கைப்பையோடு கடத்தியிருக்கக் கூடாதா? அதில் அவளது சாதாரண வகை அலைபேசி இருந்ததே? அடப்பாவி விட்டால் உன்னுடைய பை, பொருள் எல்லாம் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று சொல்வாய் போல (ம்ஹீம் வர வர கடத்துறவங்க மேல பயம் இல்லாம போயிடுச்சி) என அவள் மனம் இடித்துரைத்தாலும் அவளுக்குக் கதிரிடம் போய் உதவி கேட்பது பாகற்காய் போலக் கசந்தது.

பெரியவர் ஹரீஷ் அவளிடம் எத்தனையோ முறைக் கேட்டும் அவள் அந்த அலைபேசி தவிர வேறெதுவும் வேண்டாம் என்று கூடச் சொல்லி இருந்தாள். தான் இந்த விடுமுறை நாட்களில் வேலைப் பார்த்து, கிடைக்கும் வருவாயில் நவீனமான அலைபேசி ஒன்று வாங்க வேண்டும் என்பதும் அவளது திட்டமாக இருந்தது. இப்போது தன்னுடைய எல்லாத் திட்டத்தையும் மாற்றி விட்டான் அவளுக்குப் பிடிக்காத அந்தக் கொடியவன்.

ஏற்கெனவே எனக்காகத் துணிகள் எல்லாம் சொல்லி வாங்கி வைத்திருக்கிறான். இப்போது அலைபேசி பேச அவனிடம் கடன் வாங்க வேண்டும். இவன் தான் என்னைக் கடத்தி வந்திருக்கிறான் என்றால் அவன் அம்மாவுக்குக் கொஞ்சம் கூட அவன் மேல் சந்தேகம் வராதா?

அடுத்த நேரம் உடுத்த உடை கூட இல்லாமல் யாராவது பிறர் ஊருக்கு வருவார்களா? கையில் ஒற்றைப் பைசா இல்லாமல், பை இல்லாமல் எப்படிப் பயணப்படுவார்கள் என யோசிக்க வேண்டாம்?

சரி அத்தம்மாதான் உலகம் தெரியாதவர், அப்பாவி அவரை விட்டு விடலாம் ( இந்த நியாயம் சரியில்லைங்கோ) கதிரு கதிரு என்னும் குதிரோட அப்பா இந்த ஊர் பெரிய ஆளாம், பஞ்சாயத்துத் தலைவராம். அவருக்கும் கூடவா இப்படியெல்லாம் மகன் மேல சந்தேகம் வராது.

நீங்கள்லாம் பிள்ளையை வளர்க்கச் சொன்னா இப்படிச் செல்லம் கொடுத்து தொல்லையை வளர்த்து வச்சுருக்கீங்க? ம்ஹீம் பலவாறாகப் புலம்பியவள் கதிரை தேட ஆரம்பித்தாள். தான் காலையில் தங்கியிருந்த அறை அவனுடையதாகத்தான் இருக்க வேண்டும் என்று நியாபகம் வரவே அங்குச் சென்றாள்.

கதிர் அங்கே தான் இருந்தான், காதில் போனை வைத்துக் கொண்டே அறையின் இங்குமங்குமாய் நடந்தவன் கட்டிலில் அவன் தெரிந்தெடுத்து வைத்திருந்த துணிகளை ஒவ்வொன்றாய் தன் பெட்டியில் அடுக்கிக் கொண்டு இருந்தான்.

சரிடா… அப்புறம் பேசுறேன். இப்ப கொஞ்சம் வேலையிருக்கு என்றவனாக நிமிர்ந்தவன் கண்களில் சிகப்பு ரோஜாவாய் வாசலில் தயங்கி நின்று கொண்டிருந்த அவனவள் பட்டாள்.

அவளைப் பார்த்ததும் அவனுடைய நினைவுகளினூடாய் அந்தக் கிஷோரும் ஞாபகத்திற்கு வர அதே நேரம் அவளைச் சற்று நேரம் முன்பு தான் வருந்த செய்ததும் நினைவுக்கு வந்தது. இன்றிரவே தான் சென்னைக்குச் செல்லவிருக்க, தான் செல்லும் முன்பாக அவளிடம் பிரச்சனைகள் எதுவும் வேண்டாம். வழக்கம் போல அவளாகத் தன்னிடம் சண்டை இழுத்தாலும், கோபமாக எதுவும் பேசினாலும் தான் வெடுக்கெனப் பதில் பேசி விடக் கூடாது என எண்ணியவனாக நின்றான்.

தான் திட்டமிட்டதற்கு ஏற்ப அவளும் லீவு முழுவதும் தன்னுடைய ஊரிலேயே தங்கிக் கொள்வதாகச் சொன்ன பின்னே கதிருக்கும் சத்யா மட்டில் பெரிதாக எதுவும் பிரச்சனைகள் இல்லை.

சொல்லப் போனால் அவள் அவ்வாறு சொன்னது குறித்து மிகுந்த ஆசுவாசமாக இருந்தது, சத்யா இங்குத் தங்கவே முடியாது என்று எல்லோரிடமும் முரண்டி இருந்தால், அல்லது அவனிடம் சண்டைப் போட்ட விதம் அவன் வீட்டினர் முன்பாக என்னை எதற்காகக் கடத்தினாய்? எனச் சண்டையிட்டிருந்தால் அவளை அவன் எப்படிச் சமாளித்திருப்பானோ தெரியவில்லை? தான் செய்தது மிகவும் தவறாக இருந்தாலும் தனக்கு அப்போது வேறு வழியில்லை என்பதால் அல்லவா இப்படிச் செய்ய வேண்டியதாகி விட்டது என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டான்.

அவளது லீவு நாட்களான இந்த இரண்டு மாதத்திற்குள்ளாக அவளைக் குறித்த சில வேலைகளை வேறு முடித்தாக வேண்டும் உள்ளுக்குள்ளாக அவளைக் குறித்தே பல்வேறு சிந்தனைகள் ஓட, எதிரில் நிற்பவளிடம்,

என்ன சத்யா? எனக் கேட்டு வைத்தான்.

அவளோ “போன்”… என இழுக்க,

தன் அலைபேசியில் எண்கள் அழுத்த வசதியாக எடுத்துக் கொடுத்தான். அதைக் கையில் வாங்கியவள் கிஷோரின் அலைபேசி எண்களை மனப்பாடமாக அழுத்தினாள். தன்னைக் குறித்து ஒரு போதும் எந்த விளக்கமும் கேட்க விரும்பாதவள், அவளை விரும்புவதாகச் சொல்லிய போதும் ஒரு போதும் மனிதனாகவே மதிக்காதவள் அந்தக் கிஷோரின் எண்ணை மனப்பாடமாக அழுத்துவதைக் கடும் எரிச்சலோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

அதே நேரம் அவளது அழைப்பிற்குப் பதிலாகக் கிஷோரின் எண்ணிலிருந்து என்ன பதில் வரப் போகின்றது என்பதை ஏற்கெனவே அறிந்தவன் ஆகையால் கோபத்தோடு கூடக் கள்ளச் சிரிப்போடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

போனில் காது வைத்துக் கேட்டுக் கொண்டு, மறுபடியும் மறுபடியும் எண்களை அழுத்தும் அவளது முகப் பாவனையை விடாமல் கவனித்துக் கொண்டிருந்தான். சத்யாவோ பல முறை முயற்சி செய்தும் கிஷோரின் அலைபேசி எண் அணைத்து வைக்கப் பட்டிருப்பதாகச் செய்தி வர காரணம் அறியாமல் குழம்பினாள். அடுத்து என்ன செய்வது? என அந்நேரம் எதுவும் தோன்றாததால் அவனிடம் அவனது அலைபேசியைத் திரும்பக் கொடுக்க முனைந்தாள்.

அவளது கையில் இருக்கும் போதே அலைபேசியின் எண்கள் மறைந்து சட்டென்று அலைபேசி திரை அவள் முகத்தைக் காட்ட, கதிரிடம் கொடுக்காமல் வெடுக்கெனத் தன் முன் அலைபேசி திரையைக் கொண்டு வந்து பார்த்தாள்.

தன்னுடைய புகைப்படத்தை அவன் வைத்திருப்பது கண்டு வழக்கம் போல அவள் மூக்கின் மேலே கோபம் “பாங்க்ரா” ( Bhangra –பஞ்சாபி நடனம் ஹி ஹி) ஆட,

நீ ஏண்டா உன் போன்ல என் போட்டோ வச்சிருக்க… எனத் தன் சண்டையைச் செவ்வெனே ஆரம்பித்தாள் அவள்.


[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here