தேவதையவள்

0
591

தண்ணீர் என்பதற்கு நன்னீ என்பாள்
வேண்டாம் என்றால் நானா
நிலா நிலா ஓடி வா
அவளிற்கு மட்டும் இயா இயா வா என்றாகும்
மியாவ் என்பதற்கு பூனை
வவ் வவ் என்றால் நாய் அவளது அகராதியில்.
இவை பிழைகள் அல்ல
திருத்தம் செய்ய.
தேவதைகளின் மொழி
மொழி பெயர்க்க கற்றுக்கொண்டேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here