நீயே என் இதய தேவதை 17

1
1356
Neeye En Idhaya Devathai

வசந்த காலம் 17

சிவகாமி  கணேசன் ஓரளவு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த  அன்னோன்ய தம்பதியர்.கணேசன்  கட்டிடக்கலையில் டிப்ளமோ படித்துவிட்டு அதே துறையில் பணிபுரிந்தார்.இருவரும் ஆடம்பர வாழ்வு வாழுமளவிற்கு இல்லையென்றாலும் ஓரளவு  நிலம்புலன்கள் சொத்துகள் என்ற வகையில் எதிர்காலத்தை பற்றிய கவலை இல்லாத பொருளாதார நிலையில் தான் வாழந்து வந்தனர்.இவர்களின் அன்புக்கு சான்றாக பிறந்த முதல் குழந்தைதான் அன்பு. அவனுக்கு அடுத்ததாக 5 வருட இடைவெளியில் பிறந்தவர் சந்தியா மகிழ்ச்சி என்ற சொல்லிற்கு சற்றும் குறைவில்லாத குடும்பம் தனது முதல் அடியை சந்தித்தது கணேசனின் மரணத்தில்.

அன்பு விற்கு 7 வயதாகும்போது அவனது தந்தை கணேசன் அவரது வேலை பார்க்கும் இடத்தில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். நிலைகுலைந்து போனது குடும்பம். கணவன் குழந்தைகள் மட்டுமே வாழ்வென்று இருந்த சிவகாமிக்கு கிட்டத்தட்ட பிரமை பிடித்த நிலைதான். கணவன் சென்றவுடன் தானும் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை இரண்டு குழந்தைகளின் எதிர்கால வாழ்வு பொருட்டு அதனை கைவிட்டார். தனக்கிருக்கும் பொறுப்புகளிலிருந்து தப்பியோட முடியாது என்று நினைத்தாளோ என்னவோ? தந்தையை இழந்த குழந்தைகளை தேற்றும் பொருட்டு தன்னை தானே தேற்றிக்கொண்டு வாழத் தொடங்கினார். அந்த நேரத்தில் அவருக்கு கைகொடுத்தது அவரது தையல் கலை. சிறுவயதில் இருந்து கற்றுக்கொண்டது.கணவனை இழந்த நேரத்தில் ஆனந்த்-தின் குடும்பம் தான் ஓரளவு பாதுகாப்பு அளித்தது.

நேர்மையான மனிதருக்கு இறைவன் எப்பொழுதும் கை கொடுப்பார் என்பதற்கு உதாரணமாக சிவகாமியை கூறலாம்.ஏனெனில் சிறு புழுவிற்கும் கூட தீங்கு இழைக்கக் கூடாது என்று என்னும் மனதுடையவர் இந்த சுயநல  உலகில் போராடி தனது 2 குழந்தைகளையும் ஆளாக்கியது அவரது வாழ்வின் பெரும் சாதனை. ஓரளவிற்கு வசதி என்றாலும் கூடுமானவரையில் சிக்கனமான வாழ்விற்கு தான் தனது மகனுக்கும் மகளுக்கும் பழக்கினார். அன்பு தாயின் நிலையை உணர்ந்து நன்று படித்தான். மிகவும் பொறுப்பான பையன் என்று சுற்றத்தார் இடம் பேர் வாங்கியிருந்தான்.  நல்ல இடத்தில் தங்கையின் திருமணத்தை நடத்தி வைத்தான். அதுவரை இனிமே வாழ்க்கை எத்தனை இன்னல்களை கடந்து தெளிவான நீரோடை போல தான் ஓடிக் கொண்டிருந்தது. சந்தியாவின் திருமணத்தில்
தான் சங்கீதாவை கண்டான் சங்கீதா பார்த்த அசரடிக்கும் அழகி.பார்க்கும் எவரும் ஒரு கணம் சொக்கி தான் போவார்கள் அப்படிப்பட்ட அழகு.அந்த மாயத் தோற்றத்தில் விழுந்ததுதான் அன்பு செய்த பிழையோ..?

தங்கையின் திருமணத்தில் சிறு குறையும் இல்லாது அத்தனை வேலைகளையும் ஒரே ஆளாக செய்தவனைப் பார்த்து அவனது சுற்றம் பொறாமை கொள்ளாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.இப்படி ஒரு பையன் இல்லையே என்றும் அல்லது  நமது பிள்ளைகளுக்கு இவனது நேர்த்தி இருக்குமா என்றும் நினைத்துக் கொள்ளாதவர்கள் குறைவு.அப்படி ஊர் மெச்ச திருமணத்தை நடத்தி வைத்து சந்தியாவை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தவன் அதற்குடுத்தபடியான மறுவீடு சடங்கு முடிந்த அடுத்த நாளும் ஓய்வு தேவை என்பதற்காக அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு நிம்மதியாக உறங்கி எழுந்தவன் குளித்து முடித்து அம்மாவை தேடினான்.

சிவகாமி முற்றத்தில் சம்மனமிட்டு அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே மதிய உணவிற்காக காய்கறி நறுக்கிக்கொண்டிருந்தார்.அவனது அருகில் சென்றமர்ந்த அன்பு நிதானமாக ஆரம்பித்தான். கஷ்டம் இல்லையாம்மா…?  வயசான காலத்துல இன்னமும் வீட்டு வேலை எல்லாம் நீயே தனியா செஞ்சு சிரமப்படுற…?கூடமாட உதவிக்கு இருந்த தங்கச்சியும் கல்யாணம் பணணி போய்ட்டா…..? ப்ப்ச்ச் பாவம்மா நீயி….என்ற  மகனை திரும்பி முறைத்த சிவகாமி

என்னடா பாவம் அப்படி என்ன குச்சி ஊன்றி நடக்கிற வயசாயிடுச்சி எனக்கு…? அப்புறம் சந்தியா புகுந்தவீட்டுக்கு போனா என்ன…?அதான் நீ இருக்க ல்ல? இந்த வயசான அம்மாவுக்கு வீட்டுவேலையில நீ உதவ மாட்டியா என்ன…?என காட்டமாக கேட்க திருதிருவென முழித்தான்.

எதையோ எதிர்பாத்து  பேசப்போனால் பிள்ளையார் பிடிக்க போய்  குரங்காய் ஆன கதை போன்றதாகிவிடும் என நினைத்தும் பார்க்கவில்லை.ஆனால்  மனம் தளராது மீண்டும் ஒரு முறை முயன்று பார்க்க எண்ணினான்.இந்த முறை குறி தப்ப வாய்ப்பில்லே என்று மனக்குரலிலே பேசிக்கொண்டவன்
அம்மா சந்தியா புகுந்த வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் வீடே வெறிச்சோடி இருக்குல்ல   என கேட்க சிவகாமி மகனை கூர்ந்து பார்த்துவிட்டு  இப்போ என்னடா. அவளை வெளிநாட்டுலயா கட்டிக்கொடுத்திருக்கோம்.பாக்கணும்னு தோணுச்சினா  இந்தா பைக்கை எடுத்துட்டு போய் பாத்திட்டு வந்துடப் போறோம்.இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் தோணும். அப்புறம் பழகிடும் என்று சாதாரணமாக
என்றுவிட்டு வேலையைத் தொடரவும் சப்பென்று ஆகியது அன்புவுக்கு.

என்ன இருந்தாலும் நம்ம வீட்ல இருக்கறது மாதிரி வருமா…?

கல்யாணம் தானே நடந்திருக்கு. இன்னும்
தாலி பிரிச்சி கோர்க்குறது தலை தீபாவளி,
பொங்கல்னு எவ்ளோவோ இருக்கு  எல்லாத்துக்கும்  இங்கே தானே வரப்போறா…?

என்ன இத்தனை எளிதாக முடித்து விட்டார்கள்.
கல்யாண மண்டபத்திலிருந்து  சந்தியா புகுந்த வீட்டிற்கு செல்லும்போது  தாயும் மகளும் கட்டிப்பிடித்து கண்ணீர்விட்டு அழுதது எல்லாம் ஓட்டிப்பார்த்து விட்டு அவனது மனசாட்சி அவனை கேலி செய்ய அம்மாவை முறைத்தான்.இதற்கு மேல் எப்படி சொல்லி புரிய வைப்பது என தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த நேரம்
சிவகாமியோ உதட்டோரம் நெளிகிற குறைநகையை மறைக்க முயற்சித்தார். மகனது தவிப்பு அவருக்கு மிகவும் வேடிக்கையாயிருந்தது அவருக்கு  தெரியும் மகன் எதற்கு அடிபோடுகிறான் என்று. தாய் அறியாத சூல் உண்டோ…?

திருமண மண்டபத்தில் அத்தனை வேலைகளுக்கும் பரபரப்புகளுக்கும் இடையிலும் மகனது விழிகள் அடிக்கடி ஒரு பெண்ணை தொட்டு மீள்வதை அவரும் தான் கவனித்தார். அவனது வயதை கடந்து வந்தவர் தானே அவரும்.சம்பந்தி வீட்டிற்கு தூரத்து சொந்தம் அந்த பெண்ணின் குடும்பம். உறவினர்களிடம் அந்த பெண்ணின் விலாசம் குடும்பம் பற்றியெல்லாம் விசாரித்துதான் வைத்திருந்தார்.இருந்தும் மகன் எப்படி தனது விருப்பத்தை தனக்கு சொல்லப் போகிறான் என்று விளையாட்டுக்கு சோதித்துப் பார்த்தார்.கணவனை இழந்த நாள் தொட்டு அவரின் விளையாட்டுத்தனம் அத்தனையும் மறைந்து எதிர்காலத்தை பற்றிய பயம் மட்டுமே மனதை சூழ்ந்திருந்தது. மகனது வளர்ச்சியிள் இப்போது அந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக அகன்று வாழ்க்கை மீதொரு நம்பிக்கை வந்தது. அதுவே அவரது  மகிழ்ச்சிக்கு காரணம். மகளுக்கு பிடித்த வாழ்வை அமைத்து கொடுத்தது போல மகனிற்கு  மனதிற்கு பிடித்த பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால்  அவனது வாழ்வும் சிறக்கும்.அவரது வாழ்க்கை  நிறைவு பெற்றிவிடும் என நினைத்தார்.

நினைப்பது எல்லாம் நடக்கின்ற வாழ்க்கை யாருக்கு கிடைக்கிறது…?

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here