12. நாயகி

0
848
Naayagi Jansi Rani

அத்தியாயம் 12

இரவு மணி எட்டு.

பெண்கள் விடுதி அல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. சுலோச்சனாவைக் காணவில்லை என்றதும் ஹாஸ்டலில் வசிக்காத அவளது வகுப்புத் தோழிகளும் கூட அங்கே கூடி விட்டிருந்தனர்.

ரேவதி கண்ணீரோடு நின்றுக் கொண்டிருந்தாள். கேட்ட ஒவ்வொருவருக்கும் தகவல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

வழக்கமா எப்பவும் போற மாதிரிதான் பின்பக்கம் அவ செடிலாம் பார்க்கப் போயிருந்தா. இன்னும் திரும்பி வரலையே, நேரமாகுதே?ன்னு அவளைத் தேடி வந்தேனா… எல்லாச் செடியும் பிய்ஞ்சு வம்பாகிக் கிடக்குது. அந்தச் சுவரு வழியா அவளைத் தர தரன்னு இழுத்துட்டுப் போயிருப்பாங்க போலிருக்கு. சுவர்லயும் கொஞ்சம் ரத்தம். கோவென அழுதாள்.

அவளை யாராலும் தேற்றவே முடியவில்லை. ஹாஸ்டல் வார்டன் பல்லவி சுலோச்சனாவைக் காணொம் என்றதும், கூடவே ரேவதி சொன்னபடி அந்த உடைந்த சுவற்றில் ரத்தமும் சில முடிகளும் இருக்க, வெகுவாகத் திகைத்துப் போனார். தான் எவ்வளவு சொல்லியும் மேனேஜ்மெண்ட் தன் பேச்சைக் கேட்கவில்லையே? எதிர்வரும் கேள்விக்குத் தான் என்ன பதில் சொல்வது? தொலைந்துப் போன பெண்ணுக்கு நானல்லவா பொறுப்பு ஆண்டவா… அவர் மனம் கனத்துப் போனது.

கல்லூரி தாளாளர் பல்லவியைக் கூப்பிட்டு அனுப்பவும் சென்று பேசி வந்தவர் முகம் சொல்லொணா துயரத்தோடு இருந்தது, கையாலாகாதவளாக நடப்பவற்றை வேடிக்கை பார்க்கலானார். சுலோச்சனாவுக்காக வேண்டுவதைத் தவிர அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. உடனே காவல் நிலையத்தில் புகாரளிக்காமல் அவள் பெற்றோர் வரும் வரை தாமதிக்க முயற்சி எடுக்கப் பட்டது.

மாணவர்கள் கல்லூரியில் பொறுப்பில் இருந்தவர்களைச் சந்திக்க முடியாத படி அனைவரும் வெகு பிஸியாக இருந்தனர் அல்லது பிஸியெனக் காட்டிக் கொண்டனர். அடுத்த நாள் சுலோச்சனாவின் பெற்றோர்கள் ஊரிலிருந்து வந்து இறங்குவதற்குள் இரவோடு இரவாகத் தோட்டம் சீரமைக்கப் பட்டு சுவர் கட்டப் பட்டிருந்தது. அது முன்பே கட்டப்பட்ட பழைய சுவர்போலத் தெரிய வேண்டுமென்று ஏராளமாய் மெனக்கெட்டு இருந்தார்கள்.

நள்ளிரவு மணி 12

கைகளைக் கட்டியவண்ணம் சுவரோரம் பல்லியைப் போலக் கிடந்தவள் விசித்துக் கொண்டிருந்தாள். சற்று முன்பு தான் அவளது உடலின் பல பாகங்கள் பல முறைகள் குதறப் பட்டிருந்தன.

குதறிய கேவலமான பிறவி குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தது. அவள் அலறல்களுக்குச் சாட்சியாக இருந்த அந்த வீட்டின் அறை கள்ள மௌனம் சாதித்தது. சுவற்றில் இருந்த சாமிகள் நான் ஒன்றையும் பார்க்கவில்லை, அது என் வேலையா என்ன? என நடந்த அக்கிரமத்தை கண்டு கொள்ளாமல் விட்டிருந்தன.

உடலில் பொட்டுத் துணியில்லாமல் இருந்தாள் சுலோச்சனா. அங்கங்கே ரத்தக் கட்டுக்கள் இருந்தன். அந்தரங்கமான இடங்களில் எல்லாம் பற்களால் குதறப்பட்டு இருந்தாள் அவள். உடலே காயத்தால் காந்திக் கொண்டிருந்தது.
தன்னைப் பார்த்து தனக்கே அவமானமாக இருந்தது. கண்ணீர் நில்லாமல் பொழிந்தது. சற்று முன்பு வரை மயக்கத்தில் கிடந்தவளுக்கு முழிப்பு வந்திருக்கத் தன்னைப் பார்த்து தனக்கு நேர்ந்ததை அறிந்து ஓவெனக் கதறி அழத் தோன்றியது. ஏனோ அந்நேரம் இனி தன் வாழ்வில் ஒன்றுமே இல்லை என்பது போன்ற வெறுமையை உணர்ந்தாள்.

கடைசியில் எல்லாம் இதற்காகத் தானா? அவளது இரத்தமும் அவனது இந்திரியமுமாய்ப் பிசுபிசுத்துக் கிடந்தது அவள் கால்கள். அடித்தானே? மிரட்டினானே? அவனைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய நான் தகுதியாய் இருக்கக் கூடாதாமே? அப்படியா? எல்லாம் அவன் முடிவே தானா? என் உடல், என் மனம் அதில் எனக்கென விருப்பமும் , விருப்பமின்மையும் இருக்கக் கூடாதா என்ன? கண்ணீர் சுரப்பிகள் சூடாய் கன்னத்தில் இறங்கிக் கொண்டே இருந்தன.

கேவல் வெடித்தது, நன்கு குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான் பிரசன்னா. அவனுடைய தவிப்புகள், பாதுகாப்பின்மை உணர்வு எல்லாம் வடிந்து நிம்மதியாய் தூங்கிக் கொண்டிருந்தான். அவளை ஆண்டு முடித்த நிறைவு வேறு. இனி நம் கைக்குள் தான் அவள் எனும் அகங்காரத்தின் நிறைவும், குடித்த சரக்கின் மப்பும் அவனை நன்கு உறங்கச் செய்தது.

எழ முயற்சித்தாள் அவள், இடுப்பிற்குக் கீழே ஒன்றுமே இல்லாதது போல உணர்ந்தாள். ஐயோ எழ முடியவில்லையே? சிறு நீர் கழிக்க உந்துதலாக இருந்தது. டாய்லெட் நோக்கிச் செல்ல வேண்டுமே? தரையோடு தரையாக நடை பழகாத குழந்தைப் போலக் கை ஊன்றி ஊர்ந்தாள். ஒவ்வொரு முறையும் அவளுக்கு வலி உயிர் போனது. அம்மா, அம்மா எனத் தீனமாகக் கதறினாள்.

இதோ வந்து விட்டது கழிவறை, டேப்பால் சுற்றப்பட்டுக் கட்டப்பட்டிருந்த தன் கால்கள் புணரப் படுவதற்காகச் சுதந்திரமாய் வெட்டி விடப்பட்டிருக்க, கைகளில் இன்னும் டேப் ஒட்டியே இருந்தது. கால்களை அகலப் படுத்தி, முழங்கால்களால் ஊன்றி கூடவே கட்டப் பட்டிருந்த தன் கைகளை முன்னே ஊன்றி கடும் பிரயத்தனத்திற்குப் பின்னர்த் தள்ளாடி தடுமாறி எழும்பி நின்றாள். அவளது தொடைகள் நடுங்கலாகின. சுவற்றோடு சுவறாய் ஒட்டி நின்று ஆசுவாசம் கொண்டாள்.

கழிவறையின் உள்ளே கால்களை எட்டு மேல் எட்டு வைத்துச் செல்லுவதற்குள்ளாக வலி உயிர் போனது. சிறுநீர் கழிக்க முயன்றுப் பார்த்தாள். துன்புற்ற அவள் உறுப்பால் அந்தச் செயலைச் செய்ய முடியவே இல்லை. திகுதிகுவெனத் தீயாய் உறுப்பு எரிந்ததே அன்றி அவளால் சற்றும் முடியவே இல்லை. வலி வலி வலி தாங்காமல் ஓவெனக் கதறினாள். அங்கே யாரும் அவள் குரல் கேட்பாரில்லை.

தீயென உள்ளுறுப்பு எரிய சொட்டுச் சொட்டாய் சிறு நீர் கழிக்கும் வரை கதறிக் கொண்டே இருந்தாள். அவள் கூக்குரல் கேட்க யாரும் அங்கு இல்லை…இல்லவே இல்லை.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here