8. நாயகி

0
917
Naayagi Jansi Rani

அத்தியாயம் 8

பிரசன்னா என்னென்னவோ செய்து பார்த்து விட்டான். எத்தனையோ முறைக் கேட்டு விட்டான். சுலோச்சனாவிடமிருந்து அவனுக்குத் தேவையான பதில் வரவே இல்லை.

அதிலும் சுனிலை அவன் எதற்காக அடித்தான்? என்று அவனிடம் அவள் சண்டைப் போட்ட போது அவளது உரிமையான கோபம் அவனுக்கு மிகவும் பிடித்தது.

‘அதுதான் நீ என்னைத் தவிர எந்த ஆம்பளை கிட்டே பேசினாலும் எனக்குப் பிடிக்கலைன்னு தெரியுதில்ல? அப்புறம் எதுக்கு அவனுங்க கிட்ட பேசணும்? அவனுங்க என் கிட்ட எதுக்கு உன்னால அடி வாங்கணும்’, என அலட்டலாய் சிரித்தான்.

இவன் வர வர சைக்கோவா மாறிட்டு இருக்கான். என எண்ணியவளாய் அவனிடமிருந்து பேசாமல் அங்கிருந்து நகர்ந்தாள். பிரசன்னாவை யார் கண்டு கொண்டார்களோ இல்லையோ மதுப்ரேமி எனும் அவன் பேட்ச் நண்பி கண்டு கொண்டாள்.

அது பிரசன்னாவிற்கும் நல்லதாகப் போயிற்று. அவளது அட்வைஸ் படியே தினம் ஒரு பரிசை, க்ரீட்டிங்க்ஸை பிரசன்னா சுலோச்சனாவிற்கு அனுப்பி வைத்துப் பார்த்தான். அத்தனையும் போன வேகத்தில் திரும்பி வந்தது.

அப்போதுதான் சுலோச்சனாவின் பிறந்தநாள் குறித்துத் தெரிய வர கல்லூரியில் பூங்கொத்தோடு பிரசன்னா காத்துக் கொண்டிருந்தான். அன்று அவளுக்காகவே வெகுவாகச் சிரத்தை எடுத்து புறப்பட்டு இருந்தான்.

தன் எதிரில் பளிச்சென்று சுடிதாரில் அசைந்தாடும் தேவதையாகச் சுலோச்சனாவைப் பார்த்தவன் அவளில் இலயித்துப் போனான். பொதுவாகவே தன் நண்பனைக் குறித்து அதிகமாய்ப் பெருமிதம் கொள்ளும் மதுப்ரேமிக்கு சுலோச்சனா இவனுக்கு ஏற்றவளில்லை எனும் எண்ணம் உண்டு.

அதனால் இவளெல்லாம் இவனுக்கு ஈடா? எனும் ஒவ்வாமை உணர்வோடேயே அவளைப் பார்த்து நின்றாள். அவளுடைய எளிமையான அலங்காரத்திலேயே தடுமாறும் அவனது உள்ளம் இன்று அவள் கோவிலுக்குச் சென்று வந்து கண்ணை நிறைக்கும் வண்ணம் பாந்தமாய், சற்று அதிகமான ஒப்பனை, காதில் பெரிய கம்மல் போட்டு சில இமிடேஷன் நகைகளோடு வந்து கொண்டிருக்க, அந்த அழகு அவனை வெகுவாய்த் தாக்கியது.

இந்த அழகு முழுவதும் எனக்குத்தான் என்று அவன் உள்ளத்தில் உவகைப் பொங்கி எழுந்து வந்தது. இதுவரை போலீஸில் பிடித்துக் கொடுப்பேன், பிரின்ஸியிடம் சொல்லுவேன் என்று அவள் சொல்லி இருக்கிறாளே தவிர அப்படிச்செய்யவில்லை. அது அவன் மேல் இருக்கும் பிரேமையால் தான் எனும் முடிவுக்கு அவனாகவே வந்திருந்தான்.

கையில் இருந்த சிகப்பு ரோஜாக்கள் கொண்ட பூங்கொத்தை ஏந்தி கொண்டவனாக அவன் முன்னே போய் நின்றான் அவன். அவளோ கஜினி முகம்மதுவைப் போலப் படையெடுத்துக் கொண்டே இருக்கும் இவனிடம் எத்தனை முறைதான் விருப்பமின்மையைச் சொல்வது என்கின்ற ஒரு சலிப்பு நிலையினை அடைந்திருந்தாள்.

அந்தப் பூங்கொத்தையும் அவனுடைய மலர்ந்த முகத்தைப் பார்த்து என்ன சொல்வது என்று செய்ய முடியாமல் திகைத்து நின்றாள். ஏனென்றால் இப்போதெல்லாம் பிரசன்னா, சுலோச்சனா விஷயம் மெதுமெதுவாகக் கல்லூரியில் பரவி கொண்டிருந்தது.

காதலையும் கருவாட்டு வாசனையையும் மறைத்து வைக்க முடியாது என்பது பொய்யல்லவே? ( நோ கல்லெறி ப்ளீஸ்)

இப்போதெல்லாம் அவளுடைய தோழிகள் அவளிடமே வந்து பிரசன்னாவை புகழ்ந்து, உன்னிடம் இவ்வளவு நல்ல ஒரு ஆண்மகன் காதலை சொல்லியும் அவனுக்கு நீ சரி என்று சொல்ல மாட்டேன் என்கிறாயே? என்று திட்ட ஆரம்பித்து இருந்தார்கள். ஒட்டு மொத்த உலகமும் அவன் சார்பாக நின்று பேசுவது போலவும் தனக்கு யாரும் இல்லாதது போலவும் அவளுக்குச் சில நாட்களாகத் தோன்ற ஆரம்பித்திருந்தது.

எப்படியாவது இன்னும் சில மாதங்கள் கடந்து விட்டால் இவன் தொல்லை தீர்ந்து விடும் அதுவரை அமைதிக் காக்க வேண்டும் என்கிற உறுதிப்பாட்டில் இருந்ததால் இப்போதெல்லாம் அவள் அதிகமாக எதிர்வினை ஆற்றுவதில்லை செய்வதில்லை. அமைதியாகக் கடந்து சென்று விடுவாள்.

அவள் மனம் அவனது தொல்லைகளினின்று விடுதலைக்காக ஏங்கிக்கொண்டிருந்தது. பிறந்தநாள் மலர்ச்சியில் சீக்கிரமாகவே கல்லூரி வந்து விட்டவளுக்கு அந்த ஒற்றையடிப்பாதையை மறித்துக் கொண்டு நிற்கும் அவனை எதிரில் பார்த்ததும் என்ன செய்வதென்றே புரியவில்லை.

‘மை ஸ்வீட் ஹார்ட் இன்று உனக்குப் பிறந்தநாள் என்று நீ சொல்லாவிட்டால் மட்டும் எனக்குத் தெரியாமல் போய்விடுமா?
ஹாப்பிப் பர்த்டே டா ஸ்வீட்டி…;

என அவள் கையில் வலுக்கட்டாயமாக அந்தப் பூங்கொத்தைக் கொடுத்தான். வாங்காமல் நின்றவள் கையைப் பிரித்துத் திணித்தான்.

அத்தோடு நிற்காமல் சரி வாழ்த்தி தொலைத்து விட்டான். அடுத்ததாக வழி விடுவான் என்று எண்ணி அவனைத் தாண்டி செல்ல முயலும் போது, அவளை அவன் இழுத்து அணைத்து, அவள் தலையை உயர்த்தித் தன்னுடைய உதட்டோடு உதடு சேர்த்து அழுத்தி முத்தமிட ஆரம்பித்து விட்டான்.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here