தொண்ணூறும் இரண்டும்_9_ ஜான்சி (இறுதிப் பகுதி)

0
164

அத்தியாயம் 9. மாறிவிட்டன எல்லாமும்

ஒரு வாரம் கழிந்திருந்தது, மாமூலான நிலைக்கு வந்தது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டு இருந்தது. வெகு நாளைக்குப் பிரகு ராணி வினியோடு மார்க்கெட்டிற்குக் காய்கறிகள் வாங்க வந்திருந்தாள். நாளை முதல் பள்ளி செல்ல வேண்டும். குமரனிடம் இன்று வரை அவளால் சகஜமாகப் பேச முடியவில்லை.

“அந்த ட்ரேயில் இருந்தது எதுவுமெ ஜோடியில்லக்கா, யாருக்கும் உபயோகமும் ஆகலை. என்னை மாதிரி தான் மத்தவங்களும், எல்லோருக்கும் நிறையச் சப்பல்ஸ் வேஸ்டா போயிடுச்சு.”

அதை நினைத்தவாறே பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தாள்.

காற்றில் இன்றும் இன்னமும் கூடக் கருமை படர்ந்திருந்தது, ஒருவேளை அது அங்கிருந்து அன்றைய தினம் தீயை கொழுத்தியவர்கள் யாரென்று சாட்சியம் சொல்வதற்காக நீங்க விரும்பாமல் காத்திருந்ததோ?.யாரரிவார்?

வழி நெடுக எரிந்த சாம்பலின் மிச்சங்கள், தீபாவளி அன்று அழகாய் அலங்கரிக்கப் பட்ட அந்தக் கடைகளை அதன் அடையாளத்தைக் காணவில்லை. நல்ல வேளை நிலத்தை மட்டும் கொள்ளையிடாமல் விட்டு வைத்திருந்தார்கள்.

அந்த கலவரத்தை முன்னிட்டு பலரும் தத்தம் பழிவாங்கலை நிறைவேற்றிக் கொண்டதாக பல்வேறு செய்திகள் வலம் வந்தன.

மாதங்கள் கழிந்திருந்தன

திடீரென ஒருநாள் ஃபாத்திமா அக்கா நினைவு வர அவர்கள் வீட்டிற்குச் செல்ல வீடு பூட்டப் பட்டிருந்தது.

வீட்டிற்கு வந்து அம்மாவிடம் என்னவென்று கேட்டாள்.

“அவங்க வேறு இடத்திற்கு மாறி போயிட்டாங்க பாப்பா…”

“ஓ …”

ஏன் என்று அவள் அம்மாவிடம் கேட்கவில்லை.

முற்றும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here