10. வெளிச்சப் பூவே

0
712

அத்தியாயம் 10

அடுத்த நாள் தங்களது வழக்கமான வேலை நேரம் முடிந்த பின்னர் பிரவீனா பிரேமை தேடி கொண்டு வந்தாள்.

“என்னடா கவியை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போனியா?”

 என்றவளிடம் 32 பற்களும் தெரிய சிரித்தவன்,

“ஆமாம் பிரக்னன்சி கன்ஃபார்ம் ஆகிடுச்சு” என்றதும் அவன் கையை குலுக்கி உற்சாகம் கொண்டாள்.

“டேய் நீதாண்டா என் மாமனார், அதை நான் இன்றைக்கு கன்ஃபார்ம் பண்ணிட்டேன்” என்றவளிடம் அதெல்லாம்,

“நாங்க பொண்ணு அப்புறமா தேடிக்கிறோம். வயசு அதிகமான பொண்ணுங்க எல்லாம் எங்களுக்கு தேவை இல்லை” என்று பிகு செய்து கொண்டான்.

“ம்க்கும்… சரி சரி என்ன ஆச்சு? எதற்காக அந்த ஹாஸ்பிடல் போக வேண்டாம் என்று சொன்ன? கவி முன்னாடி பேசக் கூடாதுங்கிறதுக்காக சைகை எல்லாம் காண்பிச்ச”

 பொறு என்றவன் சாதாரணம் போல காரிடாரில் நடந்து திரும்பி வந்தான். இவர்கள் செய்யும் கள்ளத்தனங்கள் வெளியில் தெரியாமலிருக்க வழக்கமாக செய்யும் முன்னேற்பாடுகளுள் ஒன்றுதான் அது.

வந்தவன் முதலில் அவளுடன் தாளில் சில விபரங்கள் எழுதி அதற்கான குறியீடுகள் பகிர்ந்துக் கொண்டான். ஆம், எல்லா நேரமும் புது புது கேஸீகளுக்கு ஏற்ப ஆரம்பத்திலெயே அவர்கள் செய்துக் கொள்ளும் ஏற்பாடுகளுள் இதுவும் ஒன்று.அப்போதுதான் இவர்கள் பேசுவது எதனை குறித்து என யாருக்கும் தெரிய வராது.

;இது விஷயமாக தான் நான் உன்னிடம் பேசுவதாக இருந்தேன் என்றவன் அவசரமாக தன்னுடைய லேப்டாப்பை அவள் பக்கம் திருப்பினான்.அதில் இருந்த கோப்பில் தொடர்ந்தாற் போல அது ஒரு சில தேதிகள் மற்றும் செய்தி குறிப்புகளின் சுட்டிகள் இருந்தன.

அதனை பார்த்ததும் பிரவீணாவிற்கு உடனே ஒன்றும் புரியவில்லைதான் ஆனால், மெதுமெதுவாக கிரகிக்க துவங்கினாள்.

முதலாவதாக அதில் இருந்தத செய்தி கடந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான சினி அவார்டு பெற்றுக் கொண்ட நடிகை குறித்த செய்தி. அந்த செய்தியோடு மற்றொரு தேதியும் செய்தியும் இணைக்கப் பட்டிருந்தது. அது விக்ரம் அந்த நடிகையின் இடுப்பை பிடித்து இழுத்து அணைத்ததாக பெரிதளவில் சர்ச்சையாகி இருந்த செய்தி. விருது பெறுவதற்கு இரண்டு மாதங்கள் முன்னதாக விக்ரமோடு கூடிய அந்த சர்ச்சைக்குரிய நிகழ்வு நடைப் பெற்றிருந்தது.

அடுத்து இருந்த செய்தி மார்க்கெட் இழந்த மாடல் திடீரென ஷோ ஸ்டாப்பராக ஆகியிருந்த தேதியை காண்பித்தது. அதற்கு இணைவாக குறிப்பிட்டிருந்த தேதியும் செய்தியும் சில மாதங்கள் முன்பாக அதே மாடல் விக்ரமிற்கு எதிராக அவன் தன்னை படுக்கையறைக்கு அழைத்ததாகவும் தரக்குறைவாக பேசியதாகவும் அவன் கலந்துக் கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக பேட்டிக் கொடுத்திருந்தாள்.

தற்போது ஷோ ஸ்டாப்பரான பின்னர் அந்த மாடல் மறுபடி முன்னணி மாடல்களும் ஒருவராக திகழ்வதையும் சில குறிப்புகளில் சேகரித்து வைத்திருந்தான் பிரேம்.

அது மட்டுமல்லாது இன்னும் எண்ணற்ற பெண்கள், பல்வேறு துறைகளில் உள்ள பெண்கள் அவர்கள் அனைவர்களோடு கூட விக்ரம் சம்பந்தப்பட்ட செய்திகள் வெளிவந்த சில மாதங்களில் அவர்கள் அடைந்த உயரங்கள் , அதற்கான சில செய்தி , முக நூல் காணொளி அல்லது படங்கள் இவற்றை அடுக்கி இருந்தான்.

பெரும்பான்மையான பெண்களின் நிகழ்வுகள் ஒன்று போலவே அமைந்து இருந்தன. அவற்றை மறுபடி மறுபடி பார்த்து உறுதி செய்தவள் ஆச்சரியத்தில் தனது வாயை பிளந்தாள்.

டேய் பிரேம், இந்த விக்ரம் பெரிய அப்பா டக்கர் போலவே தான் வம்பிழுக்கிற பொண்ணுங்களை எல்லாம் டாப்புல கொண்டு போய் வச்சிடுறான்டா. பொண்ணுங்களும் வெளியே நல்லா பேட்டி கொடுத்துட்டு அவன் கிட்டேயும் எல்லாம் காரியம் சாதிச்சுக்கிடுதுங்க போலிருக்கு,

‘உனக்கு அப்படியா தோணுது பிரவீ?’

‘அப்படித்தானடா நீ சொல்லிட்டு இருக்கிற… அப்புறம் எதுக்கு இதெல்லாம் எனக்கு காண்பிச்சடா லூஸூ.’

அவன் பதில் சொல்லாததை கண்டதும் தொடர்ந்தாள்

‘சரி மத்ததை விடு ஹாஸ்பிடல் விஷயம் என்ன அதைச் சொல்லு முதலில்’ என்றாள். உடனே, அவன் சேகரித்து இருந்த செய்திகளில் கடைசியாக இருந்த அந்த பெயரை ஹைலைட் செய்தான்.

அது கடந்த ஒரு வருடம் முன்பு விக்ரம் மீது குற்றம் சாட்டி இருந்த இளம் தொழில் அதிபர் சாமுத்திரிகா பிரபு குறித்த செய்தி…

ஆமாம் இந்த லேடி கூட பெண்கள் சங்கம் வரைக்கும் போய் விக்ரமுக்கு எதிரா போராட்டம் நடத்தின ஆளாச்சே.

………….

எனக்கே இப்படி ஒரு நிலைமைன்னா இந்த விக்ரம் கீழே பணிபுரியும் பெண்களுக்கு என்ன நிலைமையோன்னு பிழிஞ்சு பிழிஞ்சு அழுதுச்சே.

ம்ம்ம்

நம்ம பத்திரிக்கையில் இருந்து கூட நம்ம ஷீபா இரகசியமா அந்த ஹோட்டல் எம்ப்ளாயீஸை குறிப்பா லேடீஸை பேட்டி எடுக்க போயிருந்தா இல்லையா?

ம்ம் ஆமாம்…

யாருமே வாய திறந்து ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறாங்க, ரொம்ப பொல்லாதவன் போலிருக்கு. உள்ளே யாரையாவது இரகசியமா அனுப்பி துப்பு துலக்கணும்னு சொல்லிட்டு இருந்தா…

ம்ம் தெரியும்…

அதுக்கப்புறம் என்னாச்சுன்னு நான் கேட்டுக்கலை…

நான் நேத்து தெரிஞ்சுக்கிட்டேன்…

என்னவாம்?

ஒரு துப்பும் துலங்கலையாம், தப்பா ஒன்னும் கிடைக்கலையாம்…

ம்ம்.. விக்ரம் பெரிய கில்லிதான் இல்ல…

மறுபடி ட்ராக் மாறிட்டேன் பார்த்தியா? சகுந்தலா க்ரூப் ஆஃப் ஹாஸ்பிடல்ஸ் விபரம் சொல்லு முதல்ல…

அந்த ஹாஸ்பிடல் விபரத்தை கணிணியில் தட்டவும் இணையம் கேட்டதற்கு மேலாக விபரங்களை கொட்டி தந்தது. ஹாஸ்பிடலின் இணைய பக்கத்தின் உள்ளே உள்ளே உள்ளே என அவளை நடத்தி சென்றவன் காட்டிய பெயர் நிர்வாக இயக்குனர் திருவாளர் பிரபு சோம நாதன், சாமுத்திரிகா பிரபுவின் கணவர்.

….புரியலடா… நினைவடுக்கில் ஏதோ சிக்கி தவிக்க ஞாபகத்தில் வராமல் திகைத்தாள்.

அந்த ஹாஸ்பிடல் ரெய்டு, குழந்தைங்க கடத்தலில் ஈடுபட்ட ஹாஸ்பிடல், கேஸ் கூட நடந்துட்டு இருந்துச்சே….

ஆமாம் ஞாபகம் வந்திருச்சு…. அதை நிர்வகிச்சுட்டு இருந்தது சாமுத்திரிகா பிரபு…

கரெக்ட் இப்ப அந்த குழந்தைங்க கடத்தல் கேஸை விசாரிச்சு பார்த்தா வடிவேலு கிணற்றை காணோம்னு சொன்னது போல கேஸைக் காணோம். இப்ப மேடம் புருஷன் பெயரில் புது குழுமம் ஆரம்பிச்சு நடத்துறாங்க. அதுதான் இந்த ஹாஸ்பிடல்…

ஓ…. பிளந்த வாயை மூடாமல் அமர்ந்திருந்தாள் பிரவீணா…

இது பெரிய கேஸா இருக்கும் போலவே பிரேம்.

தலையசைத்தான்… ஆனா நீ நினைக்கிறது போல இல்லை. ஏதோ ஒன்னு இருக்கு, ஆனா கண்ணுக்கு மறைவா இருக்கு நாம அதை கண்டு பிடிக்கணும்…

முன்பின் யோசிக்காமல் கட்டை விரலை உயர்த்திக் காட்டி ‘டன்’ என்றாள் ஆம் அதுதானே அவள் சுபாவம்.

     என்னவோ திட்டமிட்டுவிட்டார்களே ஒழிய விக்ரம் விஷயத்தில் அவர்களால் ஒரு அடியையும் எடுத்து வைக்க முடியவில்லை. பெரிய இரும்புக் கோட்டை போல நுழைய முடியாமல் அவனது கேஸ் அவர்களுக்கு சவாலாக இருந்தது.

தொட்டால் பொன்னாகும் என்பது போல விக்ரம் விஷயத்தில் அவனை பெண் பித்தன் என தூற்றுபவர்கள் எல்லோரும் உச்சத்தில் சென்றுக் கொண்டிருக்க இவர்கள் அதனை நுணுக்கமாக கவனித்துக் கொண்டு இருந்தனர். செல்லோ டேப்பின் நுனியை போலவே விக்ரம் கேஸ் அவர்களுக்கு நுனி கிடைக்காமல் தண்ணி காட்டிக் கொண்டு இருந்தது.

விக்ரம் கேஸிற்காக விபரம் சேகரித்துக் கொண்டிருக்கும் நேரம் அதற்குள்ளாக இன்னும் இரண்டு இரகசிய கேஸ்களும் அவர்கள் முடித்து விட்டிருந்தனர். அதில் அவர்கள் பாஸின் கேஸீம் ஒன்று. நேரம் போகாமல் வெட்டி முறித்துக் கொண்டிருந்த ஒரு சுப யோக, சுப தின, சுபமுகூர்த்தத்தில் தங்கள் பாஸ் தன் கர்ள் பிரண்டோடு கொடைக்கானல் சுற்ற சென்றிருப்பதை இரகசிய தகவலாக அவர் மனைவிக்கு போட்டுக் கொடுத்து விட்டு மன நிம்மதியாக இருவரும் இருந்தனர்.

ஒரு வாரம் கழித்து கண்களுக்கு கீழ் சிகப்பு வளையத்தோடு அலுவலகத்துக்கு வந்த பாஸின் நலம் விசாரிக்கவும் அவர்கள் இருவரும் மறக்கவில்லை. அந்த நேரத்தில் தான் சந்தியா மூலமாக அவள் நன்பணின் விபரம் கேட்டதும், தொடர்ந்து கிடைத்த தகவலின் படி அடுத்தடுத்த நிகழ்வுகளில் அவனே புகைப்படம் எடுக்க சாத்தியம் இருப்பதை அறிந்து, அவன் நம்பரை ஹேக் செய்து அவனை பின் தொடர்ந்ததும் தாங்கள் நினைத்த வண்ணம் நிகழவிருந்தவற்றை மாற்றி மகிழ்ச்சி அடைந்ததுவும்…

அன்று…

விக்ரம் குழப்ப மனநிலையோடு மனதிற்குள்ளாக இன்று ஏதோ ஒன்று நடக்கப் போகின்றது என்பதை உணர்ந்தவனாக மிக கவனமாக விழா நேரம் முடிய காத்திருக்க, ரிஷியின் கவனம் ஹோட்டலின் அந்த பகுதியின் நாலா புறமும் சுழன்றது. எப்போதும் விக்ரமுக்கு எதிராக நிகழும் அபத்தங்களை தான் அருகில் இருந்தும் தவிர்க்க வைக்க முடியாத நிலையை அறவே வெறுத்தான்.

ஆரம்ப காலத்தில் விக்ரமுக்கு எதிரான நிகழ்வுகள் நிகழும் போதெல்லாம் அவனை அங்கிருந்து யாரோ நகர்த்தி இருப்பார்கள். இதை அதை உணர்ந்தவன் அதனை தவிர்க்க ஆரம்பித்தான்..ஓரிரு நிகழ்வுகள் தடுக்கப் பட்டன எனினும் கூட அடுத்த முறைகளில் விக்ரம் இவனிடமிருந்து தனித்து நிற்கும் படி ஆகி ஏதேனும் இக்கட்டுக்களில் மாட்டிக் கொள்வான். இன்று அப்படி எதுவும் நிகழ்ந்து விடக் கூடாது என்று எண்ணியவனாக விக்ரமுக்கு அரணாக நிற்க அதே நேரம் அந்த பெண் விக்ரமை நெருங்கினாள்.

சந்தியாவின் நண்பன் மாறனுக்கு அலைபேசியில் செய்தி வர, அவன் விக்ரமை நோக்கி தனது கேமராவை திருப்பி தெளிவாக படம் எடுக்க கேமரா ஆங்கிள் பார்த்து அட்ஜஸ்ட் செய்து வைத்தான்.

அதே நொடியில் மாறன் ஃபோனை ஹேக் செய்திருந்த பிரவீணாவிற்கும் செய்தி வந்து சேர அதை வாசித்தவள் உடனே தன்னோடு தொடர்பிலிருந்த பிரேமுக்கு தகவல் சொல்ல, பிரேமோடு தொடர்பிலிருந்த மற்ற இருவருக்கு தகவல் அடுத்த நொடியே சென்றடைய ,

விக்ரமை நோக்கி சென்ற பெண் மேல் கண் பதித்திருந்த ரிஷி முந்தும் முன்பாக அவள் விக்ரமின் அருகில் நெருங்கவும் அவளது சேலையில் யாரோ மிதித்திருந்தார்கள். அவள் நிலை தடுமாறி கீழே விழ, சட்டென்று விக்ரமின் முன்பாக வேறொரு பெண்ணால் பூங்கொத்து நீட்டப்பட்டது.

விக்ரம் தனது தந்தையின் பெயரால் நடத்தி வரும் ட்ரஸ்ட் மூலம் நடைபெறும் நல்ல விஷயங்களை விளம்பரப் படுத்திக் கொண்டு வாழ்த்தி அந்த பூங்கொத்தை விக்ரமின் கையில் அப்பெண் திணித்தாள்.

 அதே நேரம் விக்ரமை நெருங்கவிருந்த அந்த பெண்  நிலை தடுமாறி தற்போது நிமிர்ந்திருக்க, விக்ரமின் பக்கம் அவளை திரும்பவும் விடாமல் வலிய கரங்கள் இரண்டு அவளின் தோள்பட்டைகளை அழுத்தி பிடித்தவாறு வெளியெ நடத்திச் சென்றது.

தனக்கு முதன் முறை பிறர் முன்பு கிடைக்கும் மதிப்பு, மரியாதை பாராட்டு இவற்றை ஜீரணிக்க இயலாதவனாக தன்னிடம் மிகவும் மரியாதையாக பேசும் பெண்ணிடம் தட்டு தடுமாறி பதில் கூறிக் கொண்டு இருந்தான் விக்ரம், மாறனின் கேமரா அனைத்தையும் விழுங்கிக் கொண்டு இருந்தது.

இங்கோ வெகு நாளாக தடைப்பட்டுக் கிடந்த தங்களது திட்டத்தின் முதல் படியை எடுத்து வைத்து விட்டதாக எண்ணி பெண்ணவள் உற்சாக மிகுதியில் விசிலடித்துக் கொண்டிருந்தாள்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here