பிரியமானவளே 3 final

0
741
Bharathi _ Priyamanavale

இப்பொதெல்லாம் மணிகண்டன் மனம் முழுதும் வெறுமையை உணர்ந்தான். ஒவ்வொரு நாளும் பல்லவி இன்றைக்கு என்ன பிரச்சனை செய்ய போகிறாளோ என்று நொந்தபடிதான் வீட்டிற்குள் நுழைகிறான்.அந்த அளவிற்கு அவனைப் குத்தல் பேச்சுகளாலும் புறக்கணிப்பினாலும் படுத்தி எடு்த்திருந்தாள் பல்லவி. அவனைப் பொறுத்தவரையில் பிரியா மேல் கொண்ட காதல் என்பது அந்த வயதில் வந்த ஒரு உணர்வு. அவளை காதலித்தான்தான். இல்லை என்பதற்கில்லை. அவர்களின் பிரிவு கூட பெற்றோர்களின் வற்புறுத்தல்களால் அல்ல. இருவரது கருத்து வேறுபாட்டினால் தான்.பக்குவமில்லாத கல்லூரிப் பருவக் காதல் அதற்கு ஆயுள் இரண்டு ஆண்டுகள்தான்.

மணி சிந்தித்தான். பல்லவி எதற்கு சிறு விஷயத்திற்கு இப்படி ஓவர் ரியாக்ட் செய்கிறாள்? . அப்படி என்ன செய்துவிட்டேன் நான். காதலில் தோல்வியுற்றவர்கள் திருமணமே செய்ய கூடாதா என்ன?அல்லது எல்லார் காதலும் திருமணத்தில் தான் முடிகிறதா?. பிரிய வேண்டும் என்கிறாள். எதற்கெடு்த்தாலும் டைவர்ஸ் டைவர்ஸ் என்கிறாள். இந்த வார்த்தையை கண்டுபிடித்தவன் மட்டும் கையில் கிடைத்தால் …
இத்தனை நாட்கள் அவள் மீது வைத்து பிரியம் பொய் என்கிறாள். எப்படி பொய்யாகும்? . திருமணத்திற்கு பிறகு அவளில்லாத ஒரு வாழ்வை நினைத்து கூட பார்த்ததில்லை. பிரியா வை நினைத்து தன்னுடன் வாழ்வதாக வாதிடுகிறாள். கேட்டவுடன் அறைய கை ஓங்கிவிட்டான். அதற்கும் ஓ அவளை பத்தி பேசுனா கோபம் வருதா என்கிறாள் ஐயோ என்றிருந்தது மணிக்கு. நான் அவளை எப்போதோ மறந்துட்டேன் பல்லவி எனக்கு நீதான் முக்கியம் என மன்றாடியும் கூட நம்ப மறுக்கிறாள். சாட்சிக்கு மகளின் பெயரை அழைக்கிறாள். சினிமா பாணியில் குழந்தைக்கு முதல் காதலியின் பெயரை வைத்தது எத்தனை தவறென்பது இப்போதுதான் புரிகிறது.

அதையும் மீறி தர்க்கம் செய்தால் எப்படியாகினும் பிரியாவினது நினைவு உங்கள் மனதில் இல்லாமலா இருக்கும்? என்கிறாள். பின்னே நடந்த நிகழவுகளையெல்லாம் மனதில் இரப்பர் வைத்து அழித்துவிடவா முடியும். அது ஒரு ஓரத்தில் இருக்கத்தானே செய்யும்.

நினைத்தால் அவனுக்கே சிரிப்பு வந்தது
பல்லவியின் கையில் மணியின் டைரி சிக்கியிருந்தது. மணி அதில் நிகழ்வுகளையெல்லாம் எழுதவில்லை காதலின் கிறுக்குத்தனத்தில் கிறுக்கி தள்ளிய கவிதைகள் அதை நிறைத்திருந்தன. பாவி அதைப்போய் தினம் சத்தமாக படித்து தொலைக்கிறாளே? அது என்ன கந்த ஷஸ்டி கவசமா தினம் படிக்க. அதுமட்டுமா
படித்துவிட்டு அழுவது கொஞ்சம் அதிகப்படிதான். நான் எழுதிய பிழைகளையும் சேர்த்து சத்தமாக படித்து மானத்தை வாங்குவதற்கு நானல்லவா அழ வேண்டும்.

வீட்டினுள் நுழைந்தான் அன்றைக்கு வாய்ச்சண்டைகளுக்கு பிறகு சலித்து போய் கோபத்தில் சரி நீ சொன்ன எல்லாமே உண்மைதான். இப்ப அதுக்கு நான் என்ன பண்ணணும் சொல்லு. உனக்கு டைவர்ஸ் தான வேணும் நான் அப்ளை பண்றேன். ஆள விடு என்றதற்கும் அழுது தீர்த்துவிட்டாள் பல்லவி. அவனுக்கே பாவமாய் போய்விட்டது. சமாதானபடுத்த முற்படுகையில் நான் டைவர்ஸ் வாங்கிட்டு போய்ட்டா அவள கல்யாணம் பண்ணிகிட்டு வாழ போறீங்களா என்றவுடன் ஙே என விழித்தான். கோபத்தில் விழுந்த வார்த்தைகள் உண்மையில் பிரியும் எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லை. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு ஆமா அப்படித்தான் அதுக்கு என்ன இப்ப என்றான். என்ன ஆனாலும் சரி நா உங்களுக்கு டைவர்ஸ் தரமாட்டேன் என கண்களை துடைத்து கொண்டாள்.மணிகண்டன் மனம் இப்போதுதான் நிம்மதியடைந்தது.

அவள் அருகில் அமர்ந்தவன் ஏங்க மேடம் என்றான்.

அழுகையெல்லாம் ஓய்ந்தவள் என்ன ஏன்னு கேட்கிறீங்க நான் இல்லாம நீங்க வாழ்ந்துடுவீங்களா எனத் தேம்ப

சிறிது மௌனம் காத்தவன் அவள் கண்களைப் பார்த்து நீ இல்லாம நான் வாழமாட்டேன்னு தெரியுதுல்ல அப்புறம் எதுக்குடி இத்தனை ஆர்ப்பாட்டம் என்று அணைத்துக் கொண்டான்.

சில நிமிடங்கள் கடந்தும் அப்படியே அணைப்பில் இருந்தவளிடம் பவி ஒன்னு சொல்லட்டுமா?

ம்ம்

நாம வேணும்னா பாப்பா பேர மாத்திடலாமா இப்போலாம் அந்த பேர கேட்டாலே பயமா இருக்குடீ. ராட்சசி அடு்த்து என்ன ஏழ்ரையை கூட்டுவியோனு உன் ஞாபகம்தான் வருது பாவமாக சொன்னாள்

அணைப்பிலிருந்து விடுவித்துக்கொண்டவள் என் ஞாபகம் தான வருது. வரட்டும். மாத்தக்கூடாது கட்டளை போல சொன்னவள் அவன் கூறிய தொனியில் சிரித்துவிட்டாள். சற்று முறைத்துவிட்டு மணியும் அவளின் சிரிப்பில் இணைந்து கொண்டான்.

இங்கு பல்லவிகளும் அவர்களின் எதிர்பார்ப்புகளை கைவிடப் போவதில்லை. மணிகண்டன்களும் காதலிக்காமல் இருக்கப் போவதில்லை. சில சமயங்களில் நம்மைப் பற்றி நாமே புரிந்து கொள்ள தடுமாறும் போது தன் மனைவியோ கணவனுமோ ஆனாலும் கூட அடுத்தவர் மீது புரிதல் எல்லாம் அத்தனை எளிதாக வந்துவிடுவதில்லை. ஆனால் அதீதபிரியம்
ஆட்சி செய்கையில் பிரிதலுக்கு அவசியமிராது.

முற்றும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here