வெளிச்சப் பூவே Teaser

0
562
Velicha Poovae

இந்த பகுதி கதையின் நடுவில் வர வேண்டிய ஒன்று. எழுதி வைத்துள்ளதால் பகிர்ந்துக் கொள்கிறேன்.

டுடே ஐ வாண்ட் டு ஃபீல் யூ…

கணவனின் தடுமாற்றத்தை புரிந்தாலும் புரியாதது போல நமட்டுச் சிரிப்போடு…என்னது பீல்? என்று கேட்டாள்.

தன் முன்னே தடுமாற்றத்தோடு நின்றுகொண்டு இருப்பவனை பார்த்து கொஞ்சம் பரிதாபமாக கூட இருந்தது நான் உன் மனைவி. அட என்னிடம் கூட நீ இவ்வளவு தடுமாறுவாயா?

உன்னையெல்ல உலகம் பெண் பித்தன் என்று சொல்கிறது பாரேன்…

என்று நொந்து கொண்டாள்.

படுத்திருந்தவள் தன்னருகே நின்றவனது விரலை பற்றினாள்.

அது குளிர்ந்து போய் இருந்தது. அவனை தன் பக்கம் இழுத்தாள் அவனது முடியை கலைத்து, நெற்றியை முத்தமிட அவனும் அனுமதித்தான்.

அவனே அவன் வசத்தில் இல்லையே இருந்தால் அவளை அவன் தொடவும் அனுமதித்து இருப்பானோ? என்னவோ?

விக்ரம் …கிசுகிசுவென பேசியவள்…

’ என்னமோ பீல் செய்யணும் என்று சொன்னாயே எப்படி இப்படியா?”

என்று தன்னுடைய மழு மழு கன்னத்தை அவனது இரண்டு நாள் தாடியில் தேய்த்தாள்.

அவனுக்குள் பூகம்பங்கள் வெடித்துக் கொண்டு இருப்பதை அவள் உணர்ந்து கொண்டே இருந்தாள்.

மெதுவாய் அவனது மயிர் அடர்ந்த நாடியை பற்றினாள் தன்னுடைய உதடுகளை அவனிடம் நெருக்கி தாடையில் அழுந்த முத்தமிட்டாள்.

அவனது உடல் நடுக்கம் என்னும் மிஞ்சியது சற்று நகர்ந்த அவள் விரல்கள் அவனது காது மடலை வருடவே அவனது நடுக்கமும் கூடியது.

அவனது முகத்தில் தனது முகத்தை மென்மையாக தேய்த்து கொண்டு இருக்கும் போது கணவனின் பிடி இறுகுவதை உணர்ந்தாள்.

ஒரு நொடியில் தன் கட்டுப்பாட்டிற்குள் அவளை கொண்டு வந்திருந்தான் விக்ரம் அடுத்து நிகழ்ந்தது அனைத்தும் ஆண் பெண் கூடல் என்று வெறுமையாக செல்லும்படி இல்லாமல் ஏதோ தவம் போல அவன் அவளை ஆட்கொண்டான்.

வாயால் சொல்லப்படாத தனக்கான காதல் மொழி எல்லாம் கணவன் அவளது உடலால் தெரிவித்து கொண்டிருந்தான்.

அத்தனை முத்தங்கள் ஏக்கம் தீர அத்தனையும் மனதில் கொண்டாடிக் கொண்டிருந்தாள் அவள்.

“இது நீதானா என் ஊமைக் கோட்டானே?

நீ வாயால் காதலை சொல்ல வில்லை என்று நான் இனி ஒருபோதும் வருத்தப் பட போவதில்லை உனக்கு அப்படி காதலை சொல்ல தெரியவில்லை என்று மட்டும் புரிந்து விட்டது.

மேலும் அவளை சிந்திக்கும் நிலையில் அவன் விடவில்லை.

கடலில் இழுத்துக் கொள்ளப்பட்டாள்…ஆம் அவனது காதலெனும் கடலில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here