நீயே என் இதய தேவதை_32_பாரதி

0
385

எல்லாரும் விடைபெற்று சென்றவுடன் தன் இடத்தில் ஒளிர்விட்டுக் கொண்டிருந்த லைட்டின் ஸவ்விட்சை ஆப் செய்துவிட்டு செல்வம் சாருடன் அலுவலகம் பற்றி  பேசிக் கொண்டே மாடியிலிருந்து கீழிறங்கி வந்து கொண்டிருந்தான் அன்பு .அன்பண்ணா என்று கத்தியபடி  ப்ரியாவும் ஷர்மியும் அவனை நோக்கி ஓடி வர அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

செல்வமோ என்னாச்சு பசங்களா….? ஏன் இப்படி ஓடி வரீங்க….? என்னவாயிற்றோ என்று பதறிப் போனார்.

ஒன்னுமில்லையே சார்.நாங்க அன்பு அண்ணனத் தான் பார்க்க வந்தோம் என கூலாக சொல்ல .”எதுனாலும் அவன்  கம்பெனியில இருக்கும் போதே சொல்லியிருக்க கூடாது.இப்படி பாதி ராத்திரியில ஓடி வரவும் ஒரு நிமிஷம் என்னாச்சோ னு  பயந்தே போய்ட்டன்.நல்ல…. பசங்க  டா நீங்க” என்று அவர் சலித்துக் கொள்ள

இந்த நேரத்துல எதுக்கு என்னைப் பாக்கணும்.எதுனாலும் நாளைக்கு பேசக் கூடாதா…?  நீங்க பொண்ணுன்ற நினைப்பாச்சும் இருக்கா ?ப்ரியா…ஷர்மி தான் சின்னப் பொண்ணு.உனக்கெங்க போச்சு அறிவு ? வேன விட்டீங்கனா இந்த ராத்திரியில எப்படி  வீட்டுக்கு போவீங்க  என திட்டிக் கொண்டே வர அவர்கள் அதை கண்டுகொள்வதாய் இல்லை.

அண்ணா….

ம்ம் நடந்துட்டே பேசுங்க…டைம் ஆகுதுல்ல

எங்களுக்கு கொஞ்சம் பணம் வேணும்  என்று ஷர்மி சொன்னவுடன் இதுக்கா இவ்ளோ தூரம் ஓடி வந்திங்க…..  என்று சீறிவிட்டு   “இரண்டு பேரும் ஷேர் பண்ணிக்கோங்க” என்று  பாக்கெட்டிலிருந்த ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்தான்.

இதுவும் நாளை சாக்லேட்டுக்கு ஆகும் என்று பாக்கெட்டில் வைத்துக் கொண்டவள் இது பத்தாது ண்ணா என

எவ்ளோ வேணும்?

இரண்டாயிரம் ரூபாய் வேணும் ஷர்மியும் ப்ரியாவும் கோரசாய் சொல்ல
அவ்வளவோ காச  வச்சு என்ன பண்ணப் போறீங்க பசங்களா?  செல்வம் அன்புவை முந்திக் கொண்டு கேட்டார்.

எங்களுக்கு வேணும் ண்ணா.சம்பளம் வந்தவுடனே திருப்பித் தரோம் என்று சொன்னதையே தான் திரும்ப சொல்லினார்களே தவிர எதற்கு வேண்டும் என்று தெளிவாக சொல்லவில்லை. அந்நேரம் செல்வம் சாரை மொபைலில் யாரோ  அழைக்க அவர் அதே இடத்தில் நின்று பேசி கொண்டு நின்றுவிட்டார்.இவர்கள் மட்டும் கீழே இறங்கி வந்தனர்.

நிரந்தர பணியாளர்களை விட கான்ட்ராக் பணியாளர்களுக்கு சம்பளம்வெகு குறைவு என்பதை அவன் அறிவான். அவனுக்கு கீழ் பணிபுரியும் பையன்களுக்கு அவ்வப்போது  மாதக் கடைசியில் சிறிய அளவில் பண உதவி செய்வான்தான்.அரிசி காலி ண்ணா.ரீசார்ஜ் பண்ணி விடுண்ணா வீட்டுக்கு பேசணும் என்று வரும்போது அவர்களிடம் முடியாது என்று சொல்ல முடியாது.இதில் முக்கியம் என்னவென்றால் அந்த பணம் திரும்ப வரும் என்றும் உறுதியாக சொல்ல முடியாது.

ப்ரியா கூட சில சமயம் கடன் வாங்கிவிட்டு திருப்பி தந்திருக்கிறாள்.மாதம் ஏழாயிரம் என வாங்கும்  சம்பளம்  முழுவதையும் வீட்டில் கொடுத்துவிட்டு செலவுக்கு ஐம்பதோ நூறோ வாங்கி கொள்ளுமளவு  சின்னப் பிள்ளைகள் தான் இருவரும்.இவர்களின் குடும்பம் பற்றியும் நன்கு அறிந்தவன் அன்பு .அதனால் இவர்கள் இப்போது கேட்ட தொகை பெரியதாக தோன்றியது.பணம் தருவது பிரச்சனையில்லை.சின்னப்னபிள்ளைகளுக்கு இரண்டாயிரத்துக்கு என்ன செலவு இருக்கப் போகிறது? இவர்கள் பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியாமல் தரக் கூடாது என முடிவெடு்த்தவன்

எதுக்கு பணம் வேணும் னு உண்மையை சொல்லுங்க.யோசிக்கிறேன்.இல்லைனா கிளம்புங்க என்று தீர்மானமாக சொல்லிவிட

நம்ம கவி இருக்கா ள்.

ம்ம்…அவளுக்கு என்ன

அவ குழந்தைக்கு பர்த் டே .நெக்ஸ்ட்டு வீக்.

அவளுக்கு குழந்தை இருக்கா  …? எனும் போது அவன் குரலில் இருந்தது என்னவென்று அவனுக்கே தெரியவில்லை.

ஆமா நெக்ஸ் வீக்கு தான் பர்த் டே

கலிகாலம் டா சாமி ….

ஏன்னா… இப்படி சொல்ற  ப்ரியா செல்லமாக கோபி்க்க

இல்லை.அவளே உங்களப் போல  சின்னப் பொண்ணு போலத்தான் இருக்கா. அவளுக்கு ஒரு குழந்தைனா நம்பவே முடியலை. அதான் கேட்டன்.

அவ வீட்டுல சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க.அதெல்லாம் எதுக்கு இப்போ? என்றுவிட்டு கண்டிப்பா காசு வேணும் ண்ணா.ப்ளீஸ் ப்ளீஸ் எனக் கெஞ்ச

சரி.இரண்டாயிரத்துக்கு என்ன வாங்கப் போறீங்க.அத சொல்ல மாட்டேங்குறீயே
என பொறுமையில்லாது கேட்டான்.

பாப்பாக்கு  ட்ரெஸ்  வாங்கத்தான் என்று அவள் சொல்லியதும்  தன்னை மீறி அச்சச்சோ என்றான்.ஆம் சுபி வீடியோ காலில் பேசும்போது தனது ஸ்கூலில் பேன்சி ட்ரெஸ் காம்படேஷன் நடக்கப் போவதாகவும் அதற்கு முயல் குட்டி ட்ரெஸ் வேண்டுமென்று கேட்டிருந்தாள்.
மறந்தே போயிருப்பான்.எப்படியோ ப்ரியி ஞாபகப் படுத்திவிட்டாள்.

அண்ணா….காசு எப்போத் தர…. சொல்லுண்ணா வேனுக்கு டைம் ஆச்சு என்று ப்ரியா அவசரப் படுத்த

சரி என்னைக்கு ட்ரெஸ் வாங்கப் போறீங்க

நீ காசு கொடுத்தா நாளைக்கே.

சரி அப்போ நாளைக்கு   10 மணிக்கு  #### கடைக்கு வந்திடு. முடிஞ்சா உன் சித்தியை கூட்டிட்டு வா.எனக்கும் ஒரு ட்ரெஸ் எடுக்கணும்.கொஞ்சம் ஹெல்ப் பண்ணு.

பிரியா மட்டுமா அப்போ நானு. என ஷர்மி கோபிக்க

பிக்னிக்கா போறோம்.

பாப்பா ட்ரெஸ்சு நானும் செலக்ட் பண்ணுவன் என் அடம்பிடிக்க

சரி வந்து தொலை.இப்போ கிளம்புங்க ரெண்டு பேரும்.

போய்ட்டு வாங்க. என்று வேன் வரை வந்து பத்திரமாக வழியனுப்பிவிட்டு  வந்து தனது பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here