நீயே என் இதய தேவதை 14

0
806
Neeye En Idhaya Devathai

ஷர்மியிடம் தனியாக பேசும் சந்தர்ப்பம் வாய்க்காததவாய்க்காததால்  கவியின் மனது அப்போதைக்கு அந்த இளைஞனை பற்றி அறிந்துகொள்ளும் ஆவலை ஒத்திவைத்தது.மேலும் உணவு இடைவேளைக்கு பிறகான மிகுதியான வேலைகள் கவியை தன்வசம் இழுத்துக் கொண்டன.

மேற்பார்வைக்காக எல்லோரது வேலைகளையும்  கவனித்த அன்பு கவியின் அருகிலிருந்த ட்ரேவினை ஆராய்ந்தான் . இன்று அவள் ரிஜெக்ட் செய்த பொருட்கள் வெகு குறைவாகவே இருந்தது அவனையே அறியாது கண்களில் தோன்றிய மெச்சுதலை கவி பார்ப்பதற்குள் மறைத்துக் கொண்டான். “ம்ம்…. ஓகே..  முன்னாடி இருந்ததுக்கு…  இப்ப பராவாயில்லை. ஆனாலும் வேலையில் வேகம் வரணும். அப்புறம் இந்த இரண்டு மூனு ரிஜெக்சனும் வரக் கூடாது”என்று பாராட்டினை அசட்டையாகவும் குறைகளுக்கான கண்டிப்பை அழுத்தமாகவும் சொல்லிவைத்தான். அவள் ஆமோதிப்பதாக தலையசைத்தாள். அந்த செய்கை பெரியவர்கள் கூறுவதை பயத்துடன்  கேட்டுக் கொள்ளும் சிறுபிள்ளையைப் போலிருந்தது அன்புவுக்கு வேடிக்கையாயிருந்தது. அந்த கம்பெனியில்  அவனை விட பெரியவர்களும் சரி சிறியவர்களும் சரி அவனுக்கு இத்தனை பயந்தது கிடையாது.அதற்கு முதல் உதாரணம் ஷர்மியும், பிரியாவும்.

“சரி வேலையைப் பாருங்க”என்றபடி அவன்  இரண்டடி  வைத்தவுடன் பெருமூச்சு விட்டாள் கவி.அந்த நிம்மதியை குலைக்கவெனவே எதையோ மறந்தவன் போல் திரும்பி வந்தவன் மெஷினை பரிசோதித்து விட்டு “மெஷின் ஏன் இவ்ளோ டிரையா (dry) இருக்கு…?  ஆயில் அப்ளை பண்ணிட்டு யூஸ் பண்ணுங்க எனவும் அவன் ஏதோ புரியாத பாஷை பேசுவது போல தனது அகன்ற விழிகளை மேலும் பெரிதாக்கி விழித்தாள் கவி.

அவனோ கடுப்பாகி என்ன…?  என்ன முழிக்கிற… வேலைக்கு வந்து இத்தனை நாளாச்சு…? இன்னும் உனக்கு மெஷின்க்கு ஆயில் அப்ளை பண்ண தெரியலையா..?

ஆஹா…. ஆரம்பிச்சிட்டானே…. வேலைக்கு வந்து இத்தனை நாளாச்சு….  வேலைக்கு வந்து இத்தனை நாளாச்சு டெய்லி என்கிட்ட  இந்த பாட்டை பாடலைனா இவனுக்கு தூக்கமே வராதா…?  மனம் அவனை அர்ச்சித்தபடி இருக்க கண்கள் எப்போதும் போல அழுகைக்கு தயாரானது.

அப்போ மூனு வாரமா மெஷின்க்கு ஆயில் அப்ளை பண்ணலை….  அப்படித்தானே…?

அப்படியில்லைங்க சார்…?

பின்ன வேற எப்படி….?

முந்தா நேத்து பிரியா சீக்கிரமா வந்ததுனால இந்த மெஷின்க்கும் அவளை ஆயில் அப்பளை பண்ணிட்டா…

“அப்போ உங்க வேலை நீங்க பார்க்க மாட்டீங்க.. அதையும்  சேர்த்து பிரியாதான் பாக்கணும்… இல்ல.. “அன்பு நக்கலாக கேட்க

“நான் அப்படி சொல்லைங்க சார்” குரல் கம்மியது அவளுக்கு.

இதற்கு மேல் வாதம் செய்தால் அழுதுவிடுவாள் என்றுணர்ந்த அன்பு சரி…  சரி இனிமே நீங்க வேலை செய்யுற மெஷின்ல நீங்கதான் ஆயில் அப்ளை பண்ணணும் புரியுதா…?  சீக்கிரம் கத்துக்கோங்க… எப்பவும் இன்னொருத்தர சாரந்தே இருக்கணும்னு நினைக்காதீங்க…
நாளைக்கே பீரியா வேலையை விட்டு நின்னுட்டா என்ன செய்வீங்க……?  இன்னும் இன்னும் அறிவுரை என்ற பெயரில் பேசிக் கொண்டே போனவனை கைபேசி அழைக்க
அதை காதுக்கு கொடு்த்தபடி அன்பு வேறிடம் நகரவும் பிரியா கவியிடம் வரவும் சரியாக இருந்தது.

ஏதோ புயலடித்து ஓய்ந்தார் போல் உணர்ந்த கவி எங்கடி போய் தொலைஞ்ச எரும… பிரியாவிடம் எரிந்து விழுந்தாள்.
    
                                தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here