8. வெளிச்சப் பூவே

0
584
Velicha Poovae

VP 8

பெண் பார்க்கும் படலம் நிறைவுற்றதும் பிரவீணா தன் வீட்டில் தந்தையிடம் தனது மனதில் உள்ளவைகளைச் சொல்லி அந்தத் திருமண விஷயத்திற்கே இலகுவாக முழுக்கு போட்டு விட்டு, களைப்பாக இருப்பதாகச் சொல்லி மாடியிலிருக்கும் தனது அறைக்குச் சென்று உறங்கிவிட்டாள். அக்ஷயோ இதை அறியாமல் மிகுந்த மன மகிழ்ச்சியோடு இருந்தான். அவனைப் போலல்லாமல் அவனது தாயார் வேறு சிந்தனையோடு இருந்தார்.

என்னதான் பிரவீணாவின் முகத்தில் எல்லோர் முன்பும் எதையும் காட்டிக் கொள்ளாத புன்னகை இருந்தாலும், அவளது தோற்றத்தின் மூலம் ஒரு சிலவற்றை மகாலட்சுமி கண்டுகொண்டார். அவரது மகள் குடும்பத்தை வருகின்ற வழியில் அவர்கள் வீட்டில் ட்ராப் செய்து விட்டுப் புறப்பட்ட பின்னரே மனதிில் உள்ளவைைகளைக் கூற தன் வாயை திறந்தார்.

அக்ஷயின் தாயாருக்கு மகன் தனது தொழில் முறை வாழ்வின் வெற்றிப் படிகளைக் கடந்து கொண்டு இருந்த போதிலும், குடும்பம் என்று வருகின்ற பொழுது, உறவுகளோடு சரிவரப் பழகுகிறான் இல்லை எனும் மன வருத்தம் உண்டு. ஆனால், அவனோ தனது இயல்பை உணர்வதாகவோ, திருத்திக் கொள்வதாகவோ இல்லை.

தனக்கும் பிரவீணாவிற்குமான திருமண வேலைகளை எப்படிச் செய்யலாம்? என்று காரை செலுத்திக் கொண்டே வாய் மூடாமல் பெற்றோரிடம் அடுக்கிக் கொண்டே இருப்பதைப் பார்த்து அவனை மகாலட்சுமி தடுத்து நிறுத்தினார்.

‘முதலில் பொண்ணு வீட்டில் சரின்னு சொல்லட்டும். அதற்கு அப்புறம் யோசிக்கலாம்’ என்றார்.

‘அவ சரின்னு தான் சொல்லுவா அம்மா. இப்ப நீங்க ஏன் இப்படி அபசகுனமா பேசுறீங்க? ’ என்றான்.

ஜனார்த்தனமும் மனைவியின் பேச்சை அவ்வளவாக இரசிக்கவில்லை.

‘என்னமா லட்சுமி இப்படிச் சகுனத் தடை போலப் பேசுறியே? அந்தப் பொண்ணும் நம்ம வீட்டு மருமகளாக வந்தால் போதும் நம்முடைய பிசினஸ் எல்லாவற்றையும் நல்ல பார்த்துக் கொள்வாள். நமக்குக் கவலையே இல்லை’ என்றார் அவர்.

‘பொண்ணு நல்ல பொண்ணு தான், நம்ம பையனுக்குச் சரின்னு சொன்னா எனக்கும் சந்தோஷம் தான்’ என்றார்.

‘அப்படின்னா அவ என் மகனை கட்டிக்க மாட்டான்னு நீயாவே முடிவு செய்து கிட்டியா?’ மனைவியின் பேச்சில் தனது ஈகோ சீண்டி விடப்பட்டதாக உணர்ந்தவர் பேச்சின் சூடு ஏறியது.

‘அப்படி இல்லைங்க அந்தப் பொண்ணு முகத்தைப் பார்த்து எனக்கு அப்படித் தோணுச்சு, எதுக்கு இவ்வளவு கோபம்?’ தணிந்து போனார்.

‘என்னமா அப்படி என்ன நான் குறைஞ்சு போயிட்டேன். என் படிப்பு, லுக், கேரக்டர் எதில தப்புன்னு சொல்லுங்க?’

‘உன்கிட்ட் ஏதாாவது குறை இருக்குது அப்படி நான் ஏதாவது சொன்னேனா? ஏன்டா பொறியிற?’

முறைத்த கணவரிடம்

‘அப்பாவுகும், பிள்ளைக்கும் கல்யாணம் பண்றது வியாபாரம் என்பது போல ஆகிடுச்சு. நான் அந்தக் காலத்து மனுஷி.அதனால நீங்க நினைச்சது மாதிரி எல்லாம் வளைஞ்சு போயிட்டு இருந்தேன். அதை இந்தக் காலத்து பொண்ணுங்க கிட்ட எதிர் பார்க்காதீங்க. கொஞ்சம் கொஞ்சம் காலத்துக்கு ஏற்ற மாதிரி மாறுங்க’ என்றார். மகனும் கணவனும் புரிந்து கொள்ளாமல் பேசுவதில் அவர் குரலில் சூடு ஏறி இருந்தது.

அம்மாவின் பேச்சு ஆண்கள் இருவருக்குமே பிடிக்கவில்லை

‘திருமணம் என்பது வியாபாரம் இல்லை மகனே, ஒருவருக்கொருவர் விரும்பி ஒரு பந்தத்தில் இணைய நம்ம மனசு ரொம்ப முக்கியம். எல்லாவற்றிலும் உன்னுடைய விருப்பம் தான் நடக்கணும் என்பதுபோலக் காண்பித்தாய் என்றால் எந்தப் பெண்ணுமே சரி என்ன சொல்வது கஷ்டம் தான், தனியே பேசுவதைக் கூட நீ பெரியவர்களிடமோ அவளிடமோ அனுமதி கேட்கவில்லை ஆர்டர் தான் போட்டாய். அந்தப் பெண் திடுக்கிட்டு முழித்தாள் கவனிக்கலியா?’

‘ஏம்மா நீங்க எந்தக் காலத்தில் இருக்கிறீங்க? ஃப்ராங்கா இருக்கணும் அதுதான் இப்ப ஃபேஷன். காலம் மாறிடுச்சும்மா’

… தாயை பார்த்து முறைத்தான்.

‘ஒரு பொண்ணுக்குத் தாயாக இருப்பதாலேயே பிரவீணா பொண்ணு முகத்தைப் பார்த்து அவள் மனதில் என்ன இருக்கின்றது என்று என்னால் நிச்சயமாகச் சொல்லிவிட முடியும். உண்மையிலேயே உன்னை அவளுக்குப் பிடித்து இருந்தால் திரும்பி வரும் போது ரொம்பவே மகிழ்ச்சியாக வந்திருப்பாள். முக்கியமாக எங்களோடு நன்கு பேசி சிரித்து இருப்பாள்.ஆனால், அவள் எங்களிடமிருந்து விலகி நின்றதை நான் கவனித்தேனே…, அதனால் தான் சொல்கிறேன் அதிகமாய்க் கனவுகளை வளர்த்துக் கொள்ளாதே, பதில் வரும் வரை பொறுமையாக இரு’

அம்மா ஆணித்தரமாகச் சொல்லவும் தன் அம்மா சொல்வது உண்மையாக இருக்குமோ? என்று எண்ணியவனின் மனம் சில நிமிடங்களுக்குச் சங்கடப்பட்டது.

‘சரி பெண் வீட்டிலிருந்து எதிர்பார்த்த பதில் வந்தால் பார்க்கலாம் இல்லாவிடில் அவனுடைய பிளான் பீ (plan b) பிளான் சீ ( plan c) அவற்றுள் வேறொன்று குறித்துப் பார்த்துக் கொள்ளலாம் எனத் தன்னுடைய முன் திட்டத்தின்படி மற்ற பெண்களைக் குறித்து அவள் சிந்திக்க ஆரம்பித்து விட்டான்.

இதுதான் அக்ஷய் வாழ்க்கையில் பிராக்டிகலாக வாழ வேண்டும் என எண்ணக் கூடிய இன்றைய கால யுவன். மனதளவில் பிரவீனா தனக்குக் கிடைக்காவிட்டாலும் பிரச்சினையில்லை என்று தன்னைத் தேற்றிக் கொள்ளும் அளவிற்கு அவன் வந்திருந்தான். ஆனால், அவன் தந்தையோ அப்படி ஒரு விருப்பமின்மை வருமானால் எந்த எல்லைக்கும் செல்லும் நிலையில் இருந்தார்.

வீட்டிற்கு அழைத்து விட்டு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று சொல்வானா அந்தப் பிரபாகர்? அப்படிச் சொல்லட்டுமே அவனை என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரியும்? என மனதில் கருவினார்.

பாரடைஸ் ஹோட்டல்

விக்ரம் தனது பாரடைஸ் ஹோட்டலில் வருடாந்திர நிகழ்வுக்குப் பரபரப்பாகத் தயாராகிக் கொண்டிருந்தான். அவனது வெளிர் சரும நிறத்திற்கும், உயரத்திற்கும் அவள் அணிந்திருந்த நீலநிற சூட் மிகப் பொருத்தமாக இருந்தது.

இந்த மீட்டிங்குகளில் உடன் பிறந்தவர்களை அவர்கள் குடும்பத்தினரை அவனால் தவிர்க்கவே முடியாது. பாரடைஸ் குழுமத்தின் மற்ற சொத்துகளின் நிர்வாகிகள் அவர்கள் என்பதால் அவர்களும் பங்கு கொண்டாக வேண்டும்.

மீட்டிங்குகளில் ஷேர் ஹோல்டர்ஸை விட இந்த நால்வரும் அவர்களின் மனைவியரும் அவனிடம் கேட்கும் கேள்விகள் தான் மிக அதிகமாக இருக்கும். ஒவ்வொரு முறையும் அவனது முயற்சிகளை மட்டம் தட்டுவதும், வளர்ச்சிகள் போதாது என்பதுவும், புதிதாக எதையும் யோசிப்பதாக இல்லையா? எனச் சீண்டுவதும், இலண்டனில் இதைத்தான் வருடக் கணக்காகப் படித்தான் போலும் என அவனை எள்ளி நகையாடுவதும் அவன் பல்முனைத் தாக்குதல்களில் திணறி போய் விடுவான்.

தகப்பனின் வளர்ப்பு அவன், ஆம் பிறந்த அன்றே தாய் இறந்து விட்டிருக்கத் தகப்பனின் நிழலில் வளர்ந்தவன் அவன். வார்த்தைக்கு வார்த்தை

‘அவர்கள் உன் அண்ணன்கள் அவர்களுக்கு நீ மதிப்பளிக்க வேண்டும், அன்பு செலுத்த வேண்டும்’ என்றே அவர் கூறி வளர்த்து இருந்தார்.

இவன் பிறந்த சில வருடங்களில் பெரிய அண்ணன் தொழில்களைக் கவனிக்கப் போக விக்ரமின் தந்தை இவனைக் கண்ணும் கருத்துமாக வளர்ப்பதிலேயே தனது காலத்தைச் செலவிட்டார்.

விக்ரமிற்கு ஆறு வயது இருக்கும் போது பெரிய அண்ணனின் திருமணம் நிகழ அண்ணி வீட்டில் யாருடனும் ஒட்டாமல் இருக்க, அடுத்தடுத்த அண்ணன்களின் திருமணங்களும் இவனது பள்ளிப் படிப்பு முடியும் முன்னர் முடிந்து விட்டிருந்தன.

ஒரு போதும் அண்ணன்களோ, அண்ணியர்களோ அவர்கள் குழந்தைகளோ அவனிடம் உரிமை பாராட்டி பேசியதில்லை. ஆரம்பத்தில் எதிர்பார்த்தாலும் தந்தையின் அன்பு தனக்கு முழுமையாய்க் கிடைத்திருக்க அவரது ஊக்குவித்தலுக்கு ஏற்ப தனது சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்தினான். காலங்கள் செல்ல செல்ல அவனுக்குத் தனது வீட்டின் ஒட்டா தன்மையும் பழகித்தான் போயிற்று.

ஆனால், தன்னிடம் வீட்டில் ஒட்டாமல் இருப்பவர்கள் ஜென்ம விரோதி போல மீட்டிங்குகளில் அவனைப் பல்முனை தாக்குதல்கள் நடத்தி சோர்வுற செய்வதன் பிண்ணனி என்ன? என அவனால் அறிந்துக் கொள்ளவே முடியவில்லை.

இதே கேள்வியைப் பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய போதும் அவனுடைய அண்ணன்மார் , ‘நாங்கள் எங்கள் தம்பியை தவறுகளைத் தவறு என்று சுற்றிச் சுட்டிக்காட்டினால் தானே அவனால் மென்மேலும் உயர முடியும். குறைந்த வருடங்களில் அவன் அடைந்திருக்கின்ற உயரங்களை நீங்களே கவனிக்க வில்லையா? என்று ஏதாகினும் மொக்கை காரணம் சொல்லி தன்னுடைய பெயரையும் காப்பாற்றிக் கொள்வர்.

இன்றும் ஏனோ அவன் மனம் கலக்கத்தைச் சுமந்துகொண்டு இருந்தது. வழக்கம்போல் என்றும் எதுவும் நேருமோ என்னும் பயம் மனதை சூழ்ந்தது. அடிக்கடி பொதுவில் அவமானப்பட்டு எவருடனும் இயல்பாகப் பழக முடியாமல் அவன் தடுமாற ஆரம்பித்து இருந்தான்.

அவனை அவமானப்படுத்தும் பெண்கள் யாரும் முன்பின் தெரியாதவர்கள் அல்ல, அனைவருக்கும் நன்கு பரிச்சயமான பெண்கள் தான் அவர்கள். எதிர்பாரா நேரத்தில் அந்தப் பெண்கள் திடீரென அவனுக்கு எதிராகப் பேசுவதும், நடந்து கொள்வதும், அது அதன் பின்னான நாட்களில் சென்சேஷனல் நியூஸ் ஆக ஆவதும் வழக்கமாகவே இருந்து வந்தது.

ஒரு போதும் அந்தப் பெண்மணிகளிடமிருந்து அதற்கான மறுப்பும் அவன் கண்டதில்லை. விக்ரம் தவறானவன் என்று முத்திரை குத்துவதில் அத்தனை பெண்களும் உறுதிப்பட்டு நின்றனர்.

விழாவிற்கு வருகை தந்து அவர்களை வரவேற்று நன்றாகப் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென்று அவர்கள் அவன் மீது காட்டும் குற்றச்சாட்டுக்களை அவன் பார்த்து பார்த்து வெறுத்துப் போய்ப் போய் இருந்தான்.

எதற்காகத் திடீரென இந்தப் பெண்கள் இப்படி மாறி பேசுகிறார்கள்? என்று அவனுக்கும் புரிவதில்லை. அவனது கூப்பிடு தூரத்தில் ரிஷி இருந்தாலும் எல்லா முறையும் ரிஷியாலும் அதனையும் கணிக்க முடியாமல் தோற்றுக் கொண்டே இருந்தான்.

பெண்கள் விஷயத்தில் எதையும் செய்வதற்கும் அஞ்ச வேண்டியதாக இருந்தது. அனைவரும் கூடும் அந்தப் பெரிய விழாவில் அசம்பாவிதம் நடக்கப் போகின்றதோ என்கின்ற கவலை அவனைச் சூழ்ந்தது.

லைவ் டெலிகாஸ்டில் தனது தோழன் ராம் உதவியுடன் தான் அரங்கேற்றவிருக்கும் நாடகத்தைக் காண பிரவீனா காத்திருந்தாள். அன்று அவளது வேலை நிறைவுற்ற பின்னர் அவள் தனது வீட்டிற்குச் செல்லாமல் அலுவலகக் கேபினில் அமர்ந்திருந்தாள்.

மற்ற அனைவரும் செய்தி சேகரிப்புக்காகச் சென்றிருக்க அவளை அங்கே தொல்லை செய்வார் எவரும் இல்லை. மாலை கவிழ்ந்து இரவு நெருங்கிக் கொண்டு இருந்தது. அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வருடாந்திர நிகழ்வு செவ்வனே நடந்து கொண்டிருக்க அவளுக்குக் கிடைத்த தகவலின்படி அவ்வபோது ப்ரேமுக்கு தகவல் அனுப்பிக் கொண்டு இருந்தாள்.

‘மெசேஜ் வந்துடுச்சுப் பிரேம் கவனம்’ என்று செய்தி அனுப்பினாள்.

பிரேமின் கேமரா விக்ரமை சுற்றியும் வட்டம் அடித்தது வழுவழு முகத்துடன் கம்பீரமாக அந்த இடத்தை நிர்வாகி என்று கூறும் விதமாகச் சூட்டில் இருந்தவனைத் தன்னை அறியாமல் ஒரு நிமிடம் சைட் அடித்த பிரவீணா சுதாரித்தவளாக,

‘அடியே செய்ய வந்த வேலையில் கவனம் வை’ என்றவள் தனக்கு மற்றொரு தகவல் வரவே உடனே பிரேமுக்கு செய்தி அனுப்பினாள்.

அவள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அவளால் துவக்கி வைக்கப் பட்ட நாடகம் அரங்கேறியது. தனது கேபினில் இருந்து உற்சாகமாகக் கைதட்டி விரல்களை உதட்டிற்குக் கொண்டு சென்று சீழ்க்கை அடித்தாள்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here