8. காதலும் வசப்படும்

0
531
Kadhalum Vasapadum

அத்தியாயம் 8

[center]கடவுள் என்னிடம் வந்து[/center]

[center]வரம் என்ன வேண்டும்?[/center]

[center]எனக் கேட்டால்,[/center]

[center]நீதியில்லா இப்பால்(ழ்)[/center]

[center]தேசத்தில் நீதி பொழிந்திடு இறைவா[/center]

[center]என்றே கேட்டிடுவேன்.[/center]

[color=blue]கடந்து விட்டிருந்தன மாதங்கள், ப்ரமி காற்றோடு காற்றாய் மறைந்துப் போய் விட்டிருந்தாள். அவளை நினைக்கவும் யாருக்கு நேரமிருக்கின்றது? ஆனால், அவளது தோழிக்கு தினமும் அவள் நினைப்புத்தான். கண்கள் விரிந்து, வாய் கோணி பரிதாபமாய் ப்ரமி உயிரை விட்டிருந்த காட்சி அவள் மனதில் அழியாததாய் தங்கிப் போனது. பல நேரங்களில் அக்காட்சி இரவில் கனவுகளில் வந்து அவளைக் கலவரப்படுத்தவும் செய்யும்.[/color]

[color=blue]ப்ரமிளா மரணித்துப் போன சில நாட்களுக்கு அந்த அனாதை இல்லம் அமளி துமளிப்பட்டது. போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைப்பெற்றன. அவளொடு அறையைப் பகிர்ந்துக் கொண்டதால் இவளையும் பல்வேறு கேள்விகள் கேட்டனர். அவளோவென்றால் ஒன்றுக்கும் உண்மையைச் சொல்ல வாயையே திறக்கவில்லை. சொல்லப் போனால் அவளுக்கு அங்கு நிகழ்ந்த விஷயம் என்னவென்று முழுமையாகப் புரியும் வயதும் இல்லை, புரிந்தவற்றைச் சொல்ல தைரியமும் இல்லை. கேள்வி கேட்பவர்களுக்கு என்ன? கேட்டு விட்டு சென்று விடுவார்கள். பிறகு அவளல்லவா இவர்களோடு நாட்களைக் கழிக்க வேண்டும். என்ன தைரியத்தில் அவளால் சொல்ல இயலும்.[/color]

[color=blue]போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்த நேரம் மற்றொரு முறை ப்ரமியின் கர்ப்பம் குறித்து விசாரணை அலை நடந்து ஓய்ந்தது.[/color]

[color=blue]அந்த அனாதை இல்ல மேற்பார்வையாளர்களும், கேஸ் சம்பந்தப்பட்ட காவல் துறையினரும் அவ்வளவாக அதைப் பெரிது படுத்த விரும்பாததால் அந்தக் கேஸ் கொஞ்சம் கொஞ்சமாகக் கிடப்பில் போடப்பட்டது. உற்றார் உறவினர் இருக்கும் மனிதருக்கே நீதி கிடைக்காதிருக்க ஆதரவற்ற அந்த உயிருக்கு நீதி கிடைக்க யார் துணை நிற்க போகிறார்கள்?[/color]

[color=blue]எல்லா இரவும் போல மற்றொரு இரவு அது. தன் அறையில் துயின்றுக் கொண்டிருந்தவளை எழுப்பினாள் பொன்னி.ம்ம்ம் தூக்க கலக்கத்தில் கண்களை விரிக்க இயலாமல் அசதியோடு எழுந்தவள் “என்னாச்சு ஆயா?” எனக் கேட்க,[/color]

[color=blue]“என் கூட இங்க வா” எனச் சொல்லி அவள் இடக்கையைப் பிடித்தவளாக வாசல் பக்கம் அவளைக் கூட்டிச் செல்லலானாள். தன் வலக்கையால் கண்களைக் கசக்கியவளாக அவளும் ஒன்றும் புரியாமல் பொன்னியின் இழுத்த இழுப்பில் செல்ல,அந்த நள்ளிரவில் வாயில் பக்கம் இருந்த அந்தச் செக்யூரிட்டி கேபினில் பல்லிளித்தவாறு நின்றிருந்தனர் பொன்னப்பனும் அவனோடு கூட இரண்டு நபர்களும்.[/color]

:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:

[center]அவள் அழகிதான்[/center]

[center]இல்லையென்று யார் சொன்னது[/center]

[center]சுடும் சூரியனின் வெம்மை போல[/center]

[center]குளிர் நீரின் குளுமை போல[/center]

[center]மலரின் மென்மை போல[/center]

[center]கள்ளி முள்ளின் கூர்மை போல[/center]

[center]அவளும் அவளாக[/center]

[center]தன் இயல்பில் இருப்பதால்[/center]

[center]அவள் அழகிதான்[/center]

[center]இல்லையென்று யார் சொன்னது[/center]

நீ ஏண்டா உன் போன்ல என் போட்டோ வச்சிருக்க? எனத் தன் சண்டையை ஆரம்பித்த சத்யாவை வலிந்து அலட்சியமாகப் பார்த்தான் கதிர்.

பெரிய குடும்பத்தின் வாரிசு என்பதாலோ, இல்லை அவன் தாயின் வளர்ப்பினால் வந்த குண நலன்களாலோ, படிப்பு கொடுத்த பண்பான பேச்சாலோ ஏதோ ஒரு வகையில் இதுவரை அவன் ஊரிலோ, கல்லூரியிலோ யாரும் அவனை மரியாதைக் குறைவாகப் பேசியதே கிடையாது எனச் சொல்லலாம். அதெல்லாம் அவன் சத்யாவை சந்திக்கும் வரைக்கும் தான்.

இவளை சந்தித்த நாள் முதலாக அவளது வாயினின்று மரியாதையான பேச்சை அவன் கேட்டதே கிடையாது. இதுவே இவனிடம் வா, போ வென மரியாதைக் குறைவாக வேறு யாராவது இப்படிப் பேசியிருந்தால் விஷயமே வேறாக இருந்திருக்கும். ஆனால், இவளிடம் மட்டும் வெகுவாகக் கோபம் வந்தும் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவளைப் போல வெடுக்கென அவனுக்கும் பேசத் தெரியும் தான். ஆனால், அதை அவள் தாங்கிக் கொள்ள மாட்டாள் என்பதால் அமைதிக் காத்தான்.

தன் மனம் விரும்புபவளின் புகைப்படத்தை அலைபேசியின் திரையில் வைத்திருப்பது என்ன அவ்வளவு பெரிய குற்றமா? என எண்ணியவன் அவள் கோபத்தைக் கண்டு கொள்ளவில்லை

குட்டியாய் பொம்மை போல இருந்து கொண்டு பேசுகிற பேச்சைப்பாரு என்று அவளைக் குறித்து மனதிற்குள்ளாக எண்ணியவன் அவள் பேச்சைக் கண்டு கொள்ளாதவன் போல அவள் கையிலிருந்த தன் மொபைலை சுவாதீனமாக வாங்கினான். அதனைக் கொடுக்க மறுத்து இழுத்தவளின் கையினின்று சற்று வேகம் கொடுத்து இழுத்து பிடுங்கியவன் தன் ஜீன்ஸின் பையினுள் அதனைத் திணித்தான்.

அது உன் போட்டோவா? யாரு சொன்னா? என அவளது கேள்விக்குப் பதில் கொடுக்க,

அது என் போட்டோ தான் கோபமாய்ப் பதிலிருத்தாள் அவள்.

“அப்படியா? இந்தப் பொண்ணு சிரிச்சிட்டுல்ல இருக்கு, நீ சிரிப்பியா? நான் பார்த்ததே இல்ல” நக்கலடித்தவனை முறைத்தாள் அவள்.

இப்படியே போயி உன் முகத்தைக் கண்ணாடில பாரு உனக்கே இது உன் போட்டோ இல்லன்னு புரியும் எனக் கிண்டலாகச் சொல்லி அந்த அறையினின்று நகர்ந்து வெளியே செல்ல, அவன் பின் தொடர்ந்தவள் அவனோடு அவ்வீட்டின் பின் வாயிலுக்கு வந்திருந்தாள்.

உனக்குத் தைரியம் இருந்தா உன் மொபைலை என் கிட்ட தா. உங்க அப்பாக்கிட்ட சொல்லி இந்தப் போட்டோ காட்டி உங்க வீட்டில பஞ்சாயத்து வைக்கச் சொல்ல போறேன்.

அதுதான் நாம கட்டிக்கப் போறோம்னு எங்க அப்பாக்கிட்ட ஏற்கெனவே சொல்லிட்டேனே பின்னே உன் போட்டோ என் கிட்ட இருந்தா தப்பான்னு எங்க அப்பா கேப்பாரு.

“எனக்கு ஒன்னும் இந்தக் கருவாயன கட்டிக்க இஷ்டமில்ல என்னைக் கட்டாயமா இங்க கூட்டிட்டு வந்திருக்கிறான்னு சொல்லிடுவேன்” எனக் கோபத்தில் சொல்லி முறைத்தவளிடம்,

“போ போய்ச் சொல்லு, எனக்கு எங்க வீட்டில என்ன பதில் சொல்லணும்னு தெரியும்”

எனப் பதில் கொடுத்தவாறு நகர்ந்தவன் வீட்டின் ஓட்டு மேல் கேட்ட சப்தத்தில் கூர்ந்து மேலே கவனித்தான் அந்த ஓட்டுப் பகுதியின் சரி நேர் கீழே நின்று கொண்டிருந்த சத்யாவின் பக்கம் உடனே விரைந்தான்.

அவர்கள் வீடு இரண்டு அடுக்குகள் கொண்டது அதன் உயரமோ மிக அதிகம் இயற்கை சூழ் இடமாதலால் அடிக்கடி குரங்குகள் ஓட்டின் மேல் நடமாடுவது உண்டு. காட்டுப் பூனைகள் போலப் பெரிய உருவங்கள் கொண்ட பூனைகளும் ஆக்ரோஷமாய்ச் சண்டையிட்டுக் கொள்ளும். பல நேரம் அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்து சண்டையிடும் பூனைகள் இறந்து போவதும் வழமை.

அது போலவே அப்போதும் மேலே இரண்டு ஆண் பூனைகள் ஆக்ரோஷமாய்ச் சண்டையிட்டுக் கொணடிருக்க உரண்டு புரண்டு அந்த உயரத்தினின்று சண்டை வேகத்தில் கீழே விழுந்தன. அவை விழுந்த வேகத்தில் அவளுக்குப் பட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தில் அவள் தோள்களைப் பற்றிச் சுவரோரம் அவளைப் பின் தள்ளி அவள் மேல் தன் உடல் படாத கண்ணியமான தூரத்தில் தன்னை நிறுத்தி அணைவாக நின்று கொண்டான்.

ஒரு சில நொடிகளின் நிகழ்வாக அவை இருக்க, எதிர்பார்த்தது போலச் சண்டையிடும் வேகத்தில் ஓரமாய் வந்து இரண்டும் விழுந்தன. அந்த உயரத்தில் எந்தப் பிடிமானமும் இல்லாமல் நேரடியாகத் தொப்பென விழுந்த பூனை ஒன்று துடி துடித்துக் கொண்டிருக்க மற்றொன்று லாவகமாய் இறங்க முனைந்து கதிரின் தோளில் தொங்கி இறங்கி பிழைத்து ஓடி விட்டது.

அது விழுந்த வேகத்தில் அதன் கூரிய நகங்கள் கதிரின் சட்டையைத் தாண்டி அவன் உடம்பில் பதிந்து கீற ஸ்ஸ் என வலியில் சப்தம் எழுப்பியவன். தன் தோளை உதறிக் கொண்டு அவளை விட்டு நகர முயன்றான்.

அதே நேரம் அவன் அவளது தோளைப் பற்றிச் சுவரோரமாய்த் தள்ளுகையில் வெகுவாய் ஆத்திரம் கொண்டு வாய்க்கு வந்த மாதிரி திட்ட வாயை திறந்த சத்யாவுக்கு அவன் மேலே எட்டிப் பார்க்கவும்தான் அந்தப் பூனைகளின் சண்டை சப்தம் புரிய வந்தது. இதெல்லாம் அவள் கண்டதில்லை எனவே அப்போதும் கூட அதைப் பெரிதுபடுத்த வில்லை. ஆனால், மேலிருந்து கீழே தாறுமாறாக விழுந்து உயிருக்குத் துடித்துக் கொண்டிருக்கும் அந்த முரட்டுப் பூனையைக் கண்டு திகில் கொண்டாளானால், அடுத்தப் பூனை கதிரின் தோளை தொற்றிக் கொண்டு இறங்கவும் விதிர்விதிர்த்துப் போனாள்.

அவனது வெளிர் நிறச் சட்டையில் கோடாய் சிகப்பு நிறம் கண்டதும் இன்னமுமாய்த் திகைத்தாள். தன்னை அணைவாய் காத்துக் கொண்டு நின்று கொண்டு இருப்பவன் நிற்கின்ற இடத்தில் முன்பு அவள் அல்லவா நின்றுக் கொண்டிருந்தாள். இது அவளுக்கு ஏற்பட வேண்டிய காயமல்லவா?

முதன் முறையாகத் தன் மனதிற்குப் பிடிக்காத அவன் கொடுத்த பாதுகாப்பில் அவனை வேறு கோணத்தில் கண்டாள். அதனை யோசிக்க விடாமல் அவனது சட்டையின் சிகப்பு நிறம் அவளைத் தடுக்க, தன் தோளை வலியில் உதறிக் கொண்டு நகர்கின்ற கதிரின் வலக்கையைப் பிடித்தவள் அவனைப் போகாமல் தடுத்தாள்.

கொஞ்சம் நில்லேன்… அவளது பேச்சின் கடுமை அவளது கைப்பற்றலின் கனிவில் மறந்து போனது கதிருக்கு.

அத்தம்மா, அத்தம்மா குரல் கொடுத்துப் பார்த்தாள்.

அம்மா வெளியெ போயிருப்பாங்க, விடு சுண்ணாம்பு போட்டுக்கிட்டா சரியாகிடும் என்றவனாய் நகர விடாமல் அவன் கையை அவள் பற்றியிருக்க ,

சுண்ணாம்பு எங்கே இருக்கும்? தன்னைக் காப்பாற்றியவனுக்குப் பதிலுக்கு உதவும் வேகம் அவளில் இருந்தது.

அந்தக் காயம் பட்டிருக்கிற இடத்தை முதல்ல நல்லா கழுவணும், அப்புறமா ஹாஸ்பிடல் போய் ஊசிப் போட்டுக்கணும் அப்ப தான் நல்லது எனப் படப் படத்தவளிடம் சரியெனத் தலையசைத்து ஆமோதித்தவன், தன் அறைக்குச் சென்று சட்டையை மாற்றிக் கையில்லா பனியனோடு வந்தான்.

அதற்குள்ளாக உடலில் பதிந்து இருந்த மூன்று அழுத்தமான கீறல்களிலும் நன்றாகக் கழுவியிருந்தான். அவள் இன்னும் சுண்ணாம்பு எங்கே என்று தேடிக் கொண்டிருக்க, சமையலறையில் வந்தவன் அது இருக்கும் இடம் தெரிந்தவனாக அந்தச் சின்னச் சுண்ணாம்பு டப்பியை எடுத்துப் பின் வாயிலில் சுவற்றில் பதித்திருக்கும் கண்ணாடி முன் நின்று காயத்தைப் பார்த்துப் போட்டுக் கொண்டான். மறுபடி உள்ளே தன் அறைக்குச் சென்று இன்னொரு சட்டையை அணிந்தவன் வெளியே செல்வதாகக் கூறி சென்று விட்டான்.

அத்தனையையும் பார்த்துக் கொண்டு நின்றவள் அதற்குப் பின்னால் அவனிடம் வலிய சண்டைக்கு நிற்கவில்லை.

சற்று நேரத்தில் சந்திராம்மா வீட்டிற்கு வர, குட்டிப் பிள்ளையாய் நடந்ததை எல்லாம் அவரிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தாள் சத்யா. அவள் கண்களில் வரும் பாவனை ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டிருந்தவர் அவ்வப்போது அப்படியா? அப்புறம் என்னாச்சு? என்றவறாகக் கேள்வி கேட்க கேட்க பதில் வந்து கொண்டே இருந்தது. அவளொடு அவரும் உள்ளே வர சமையலறைத் தாண்டி பின் வாசல் வர இறந்துக் கிடந்த பூனையைப் பார்த்து மிரண்டவளாகச் சந்திராம்மா பின்னால் ஒளிந்தாள் சத்யா.

வேலைக்காரரை அழைத்துப் பூனையை அகற்ற சொன்னவர் பயந்திருந்தவளிடம் இங்கே இப்படித்தான் அடிக்கடி நடக்கும் என்று ஒவ்வொரு நிகழ்வாகச் சொல்லிக் கொண்டிருக்கச் சற்றே பயம் தெளிந்தாள்.

அன்றிரவே சென்னைக்குப் புறப்பட்டான் கதிர். பயணத்தின் போது சத்யாவின் நினைவுகளே மேலோங்க அவளை முதன் முதலில் சந்தித்த தருணங்கள் நினைவுக்கு வந்தன. காரின் பின் சீட்டிலிருந்தவன் ஓய்வாய் தலையைப் பின்னாகச் சாய்த்துக் கொண்டான்.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here