நீயே என் இதய தேவதை 13

0
754
Neeye En Idhaya Devathai

எல்லோரும் அமைதியாக காலை உணவு உண்டுகொண்டிருக்க அங்கு ஷர்மி மற்றும் பிரியாவின் சிரிப்பலைகள் சற்று பலமாகவே கேட்டது. ஆனாலும் இவர்கள் இப்படித்தான் என அங்கிருக்கும் எல்லாருக்கும் தெரியுமாதலால் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

“நான் எவ்ளோ சீரியசா பேசிட்டிருக்கேன் எதுக்குடி இப்படி சிரிக்குறீங்க” கவி கோபமாகவே கேட்டாள்.

“பின்ன சிரிக்காம…… இதுக்காகத்தான் காலைல யிருந்து மௌன விரதம் இருந்தியா..?  இதுலாம்….. சும்மா அந்த நேரத்தில  மெரட்டறதுக்கு சொல்றதுடி.அப்போவாச்சும் ஒழுங்கா வேலை செய்வனு…  சொல்றது. வேற டிபார்ட்மென்டலாம் மாத்த மாட்டாங்க… பயப்படாதடி….. ‘பிரியா அவளின் பயத்தை போக்க முயற்சிக்க

“ஹி… ஹி….  சொன்ன அன்பு அண்ணுக்கே
இது மறந்து போயிருக்கும். இப்போ நீயே
ஞாபக படுத்திடுவ போல…எப்பவும் போல இரு கவி. வேலை ஒழுங்கா செய்யாம இருக்கவங்கள டிபார்ட்மென்ட் மாத்தணும்னா………  நான்லாம் வாரத்துக்கு ஒரு டிபார்ட்மென்ட் மாறணும்” ஷர்மி சொன்னதும் பிரியா சிரிக்க  “அடிப்பாவி…”என்ற  கவிக்கும் புன்னகை அரும்பியது.

கவியை இயல்பாய் மாற்ற கேண்டீனிலிருந்து அரட்டையடித்தபடியே நடந்து வர மாடிப்படிக்கட்டினை ஏறும் வழியில் ஒரு இளைஞன் பிரியாவின் மீது லேசாய் மோதினான்.  அவளது சிரித்த முகம் மாறி “அடிங்க…. ” என  அவனை  திட்ட வாயெடுத்து நிமிர்ந்தவள் அந்த முகம் பார்த்தவுடன் அமைதியாக தலை குனிந்து மென்னகை புரிய அவனும் சிரித்து விட்டு அவ்விடம் விட்டு மெதுவாய் நடந்தான். பிரியா அவனை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்த்தபடியே படியேற “யார்டி…  அவரு” என்று கவி ஷர்மியின் புறம் பார்க்க அவளோ “அப்புறம் சொல்றேன்”என்பதாய் சத்தம் வாராமல் கவிக்கு மட்டும் தெரியும்படி வாயசைத்தாள்.

கவிக்கு புரியவில்லை. ஒருவேளை அவன் பிரியாவின் காதலனாக இருக்கலாம் என்று
யூகித்தாள். ஆனால் அப்படி இருக்கும் பட்சத்தில் இவர்களின் இணக்கத்தை கண்டு ஷர்மியின் முகத்தில் எதற்கு இத்தனை வெறுப்பும் கடுகடுப்பும்.
                    
                          தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here