நீயே என் இதய தேவதை 15

2
1141
Neeye En Idhaya Devathai

கவியின் கோபத்தை கவனிக்காத பிரியாவோ கண்ணாடி அறைக் கதவின் வழியாக உள்ளே வேலை செய்வது போல போக்கு காட்டிக் கொண்டிருந்த ஷர்மியிடம் கையசைத்தபடியே “ரெஸ்ட்ரூம் தாண்டி போனேன்”என சாதாரணமாய் சொன்னாள்…?

அவளது இந்த செய்கை  கவியை மேலும் எரிச்சல்படுத்த “அரைமணி  நேரமா ரெஸ்ட்ரூம்ல அப்படி என்ன தாண்டி  பண்ணுவ…?”என

“ரெஸ்ட்ரூம்ல என்ன பண்ணுவாங்கனு உனக்குத் தெரியாதா கவி” என்று வாய் மட்டும் தான் நக்கலாக கவிக்கு பதிலளித்தது அவளது கைகள் உள்ளேயிருந்த ஷர்மியிடம் சைகையில் ஏதோ பேசிக் கொண்டிருந்தது.

கவியோ “ப்ப்ச்ச்” என்றுவிட்டு அமைதியானவுடன்  பிரியா  திரும்பி திரும்பி அவளைப்  பார்த்தாள் முகத்தைப் பாரத்ததவுடன் தான் தெரிந்தது  கவி ஏதோ சரியில்லை என்பது.

ஹே…. கவி என்ன ஆச்சு உனக்கு…?  ஏன் இப்படி இருக்க…?

எப்படி…?

தெரியலை. ஆனா ஒரு மாதிரி இருக்க..?  நார்மலா இல்லை

ஒன்னுமில்லை. எந்த மாதிரியும் இல்லை. நான் எப்பவும் போலத்தான்  இருக்கேன் என முறுக்கிக் கொண்டாள்.

அப்போதுதான் பிரியாவிற்கு புரிந்தது. தான் வந்தவுடன் கவி ஏதோ சொல்ல நினைத்ததையும், அவளை சொல்வதை கேட்காமல் விளையாட்டாய் பேசி அவளை கடுப்பேற்றியதும். இப்போது கவியை மலையிறங்க வைக்க செல்லம் கொஞ்சனாளாள்.

என் செல்லம்ல…..

இல்லை….

என் பட்டு இல்ல

இல்லை…

என் அம்மு ல்ல.

ம்ம்கூம் இல்லை..

என் பன்னிக்குட்டில…

ஹேய்க்க்்க்

சாரிடி…. என் பூனைக்குட்டி ல்ல இவ்ளோ கொஞ்சுறேன்ல என்ன ஆச்சுனு சொல்லுமா..?

அவளது கொஞ்சலில் கெஞ்சலிலும் மனம் இரங்கிய கவி அந்த சார்… இல்ல
என ஆரம்பித்தாள்.

எந்த சார்..?  அன்பு அண்ணனையா சொல்ற….

ம்ம்

ஆமா அவரு  உன்ன என்ன பண்ணாரு…,?

என்ன பண்ணாரா..? எனக்கு காதுல இரத்தம் வராத குறைதான்.

பிரியா கவியின் பேச்சில் தலையும் புரியாது  காலும் புரியாது விழிக்க அவள் பேச்சினை
தொடர்ந்தாள்.

“பிரியா நீயே சொல்லு. நான் என் வேலையை ஒழுங்காத்தானே பண்ணிட்டிருக்கேன்…..?”

எதுக்கு இதெல்லாம் என்று மனதிற்குள் நினைத்தபடியே “ம்ம்… முன்னாடிக்கு  இப்போ பராவாயில்லை. போக போக இன்னும் வேகம் வந்திடும்”என்றாள் பிரியா.

அதானே அப்புறம் ஏன் அவரு என்ன திட்டிட்டே இருக்காரு…?

” இங்க பாரு கவி சூப்பர்வைசர்னா…….  அப்படித்தான் இருப்பாங்க. எப்போ இந்த கம்பெனியில கால் எடுத்து வைக்குறோமோ அப்பவே வெட்கம்….  மானம்…. சூடு சொரணை ……  எல்லாத்தையும் வெளியிலேயே கழட்டி வச்சிட்டு தான் உள்ள வரணும்.  அப்புறம் அவங்க என்ன திட்டினாலும் இந்த காதுல வாங்கிட்டு அந்த காதுல விட்டுடணும். அப்புறமா…. இதெல்லாம் போகப்.. போக உனக்கே  பழகிடும் புரியுதா….? “என்றுவிட்டு  பிரியா ஈஈஈஈயென இளித்து வைக்கவும் அவளுக்கு பதில் சொல்லாது அனல் வீசும் பார்வை ஒன்றினை அவளிடம் வீசினாள் கவி. அன்புவிடம் காட்டமுடியாத கோபமும்  கலந்திருந்தது அந்த பார்வையில்.

அந்த அனல் பார்வையின் மூலம் நம்ம பார்முலா இவளுக்கு செட் ஆகாது என அறிந்து கொண்ட பிரியா “சரி தாயே…. அவரு எதுக்கு உன்னை திட்டினாரு சொல்லு ….? கவியிடம் கேட்க அவள் நடந்த அனைத்தையும் பிரியாவிடம் கூறினாள்.

அனைத்தையும் கேட்டறிந்த பிரியா “சப்பை மேட்டர் டீ….  இதுக்கா இவ்வளவு ஃபீல் பண்ற…. ? ஆயில் அப்ளை பண்ண நான் சொல்லித்தரேன்”

என்னடி இப்படி சொல்லிட்ட….இன்னும் கொஞ்ச நேரம்  அவரு  பேசியிருந்தாருனா நான் அழுதிட்டிருப்பேன் தெரியுமா..?

ம்ம்கும்…. இவ அழலைனா தானே ஆச்சர்யம்
என  உள்ளுக்குள் முனுமுனுத்துவிட்டு அவளிடம்  அப்படியா கவி..?  என பாவமாய் கேட்டு வைத்தாள்.

ஆனால் எனக்கு ஒன்னு மட்டும் இப்போதான் புரியுது. உங்க அண்ணன
பத்தி…

என்ன புரியுது…?

“உங்க அண்ணன் பொண்டாட்டி ஏன் அவரை விட்டுட்டு ஓடிப்போனாங்க…  னு இப்போதான் தெரியுது”. பிரியாவின் முறைப்பை கண்டுகொள்ளாது மேலும் பேசினாள். “இப்படி…  சும்மா சும்மா எல்லாத்திலேயும் குத்தம் குறை  சொல்லிட்டே இருந்தா எந்த பொண்ணுதான் இவரு கூட வாழுமாம்.? “

கவீீீீவீ…….. என பிரியா அடிக்குரலில் சீறி தனக்கு இந்த பேச்சு பிடிக்கவில்லை என்பதை காட்டினாள்.

“இப்போ எதுக்கு என்ன கத்துற….? நான் அப்படி என்ன சொல்லி….. என பேசிக் கொண்டே நிமிர்ந்தவளின் பார்வை  நேராக நிலைக்குத்தி நின்றது.

என்ன திடீரென பேச்சை நிறுத்திவிட்டாள் என்று பிரியாவும் நிமிர்ந்து பார்க்க அவளும் அதிர்ச்சியானாள். அவர்களின் வரிசைக்கு முன்பிருந்த வரிசையில்  உள்ள இயந்திரத்தில் ஏதோ ஆராய்ந்து கொண்டிருந்தான் அன்பு . அவன் நின்றிருந்த தூரத்திற்கு நிச்சயமாய் இவர்கள் பேசியது அனைத்தையும் கேட்டிருப்பான் என்பதே இவர்களின் அதிர்ச்சிக்கு காரணம்.

அன்புவின் மனதை எப்போதும் குத்தி கிழித்துக் கொண்டிருக்கும் நிகழ்வு…  அதை உணராது கவி கோபத்தில் பேசியதொரு வார்த்தை.. எதிர்வினையாற்றுவானா…? எப்போதும் போல் நடப்பானா..?

                          தொடரும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here