4. துரத்தும் நிழல்கள்

0
478
துரத்தும் நிழல்கள்

அத்தியாயம் 4

ஓர் நவீன வெடிபொதி கீழ்வருபவற்றைக் கொண்டிருக்கும்

1. எறியமாக, தோட்டா;
2.பொதியுறை, அனைத்து பொருட்களையும் ஒன்றாகப் பிணைத்து வைத்திருப்பது;
3.உந்துபொருள், உதாரணமாக வெடிமருந்துஅல்லது புகையற்ற மருந்து;
4. விளிம்பு, இதைபிடித்துத் தான் சுட்ட பொதியுறை, அறையில் இருந்து நீக்கப்படும்;
5. எரியூட்டி , உந்துபொருளை தீமூட்டும்.[/color]

[color=blue]தோட்டா என்பது Gun அதாவது சுடுகலனின் குழலில் இருந்து வெளியேறும் எறியமே ஆகும். ஆங்கிலத்தில், புல்லட் என்ற சொல், பிரெஞ்சு வார்த்தையான boulette-ல் (பொருள்: “சிறு பந்து”) இருந்து வந்தது. தோட்டாக்கள் வெவ்வேறு வகையான மூலபொருட்களால் செய்யப்படுபவை. தோட்டாக்கள், அதன் தேவைக்கேற்ப பல பாணியிலும், வடிவிலும் தயாரிக்கப்படுகிறது. தோட்டாக்கள் இயல்பாக எந்த வெடிபொருளையும் கொண்டிருக்காது, மோதலாலோ அல்லது துளைத்தோ தான் இலக்கை சேதமடையச் செய்யும்.[/color]

[color=blue]தோட்டாவின் உந்துதல் பல வழிகளில் நிகழலாம்:[/color]

வெடிமருந்தை மட்டுமே பிரயோகிப்பது (தீக்கல்லியக்க ஆயுதங்களைப் போல்)

தட்டும் மூடி மற்றும் வெடிமருந்தை பிரயோகிப்பது.

வெடிபொதியை (தோட்டா,பொதியுறை, வெடிமருந்து, மற்றும் எரியூட்டி ஆகியவற்றின் ஒன்றிணைப்பு) பிரயோகிப்பது

வார்க்கப்பட்ட குண்டு (இடது), அடியில் தட்டுப் பொருத்தப்பட்டது (நடு) மற்றும் உய்வூட்டப்பட்டது (வலது)

ரிஷாவோடு மற்றவர்களையும் மும்பையில் உதிர்த்து விட்டிருந்தது இரயில். அந்த ப்ளாட்பாரத்தில் ஆட்கள் குறைந்து சுற்றும் முற்றும் யாரும் இல்லாத நிலை வந்து விட்டிருந்தது. சாயுங்காலம் 5 மணி அளவில் அங்கு வந்து சேர்ந்து, இன்னும் அரை மணி நேரம் ஆகியும் ரயில்வே ப்ளாட்பாரத்திலேயே, இருந்த இடத்திலேயே அசையாமல் உறைந்தவளாக அமர்ந்திருந்தாள் ரிஷா.

தான் வெகுவாக ஆசைப்பட்ட சுதந்திரம் தற்போது திகட்ட, திகட்ட அவளுக்குக் கிடைத்திருக்கிறது. அக்கம், பக்கம் தன்னைக் கட்டுப் படுத்துவார் யாருமில்லை. இதைச் செய்யாதே , அதைச் செய்யாதே என நெருப்பைத் தேடி ஓடும் குழந்தையை அதட்டுவது போல அதட்டுவதற்கு அவளோடு ஆட்களே இல்லை. அப்படி இருந்து, கூட, இந்தச் சுதந்திரம் இனிமையாக இல்லாமல் இவ்வளவு கொடுமையாக இருப்பதைத் தான் எப்படிச் சொல்வது? ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.

எதற்கு வந்திருக்கிறோம்? என்றே புரியாமல், வரவேற்க ஆளுமில்லாமல், அநாதரவாய் எப்படியோ கனவுகளின் நகரமாம் மும்பைக்கு வந்து விட்டாள்.

மும்பையை ஒரு வார்த்தையில் விளங்கச் செய்ய வேண்டுமானால் “பரபரப்பு” என்று எழுதி அதனடியில் கோடிட்டு ஒற்றை வார்த்தைச் சொல்லி முடித்து விடலாம். உலகமே உற்று நோக்கும் பாலிவுட்-ம் நட்சத்திரங்களும், கிரிக்கெட்டர்களும் இருந்தாலும் நடுத்தர மக்கள்களின் கூடுதான் இந்நகரம்.

பெஸ்ட் பஸ், லோக்கல் ட்ரெயின் இவ்விரண்டும் மும்பையின் இரண்டு கண்கள். லட்சக்கணக்கான பயணிகள் தினமும் மும்பையின் இந்த ஓரமும், அந்த ஓரமும் பயணித்து, உழைத்துத் தங்கள் வருவாயோடு, இந்திய தேசத்தின் வருவாயையும் ஈட்டி, களைத்து வீட்டிற்கு வந்து தூங்கி, மறு நாள் அதே பரபரப்பில் எழுந்து புறப்பட்டு, நிமிஷ நேர வித்தியாசங்களில் லோக்கல் ட்ரெயின்களை மனப்பாடமாய் வைத்து, தொற்றிக் கொண்டு, பயணித்து இதுவே அவர்களின் அன்றாட வாழ்க்கை எனில்,

வருடம் ஒரு முறையாகிலும் வரும் மழைப் பேரிடர்களிலும் அரசாங்கத்தின் உதவியை எதிர்பாராமல், பலவித இன, மத மக்களும் தோழமையோடு ஒருவருக்கொருவர் உதவி செய்து, பஸ்ஸிம் இரயிலும் துண்டிக்கப்பட்டாலும் அசராமல் பல மணி நேரங்கள் நடந்தே வீடு வந்து சேர்ந்து அடுத்த நாள் சலிக்காமல் மறுபடி அலுவலுக்குப் பயணிக்கும் நெஞ்சுரம் கொண்டது மும்பை மாநகரம்.
கடல்வழி வரும் தீவிரவாதியோ, பல இடங்களில் அல்லது இரயில் பெட்டிகளில் குண்டுவெடிப்போ, எதுவும் எங்களை 24 மணி நேரத்திற்கு மேல் கட்டுப் படுத்தி வைக்க முடியாது என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு விறுவிறுவென அடுத்த வேலையைக் கவனிக்கும் எம் பணி அயராது பணிப்புரிவதே எனக் கூறும் மாநகரம்.

இந்த பரபரவெனக் கடக்கும் மாநகரத்தில் நாட்கள் நொடி வேகத்தில் நகர எவன் ஒருவன் எப்போது 20 வயதிலிருந்து லிருந்து 40ற்கு வந்தான், 40 வயதிலிருந்து 60 ற்கும், 60 வயதிலிருந்து எப்போது டிக்கெட் வாங்குகிறான் என்றே கணிக்க முடியாது. மும்பை வாழ்க்கையின் வேகம் அப்படி.

இத்தனை பரபரப்பிலும் பேஸ்புக்கில் சமூக விழிப்புணர்வு போஸ்ட் போட்டு பிடித்தவரை கொண்டாடுவதும், பிடிக்காதவரை நையாண்டி பேசி நகருவதும், வார இறுதியில் ஏதாவது ஒரு மலையுச்சியில் ட்ரெக்கிங்கோ, இல்லை கடற்கரையில் காற்று வாங்குவதோ, மாலில் படமோ பார்த்துத் தவறாமல் சிக்கனை ஒரு வெட்டு வெட்டி, வார இறுதி நாளையும் ஜாலியாகவும் கழிப்பதுவும், திருவிழாக்களை ஒன்றையும் விடாமல் ஆரவாரமாகக் கொண்டாடுவதுவும், வாரத்தில் மூன்று நாட்கள் அசைவம் சாப்பிடாமல் இறைவனையும் விட்டு விடாமல் பூஜிப்பதுவும் இன்னும் மும்பை மற்றும் மும்பைக்கர் குறித்து என்னென்ன சொல்வதாம்?

அந்த இரயில் நிலையத்தில் சுற்றும் முற்றும் தூரத்தில் பலர் போவதும் வருவதுமாக, ரிஷாவை கவனிக்கவும் நேரமில்லாமல் அவரவர் வேலையில் மூழ்கியவர்களாய் இயந்திரத்தனமாய் நகர, ரிஷாவிற்குதான் அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை.

அவள் மனக்கண்ணில் சில மணி நேரம் முன்பு ஷாரதா இரெயிலிலிருந்து பாய்ந்தது ஒன்றே சுழன்று கொண்டிருந்தது.

இன்றைக்கு உன்னை விட்டு நான் பிரிய நேர்ந்தாலும்… ஷாரதாவின் வார்த்தை காதுக்குள்ளாக ரீங்கரித்தது.

அவர் சொன்னதன் அர்த்தம் இதுவா? எத்தகைய ஒரு ஆபத்து அது?. அவரைச் சுற்றி நின்றவர்களின் உடல்வாகை எண்ணியதும் பயத்தில் சிலிர்த்தாள் அவள். அத்தனை பேரையும் எதிர்த்து நின்ற ஷாரதா கண்ணுக்குள் வந்தார்.

அவர்கள் அவரிடம் என்ன கேட்டிருப்பார்கள்? என்று தெரியவில்லை. ஆனால், அவர்களின் பிடிக்குள் ஆட்படாமல் அவர் நகர்ந்த லாவகம்.

தனக்குப் புர்கா அணிவித்துப் பாதுகாத்து வைத்து விட்டு அவர் அவர்களுடன் வாக்குவாதம் செய்தது கண்டும் அவளுக்குப் புரியாமலிருக்க அவள் குழந்தையா? நிச்சயம் அது அவளை ரிஷாவை தேடி வந்த நபர்கள். ஷாரதா சண்டையிட்டது தனக்காக அல்ல ரிஷாவிற்காக, அவளைப் பாதுகாக்க நிகழ்ந்த போராட்டம் அது.

வெளி உலகம் பார்க்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாளே… எல்லாம் இதற்காகத்தானா? கழிவிரக்கத்தில் கண்கள் கசியவா? என அவளிடம் அனுமதி கேட்டுக் கொண்டிருந்தது.

தான் இத்தனை காலம் வெறுப்போடு அணுகிய ஷாரதாவின் செயல்கள்தான் தன்னை இத்தனை நாட்கள் பாதுகாத்துக் கொண்டிருந்திருக்கிறது என்று எண்ணியதும் மனதிற்குள் குற்றவுணர்ச்சி எழுந்தது. தான் அவரை மனதிற்குள்ளாகக் கரித்துக் கொட்டியதனைத்தும் அவளைக் கொடுக்காய் கொட்டிக் கொண்டிருந்தது.

மறுபடி அவரைப் பார்க்க மனம் ஏங்கியது.

மறுபடி அவரைப் பார்ப்பேனா? விடைத் தெரியாத கேள்விகளுள் அதுவும் ஒன்றாகி விட்டது.

தனக்கு மட்டும் ஏன் இப்படி?

அம்மா அப்பாவிற்கு உடல் நலக் குறைவு என்ற தகவல் ஒரு பக்கம். கடந்த சில நாட்களாக அவரைத் தொடர்பு கொள்ள இயலாத நிலை வேறு. முன்பே எத்தனையோ பதில் தெரியாத கேள்விகளால் மனம் அலை பாய்ந்து கொண்டிருக்க, இப்போதோ முன் பின் தெரியாத இந்த நகரத்தில் வந்து சேர்ந்து விட்டாள்.

அவளிடம் இருக்கும் பணத்தில் தற்போது ரெயிலில் என்ன ஃப்ளைட்டிலேயே சென்னைக்குப் பயணமாக முடியும். ஆனால், அவளை ஷாரதாவின் பேச்சு கட்டிப் போட்டிருந்தது. நிகழ்ந்தவற்றிலிருந்து அவள் ஒன்று மட்டும் புரிந்துக் கொண்டிருந்தாள். ஷாரதாவின் சொல், செயல் அனைத்தும் அவள் பாதுகாப்பிற்காக மட்டுமே தான் இருக்கும் என்பது. அதனால் அவரின் பேச்சை தட்டாமல் அவர் சொன்ன அதே இடத்திற்குப் பயணமாக முடிவெடுத்து விட்டாள்.

இத்தனையும் அவள் யோசித்து முடிக்க ஒரு மணி நேரம் கடந்து விட்டிருந்தது. அருகிலிருந்த ஸ்டாலில் இருந்து டீயும் பிஸ்கட்டும் வாங்கி உண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

அந்த ஷாரதா மற்றும் தடியர்களின் சண்டை முடிந்து சில நேரம் கழித்தே வந்த இரயில் போலீசார் சுற்றும் இருந்தவர்களை விசாரித்து ஒன்றும் புரியாமல் திரும்பிச் சென்றதை கவனித்தாள். அவளது உடை மறுபடியும் அவளைப் பாதுகாக்க இவளிடம் போலீஸார் விசாரிக்கவில்லை.

மும்பை வந்து சேரும் முன்பே தன் உடையை மாற்றியவள். புர்காவை பையினுள் பத்திரப்படுத்தினாள். அதை அணிந்து அவளால் சாதாரணமாக நடமாட இயலவில்லை என்பது ஒரு காரணமென்றால், இனி யாரும் அவளைத் தேடி வர மாட்டார்கள் எனும் மனதின் தைரியம் மற்றொரு காரணம்.

மற்றொரு உடையை அணிந்து முகத்தைச் சீராக்கி இருந்தவள்

பையைத் திறந்தாள், அச்சோ என்ன இது? அவள் பையில் இருந்த பொருட்கள் தண்ணீரில் தழும்பி நின்றது . வாங்கிய தண்ணீர் பாட்டிலை பையில் வைத்திருக்க அதன் மூடி திறந்து தண்ணீர் கசிய எப்போது அது பையை நிரப்பியதோ அவளுக்கே தெரியாமல் இருந்திருக்கிறது. வழக்கம் போல அவள் ஆழ்ந்த சிந்தனைகள் தான் அதற்கும் காரணம் என்று தன்னையே நொந்துக் கொண்டாள்.

உள்ளே இருந்தவற்றை அப்படியே பற்றியவாறு தான் அமர்ந்திருந்த இடத்தின் பின்னே இருந்த இடத்தில், தன் பையில் இருந்த தண்ணீரை சரித்துக் கொட்டியவள் அத்தனை தண்ணீரும் வெளியேறியதும் பையின் ஈரம் போக என்ன செய்வது எனப் புரியாதவளாகப் பொருட்களின் நிலையைச் சரி பார்த்தாள்.

வங்கி டாகுமெண்ட்களும் ப்ளாஸ்டிக்கில் பத்திரமாய் இருந்திருக்க, அது குறித்து ஆசுவாசம் கொண்டவள் போட்டோவும் சில தாள்களுமாய் இருந்தவற்றை எடுத்துப் பார்த்தாள் அவை தண்ணீரில் முற்றும் நனைந்ததாய் இருந்தன.

நனைந்தவற்றில் தான் மும்பையில் எந்த விலாசத்திற்குச் செல்ல வேண்டும் என்று தேடும் விபரம் இருக்கும் என்று எண்ணியவளாகப் பையை மடியில் வைத்து மறுபடி இருக்கையில் அமர்ந்து அவற்றை அமைதியாகப் பிரித்துப் பார்த்தாள். இரண்டாய் மடித்திருந்த கற்றைத் தாள்களைத் திறக்க, நடு மத்தியில் இருந்த புகைப்படம் தண்ணீர் பட்டு முழுவதும் சிதிலமாகி வண்ணக் கலவையாய் மாறி இருந்தது. அந்தப் புகைப்படத்தின் நிறம் , தன்னை மூடி இருந்த தாளில் பரவி எழுத்துக்களை மறைத்து இருந்தது.

ஒரு இளைஞனை அவன் முன் நெற்றிப் பகுதியை மட்டும் தான் புகைப்படத்தில் கண்டது அவள் நினைவிற்கு வந்தது. அவள் அதனைச் சட்டைச் செய்யும் நிலையில் இப்போது இல்லை. எனவே, அவற்றை மேலும் தேடலானாள்.

அந்தப் புகைப்படத்தை அகற்றியவள் தாளை விரித்துப் பிடித்தாள். அது ஒரு மின்னஞ்சலின் பிரதி. எழுதியவர் பெயரை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ரகசியமான மின்னஞ்சல் முகவரியாக இருந்தாலும் என் மகள் என் மகள் என்று பலமுறை ரிஷாவைக் குறித்துக் குறிப்பிட்ட விதத்தில் அது தன் அப்பாவின் கடிதம் என்று ரிஷாவிற்குப் புரிந்தது.

ஷாரதாவிற்கு இந்த மின்னஞ்சல் அப்பா அனுப்பி இருந்திருக்க வேண்டும்.

மின்னஞ்சலை வாசித்தில் அவளுக்குப் புரிய வந்தது இவைதான் குறிப்பிட்ட பையனை தாங்கள் ரிஷாவிற்கு வாழ்க்கை துணையாகத் தெரிந்தெடுத்திருப்பதாகவும், அவளின் படிப்பு முடிந்ததும் திருமணமாகி அவனோடு ரிஷா வெளிநாட்டிற்குப் பயணமாக வேண்டுமென்று விபரமும் கொடுக்கப் பட்டிருந்தது.

அதை வாசித்ததும் சட்டென்று ரிஷாவின் மனதில் பெற்றோர் செயல்கள் மீதான விரக்தியும், வெறுப்புமான தளைகள் சூழ்ந்து கொண்டன. என்னதான் பிரச்சனையாக இருந்தாலும் தன் பெற்றோர்கள் தங்களோடு தன்னையும் வைத்துக் கொண்டு பாதுகாக்காமல், இத்தனை வருடங்கள் பிரித்து வைத்ததுமில்லாமல், படிப்பு முடிந்ததும் தாய் தகப்பனோடு தான் நாட்களைக் கழிக்க எண்ணியதையும் மாற்றும் விதமாக, தன் விருப்பம் கேட்காமலேயே தனக்கு உடனே திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்திருப்பதை நினைத்து மனம் வெதும்பினாள்.

என்ன பிரச்சனையென்று என்னிடமே சொல்லாமல் மறைத்து வைக்கத் தான் என்ன இன்னும் 13 வயது பெண்ணா?

என்னைச் சுற்றியுள்ள ஆபத்தை எனக்கே சொல்லாமல் எத்தனை நாட்கள் மறைப்பதாக இவர்களுக்கு எண்ணமாம்? மனதிற்குள் பொருமினாள்.

எவன்டா அவன் அந்த மிலிட்டரி கட் பையன்?, அவன் நேர்ல கிடைச்சா செத்தான்” யார் மேலுள்ள கோபத்தையோ அவன் மீது காட்டி கருவிக் கொண்டாள்.

இந்தப் பொண்ணு எனக்கு வேண்டாம்னு சொல்லுற அளவுக்கு அவனைக் கொடுமை செஞ்சு கதற விடல என் பேரு ரிஷா இல்ல” மனதிற்குள்ளாகச் சூளுரைத்துக் கொண்டாள்.

பையனின் பயோடேட்டா என ஒரு தாள் இருக்க அதுவும் தண்ணீரில் நனைந்து பரிதாபகரமாக இருந்தாலும் பிரபாகரன் என்று மட்டும் அதில் பெயர் தெரிந்தது.

அவளுக்கு மீதியை வாசிக்கும் ஆர்வமில்லை. உடனடியாக ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டும். அதற்காக ப்ரீபெய்ட் டாக்ஸி கிடைக்குமிடம் முதலில் தேட வேண்டும் என எண்ணியவளாய் விலாசம் தேட,

அந்தத் தாள்களுக்கிடையில் ஒரு விசிட்டிங் கார்ட் கிடைத்தது. அதில் இருந்த மும்பை விலாசம் “சாத் பங்களா, அந்தேரி”

அப்போதுதான் சுற்றும் முற்றும் பார்த்தாள், தான் இருக்கும் ஸ்டேஷன் பெயர் “Bandra” என்றிருக்க அது பழங்காலக் கட்டமைப்பில் இருப்பதைக் கண்டு சுற்றும் முற்றும் பார்த்தவள் கைப்பையைத் தோளில் போட்டுக்கொண்டு பக்கத்திலிருந்த தன் துணிகள் இருந்த பையைக் குனிந்து எடுத்து நிமிரவும் “விஷ்க்: தோட்டா ஒன்று அவளருகே இருந்து பாய்ந்து சென்றது. அருகில் இருந்த இருக்கை ஒன்றில் பாய்ந்து வெடித்து அதனைச் சற்றே சிதிலமாக்கியது.
அவள் சற்று நேரம் முன்பு நிமிர்ந்திருந்தால் அவள் முதுகிலோ, நெஞ்சிலோ பாய வேண்டிய தோட்டா அல்லவா அது, உண்மை உணர்ந்ததும் வெகுவாக மிரண்டாள். திடீரென வயிற்றுக்குள் பயப்பந்தொன்று கலவரமாய்ச் சுழல, தோளில் ஒன்றும் கையில் ஒன்றுமாய் இரு பைகளோடும், எங்கே செல்கின்றோம் என்று இலக்கில்லாமல் தலை தெறிக்க ஓடினாள். அவள் பின்னால் தபதபவென்று ஆட்கள் துரத்துவது கேட்டது.

அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் என்ன நடக்கின்றது என்று கவனிக்க, பாதுகாப்பிற்கு இருக்கும் போலீசார்கள் அருகே சென்று விட்டால் போதும் என்று எண்ணியவளாய் தன் கண்களைச் சுற்றி விட்டுக் கொண்டே அவள் ஓடிக் கொண்டிருக்கச் சட்டென்று அவள் கையைப் பற்றி இழுத்தது ஒரு கரம்.

அதுவரை அவள் ஓடிக் கொண்டிருந்த திசைக்கு மாற்றாய் ஓடி, ஜனத் திரளுக்குள்ளாக அவளை இழுத்துச் சென்று படிகள் ஏறித் திசையறியாமல் அவனோடு பயணித்துக் கொண்டிருந்தாள் அவள். ஜனத் திரளுக்குள்ளாக வந்த பின்னர் அவர்களின் ஓட்டம் யாருக்கும் விசித்திரமாய்த் தோன்றவில்லை. தினமும் வேலை விட்டு திரும்புகின்றவர்கள் கூட இரயிலை பிடிக்க இவ்வாறு ஓடுவதுண்டே.

அவசரமாய், தர தரவென்று இழுத்து அழைத்து வந்த அவன் புறப்படத் தயாராக நின்ற லோக்கலின் காலியான ஒரு பெட்டியில் தானும் ஏறி அவளையும் உள்ளே இழுத்துப் போட்டான். தான் புறப்படுவதாகக் குரலெழுப்பி மும்பை லோக்கல் நகர்ந்து வேகமெடுக்க, அதுவரை அவளை இழுத்து வந்தவன் கைப்பிடி தளர்த்தி அவளை உதறி விடவே தடுமாறி நின்றாள் அவள்.

அறிவில்ல உனக்கு? ஒதுங்கி நிக்காம ஓடி வர்ற, என் பின்னால அத்தனை பேரும் ஓடி வந்துட்டு இருக்காங்க… நான் என் உயிர காப்பாத்துறதா? இல்லை உன்னைப் பார்க்குறதா? இந்தப் பொண்ணுங்களுக்கே யாராவது ஹீரோ வந்து காப்பாத்தணும்னு நினப்பு.

ஆம்பளைங்க முன்னேறாம போறதுக்குக் காரணமே இவங்கதான்… விடாமல் பொறிந்துக் கொண்டிருந்தவனை ஆத்திரம் மிக முறைத்துக் கொண்டிருந்தாள் ரிஷா.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here