7. துரத்தும் நிழல்கள்

0
469
துரத்தும் நிழல்கள்

அத்தியாயம் 7

The Taurus PT 24/7 இது ஒரு செமி ஆட்டோமேடிக் பிஸ்டலாகும். சுருக்கச் செயல்திறன் கொண்ட சுழற்சியைப் பயன்படுத்தி ஒரு அரை-தானியங்கி பிஸ்டல் மற்றும் இரட்டை-நடவடிக்கை-மட்டுமே (DAO) மற்றும் இரட்டை நடவடிக்கை (Double Action) / ஒற்றை-நடவடிக்கை (Single Action)-வகைத் தூண்டுதல் செயல்களுடன் பல்வேறு மாடல்களில் கிடைக்கின்றது… இந்தக் கைத்துப்பாக்கிகள் பிரேசிலில் தயாரிக்கப்படுகின்றன, அமெரிக்காவில் துணை நிறுவனமான டாரஸ் யுஎஸ்ஏ மூலம் விநியோகிக்கப்படுகின்றன. இவை பொதுமக்கள் உபயோகத்திற்காகவும், சட்ட அமலாக்க அலுவலர்களுக்காகவும் தயாரிக்கப் பட்டன.

பின் குறிப்பு:

Single Action: ஒற்றை நடவடிக்கை வகைப் பிஸ்டல்களில் ஒரு சுற்று சுட்ட பின்னர் அடுத்தச் சுற்று சுடுவதற்கான ஆயத்தம் பிஸ்டலில் இராது.
Double Action: இரட்டை நடவடிக்கை வகைப் பிஸ்டல்களில் ஒரு சுற்று சுட்ட பின்னர்த் தாமாகவே உந்து விசை தூண்டுதலால் அடுத்தக் குண்டு சுடுவதற்கு ஆயத்தமாக அமைக்கும் கட்டமைப்பு உண்டு.

திடீரென எங்கிருந்து முளைத்தார்களாம் இந்தத் தடியர்கள்? இந்தர் அவர்களைக் கண்டு ஓடியதால் எழுந்த பய உணர்வோடு இரண்டு பைகளையும் இறுக்கப் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றாள் ரிஷா.

அவர்கள் ஒருவர் முகத்திலும் மருந்திற்கும் நன்மைத்தனம் காணப்படவில்லை. சுற்றி நிற்கின்ற யாரையாவது வழிவிட்டு நின்றாலன்றி அவளால் வெளியேற இயலாது. அப்போதுதான் அந்தக் குரல் கேட்டது.

காய் கர்தோஸ் ரே பாபா? ( என்னடா செஞ்சுட்டு இருக்கீங்க?) என்றவாறு ஒரு பெரிய மீசை வைத்த காவலர் வந்து நின்றார். சட்டென்று சிரிக்க ஆரம்பித்தனர் ஐவரும்.

நாய் சாஹேப், கேண்டிட் கேமரா ம்ஹனூன் ப்ரோக்ராம் ஆஹேஸ். த்யாமுலே ஆம்ஹி வீடியோ காட்தோஸ். தீலா பக் ( ஒன்னுமில்ல சார், கேண்டிட் காமெரான்னு ஒரு ப்ரோகிராம் அதுக்காக வீடியோ எடுத்துக்கிட்டு இருக்கோம். அங்கே பாருங்க அந்தப் பொண்ணு தான் நாங்க இவளை பயமுறுத்தறதை வீடியோ எடுத்திட்டு இருக்கிறா? எனத் தூரத்தில் நின்று வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் பெண்ணைக் கைக் காட்டினர்.

பர்மிஷன் கேத்லோஸ் கா? ( பர்மிஷன் வாங்கினீங்களா? இல்லியா?)

தொடர்ந்து ஐவரும் போலீஸிடன் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்க இந்தர் இவளுக்குக் கைக்காட்டினான். அவளும் ஒன்றும் புரியாதவளாக அங்கிருந்து புறப்பட்டாள். அவளுக்கு ஹிந்தி தெரியும் ஆனால், மஹாராஷ்டிர மாநில மொழி மராத்தி தெரியாதே.

இந்தர் அவளை இக்கட்டிலிருந்து மீட்க வருவான் என்று அவள் எண்ணவே இல்லை. விட்டு விட்டு ஓடி விட்டான் என்று அல்லவா எண்ணி இருந்தாள். அவனைக் கண்டதும் கொஞ்சமே கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

கேண்டிட் கேமராவா? அப்படியானால் இவர்கள் நடித்துக் கொண்டிருந்தார்களா என்ன? ஒரு நிமிடம் கதிகலங்க வைத்து விட்டார்களே? இங்கு இந்தக் கடற்கரையில் இத்தனை பேர் இருக்க நான் தான் கிடைத்தேனா என்ன?

ஸ்ஸ்ஸ் எனப் பாம்பாய் பெரு மூச்சை விட்டுக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். போலீஸிடன் பேசிக் கொண்டிருந்தாலும் அந்த ஐவரின் பார்வை வட்டத்திற்குள்ளாகத்தான் தாம் இருக்கிறோம் என்பதை உணராமல் இருந்தாள் ரிஷா.

இந்தர் அருகே சென்றதும் அவன் கேட்டான்,

” நான் தான் போலீஸை அனுப்பி வச்சேன், என்னவாம் அவனுங்களுக்கு? ,போலீஸ் பார்த்ததும் பம்மிட்டானுங்க?’

தன்னிடம் பேசிக் கொண்டிருந்தவன் ஆபத்து என்றதும் ஓடி ஒளிந்து விட்டு இப்போது விபரம் கேட்பதை அவள் வெற்றுப் பார்வை வைத்தாள். அவள் பார்வை புரிந்தாலும், முகம் மாறாமல் நோக்கினான் இந்தர்,

இந்தப் பாரும்மா நான் ஒன்னும் சினிமா ஹீரோலாம் இல்ல, உன்னக் காப்பாத்துறதுக்கு என் உயிரைக் கொடுக்க முடியுமா என்ன? நீ என்ன என் மாமா பொண்ணா?, அத்தப் பொண்ணா?

ரிஷா முறைத்தாள்.

அந்தச் சக்ஸேனா கேஸை எடுத்ததிலிருந்து என்ன ஆகுமோன்னு திக்கு திக்குன்னு இருக்கேன். எதைப் பார்த்தாலும் , யாரைப் பார்த்தாலும் சினிமா வில்லன் போலவே இருக்குது.

அவன் சொன்னதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல்

யார் சக்ஸேனா? என்றாள் ரிஷா.

முறைத்தான் இந்தர்

“அடுத்தவங்க கதையைத் தெரிஞ்சுக்கிறதில இந்தப் பொண்ணுங்களுக்கு இருக்கிற அக்கறை இருக்கே? இப்ப அந்தச் சக்ஸேனா யார்னு உனக்குத் தெரிஞ்சு என்ன செய்யணும் சொல்லு.

சரி சரி நீ எதுக்கு என் பின்னாடி வர? இதையே நான் உன் கிட்ட செஞ்சிருந்தா ஈவ் டீசிங்க்னு சொல்லி போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் செஞ்சிருக்க மாட்ட? இப்ப நான் உன் மேல ஆடம் டீசிங்க்னு நான் கம்ப்ளெயிண்ட் செஞ்ச்சா என்ன ஆகும்னு பாரு. நானா இருக்கப் போய்ப் பொறுமையா இருக்கேன்.

டேய் நீ ரொம்பப் பேசறே, சரி இல்ல சொல்லிட்டேன். எனக்கு அங்கே ஒருத்தரைப் பார்த்து பயமா இருந்துச்சு, அதான் நீ ஏறின பஸ்லயே ஏறிட்டேன். எனக்கு இப்ப இந்த மும்பைலயே உன்னை மட்டும் தான் தெரியும் அதனாலத்தான் அப்படிச் செஞ்சுட்டேன்.

நான் ஈவ் டீசிங்க் ? அதுவும் உன்னைய? வாந்தி எடுப்பவள் போல முகத்தை வைத்திருந்தவளைப் பார்த்து கடுப்பானது இந்தருக்கு. தன் உடைகளை ஸ்டைலாகச் சரி படுத்திக் கொண்டு, தலையைக் கோதிக் கொண்டான். அதில் நான் யாருக்கும் குறைந்தவன் இல்லை என்ற சுதாரிப்பு இருந்தது

அவனைக் கவனிக்காமல் ரிஷா தொடர்ந்து பேசினாள்,

“எனக்கு உன்னை மாதிரியே எனக்கும் மனப் பிராந்தி தான் போல இருக்கு. போக வேண்டிய இடத்துக்குப் போகாம ரெண்டு பையையும் தூக்கி கிட்டு அலையுறேன் பாரு. பேசாம டாக்ஸி எடுத்தோமா? போனோமான்னு இல்லாம மும்பை டூர் வந்த மாதிரி சுத்திட்டு இருக்கிறேன்” சலிப்பே மிஞ்சி இருந்தது அவளது குரலில்.

அவளது சலிப்பில் மனம் அசைந்ததோ என்னவோ? தமிழ் தாய்மொழி செய்த மாயமோ என்னவோ அவனால் அவளை அப்படி விட்டு விட்டு செல்ல முடியவில்லை.

“சரி சரி விடு இன்னும் நேரமாகலை. நானே உன் அட்ரஸ் பார்த்து உன்னை டாக்ஸி பார்த்து ஏத்தி விட்டுடறேன் டோண்ட் வொர்ரி” என்றவன்

நீ முதல் முறை இங்கே வந்திருக்கல்ல?

ஆம் என்று தலையசைத்தாள் ரிஷா.

“ஜீஹீ பீச் ஸ்பெஷல் சாட் ஐட்டம் ஏதாச்சும் சாப்பிடேன், அப்புறமா உன்னை உன் அட்ரஸ்க்கு விட்டுடறேன்”

முற்றிலுமாய்க் குழப்பமும், எரிச்சலுமான எண்ணங்களில் இருந்தவள் பதிலே பேசாமல் அவன் பின்னாலேயே சென்றாள்.

ஏனோ இந்தரிடம் அவளால் இயல்பாகப் பேச முடிந்தது. அவள் வீட்டிலே 13 வயது வரை பெரும்பாலும் அவள் வளர்ந்தது ஆண் உறவுகள் கூடவே தான் , பள்ளியில் அவளுக்கு அதிகமாய் இருந்ததும் ஆண் தோழர்கள். பல வருட தனிமைச் சிறையிலிருந்து விடுபட்ட சுதந்திர உணர்வு அவளின் கட்டுக்களிலிருந்து விடுவித்து மனம் திறந்து பேச வைத்திருந்தது. சீக்கிரம் தான் செல்ல வேண்டிய இடம் சென்று பெற்றோரை பார்த்து விடலாம் என்ற நம்பிக்கை பிறந்து விட்டிருந்தது.

பானி பூரி சாப்பிட்டு ஐம்புலன்களும் விழித்து விட்டிருந்தன. காரம் காது வரை எட்டி திகைக்க வைத்தது. உஸ் உஸ் என்றவளாய் தண்ணீரைக் குடித்தாள்.

இன்னும் ஒரு தஹி பூரியையும் சாப்பிட்டவள் வயிறு டொம்மென்றாகவே கோலா (gola) சாப்பிட்டவள் இந்தருக்கும் சேர்த்து அவளே பில் பணத்தைக் கொடுத்தாள்.

சாப்பாடு எல்லாப் பிரச்சனைகளையும் சிறியதாக்க வல்லது. சுடச் சுட சாட் ஐட்டம்ஸ் மற்றும் குளிர குளிர கோலா சாப்பிட்டதும் மனமே புத்துணர்ச்சி அடைந்து விட்டது.

‘இப்போ என்ன அந்த அட்ரஸீக்கு போகணும் அவ்வளவு தானே ப்ராப்ளம் சால்வ்ட்’ என மனம் ஆசுவாசமாயிற்று. இதுக்கா இவ்வளவு கவலைப் பட்டேன்? என்று யோசித்தாள்?

“சரி வா, டாக்ஸி ஸ்டேண்ட் செல்லலாம்” என அவளை அழைத்துச் சென்றவன்.

எங்கே போகணும் சொல்லு? என அவளிடம் கேட்கவும், அந்த விசிட்டிங் கார்ட் எடுத்து நீட்டினாள்.

அதில் இருந்த அட்ரெஸைப் பார்த்தவன் , “அந்தேரி சாத் பங்களா…ம்ம்” இங்கே இருந்து கொஞ்சம் தூரம் தான்.

’ இதில் போன் நம்பர் இருக்கே, நீ போன் செஞ்சு கேட்டயா இல்லையா? ” என்றான்.

என் கிட்டே போன் இல்ல இந்தர், அதான் நேர்லயே போய்ப் பார்த்துக்கலாம்னு…

என்று இழுத்தவளை விசித்திர ஐந்து போலப் பார்த்தவன்.

போன் இல்லையா?

இல்லை.

ம்ம்… சரி என் மொபைல்ல கால் செஞ்சு பார்க்கிறேன். ஒரு வேளை நீ எங்கே இருக்கேன்னு அவங்க உன்னைத் தேடிட்டு இருந்தா என்ன செய்வ?

அவன் கேட்டதும் தான் யோசித்தாள்.

அந்தப் பிரபாகர் அவளின் பியான்ஸி அவன் இவளை தேடுவானோ?
விடைதான் கிடைக்கவில்லை. தன் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று தனக்கு ஒன்றும் தெரியாது என்று இந்தரிடம் சொல்ல வெகுவாக அவமானமாக உணர்ந்தாள் எனவே அமைதியாக இருந்தாள்.

மிஞ்சிப் போனால் இவனுடன் பயணிக்கப் போவது சில நிமிடங்கள் அதற்காக ஏன் என் வாழ்க்கையை இவன் முன் கடை பரப்ப வேண்டும்? என்று எண்ணினாள்.

ஓரிரு முறை அந்தப் பிரபாகரனின் எண்ணை முயன்றவன் “நாட் ரீச்சபிள்னு காண்பிக்குது, கொஞ்ச நேரம் கழிச்சு ட்ரை பண்ணி பார்க்கிறேன் எனத் தன் மொபைலை பையில் வைத்துக் கொண்டான்.

டாக்ஸியை பார்த்து அந்தேரி விலாசம் சொல்லி அமர்த்தியவன் அவள் உள்ளே அமர்ந்ததும் பை சொல்லி கதவை அடைக்க முயன்றான். கடைசி நிமிடத்தில் என்னானதோ? கதவை சரேலெனத் திறந்து அவளோடு உள்ளே அமர்ந்தான்.

பாய்சாப் ஜல்தி காடி நிகாலியே (உடனே வண்டியை எடுங்கள் அண்ணா)

அவன் முகத்தைப் பார்த்தவள் ஏதோ சரியில்லை என எண்ணியவளாய்

என்னாச்சு? என்றாள்.

அவன் திரும்பியே பாராமல் பின்னால் விரலை சுட்டிக் காண்பித்தான்.

டாக்ஸியின் பின் ஜன்னலைப் பார்த்தவள் அதிர்ந்தாள். அதே ஐவர் தூரத்தில் இவர்களைத் துரத்திக் கொண்டு வந்திருந்தார்கள்.

வண்டி வேகமெடுக்கவே அதில் ஒருவன் பிஸ்டலை எடுத்து வண்டியை குறி வைத்தான். வண்டி வளைவில் திரும்பவே விஷ் கெனக் குறி தவறி அந்த வெற்று மூலையில் பாய்ந்தது.

கிடுகிடுவென நடுங்கி , முகம் வெளிறி டாக்ஸிக்குள் பதுங்கி அமர்ந்திருந்தாள் ரிஷா.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here