6. துரத்தும் நிழல்கள்

0
460
துரத்தும் நிழல்கள்

அத்தியாயம் 6

அத்தியாயத்திற்குள்ளாகச் செல்லும் முன் மும்பை இரயில்வே குறித்த சிறு குறிப்பேடு:

மும்பை இரயில் சேவையானது சென்ட்ரல் (central), வெஸ்டர்ன் (Western) & சபர்ப் (Suburb) எனும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. பொதுவாக ஒப்பிடுகையில் வெஸ்டர்ன் ரயில்வே சேவைகள் மிகத் துரிதமானவை அது போலவே அங்கே கூட்டமும் அதிகம். வெஸ்டர்ன் பகுதிகளில் உள்ள அந்தேரி, மாஹிம், பாந்திரா பகுதிகள் அதிக மாடர்னாக அறியப் படுபவை திரைப்பட நட்சத்திரங்கள் வீடுகள் இந்தப் பகுதிகளில் தான் அமைந்துள்ளன. இங்கே அமைந்திருக்கும் ஜுஹீ பீச் மிகவும் பிரபலமானது.

செண்ட்ரல் பகுதிகள் வெஸ்டர்னுக்கு அடுத்தாற் போன்ற நிலைக் கொண்டது தமிழர்கள் அதிகமாக வசிக்கும், குட்டித் தமிழகம் என அழைக்கப் படும் தாராவி பகுதி அமைந்துள்ள சயான் ஸ்டேஷன், மாதுங்கா ஸ்டேஷன் செண்ட்ரலில் உள்ளது. சபர்ப் மூன்றாம் வகையாகும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் செம்பூர் பகுதி சபர்பில் உள்ளது. இது போகத் தமிழர்களை எல்லாவிடமும் காணவியலும் என்பதையும் குறிப்பிட்டு விடுகின்றேன்.

இவை மூன்றும் அதாவது Western Railway, Central Railway & Suburban Railway ஒன்றிணையும் தாதர் (DADAR) பகுதி மிகவும் பிரபலமான இடமாகும். மும்பையில் மக்கள் இடையறாது ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்கு பயணிப்பதை எப்போதுமே காணலாம். செண்ட்ரலில் உள்ளவனுக்கு எதற்காக வெஸ்டர்னில் வேலை கிடைக்கிறது? வெஸ்டர்னில் உள்ளவனுக்கு ஏன் சபர்பனில்ல் வேலை கிடைக்கிறது. எதற்கு எல்லோரும் தாங்கள் இருக்கும் இடத்தில் வேலைக் கிட்டாமல் ஓட்டமாய் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள் என்பது எவருக்குமே புரியாததொரு புதிர்.

செண்ட்ரல் இரயில்வேயின் ஆரம்பம் சி எஸ் டி எனப்படும் “சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்” (CST Chatrapathi Shivaji Terminus) {முன்னர் விக்டோரியா டெர்மினஸ் (Victoria Terminus) என்று அழைக்கப்பட்ட இரயில்வே நிலையம் இது தான்} ஆகும்.

வெஸ்டர்ன் இரயில்வேயின் ஆரம்பம் சர்ச்கேட் (Churchgate) ஆகும். இரண்டு இரயில் நிலையங்களையும் இடையே ஆன தூரத்தை (CST & Churchgate) எளிதாகப் பஸ் துணையாலோ அல்லது சில மணித்துளிகள் நடைப் பயணத்தாலோ அடைந்து விடலாம். அவ்வளவுக்கு அவ்வளவு ஒன்று கொன்று அருகாமையில் உள்ளன.

எப்போதும் பரபரப்பான பகுதிகளுள் இவைகளும் உண்டு (CST & Churchgate) . பல தனியார் மற்றும் அரசு அலுவகங்களின் உயர் அதிகார மையங்கள் இங்குக் காணப் படுகின்றன. எல் ஐ சி, ஏர்லைன்கள் இவற்றின் மும்பை அளவில் தலைமையக அலுவலகங்களும் இங்கே அமைந்திருக்கின்றன.

சர்ச்கேட்டிலிருந்து அருகாமையில் மரீன் ட்ரைவ் எனப்படும் பிரபலமான கடற்கரைச் சாலையும், வான்கடே ஸ்டேடியமும் இன்னும் பிரபலமான பலவும் அமைந்திருக்கின்றன.

சி எஸ் டி க்கு சல்லிசான விலையில் ஷாப்பிங்களுக்காகவும் மக்கள் பெருமளவில் வருவதுண்டு. வித விதமான கடைத் தெருக்கள் இங்கு உள்ளன. சர்ச்கேட் பகுதியில் தான் 400 க்கும் மேற்பட்ட துணிக் கடைகள் கொண்ட ஃபேஷன் பாஜார் உள்ளது. சிஎஸ் டியிலிருந்து இங்குச் செல்ல 5 நிமிடங்கள் போதும்.

இவ்வளவும் சொல்லிவிட்டு டிப்ஸ் கொடுக்காவிட்டால் எப்படியாம்? இதோ பிடியுங்கள் என் டிப்ஸ். எந்தப் பொருளை வாங்க எடுத்தாலும் முதலில் பாதி விலையில் கேட்க வேண்டும். ஒருவேளை பாதி விலையிலேயே பேரம் படியலாம் இல்லையென்றால் கூட ஐம்பது நூறாகலாம். எப்படி என் டிப்ஸ்?

:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:
:diamond_shape_with_a_dot_inside:

அந்தேரி மும்பையின் வெஸ்டர்ன் ரயில்வே ஸ்டேஷன்களுள் ஒன்று. எந்நேரமும் ஜன நெருக்கடியை இந்தப் பகுதியில் காணலாம். ஸ்டேஷனிலிருந்து இறங்கிய நேரம் முதலாய் ரிஷா தனக்கு இந்தப் பரிச்சயமில்லாத மண்ணில், சற்று முன்பு பழக்கமாகியிருந்த புது நண்பன்(!) ஈஸ்வர் மீது கண் பதித்தே வந்தாள்.

இதுவரை இருவரும் பேசிக் கொண்டதில் அவன் ஆபத்தில்லாதவன் என்ற உணர்வு மட்டுமே தோன்றியிருந்தது, கூடுதலாக அவன் தமிழன் என்ற மகிழ்ச்சி இன்னொரு பக்கம். அதனால் தான் தனக்கு ஒரு வேளை எதுவும் தேவைப்பட்டால் அவனிடம் உதவிக் கேட்கலாம் என்று எண்ணி அவனைத் தன் கண் பார்வையில் வைத்திருந்தாள்.

ஸ்டேஷனிலிருந்து வெளியே வரவும் டாய்லெட் கண்ணில் படவே அங்குச் சென்று வந்த பின்னரும், இந்தர் சற்றுத் தொலைவில் பஸ் ஸ்டாண்டில் நின்றுக் கொண்டிருந்ததைக் கண்டாள். “பரவாயில்லையே இங்கே தான் இருக்கிறான்” என அவனைக் கண்டதும் சற்று நிம்மதி தோன்றியது.

மெது மெதுவாகத் தன் முன்னே இருந்த கூட்டத்தில் அசைந்து அசைந்து முன்னேறி வந்தவள் டாக்ஸி ஸ்டாண்ட் எங்கிருக்கின்றது எனதேடிக் கொண்டிருக்கையில் எதிர் புறத்திலிருந்து அந்தக் கரகரப்பான குரல் வந்தது.

நீ நீ ரிஷா பாப்பா தானே?

விதிர்விதிர்த்து நிமிர்ந்தாள் அவள். அவளை ரிஷா பாப்பா எனக் கூப்பிடுபவர்கள் மிகச் சிலரே. அந்தக் குரல் மனதில் பதிந்த ஒன்று. மனதில் பயமாகவும், நடுக்கமாகவும் பதிந்து விட்ட நபர் அல்லவா?
தான் 7 வருடமாகத் தாய் தகப்பனைப் பிரிந்து சிறைப் போன்ற தனிமை வாழ்வு வாழ்ந்ததற்கான காரணியின் குரல். ருத்ரபாண்டி அங்கிள்.

கிடுகிடுவென அவள் உடல் நடுங்கிற்று. அதுவரை ஈஸ்வரோடு வாயடித்துக் கொண்டிருந்த ரிஷா எங்கோ காணாமல் போய் விட்டாள். உள்ளுக்குள் நடுக்கம் பரவ, செயலறியாத ரிஷா வெளி வந்து விட்டாள்.

எல்லா நேரத்திலும், எல்லாச் சூழ் நிலையையும் துணிந்து எதிர்கொள்ளும் திறன் அவளிடம் இல்லை. அவள் பெற்றோர் அவளை அடக்கி அடக்கி கூண்டுக்குள்ளாக வைத்து, அவளின் இயல்பைத் தொலைத்து விட்டனர். இப்போதோ தனியாக எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டிய நிலையிலும் அவளால் சுயமாக முடிவெடுக்க இயலவில்லையே?!

அவள் செல்ல வேண்டிய விலாசத்திற்குப் போகச் சில மணித்துளிகளே இருக்க, எதிரில் நிற்கும் டாக்ஸிகளுல் ஒன்றில் ஏறி அமராமல் அவளை அங்கிருந்து உடனே நகரச் சொன்ன உந்து சக்தி எது என அவள் அறியாள்?

அவள் செய்வது சரியா தவறாவென அவளுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒன்றிலிருந்து தப்பிக்கும் முகமாக எங்குச் செல்ல வேண்டும் என்ற உணர்வே இல்லாமல் தனக்குச் சில மணி நேரங்கள் முன்பே பரிச்சயம் ஆன இந்தர் ஏறிய பஸ்ஸில் அவசர அவசரமாக ஏறி விட்டாள்.

ரிஷா பாப்பா, ரிஷா பாப்பா என ஒரு குரல் அவளுக்குச் சில நேரம் வரை கேட்டுக் கொண்டு இருந்தது.

கூட்டத்திற்குள்ளாக நகர்ந்தாள். கூட்டத்தைத் தனது வாய்ப்பாகக் கொண்டு யாரோ அவளது மார்பில் தன் கையின் முட்டி வைத்து அழுத்தில் கொண்டிருப்பதை உணர்ந்ததும், விதிர் விதிர்த்துப் போனாள்.

மனதிற்குள்ளாக அந்த மாயக்குரல் ஒலித்தது.

“எனக்குக் கொடுக்காம யாருக்காக வச்சிருக்கியாம், எப்படி இருந்தாலும் நான் தான உன்னைக் கட்டிக்கப் போறவன், நான் தொடக் கூடாதாக்கும்”

அந்தக் குரலின் வக்கிரத்தோடு கூடப் பஸ்ஸீல் தற்போது அழுந்திய முட்டியின் காரணமாகவும் ரிஷாவுக்கு வெகுவாக வியர்த்து வழிந்தது, கையிலிருந்த இரண்டு பைகள் காரணமாகத் தன் உடலை காம இச்சையோடு உரசும் அந்தக் கையில் முட்டியினின்று எப்படித் தற்காத்துக் கொள்வது என அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

இன்னும் அந்த முட்டி அவள் மார்பிலிருந்து அகலவில்லை. சத்தமிட்டாளென்றால் இவள் பலர் முன்பாகக் காட்சிப் பொருளாவாள்.

“இப்போது சத்தமிட வேண்டியது நிச்சயமாய் நானல்ல, அவன்.” ரிஷா வைராக்கியமாய் மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.

கைகளிலிருந்த இரண்டு பைகளையும் ஒரு கைக்கே மாற்றினாள். இப்போது வலக்கையில் பொருட்கள் ஏதுமில்லை, அந்த முட்டியை தள்ளி விடலாம் தான் ஆனால் அதில் என்ன கிக் இருக்கிறது. ஆமாமப்பா இடிப்பவனுக்குக் கிக் வேண்டுமென்றால், அதை எதிர்ப்பவளுக்குக் கிக் வேண்டாமா என்ன? தன் நான்கு விரல்களையும் முறுக்கேற்றிக் கொண்டாள்.

நீண்ட நெடிய நகங்கள் கூர்மையாய் இருந்தன, ஏதோ ஒரு ஆயுதத்தைச் செலுத்தினாற் போல உக்கிரமாய், வேகம் கொண்டு இன்னும் சாவகாசமாகத் தன் உடலை உரசிக் கொண்டிருந்த அந்த முட்டியை நோக்கிப் பாய்ச்சினாள். ஓ வென ஓலம் எழுந்ததைக் கண்டு கொள்ளாமல் தன் பையை மறுபடி கரம் மாற்றிக் கொண்டாள்.

குரல் எழுப்பியவனை மற்றவர்கள் திரும்பிப் பார்த்தார்களே ஒழிய யாரும் கண்டு கொள்ளவில்லை. இனி அவன் முஷ்டி இன்னொருவளின் தனத்தின் மென்மையை ஆராயப் புறப்படச் சில நாட்கள் ஆகலாம். அவன் புத்தியை அவனே அறிவார். தண்டித்த் குரூர திருப்தியோடு தன் தமிழ் நண்பனை கவனித்தாள் ரிஷா.

இந்தர் “ஜுஹீ பீச்” என டிக்கெட் எடுப்பதைப் பார்த்து அவளும் அதுவே சொல்லி டிக்கெட் வாங்கிக் கொண்டாள்.

அதீத ஜன நெருக்கடியான் பகுதி அது. சுற்றும் ஆட்கள் இருந்தும் கூட ஏதோ ஒரு வெறிச்சிட்ட பாலைவனத்தில் பயணித்தார் போன்று அவள் மிகவும் தனிமையாக உணர்ந்துக் கொண்டிருந்தாள்.

ஜுஹீ பீச் வந்ததும் இந்தர் இறங்கவும் அவன் பின்னே ரிஷாவும் இறங்கினாள். அது ஒரு பிரபலமான பொழுது போக்கு இடம் எனப் பார்த்தவுடனே அறிந்துக் கொண்டாள். அவ்வளவு சுத்தம் சுகாதாரமாகப் பராமரிக்கப் படாவிட்டாலும் கூட அங்கே கூட்டம் நெருக்கி தள்ளியது.

வகை வகையான உணவு வகைகளும், அவைகளைச் சுவைப்பதற்கான கூட்டமும் அங்கே காணப்பட்டது. இரவு சூழ்ந்துக் கொண்டிருந்ததால், சுற்றிலும் செயற்கை வெளிச்சம் பளீரிட்டது. கவலையின்றிச் சிறார்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். கடலுக்குக் கால்களைக் கொடுத்து சிலர் நின்றிருக்க, கடலுக்குள்ளாகச் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இந்தரை தவற விடக் கூடாது என்ற சிந்தனையில் அவனையே பின் தொடர்ந்து கொண்டிருந்த ரிஷாவுக்கு இவை எதுவுமே கருத்தில் படவில்லை. தனியாகச் செல்ல பயமாக இருந்ததால், எப்படியாவது இந்தரிடம் பேசி தனக்குத் துணையாக அழைத்துக் கொண்டு தான் செல்ல வேண்டிய அந்த முகவரிக்கு செல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டிருந்தது.

அதே நேரம் சற்று நேரம் முன்பாக அவன் அவளைத் திட்டியிருந்தது அவள் நினைவிற்குள் நிரடியதால் அவனிடம் உடனடியாகச் சென்று உதவி கேட்க அவளால் முடியவில்லை.

ஆண்கள் உருப்படாமல் போவதே பெண்களால் தான், பெண்கள் எப்போதும் உதவி தேவை என்றால் ஆண்கள் வந்து செய்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று முழங்கியவன் தானே அவன்.

சற்று நேரம் கழித்து அருகில் செல்லலாம் என அவன் தனியாக அமர்ந்திருந்த அந்தக் கடற்கரையில் பகுதியில் சற்று அப்பால் அவளும் அமர்ந்திருந்தாள்.

யாரோ கடலுக்கருகாமையில் தங்கள் மகளை அழைத்திருக்க வேண்டும் போலும்.

” மிஷா பேட்டி” எனும் குரல் கேட்கவும் , சற்ரு முன் கேட்ட ரிஷா பாப்பா எனும் ருத்ர பாண்டி அங்கிளின் குரல் வந்து மோதியது. மனதை சோர்வுறச் செய்தது. வழக்கம் போல மனம் சோர்ந்ததும் தன் சிந்தனைக்குள்ளாக அமிழ்ந்து போனாள் அவள்.

ரிஷாவின் தந்தை சண்முகம் மற்றும் அவரது இரு நண்பர்களான ருத்ர பாண்டி மற்றும் கனகவேல் இவர்களின் SKR Garments ல் கனகவேல் தான் தனியாக நிறுவனம் ஆரம்பிக்கவிருப்பதாகச் சொல்லி தன் பங்கைக் கேட்கையில் தான் ருத்ர பாண்டி அந்நாள் வரை செய்திருந்த தகிடு தித்தங்கள் தெரிய வர, தொடர்ந்த நாட்களில் கனகவேலின் ஒரே மகன் இறந்து பட ருத்ர பாண்டியின் மீது அந்தக் கொலையைச் செய்ததாகச் சந்தேகம் எழுந்தது.

கனகவேல் அங்கிளின் மகன் மரணித்த சில நாட்களில் நடந்த சம்பவங்கள் ஏராளம். விசாரணையில் தனக்கு ருத்ரபாண்டி மேல் சந்தேகம் இருக்கிறது எனக் கனகவேல் சொல்லிவிட ருத்ரபாண்டியின் வீட்டினர் மேல் விசாரணை ஆரம்பித்தது.

இப்படி ஏராளமான பிரச்சனைகளால் சண்முகத்தின் வேலைப் பளு கூடி விட்டிருந்தது.

அவரால் நண்பர்கள் இருவரில் யாரையும் விட்டுக் கொடுக்க இயலவில்லை. யார் தவறு செய்தார்? யார் தவறு செய்யவில்லை? எனச் சிந்திக்க அவருக்குச் சற்றும் நேரமில்லை. தடுமாறிப் போயிருக்கும் இரண்டு நண்பர்கள் குறித்த குழப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போமானால் தொழிலை கைவிட வேண்டி வரும் என மனதிற்குள்ளாக அபாய மணி அடித்ததே அதற்குக் காரணம்.

ஆம், ஒரு நிறுவனத்தின் உள்ளார்ந்த குழப்பங்கள் வெளியே தெரியாமல் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது இல்லையென்றால், நம்பகத் தன்மை இழந்து வாடிக்கையாளரின் விலகலையும், பெருமளவு நஷ்டத்தையும் சந்திக்க நேரிடலாம். அதனால் தான் சண்முகம் வெளியே தெரியாமல் அத்தனையும் தனியாளாய் சமாளிப்பதற்குள்ளாக இரவும் பகலுமாக உழைத்து ஒரு வழியாகினார்.

அந்நேரம் மட்டும் அவரது அக்கா மகன்களான அரங்கநாதனும், சந்திரனும் இராவிட்டால் அவருக்கு வலக்கையாக இருந்து உதவிராவிட்டால் அவர் வெகுவாகச் சிரமப் பட்டிருப்பார்.

சண்முகத்தின் அக்கா பையன்கள் மாமா, மாமா என உயிரையே விடும் வண்ணமாக அவரிடம் பயபக்தியோடு இருந்தனர். ஒன்றுக்கும் உதவாமல், உருப்படாமல் இருந்த தங்களைச் சென்னைக்கு அழைத்து வந்து தொழில் கற்றுக் கொடுத்த மாமா மேல் அவர்களுக்கு வெகு பிரியம்.

அவர்களைப் பொருத்தவரை அவர்களது மாமாதான் அவர்களுடைய ரோல் மாடல். அந்தப் பயபக்தி கூடத்தில் சமீபத்தில் இன்னொருவன் சேர்ந்திருந்தான். அவன் சுந்தர் . சண்முகத்தின் அக்காவின் மூன்றாவது மகன். ஒரு வருடம் முன்பாக அவனும் சென்னை வந்து சேர்ந்திருந்தான்.

சில வருடங்கள் தன் கீழ் அரங்க நாதனையும், சந்திரனையும் பணி புரிய வைத்திருந்த சண்முகம், தன் பார்ட்னர்கள் உதவியோடு அவர்களுக்குப் பொறுப்பான பதவிகளை அளித்திருந்தார்.

அரங்கனாதனுக்குத் திருமணமாகி விட்டிருந்தது, குழந்தைகளும் இருந்தன. சந்திரன் தன் அக்கா திருமணத்திற்கு முன்பே காதல் திருமணம் செய்து ஒரு குழந்தைக்குத் தகப்பனாகி இருந்தான்.

அக்கா மகன்கள் வாழ்க்கையைச் சீர்ப்படுத்தி இருந்த அவர் அக்காவின் மகளான லலிதா திருமண வயதிற்கு வந்தும் அக்காவின் கணவர் “கண்டதே காட்சி, கொண்டதே கோலம்” என்றிருக்கத் தகப்பனின் ஆதரவு அற்ற அந்தக் குடும்பத்திற்குப் பெரியவராய் லலிதாவின் திருமணத்தை அரங்கநாதன் மற்றும் சந்திரன் இவர்களது சேமிப்புப் பணம் மற்றும் தனது பணத்தையும் செலவழித்து மனைவி மகளோடு முன் நின்று சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தார்.

அவர்கள் ஒரு வருடம் முன்பு அந்தத் திருமணம் செய்வித்துத் திரும்பிய போது அவரோடு தொற்றிக் கொண்டு வந்து விட்டிருந்தான் சுந்தர். துரு துருப்பானவன் ஆனால் வெகுளி அமைதியாக இருப்பான். சென்னை பாஷை புரியாமல் அவன் திருத் திருவென முழிப்பது ரிஷாவுக்கு வெகு ஜாலியாக இருக்கும். வேண்டுமென்றே அவனிடம் சென்னை பாஷையில் பேசுவாள் அவள்.

அப்பாலிகா போலாம்

அப்பாலிக்கா… அப்படின்னா என்ன ரிஷா பாப்பா?

பதிலே சொல்லாமல் இன்னுமாகக் கிண்டல் செய்வாள்.

நீ ஒரு டுபாகூரு சுந்தரு

டுபாகூருனா?

அறிவாளின்னு அர்த்தம் அத்தான், அச்சோ உங்களுக்கு இது கூடத் தெரியாதா?

அங்கினு குந்துறியாமே…

எதையாவது சொல்லி சுந்தரை கிண்டல் செய்வதே ரிஷாவின் வேலையாக இருக்கும். சுந்தருக்கோ ஒன்றும் புரியாமல் திருத் திருப்பான்.

செல்வி தன் மகள் சுந்தரை அநாவசியமாகக் கிண்டல் செய்வதை ளை கண்டித்தாலும், அம்மா அருகில் இல்லாத நேரம் அவனைத் தொந்தரவு செய்வதில் அவளுக்கு அலாதியான மகிழ்ச்சி.

வயதில் மிகப் பெரியவனானாலும் அவளிடம் அவன் பணிந்து போவான். அரங்க நாதனிடமும், சந்திரனிடமும் அவர்கள் இருவரின் மனைவிகள் குழந்தைகளிடமும் எப்போதும் லூட்டி அடிப்பது போலவே அவள் சுந்தரிடம் விளையாட்டாக நடந்து கொள்வாள்.

மனதிற்குள்ளாக ஆழ்ந்திருந்தவளை சுள்ளென ஒரு வலி எழுப்பியது. யாரோ கல்லை எறிந்திருக்க வேண்டும். சுற்றும் முற்றும் ஆட்களில்லா ஓரத்தில் வந்து அமர்ந்திருக்க யாராக இருக்க முடியும்?

பதிலளிப்பவன் போன்று எதிரில் வந்து கொண்டிருந்தான் இந்தர்.

அமர்ந்திருந்தவளுக்கு எதிராக வந்து நின்றவன், ” உனக்கு அறிவே இல்லையா? நீ இன்னுமா என் பின்னாலயே வந்திட்டு இருக்க? எப்ப பாரு உன்னைய காப்பத்துறதே எனக்கு வேலையா?

பேசிக் கொண்டிருந்தவன், திடீரென முகம் கருத்தான். நின்றபடியே பின்னால் பாதங்கள் பதித்துக் கொண்டு எட்டுக்கள் எடுத்து வைத்தவன், சடாரெனத் திரும்பி ஓட ஆரம்பித்தான்.

இவளைச் சுற்றி ஐந்து திடகாத்திரமான ஆண்கள் கவசமாய் நின்றனர்.

அவர்கள் அவளுக்குக் கவசமா? இல்லை அவளைத் துவம்சம் செய்ய வந்திருப்பவர்களா? என்று கணிக்க முடியாமல் இரண்டு பைகளையும் கையில் பற்றிக் கொண்டு ஓடும் வாய்ப்பு எதிர் நோக்கி சுற்றும் கண்களைச் சுழற்றி அமர்ந்திருந்தாள் ரிஷா.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here