நீயே என் இதய தேவதை 10

0
755
Neeye En Idhaya Devathai

அன்பு  அன்று மிகுந்த எரிச்சலுடன் அலுவலகம் கிளம்பினான். பிரிந்து சென்ற அவனின் மனைவியிடமிருந்து நேற்று மாலைதான்  விவாகரத்து  நோட்டீஸ் வந்திருந்தது. இத்தனைக்கு பின்பும் அவளுடன் வாழ அவனுக்கு விருப்பமா?  என்றால் நிச்சயமாய் இல்லை.
ஆனால் இந்த விவகாரத்தது பத்திரம் பழைய நினைவுகளை கீறிவிட்டதில் மனம் அவளை அலைக்கழிக்க எண்ணியது. அவள் செய்த காரியத்தின் விளைவால் ஏற்பட்ட அவமானம் மற்றும் அவனது தாயின் இறப்பு இரண்டும் சேர்ந்து இவ்வாறு யோசிக்க வைத்தது. இந்நிலையில் அலுவலகம் செல்ல வேண்டாமென தீர்மானித்து விடுப்புக் கேட்டால் மேலாளர் அனுமதிக்கவில்லை. அந்த கோபம் வேறு.
     
அலுவலகம் சென்று தன் இடத்தில் அமர்ந்து கணினியில் எப்போதும் போல அவனது வேலைகளை இயல்பாகத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.அன்றைய வேலைக்கான
தகவல்களை பிரிண்ட் எடுத்துவிட்டு நகரும் போது தான் அவனது பிரிவு மேலாளர் அவனது வேலையில் வேகம் குறைகிறது என்று முனுமுனுத்தார். வழக்கமாய் நடப்பதுதான்.ஏனோ இன்று மட்டும் கோபத்தின் அளவு மிகுதியாய் இருந்தது.”என் இரத்தத்தை முழுசும் உறிஞ்சிகிட்டிகிட்டாலும் உங்களுக்கு பத்தாதுடா”என உள்ளுக்குள்ளே சீறி் கொண்டாலும் வெளியில்

“இந்த டிபார்ட்மென்டல இரண்டு பேர் லீவ்ல இருக்காங்க சார். ஒருத்தனே மூனு பேரோட வேலையைப் பாக்கணும் னா  கொஞ்சம் லேட் ஆகத் தான் செய்யும். அதுபோக இப்போ இருக்கிற ப்ரெஸ்ஸர்ஸ் (freshers) நிறைய ரிஜக்ட்சன் பண்ணிடறாங்க. அதையெல்லாம் மறுபடி ரீ வொர்க் (rework) பண்ண  எக்ஸ்ட்ரா  (extra) டைம் ஆகுது” நிதானமாக கூறினான்.

“சும்மா சும்மா  சின்னப்பசங்க மாதிரி  சாக்கு போக்கு எதுனாச்சும்  சொல்லக்கூடாது அன்பு.  அவங்களையெல்லாம் ஒழுங்கா வேலை வாங்குறது தான் உங்களோட வேலை. அதவிட்டுட்டு அவங்க வேலை
செய்யலனு  சொல்றதுக்கா உங்களுக்கு சம்பளம் தராங்க  என்றுவிட்டு இன்னும் சிலபல அறிவுரைகளை அள்ளி வீசினார்

உண்மையில்  மூலப்பொருளில் தொடங்கி டெலிவரி செய்யும் வரை ஒவ்வொரு நிலையிலும்    பொருட்களின் தரத்தை சோதிப்பது  மட்டுமே அவனது வேலை. ஆனால் இவர் சூப்பர்வைசர் வேலையும் சேர்த்து தன் தலையில் கட்டுவது ஆத்திரமூட்டியது. “என்னைக்காச்சும்  என் கையில சிக்குவடா அப்போ பாரு உன் கதி என்னாகுதுனு”என நினைத்தாலும் வாயில் சிரிப்போடு  “சரிங்க சார் இனிமே இப்படி நடக்காம பாத்துக்கிறேன்” என்றுவிட்டு நகர்ந்தவனிடம் வந்து “என்ன இன்னைக்கு ஓவர்டோஸா…? “என்றான் வினோத். அவர்கள் துறையின் சூப்பர்வைசர்களில் ஒருவன்.

“ம்ம். ஆமாண்ணா இன்னைக்கு நான்தான் மாட்டுனேன் போல கெழவனுக்கு” பொதுவாக வயதிற்கு மரியாதை கொடுத்து பேசுபவன் ஆனால் அது அவனின் மேனேஜர் தவிர்த்து.

அரவிந்தனுக்கு விழ வேண்டிய திட்டு அவன் லீவ்ல போனதால நீ மாட்டிக்கிட்ட

அது எப்படிணா என்னத் தவிர எல்லாருக்கும் லீவு கிடைக்கிது. என்னப் பாத்தா மட்டும் கேணை மாதிரஇப்போதுதானஇவனுங்களுக்கு. நீ வேணாப் பாரேன் ஒருநாள் வேலையேப் போனாலும் பரவாயில்லைனு அந்த கெழவன தூக்கிப் போட்டு மிதிக்கப் போறன் பாரு.

டேய்…  நீ ..வேற… வயசான ஆள மிதிக்கப் போறானாம். நீ உன் வேலையை ஒழுங்கா செய்யற தான. அப்புறம் என்ன அவர் சொல்றத இந்த காதில வாங்கி அந்த காதுல விட்டுரு. போ போய் வேலையைப் பாரு.  போ போ.

.இன்று அரவிந்தனை மட்டம் தட்டி அன்புவை ஆதரித்து பேசியதால் வினோத் அன்புவின் நண்பன் இல்லை. நாளை அரவிந்தனிடம் அன்புவின் குறைகளை சொல்லிக் காட்டுவான். வினோத் அப்படித்தான். பெரும்பாலும் அந்த கம்பெனியில் எல்லா சூப்பர்வைசர்களும் அப்படித்தான். ஆனால் எல்லாருக்கும் ஒரு பொறாமை உண்டு அன்புவிடம். கம்பெனிக்கு விஸ்வாசமாய் இருந்து மேலிடத்தில் நல்ல பெயர் வாங்க தொழிலாளர்களை கசக்கி பிழிந்து வேலை வாங்கும் போது தொழிலாளர்களிடம் மரியாதையோ நட்போ இருக்காது. அதேபோல் தொழிலாளர்களுக்கு சற்று சலுகை கொடுத்து வேலையின் வேகம் குறைந்தால் மேலிடத்தில் மரியாதை இருக்காது. ஆனால் இரண்டும் ஒரு சேர கிடைத்தது அன்புவுக்கு மட்டுமே. அவன் தொழிலாளர்களுடன் நட்போடு பழக இருமுறை  கம்பெனியில் பெஸ்ட் எம்ப்ளாயி  விருதையும் வாங்கியிருந்தான். அந்தப் பொறாமை எல்லா சூப்பர்வைசர்களுக்கும் இருக்கவே செய்தது.

அன்பு இன்று டெலிவரி்க்கு செல்லபட வேண்டிய கடைசி நிலை பொருட்களின் தரத்தை நுணுக்கமாக சோதித்ததில் 2 மணி நேரம் எப்படி போனதென்றே தெரியவில்லை. எல்லாவற்றையும் பேக் செய்து எடுத்து வைத்து விட்டு செல்லும் போதுதான் கவியினை உற்று நோக்கினான். அவளது கெட்ட நேரம் எ
தன்னுடைய மிஷினில் முன்னர் சரியாக அஷெம்பிள் செய்தவள்  இப்போதுதான் சிறு தவறு செய்துவிட அது ரிஜக்ட் ஆனது.

இதைப் பார்த்தவுடன் அன்புவின் கோபம் மீண்டும் துளிர்விட்டது.  கவியின் அருகில் சென்றவன் “என்னம்மா பண்ற”என்றான். திடீரென கேட்ட குரலால் கவியின்  உடல் ஒருமுறை நடுங்கி பின் சீரானது. சா.. ர்  என்றாள் திக்கி திணறி.

நீ நியூஜாயினி தான.

ஆமென்று தலையசைத்தாள்

உனக்கு இப்படி அஷெம்பிள் பண்ண யார் சொல்லிக் கொடுத்தது…?

பதில் சொல்லாமல் முழித்தவளை முறைத்துவிட்டு சுதா இங்க வா. உன்னை தான சொல்லிதர சொன்னன்.  இவங்களுக்கு. ஏன் தப்பு தப்பா அசெம்பிள் பண்றாங்க..?

அன்பு குரலுக்கு அருகில் வந்த சுதா
“ஏன் பாப்பா என்ன பண்ண” என்றவுடன் அன்பு கவி கையில் வைத்திருந்த பொருளை வாங்கி அதிலுள்ள குறையை சுட்டிக் காட்டினான்.

சுதா “ஒழுங்கா தான பண்ணிட்டிருந்த பாப்பா ஏன் சொதப்புற”என சற்று கோபமாக கேட்க கவிக்கு அழுகை வந்துவிடும் போல
இருந்தது.

இருந்தும் விடுவதாய் இல்லை அன்பு. வேலைக்கு சேர்ந்து இரண்டு வாரம் ஆச்சு. இன்னும் ஒழுங்கா வேலை கத்துக்கலனா எப்படி..? நல்லா அரட்டையடிக்க மட்டும் தெரியுதில்ல….?  இது சரி வராது இன்னும் ஒரு வாரம் பார்ப்பேன். அப்பவும் வேலையை ஒழுங்கா செய்யலனா டிபார்ட்மென்ட் மாத்தி
விட்டிருவேன். ஈசியான வேலை கொடுத்தா ஒழுங்கா செய்ய மாட்றிங்க. அங்க போய் கஷ்டப்பட்டாத் தான் தெரியும்.  இன்னும்..

மேலாளர் தன் மீது கொட்டிய கோபம் அனைத்தும் தனக்கு கீழே வேலைப் பார்க்கும் கவி மீது கவிழ்த்துக் கொண்டிருந்தான். எந்த நிர்வாகத்திலும் இது  சகஜம் தானே.

கவியால் அதற்கு மேல் அழுகையை அடக்க முடியவில்லை. கண்களில் நீர் வழிந்தபடி இருந்தது. அதைப் பார்த்து இன்னமும் எரிச்சலுற்றவனால் அதற்கு மேல் எதுவும் திட்ட முடியவில்லை. தனது இருக்கையில் போய் அமர்ந்தவன் ஆ…. ஊன்னா….  அழுதிட வேண்டியது என முனுமுனுத்துக் கொண்டான்.  உள்ளளே லேசான குற்றஉணர்ச்சி தோன்றுவதை அவனால் உணர முடிந்தது.

                                          தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here