நீயே என் இதய தேவதை 12

0
1146
Neeye En Idhaya Devathai

எடுத்துக் கொண்ட தீர்மானங்களை செயல்படு்த்துவது  குறித்து மனதில் உருப்போட்டுக் கொண்டே அவளது இத்திற்கு செல்ல மாடிப் படிக்கட்டில் ஏறினாள் கவி. அப்போது “அறிவில்லை
…… கண்ணு தெரியலை….  இப்படித்தான் மேல வந்து உரசுவியா..”என்ற அன்புவின் குரல் கேட்டு உடல் தானாக அதிர்ந்தது.

கவி்க்கு ஒரு ஆறுபடிகள் முன்னால் நின்று அவனுக்கு எதிரில் நின்றிந்த  ஒரு பெண்ணிடம் கத்திக்கொண்டிருந்தான்.  “பாவம்… தெரியாம இடிச்சிருப்பா
இவன் என்ன ஊரில இல்லாத அழகனா வேணும்னே வந்து உரச. கொஞ்சம் நல்லாத்தான் இருக்கான்.   அதுக்குனு ஓவர் சீன் போட்டு அந்த பொண்ண திட்றதுலாம் தப்பு. பாரேன்…. அந்த பொண்ணும் எந்த ரியாக்சனும் இல்லாம சிரிச்சிக்கிட்டே போகுது. ஓஓஓ… எப்பவும் இவன் இப்படித்தான்னு எல்லாருக்கும் தெரியும் போல. அதான் இவனை கண்டுக்கலை. நாம தான் இவன பெரிய இவன்னு நினச்சு பயந்திட்டிருக்கோம்.” என்று இவள் யூகித்துக் கொண்டிருக்கும் போதே

“என்னம்மா படியிலே நின்னு என்ன யோசனை… இப்படியே வீட்டுக்கு திரும்பி போய்டலாமானு  யோசிக்கிறியா…” என அன்பு அவளுக்கு ஓர் அதட்டல் போட

“இல்லை சார்… சாரி சார்…” என இவள் திணற

“போ போய்… வேலையைப் பாரு போ” என அவன் சொல்லியவுடன் விட்டால் போதுமென  அவளது இடத்திற்கு வந்தாள்.
ஹப்பாடா என்னதான் இருந்தாலும் இவனுக்கு நான் ரொம்பத்தான் பயப்படுறேன். இனி அப்படி இருக்கக் கூடாது என்று மேலும் ஓர் தீர்மானத்துடன் அன்றைய பணியை  தொடங்கினாள்.

அந்த இயந்திரத்தில் நிலைக் கொண்டிருந்த கண்கள் அதனை தாண்டி  வேறெங்கும் போகவில்லை. முழுக் கவனத்தையும் பணியில் குவீயப்படுத்தி செய்துகொண்டிருந்தாள். சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் அன்புவின் குரல் ஒலித்தது.

” வாங்க மேடம். அவங்க எங்க….?  ம்ம்ம் நீங்களும் வாங்க… எல்லாரும் 6. 00 மணிக்கெல்லாம் கம்பெனி வந்து வேலைப் பாக்குறாங்கல்ல  உங்களுக்கு மட்டும் என்ன…?  என்னவோ நீங்களே கட்டி வச்ச கம்பெனி மாதிரி உங்க இஷ்டத்துக்கு வரீங்க…  உங்க இஷ்டத்துக்கு போறீங்க…. “

“ஈஈஈஈஈஈ……”

சந்தேகமே இல்லை இது கவியின் தோழிகள் தானென அவளுக்கு தெரிந்தது.இத்தனைக்கும் வசவுகள் வாங்கியபின்னும் எதுவும் நடக்காதது போல இளிக்க அவள்களால் தான் முடியும்.

சாரிண்ணா கொஞ்சம் தூங்கிட்டேன் என பிரியாவும்… வேன் மிஸ் பண்ணிட்டு பஸ்ல வரேன் னா அதான் லேட் ஆய்டுச்சு என ஷர்மியும் சாக்கு சொல்ல அவர்கள் சொல்வது பொய்யென தெரிந்தாலும்  முடிக்க வேண்டிய வேலைகளின் முக்கியத்துவம் கருதி இப்போது இந்த வாணரங்களுடன் வாக்குவாதம் செய்யமுடியாது  என அவரவர் வேலையைப் பார்க்குமாறு அனுப்பிவிட்டான்.

ஷர்மி கவியைப் பார்த்து குறுநகை புரிந்துவிட்டு அவள் இடம் செல்ல பிரியா கவியிடம்  “ஹை….  டி “என்றாள். கவியோ ஏதும் சொல்லாமல் அவளது வேலையிலே கவனமாயிருந்தாள். ஒன்றும் புரியவில்லை பிரியாவுக்கு.அவளுக்கு கேட்கவில்லையோ என நினைத்து ஹஸ்கி வாய்சில் கவி….. கவி… என்றழைத்துப் பார்த்தாள். கவியோ அவளது குரலை கவனித்தாலும்
இயந்திரத்தை விட்டு அருகிலிருப்பவளிடம் திரும்பினாள் இல்லை.

“என்ன இவ மெய்மறந்து வேலை செய்றாளா இல்லை ஸ்பீக்கர் அவுட்டா…. “
நினைத்துக் கொண்ட பிரியா அவளது முகத்துக்கு முன் கைகளை வைத்து “கவீீீீவீவீ
… நான் வந்துட்டேன் ” என சொல்லவும் பதறிப் போன “ஆஹா….  அவனே பாவம் பாத்து விட்டாலும் இந்த கொரங்கு என்ன வேற டிபார்ட்மென்ட் மாத்தாம விட மாட்டா…  போலயே…. “என முனுமுனுத்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.  அன்பு அருகில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டவள்” லூசு பக்கத்துல இவ்ளோ பெரிய உருவம் நிக்கிறது கண்ணுக்கு தெரியாம இருக்குமா..? “என பிரியாவிடம் சீறினாள்.

அவளோ   அப்புறம்…..  ஏன் டார்ஜிலிங் கண்டுக்கவே மாட்ற என்ன பிரச்சனை உனக்கு…? என கேள்விக்கணைகளைத் தொடுக்க இடைமறித்தவள் எல்லாம் சாப்பிடப் போகும்போது சொல்றன்… பொறுமையாக இரு.. ” என அவளை அமைதிப்படுத்தினாள்.

அவளும் சரியென்பதாக தலையாட்டிவிட்டு அடுத்த அறையிலிருக்கும் ஷர்மியிடம் சைகையில் பேசத் தொடங்கிவிட்டாள்.

         தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here