நீயே என் இதய தேவதை 1

0
822
Neeye En Idhaya Devathai

அந்த நான்கு அடுக்கு கட்டிடத்தில் இருந்து வெளியேறினான் அன்பரசன். முகம் களைத்து சோர்ந்து காணப்பட்டது. வந்தவன்
செக்யுரிட்டி ரூமில் நுழைந்து சோதனை செய்யப்பட்டு வெளிவந்தான். நாளைக்கும் இதே வேலை இதே மஷின்கள் என்று எண்ணும் போது சலிப்பு தோன்றியது அன்பரசனுக்கு.

அன்பரசன் 27 வயது ஆண்மகன். மாநிறம் களையான முகம். B. E படித்துவிட்டு அந்த தொழிற்சாலையில் தரகட்டுப்பாட்டு துறையில் அசிஸ்டண்ட் இன்ஜினியராக இருக்கிறான். அவனுடன் வேலை பார்க்கும் சூப்பர்வைசர்கள் அனைவரும் அனுபவசாலிகள். இவனுக்கு படிப்புபாதி அனுபவம் கொஞ்சம். ஆங்கில அறிவு கூடுதல் பலம்.

பிடித்த வேலை. ஆனால் முன்பிருந்த உற்சாகம் இப்போது இல்லை. வாங்கும் சம்பளத்திற்கு செய்யும் வேலை யாரும் குறை கூற முடியாதபடி செய்து வந்தான். இன்று கூட ஒரு பையன் வேலையில் செய்த தவறிற்கு எரிந்து விழுந்திருந்தான்.
இப்போது யோசித்தால் அவனை நினைத்து பரிதாபமாக இருந்தது. அன்புண்ணா அன்புண்ணா பின்னாடி சுற்றி கொண்டிருப்பான். அவனைப் போய் ப்ச்…

சரி காலையில் மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம் என நினைத்து இரு சக்கர வாகனத்தில் வீடு சென்றிருந்தான். வெறுமையாக இருந்த வீடு வரவேற்றது. அப்பா அவனது 7 வயதில் இறந்துவிட்டார். தாய் இறந்து இரண்டு வருடங்கள்.

தாயின் இறப்பு பற்றி சிந்திக்கும் போதெல்லாம் அவள் மட்டும் என் வாழ்க்கையில் வராதிருந்தால் தாய் இன்னும் சிறிது காலம் தன்னுடன் இருந்திருப்பார் என தோன்ற அவளை நினைத்து கோபம் பெருகியது. நம்பிக்கை துரோகி. அவள் மட்டும் இருந்திருந்தால் இப்போது பெண் என்று கூட பாராமல் அடித்து நொறுக்கியிருப்பான். அப்படி ஒரு ஆத்திரம். அவன் வலி அப்படி. ஆனால் இல்லையே.

@@@@@@@@@@

தன் கையில் தனக்கு இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை தரும் அந்த பொக்கிஷத்தை கை நடுங்க பிடித்திருந்தாள். அவள் செய்யப் போகும் காரியத்தினால் திருடி, கொலைகாரி என இரண்டு பட்டம் தரப்படும் அவளுக்கு. பக்கத்து வீட்டு விவசாயி வயலுக்கு அடித்துவிட்டு பத்திரபத்திய மீத பூச்சிமருந்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்திருந்தாள். மேலும் மடியில் ரோஜா மலரினை போல குழந்தை ஒன்றினை ஏந்தியிருந்தாள். குழந்தையை கொன்றுவிட்டு தானும் இறப்பதாய் திட்டம்.

எந்த இடத்தில் தவறு நிகழ்ந்தது என்றெல்லாம் யோசிக்க பிடிக்கவில்லை அவளுக்கு. எந்த இடத்திலும் வாழ்க்கை நியாயம் செய்யவில்லை அவளுக்கு. நடுக்கத்தை கட்டுபடுத்த முயன்றவாறே விஷத்தின் சில துளிகளை கைகளில் ஏந்தி குழந்தையின் வாயில் வைக்கப் போகையில் அம்மா என்று மொழிந்து புன்னகைத்தது அந்த 11 மாதக் குழந்தை.

தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here