9. காதலும் வசப்படும்

0
604
Kadhalum Vasapadum

அத்தியாயம் 9

[center]வலிமைக் கொண்டவன்[/center]

[center]எளிய உயிர்களை[/center]

[center]காப்பது அறமென்று கற்றோம்[/center]

[center]வலிமை கொண்டதனைத்தும்[/center]

[center]எளியதை அழித்து உண்பதை[/center]

[center]வலியோடு கண்டோம்.[/center]

[center]இந்நிலை மாறுமா?[/center]

[center]வேதனை தீருமா? – இல்லை[/center]

[center]எளியவை அழிந்து[/center]

[center]வலியவை மட்டும் மிஞ்சும்[/center]

[center]நிலைதான் ஆகுமா?[/center]

[color=blue]அந்த நள்ளிரவில் வாயில் பக்கம் இருந்த அந்தச் செக்யூரிட்டி கேபினில் பல்லிளித்தவாறு நின்றிருந்தனர் பொன்னப்பனும் அவனோடு கூட இரண்டு நபர்களும்.[/color]

[color=blue]அவர்களைக் கண்டதும் கொஞ்ச நஞ்சம் மிச்சமிருந்த தூக்கமும் விடைப்பெற்றுக் கொள்ள, ஏற்கெனவே பொன்னப்பனைக் கண்டதும் ஏற்படும் பயமும், நடுக்கமும் அவளது கட்டுப்பாட்டை உடைத்துக் கொண்டு வெளிவர கிடுகிடுவென்று நடுங்கலானாள் அவள். பற்கள் கிட்டித்துக் கொண்டன.[/color]

[color=blue]“ஆயா, நான் தூங்கணும், நான் போறேன்”[/color]

[color=blue]எனப் பொன்னியின் கையினின்று திமிறியவளை அவளது முரட்டுக் கைகள் விடாமல் பிடித்திருந்தனவென்றால், அதற்குள்ளாக அவளது அருகில் வந்திருந்த பொன்னப்பனும் மற்ற இரண்டு நபர்களும் அந்தச் சின்னப் பெண்ணின் இன்னும் பெண்மை மலராத அங்கங்களை நாய் அசைவம் பார்த்து நாவில் நீர் வடிய நிற்பது போலவே காமம் சொட்டச் சொட்ட பார்த்து அங்கம் அங்கமாய்ப் புசித்து விடும் வெறியோடு அருகில் வந்தனர்.[/color]

[color=blue]அவர்கள் பார்வையின் வக்கிரம் பார்த்துக் கொண்டிருந்தவளின் நடுக்கம் பெருக, தன்னுடைய பலமெல்லாம் இழந்தவளாக, தனக்கு நிகழப் நடக்கப் போவது என்னவென்று புரியாவிட்டாலும், அது ஏதோ அபாயமான ஒன்று என மூளை உணர்த்த வாய் திறந்து கத்த முயலும் முன்பு தன்னுடைய கைக்குட்டையால் அவளது வாயைக் கட்டியிருந்தான் ஒருவன்.[/color]

[color=blue]“நீ போ பொன்னி நாங்க பார்த்துக்கறோம்”[/color]

[color=blue]எனப் பெருந்தன்மையாகப் பொன்னிக்கு விடைக்கொடுத்து மற்றொருவன் அவளின் இரு கைகளையும் பொன்னியிடமிருந்து வாங்கிக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.[/color]

[color=blue]எங்கடா பொண்ணைத் தூக்கிட்டு போகணும்? என்றவனிடம் பொன்னப்பன் அங்கு இருந்த மறைவான பகுதியை காண்பித்து, எப்பவும் போகிற இடம் தானே, இது ஒரு கேள்வியா? எனவும்,[/color]

[color=blue]குரல் எழுப்ப முடியாமலிருந்தாலும் தன் கைகளைப் பற்றிக் கொண்டிருந்தவனிடமிருந்து தப்பிக்க முயன்றவள் புலியிடம் சிக்கிக் கொண்ட புள்ளி மான் போலப் பரிதவித்து அவன் கைகளினின்று விடுபட முழுபலம் கொடுத்து முயன்றாள். அவளது முயற்சிகள் பயனில்லாது போகக் கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தவனோ இப்போது அவளை வசதியாகத் தூக்கி தன் தோள்களில் போட்டுக் கொண்டான்.[/color]

[color=blue]அந்த மறைவிடத்திற்கு மூவரும் அவளோடு பயணிக்கும் வேளை, பொன்னி தான் எண்ணிய செயலை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகப் பெருமிதத்தோடு அங்கிருந்து வாயில் நோக்கி செல்லும் வேளையில் வாசலில் பெரும் சத்தத்தோடு வண்டி ஒன்று நின்றது.[/color]

[color=blue]வண்டியிலிருந்து 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறங்கி வர அவரது பின்னாக இன்னும் சிலர் வந்திருந்தனர்.[/color]

[color=blue]வந்தவர்கள் அங்கிருந்த அந்தச் சூழ்நிலையில் உடனடி சாட்சியம் சேகரிக்க, புகைப்படங்கள் பல எடுக்கப் பட்டன. மிரள மிரள விழித்துக் கொண்டு, கண்ணீர் வடியும் முகத்துடன், ஏங்கி ஏங்கிக் கொண்டு நின்றிருந்த அந்தக் குழந்தையின் வாயில் இருந்த துணி இன்னும் அகற்றப் படாமல் இருந்தது. அந்த நபர் “எல்லா ப்ரூஃப் ம் எடுத்துட்டீங்கள்ல? அந்தக் குட்டிப் பொண்ண நான் கூட்டிக் கொண்டு போய்ப் பேசட்டுமா? எனவும்,[/color]

[color=blue]சாட்சியங்கள் சேகரித்தவர்கள் சற்று நேரத்தில் சரி எனச் சொல்ல, பொன்னப்பனோடு கூடச் சேர்ந்திருந்த மற்ற இரண்டு ஆண்களையும் அவர்கள் வரவழைத்திருந்த போலீஸ் வசம் ஒப்படைக்க, பொன்னி பெண் ஆனதால் சட்டப்படி இரவில் காவல் நிலையம் கொண்டு செல்ல இயலாதென்று அங்கேயே காலை வரை ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட எதிர்பாராத நிகழ்வுகளால் அந்த நள்ளிரவில் விழித்திருந்தது அந்த அனாதை இல்லம்.[/color]

[color=blue]மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்த மற்ற பிள்ளைகளைக் கண்டித்து அவரவர் இருப்பிடத்திற்கு விரட்டினார்கள்.[/color]

[color=blue]“குட்டிம்மா நான் ஹரீஷ், ஹரீஷ் சவுஹான், இந்த அங்கிளோட கொஞ்சம் பேசுவியாம்மா?”[/color]

[color=blue]தன் முன்னே வளர்த்தியாய், பிற மாநிலத்தவருக்கே உரித்த வெளிர் சருமம் கொண்டு, முகம் முழுக்கக் கனிவோடு தன்னைப் பார்ப்பவரை தன் தலையை உயர்த்தி, கண்ணீர் கோடிட்ட கசங்கிய முகம் மலர்ந்து நோக்கினாள்.[/color]

:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:
:small_red_triangle_down:
:small_red_triangle:

[center]குழந்தையல்ல[/center]

[center]குமரிதான் அவள்[/center]

[center]கண்ணைக் கவரும்[/center]

[center]மலரை போன்றவள்[/center]

[center]பேச்சும் பழகும்[/center]

[center]குணமும் சிறக்கும்[/center]

[center]மயக்கும் மனம் கொண்ட[/center]

[center]அழகிதான் அவள்[/center]

கதிருக்கு சத்யாவை முதன் முறை சந்தித்த நாள் என்றுமே மறக்காது என்றே தோன்றியது. அத்தனையாய் தன்னுடைய முதல் சந்திப்பிலேயே அவனது மனம் கவர்ந்திருந்தாள் அவள். அவள் பேசும் பாவனையில், அந்த முகத்தின் அப்பாவித்தனத்தில், தன்னுடைய எளிமையான இயல்புக்கு மீறி தன்னை ஒரு போராளியாக, வலிமையுள்ளவளாகக் காட்டிக் கொள்ள முயலும் அவளது யத்தனத்தில் என்று அவனை ஒட்டு மொத்தமாய்ச் சுருட்டிப் போட்டிருந்தாள் அவள்.

அவன் வளர்ந்த கிராமிய சூழலில் அவனது இளம் பிராயத்திலேயே சற்று பெரியாள் தோரணை அவனுக்கு இயல்பாகவே வந்து விட்டிருந்தது. வாழ்க்கையை யதார்த்தமாக நோக்குகின்றவர்கள் என்ற முறையில் அவன் கண்ட ஊர், உறவு பெண்கள் எல்லோருமே அப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவர்களே. இத்தனை அப்பாவித்தனத்தையும், நான் பெரிய வீரியாக்கும் சூரியாக்கும் என்று தன்னைத் தானே வலிமை மிக்கவளாகக் காட்டிக் கொள்ளும் சத்யாவின் மனோபாவம் அவனை மிகவும் கவர்ந்து விட்டிருந்தது,

அவன் பிசினஸ் மேனேஜ்மெண்ட் படிப்பதற்காகச் சென்னையிலுள்ள கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கியிருக்க அன்று ஏதோ ஒரு காரணத்தால் லீவு கிடைத்ததென்று தூரத்து உறவினரானாலும் மனதளவில் வெகு நெருக்கமான அந்தக் குடும்பத்தைச் சந்திக்கச் சென்றிருந்தான்.

அவனது அக்கா தேன்மொழி அவசர அவசரமாக ஏதோ செய்து கொண்டிருக்க அந்நேரம் அந்த அபார்ட்மெண்டை அடைந்திருந்தான் அவன்.

வாடா கதிர், ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க, டேபிள்ல சாப்பாடு போட்டு வச்சிருக்கேன். போட்டு சாப்பிடு நான் இப்போ வரேன் என்றவள் கையில் இருந்த சாவியைப் பார்த்தவன் தான் ஏதோ தவறான நேரத்தில் அங்கு வந்து விட்டோம் போல என எண்ணியவனாய்,

என்னாச்சுக்கா எதுவும் அவசரமா வெளியில போகணுமா? நான் ஏற்கெனவே சாப்பிட்டுட்டேன்கா நீங்க வர்ற வரைக்கும் கீழே கார்டன்ல வெயிட் பண்றேனே, எதுக்கு டென்ஷன்? என இயல்பாகக் கேட்க,

அட நான் வர்ற வரைக்கும் வீட்ல இருக்க மாட்டியா நீ, இரு இப்ப வந்துடறேன் என்றவளின் முகம் வெகுவாய் வியர்த்திருக்க,

என்னக்கா? எதுவும் அவசரமா?

ஆமாடா, பள்ளிக் கூடம் போன பாப்பாக்கு மதியம் டிஃபன் கொடுக்க மறந்துட்டேன். அதான் போயிட்டு இருக்கிறேன் என்றாள்.

அதுக்கு எதுக்கு அலைஞ்சுகிட்டு? நான் போய்க் கொடுத்து வரேனே எனக் குழந்தையின் பெயர் எழுதி வகுப்பு, பிரிவு விபரம் எல்லாம் எழுதி வாங்கித் தன் பைக்கில் அந்தப் பள்ளியை அடைந்தான்.

ஒரு பக்கம் விளையாட்டு, உடற்பயிற்சி என்று நிகழ்ந்து கொண்டிருக்கத் தான் கொண்டு வந்ததை உரிய இடத்தில் சேர்ப்பித்த பின் எப்போதுமே மனதைக் கவரும் பள்ளியின் சூழலை ரசித்தவாறு நகர்ந்தவனின் காதுகளில் அந்தக் கிள்ளைத்தனமான குரல் கேட்டது. குழந்தைகளோடு பேசும் குழந்தை எனும் ஆர்வத்தில், ஏதோ டீச்சராத்தான் இருக்கணும் என்னும் எண்ணத்தில் மெதுவாய் அந்தக் குரல் தன்னை இழுத்த வேகத்தில் நெருங்கினான்.

குட்டி குட்டியாய் சிறுவர் பட்டாளம் இருக்கக் குழந்தைத்தனம் மாறாத 17 வயது யுவதி அவர்களோடு பேசிக் கொண்டிருந்தாள். அவர்களைக் கவனித்தவாறே அந்தப் பள்ளியின் ஓரிரு பொறுப்பாளர்களும் அங்கிருந்தனர்.

குட்டிகளா, உங்களுக்குக் குட் டச், பேட் டச்னா என்னன்னு தெரியுமா? எனக் கேட்க,

பல வாண்டுகள் தெரியாதெனத் தலையாட்ட, ஒரு சில ஆர்வமாய்த் தங்கள் கையை உயர்த்திக் கொண்டு,

“அக்கா எனக்குத் தெரியும் எங்க டாடி சொல்லிக் கொடுத்திருக்காங்க” என எம்பியது ஒரு வாண்டு,

எனக்கும் தெரியும் எனப் போட்டியாக மற்றவனும் கூற, இரண்டாமாவனிடம், சரி நீ சொல்லுப்பா?” எனவும்

குட்(good) னா நல்லது டச்(touch) நா தொடுறது, அப்படின்னா நல்லா தொடுறது முத்தம் கொடுக்குறது, பேட் னா கெட்டது அப்படின்னா அடிக்கிறது: எனப் பதில் சொல்லிய நிமிர்வில் நிற்க,

ஏ இல்ல இல்ல, இவன் தப்பா சொல்லுறான் என முதலாமவன் குரல் கொடுக்கச் சற்று நேரம் அமளி துமளிப் பட,

சரி சரி முதல்ல எல்லோரும் அமைதியா இருங்க, என்றவள் பதில் கூறியவனுக்கு முதலில் அனைவரையும் கைத்தட்டச் சொல்லி உற்சாகப் படுத்தியவள்.

நீ நல்லா சொன்ன தம்பி, ஆனா இதுக்குப் பதில் வேற இது இல்ல சரியா?, அத நான் இன்னிக்கு சொல்லித் தாரேன் என அவனிடம் முடித்து விட்டு,

முதலாமவனிடம் சரி இப்ப நீ சொல்லு எனவும்,

நம்மளை யாரும் தப்பான இடத்தில டச் பண்ணா அது பேட் டச், இல்லான்னா குட் டச்.

சரி தம்பி உன் பேர் என்ன?

ரவி

எல்லோரும் நம்ம ரவிக்கு ஜோரா கைத்தட்டுங்க… கரவொலி எழுந்து அடங்க,

இப்ப ரவிக்கு இதைச் சொல்லிக் கொடுத்த ரவியோட டாடிக்கு ஜோரா கைத்தட்டுங்க… மறுபடி கரவொலி எழ பெருமிதமாய் நின்றிருந்தான் ரவி.

சரி நாம இப்போ இந்தக் குட் டச், பேட் டச்னா என்னன்னு பார்ப்போம்.

முதல்ல எனக்குப் பதில் சொல்லுங்க, விளையாடும் போது இல்லன்னா சும்மா நடந்து போயிட்டிருக்கும் போது கீழே விழுந்து உங்க உடம்புல அடிப்பட்டா என்ன செய்வீங்க?

அனைவரும் கோரஸாக அழுவோம் என்று கூறவும், ஒன்றிரண்டு அழுவது போலப் பாவனைச் செய்யவும் அவ்விடம் சற்று நேரம் கலகலத்தது.

யாராவது ஒருத்தர் உங்களை அடிக்க வந்தா என்ன செய்வீங்க?

கத்துவோம் என்றனர் கோரஸாக

சரி நீங்க எதுக்காக அழணும்? இல்ல எதுக்காகக் கத்தணும்?

அப்பத்தான் அம்மா வந்து எனக்காகச் சண்டை போடுவாங்க என்றது ஒரு வாண்டு, மற்றவர்கள் கொல்லெனச் சிரித்தனர்.

அப்படின்னா உங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா யார் கிட்ட சொல்லுவீங்க?

பாதிக் குரல் அம்மா எங்க மீதி அப்பா என்க கூட்டாக ஒலித்தது அவர்கள் குரல்.

எல்லோரும் சரியா சொன்னீங்க, எங்க எல்லோருக்காகவும் ஒரு தடவை கையைத் தட்டுவோமா? எனவும் கரகோஷம் ஒலித்தது.

சரி இப்ப நாம நம்ம இன்னிக்கு பாடத்துக்கு வருவோம்.

நம்மளோட உடம்புல 3 முக்கியமான பகுதிகள் இருக்குது அதை அனாவசியமா மற்றவங்க யாருமே தொடக் கூடாது? அது எதுன்னு தெரியுமா?

எனக் கேட்க, கண்ணு என்றது ஒரு குழந்தை, மற்றது கையைக் காண்பிக்கப் பாடம் தொடர்ந்தது.

முதல் பகுதி நெஞ்சுப் பகுதி, எங்கே எல்லோரும் சொல்லுங்க? எனவும் நெஞ்சு என்றனர் கோரஸாக,

இரண்டாவது நம்முடைய கால்களுக்கு இடையேயான பகுதி, எங்கே எல்லோரும் சொல்லுங்க என்றதும் எல்லோரும் சொல்ல, ஒரு வாண்டு “ப்ரைவேட் பார்ட்” எனச் சொல்லி கிளுக்கிச் சிரித்தது. கூடவே அனைத்துக் குழந்தைகளும் வெட்கமாய்ச் சிரிக்க, அவளோடு கூட இருந்த ஆசிரியர்களும் புன்னகைக்க,

அடுத்தது நம் உடலின் பின்பகுதி அதாவது புட்டம் எங்க சொல்லுங்க எனவும் மறுபடி கோரஸாகச் சொல்ல, எங்க அந்த மூணு பகுதி பெயர்களையும் சொல்லுங்க எனவும்

நெஞ்சு

கால்களுக்கு இடையேயான பகுதி

புட்டம்

எனச் சொல்லி முடிக்க ஆணும் பெண்ணுமாய் 5 முதல் 8 வயதிலான குட்டிக் குழந்தைகள் கூட்டம் வெட்கத்தில் கூச்சத்தில் இருக்க,

இதெல்லாம் நம்மளோட உடலின் பகுதிகள் இதைச் சொல்லுறதுக்கு நாம ஏன் கூச்சப் படணும்? நான் சொல்லுறது சரியா ? எனக் கேட்க தலையசைத்து ஆமோதித்தன குழந்தைகள்.

சரி இப்ப இந்த 3 உடல் பகுதிகளையும் யாராவது அனாவசியமா தொட்டா அத என்ன சொல்லுவாங்க தெரியுமா பேட் டச் (bad touch) என்ன சொல்லுவாங்க?

பேட் டச் உரக்கச் சொல்லின குழந்தைகள்.

மற்ற இடங்களில தொட்டா அது என்ன சொல்லுவாங்க? குட் டச் எனக் குரல் கொடுத்தனர்.

ஒவ்வொருத்தராக அழைத்து ஒரு கேள்வி பதில் பகுதி போலக் கேட்கலானாள்.

கையைத் தொட்டா?

குட் டச்

இடுப்பை தொட்டா?

பேட் டச்

உங்க பேண்ட் பாக்கெட் டை தொட்டா?

பேட் டச்

சரி இப்ப ஒரு கேள்வி உங்க எல்லோருக்கும். இங்க முதலாவது ரெண்டாவது படிக்கிற பிள்ளைங்கல்லாம் இருக்கிறீங்கல்ல உங்களைக் காலையில யாரு குளிப்பாட்டி விடுவா?

அம்மா எனக் குரல் வர,

அம்மா உங்களைக் குளிக்க வைக்கிறதுக்குச் சோப்பு போடறாங்கன்னு அப்போ அவங்க கை எங்கல்லாம் படும்?

ஃபுல் பாடி முழுக்க ஒரு சிறுமி பதில் சொல்ல,

அப்ப அது குட் டச் ஆ? இல்ல பேட் டச் ஆ?

எல்லோரும் குழம்பி நிற்க, மற்றொரு சிறுவன்

“அம்மா எப்பவும் நமக்கு நல்லதுக்குத் தான் செய்வாங்க, அப்ப அது குட் டச் தான்” எனச் சொல்ல,

ஹே சரியான பதில், எல்லோரும் அவனுக்குக் கை தட்டுங்க என உற்சாகப் படுத்த

அப்படின்னா இதிலருந்து என்ன தெரியுது? அம்மா, அப்பா உங்களுக்காக ஏதாவது செய்யும் போது உங்களை டச் பண்ணினா அது பேட் டச் இல்லை. ஆனா, வேற யாராவது உங்களைத் தேவையில்லாம தொட்டா பண்ணினா அது பேட் டச்… புரியுதா?

எனவும் உற்சாகமாய்த் தலையாட்டின குழந்தைகள். என்ன புரிஞ்சது? எனக் கேட்டு,

அம்மா, அப்பா தவிர வேற யாராவது நெஞ்சு, கால்களுக்கு இடையேயான பகுதி, புட்டம் இந்த உடல் பகுதிகளில் கை வச்சா அது பேட் டச் எனத் தான் சொல்ல சொல்ல அவர்களைத் திரும்பச் சொல்ல சொல்லி பயிற்சி கொடுத்தாள்.

இப்போ நாம குட் டச் பேட் டச் என்னன்னு பார்த்தாச்சு.எல்லோருக்கும் புரிஞ்சிடுச்சா?

அனைத்து குழந்தைகளும் தலையாட்ட, அப்படின்னா அடுத்து என்ன கத்துக்கப் போறோம்னா? யாராவது நம்ம கிட்ட பேட் டச் பண்ணினா என்ன செய்யணும்னு?

நீங்க என்ன செய்வீங்க? எனக் கேட்க அவ்வளவாகப் பதில் வராமலிருக்க,

சரி முன்னாடி நீங்க என் கிட்ட என்ன சொல்லி இருந்தீங்க கீழ விழுந்து அடிப்பட்டுட்டா என்ன செய்வீங்க?

கத்துவோம்………மறுபடி கோரஸ்

அதே மாதிரி உங்க கிட்ட யாராவது தப்பா நடந்தாலோ, தொட்டாலோ என்ன செய்யணும்?

இப்போது என்ன செய்ய வேண்டுமெனப் புரிந்தவர்களாக மறுபடி இணைந்து குரலெழுப்பினர். கத்தணும்

சரியா சொன்னீங்க எல்லோரும் ஒரு முறை ஜோரா கைத்தட்டுவோமா? எனவும் உற்சாகமாய் எழுந்தது கரகோஷம்.

ஆனா மிஸ் எங்களை யாராவது பெரியவங்க இப்படிச் செஞ்சா எங்களுக்குக் கத்துறதுக்குப் பயமா இருக்கும்ல ஒரு குட்டிப் பையன் சொல்ல,

ஓ அப்படியா?

எதுக்காகப் பெரியவங்களுக்குப் பயப்படுவீங்க?

அவங்க எங்களை விடப் பெருசா இருப்பாங்க. எங்களை அடிச்சிட்டா இல்லை ஏதாவது செஞ்சிட்டா?

சரி இப்போ உங்களுக்கு ஒரு கேள்வி?

நாய் இருக்குல்ல நாய் அது ஒரு சாதாரண மிருகம், சிங்கம் புலி மாதிரி ரொம்பப் பயங்கரமான மிருகம் எல்லாம் கிடையாது அது குரைக்கிறது பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்கும்?

ரொம்பப் பயமா இருக்கும், நான்லாம் ஓடியே வந்திருவேன்பா அவளோடு ஒன்றித்த குழந்தைகள் இப்போது சகஜமாகப் பேசிக் கொண்டிருக்க இயல்பான அந்தப் பதிலைச் சொன்ன மாணவனைப் பார்த்து மற்றவர்கள் சிரித்தனர்.

அந்த நாய் எதுக்குக் குரைக்குது தெரியுமா?

அது எதுக்குக் குரைக்குதுன்னா அதுக்கு ஒரு வேளை ரொம்பக் கோபமா இருக்கும்”

ஒரு சிறுமி யோசித்துப் பதிலைச் சொல்ல…

இன்னும் பல பதில்கள் வர,

நாய் எதுக்குக் குரைக்கும்னு நான் சொல்றேன் சரியா? அது எப்பவெல்லாம் யாருக்காவது பயப்படுதோ அப்போதெல்லாம் குரைக்கும்? ஆனா நாம அதுக்குக் கோபம்னு நினைச்சி பயப்படுறோம். இப்ப சொல்லுங்க நாய் எதுக்காகக் குரைக்குது?

அது பயத்தில குரைக்குது… சத்தமாய்ப் பதில்கள் வர…
அப்படின்னா அந்தக் குரைக்கிற நாயை பார்த்து மத்தவங்க என்ன செய்வாங்க?

இந்தச் சுரேஷ் மாதிரி பயந்து ஓடிருவாங்க சொல்லி சிரித்தது கூட்டம்.

சிரிப்பு அடங்கியதும், அத மாதிரி தான் எப்பவுமே நமக்குப் பயமா இருந்தா பயத்தை வெளியே காட்டிக்கக் கூடாது… புரியுதா? எதிர்த்துச் சத்தம் போடணும்.இதுதான் நாம இன்னிக்கு கத்துக்கிட்ட பாடம். இந்த உலகத்தில நாம ஒவ்வொன்னு கிட்ட இருந்தும் ஒவ்வொரு விஷயம் கத்துக்கலாம்.

யாராவது தப்பு செஞ்சா அதை எதிர்த்து நாம குரல் கொடுத்தாலே போதும். அவங்க பயந்துடுவாங்க. என்ன நான் சொல்றது சரிதானே?

இதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து வியந்தே போனான் கதிர்.

தன்னை ஒருவன் வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை அறியாதவளாய் அவள் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

சரி இன்னொரு எக்ஸாம்பிள் சொல்றேன்.

இங்க யாரெல்லாம் டோரா பார்ப்பீங்க?

பெரும்பாலான கரங்கள் எழ

அந்தக் கார்ட்டூன்ல எப்பல்லாம் அந்த நரி வருமோ அப்ப என்ன செய்வாங்க?

அத விரட்டுவாங்க…

அதை அடிப்பாங்களா

இல்லை வெறும் சத்தம் போடுவாங்க…

அதுக்கப்புறம் என்ன ஆகும்?

அந்த நரி ஓடியே போயிடும்.

இதிலிருந்து உங்களுக்கு என்ன புரியுது?

ஏதாவது தப்பா நடந்தா நாம சத்தம் போடணும், எதிர்ல இருக்கிறவங்க பயந்துடுவாங்க

பிரமாதம், வெரி குட் பதில் சொன்ன குழந்தையைப் பாராட்டியவள்,

சரியா சொன்னீங்க, அதே மாதிரி உங்களை யார் பேட் டச் பண்ணினாலும் நீங்க உரக்க சத்தம் போடணும், உடனே போய் அம்மா இல்ல அப்பா கிட்ட சொல்லிடணும் சரியா?

சரி…… உரக்க கத்தினர்

யாராவது ஆளில்லாத இடத்துக்குக் கூப்பிட்டா போகக் கூடாது?

உங்களை யாராவது எதுக்காவது மிரட்டுனா உடனே அம்மா, அப்பா கிட்ட போய்ச் சொல்லிடணும்.

நான் சொல்றதை எல்லோரும் செய்வீங்கள்ல?

தலையாட்டின அந்தக் குழந்தைகள்.

சரி நான் உங்களுக்கு ஒரு சில சுலபமான கராத்தே ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுக்கப் போறேன், ஆனா இதை நீங்க உங்க வீட்டில அம்மா, அப்பா, முக்கியமா தம்பி தங்கச்சி கிட்ட சண்டை போடுறதுக்கு எல்லாம் ப்ரயோகிக்கக் கூடாது. இது உங்களுக்குப் பாதுகாப்புக்காக மட்டுமே பயன் படுத்தனும் சரியா………

சரி மிஸ் உற்சாகக் குரல்கள் தொடர,

அவ்வளவு நேரம் கிள்ளைக் குரலில் பேசிக் கொண்டிருந்தவள் இவள்தானா எனும் விதமாக அவர்களுக்குச் சின்னச் சின்னதாய் கராத்தே பயிற்சிகளை வெகுவாகத் தேர்ந்தவளாகக் கற்றுக் கொடுக்கலானாள் சத்யா.

பார்த்துக் கொண்டிருந்தவன் பார்த்துக் கொண்டே நின்றான்

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here