பிரியமானவளே 1

0
721
Bharathi _ Priyamanavale

நிலவுத்தாய் தனது நட்சத்திர குழந்தைகளுடன் வானில் வலம் வரும் நேரம். அழுது சிவந்த முகத்துடன் தன் கணவன் மணிகண்டனுக்காக காத்திருந்தாள் பல்லவி. மனதினில் கட்டுக்கடங்கடங்காத கோபமும் இயலாமையும் போட்டிபோட எதிலோ தோற்றுவிட்ட உணர்வுடன் முற்றத்திறகும் வாசலுக்கும் நடந்தாள். இரண்டு வயது
குழந்தை பிரியா நன்றாக தூங்கியிருந்தாள்.

இரவு .;7. 30.

வழக்கமாக 6 மணிக்கெல்லாம் வீடு வந்து சேர்பவன் இன்று இன்னமும் வீடு வரவில்லை. அது வேறு எரிச்சலைக் கூட்டியது.

நான்கு வருடங்களுக்கு முன் மணிகன்டன் பல்லவிக்கும் திருமணம் நடந்தது. மணிகண்டன் தனியார் நிறுவனம் ஒன்றில் இன்ஜீனியராக பணியாற்றுகிறான். திருமண நாளிலிருந்து இன்று வரை அவர்களுக்குள் சண்டை என்ற ஒன்று வந்ததே இல்லை. பெற்றவர்கள் நிச்சயித்த திருமணம் என்றாலும் பெண் பார்க்க வந்த நாள் தொடங்கியே பல்லவிக்கு அத்தனை காதல் மணி மீது.திருமண நாள் தொடங்கி நேற்று வரை அவன் மேல் குறை சொல்ல ஏதுமில்லை. இயல்பிலேயே அன்பானவன். மனைவியை பிரியமாய் பார்த்துக் கொண்டவன். இவர்களது அன்பிற்கு சாட்சியாய் பிரியா பிறந்தவுடன் பல்லவி மீது அவனுக்கு இன்னும் காதலும் மரியாதையும் கூடியது.
.மனைவியை அடுத்தவரிடம் விட்டுக் கொடு்த்ததில்லை.

மணிகண்டன் இன்னும் அவளை காக்க வைத்துவிட்டு இரவு 8 மணிக்கு வீடு வந்து சேர்ந்தான்.எப்பொழுதும் போல வீட்டினுள் நுழைந்தவன் மனைவியிடம் ஏதோ சரியில்லை என உணர்ந்தான். சரி அவளாகவே சொல்லட்டும் என விட்டுவிட்டு
பிரியா குட்டி தூங்கிட்டாளாஆபிஸ் ல கொஞ்சம் வேலை அதான் லேட் ஆய்டுச்சு என்றான்.

பல்லவி மௌனமாக இருந்தாள். என்னவாயிற்று இவளுக்கு என குழம்பியபடியே குளியலறை சென்று முகம் கை கால் கழுவி மாற்றுடையுடன் வந்து பல்லவி அருகில் அமர்ந்து டிவியை ஆன் செய்தான்.

அவன் அருகில் அமர்ந்தவுடன் பல்லவி விலகி எழுந்து நின்று கொண்டாள். குழப்பம் குறையாமல்
என்னாச்சி பவி ஏன் ஒரு மாதிரி நடந்துக்கற
ஏதோ சரியில்லை உன்கிட்ட? என்னனு சொன்னா தான தெரியும்?

என்ன சரியில்லை? இப்போத்தான் நான் சரியா நடந்துக்கிறேன். உங்களை எவ்வளோ நம்புனேன். நீங்களும் என்னை ஏமாத்திட்டீங்கல்ல என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

பதறியவன் என்னடி பேசுற எனக்கு ஒன்னுமே புரியலை. என்னன்னு சொல்லப் போறியா இல்லையா ஏற்கனவே அலுவலக வேலையில் சோர்ந்திருந்தவன் இவள் வேறு படுத்துகிறேளா என்று கடுப்பானான்.

சரி சொல்லுங்க பிரியா யாரு? உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன உறவு? எனக்கு தெரியணும் சொல்லுங்க.

ஷ்ஷ்ஷ் கத்தாத. பிரியா என் பொண்ணு. இத கேக்கவா
இவ்ளோ பில்ட் பண்ண என்றான் உள்ளுக்குள் தோன்றிய அதிர்ச்சியை மறைத்தபடி.

நடிக்காதீங்க உண்மையை சொல்லுங்க. கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க ஏன் அவங்களப் பத்தி என்கிட்டே சொல்லலை.

மணிக்கு தெரிந்துவிட்டது. தன் மனைவி பிரியாவைப் பற்றி தெரிந்துகொள்ள கேள்வி கேட்வில்லை நன்றாக தெரிந்து கொண்டு கேள்வி கேட்கிறாள் என்று.

அது முடிஞ்சு போன கதை. சொல்லனும்னு தோணலை. அசட்டையாக கூறிவிட்டு எழுந்து சென்றான்.

பல்லவி மீண்டும் அழத் தயாரானாள்.
– தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here