நீயே என் இதய தேவதை 18

0
1130
Neeye En Idhaya Devathai

அன்புவின் வாழ்வக்கையில் மெல்லிய வயலின் இசையில் லயித்திருப்பது போல சாந்ததுடன் நாழிகை ஒவ்வொன்றும் அழகாக நகர்ந்து கொண்டிருந்தது .அலுவலகத்தில் நல்ல பெயர் , தங்கைக்கொரு நல்ல வாழ்வை அமைத்து கொடுத்தாயிற்று என நிம்மதி. இடையிடையே அவளது நினைவுகள் மயிலிறகு வருடல் போல. அம்மா அந்தபெண் வீட்டில் விசாரித்து விட்டாயிற்று.அவர்களும் நடுத்தர குடும்பம். அன்புக்கு அவர்களது பெண்ணை திருமணம் செய்து வைப்பதில் எந்த தடையும் இல்லை.ஆனால்….

சங்கீதாவின்  அப்பா சிவகாமியிடம் பெண்ணின் படிப்பு முடிய இன்னும் ஒரு வருடம் இருப்பதாகவும்  சமீபத்தில் தான் மூத்த பெண்ணின் திருமணம் நடந்தேறியுள்ளதால் கொஞ்சம் பொருளாதார பிரச்சனை,அது சரியாகும் வரை காத்திருந்தால்
சங்கீதாவை நிச்சயமாக  மணமுடித்து தருவதாக வாக்கு கொடுத்தார். ஆம் அவருக்கு சிவகாமி குடும்பத்தை பிடித்தியிருந்தது.மேலும் அன்புவையும் அவனது தங்கை திருமணத்தில் பார்த்திருக்கிறாரே.  நல்ல குடும்பம் நல்ல பொறுப்பான பிள்ளை. இந்த வரனை மறுப்பு சொல்ல முடியவில்லை.

இரண்டு மாதம் கடந்தது. அன்று மாலை அன்பு வீட்டிற்கு வந்த நேரம் அம்மா தொலேபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். அவரது முகம் அத்தனை மகிழ்ச்சி.

இவனைப் பார்த்தவுடன் டேய்…. சீக்கிரம் கிளம்பி வாடா….. கோவிலுக்கு போகணும் என்று விட்டு உரையாடலைத் தொடர்ந்தார்.
களைப்பில் வந்து சோபாவில் அமர்ந்தவன்
என்னம்மா….இப்போதான வீட்டுக்கு வந்தேன்.அதுக்குள்ள என்ன கோவிலுக்கு… மனுசன நிம்மதியா விடுறியா….? ஆமா… இன்னைக்கு வெள்ளிக்கிழமை கூட இல்லையே எதுக்கு கோவிலுக்கு போகணும்…? என்ன விஷயம் …? என

இந்தாடி நீயே உங்கண்ணன் கிட்ட சொல்லு.
என்று போனை அவனது கையில் திணித்து சென்றார்.

அண்ணன் என்றவுடன் தான் சந்தியாவிடம் பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது என்ன குட்டிமா …? சொல்லுடா என்றான்.

கேட்ட செய்தி அவனை மகிழ்ச்சி கடலில் தள்ளியது என்றால் மிகையாகாது.
ஹேஹ்…..ஹே நான் தாய்மாமன் ஆகப்போறேனா…? துள்ளி குதித்தான்.எங்க உன் ஆளு….? ஓஹோ வெளிய போயிருக்கிறாரா ? மச்சானுக்கும் என்னோட வாழ்த்து சொன்னதா சொல்லிடு.
மேலும் சிறிது நேரம் தங்கையிடம் உரையாடிவிட்டு தனது அறைக்கு சென்று குளித்து உடைமாற்றிவிட்டு வந்தவன்

ஏதோ ஓர் பாடலுக்கு  சீட்டியடித்தபடி பைக் சாவியை எடுக்க வந்தவன்  சீக்கிரம்  வாம்மா…. எவ்வளவு நேரம் கிளம்புவ என கத்த

டேய் சாவியை அங்கயே வை.நான் ரெடியாகி வரும்முன்னே வண்டியை ஸ்டார்ட்
பண்ணி புர்ர்ரு….. புர்ர்ரு….  முறுக்கிட்டு இருந்த மவனே  நாளைக்கு பெட்ரோல் டேங்கல சக்கரையை கொட்டி வச்சிடுவேன் என்று மிரட்டினார்.

நீ …. செஞ்சாலும் செய்வ ….என்று பதறியவன் மனதின் எழுந்த உற்சாகத்தை சற்றே அடக்கிவிட்டு   சாவியை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு  மொபைலை நோண்டியபடியே காத்திருந்தான்.

இன்னும் எவ்ளோ நேரம் தாண்டா அந்த மொபைலையே பாத்திட்டிருப்ப சீக்கிரம் வாடா….. டைம்… ஆகுது என்ற குரல் வாசலை தாண்டி கேட்க,

என்னவோ அவனால் தாமதாமானது போல தாய் பேசவும் கடுப்பாகியவன்  சாவியை எடுத்தபடியே  எது நான் லேட் பண்ணிட்டேனா…?

ஹான் பின்ன இல்லையா…?   எப்ப பாரு  போனை பாத்திருட்டிருக்க ? அப்படி என்னதான் இருக்கோ அந்த போன்ல ?

சொல்லமாட்ட நீயி…?  எல்லாம் என் நேரம்?
என்று பேசியபடியே உடன் நடந்தான். படியிறங்கும் போது ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோம்மா…..இன்னும் கொஞ்ச நாள்தான் உன் அதட்டல் மிரட்டல் லாம். அப்புறம் எனக்கு சப்போர்ட்டுக்கு என் மருமக வந்திடுவா…. அதுவரை இதையெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.

ம்ம்கும் பொண்ணுனு முடிவே பண்ணிட்டியா…?

ஆமா..

சரி இருக்கட்டும். உனக்கு உன் மருமக சப்போர்ட் ன்னா எனக்கும் என் மருமக சப்போர்ட் இருக்கும். பார்த்துக்கலாம்டா  என்று கெத்தாய் சொல்ல

சங்கீதாவின் நினைவின் அசடுவழிந்தான்  அன்பு

என்னது வெட்கமா…? பார்க்க சகிக்கல வண்டியை எடுடா….எனவும் முறைத்தபடியே 
பைக்கை ஸ்டார்ட் செய்து கோவிலுக்கு வந்தான்.

தனக்கு முன்னே காலணிகளை கழட்டிவிட்டு கோவிலுக்குள் நுழைந்த அன்புவை ஆச்சர்யமாக பார்த்தார் அவனது அம்மா.இதுவரை அவனுக்கு பெரிதாக கடவுள் பக்தியென்று இருந்ததில்லை. வாரந்தோரம் வெள்ளிக்கிழமை அம்மாவை கோயிலுக்கு அழைத்துச் சென்றாலும் அவர் வரும்வரை பைக்கில் தான் அமர்ந்து காத்திருப்பான்.அதனால் தான் சிவகாமிக்கு இத்தனை ஆச்சர்யம்.

கருவறைக்குள் வீற்றிருக்கும் முருகனை பார்த்தவுடனே ஒரு சாந்தமான மனநிலை இருவருக்கும்.அம்மா ஏன் எந்த துயரிலும் இன்பத்திலும் இந்த முருகனிடம் தஞ்சமடைகிறார் என்று ஓரளவு உணரமுடிந்தது அன்புவால்.இந்த மனநிலை நிலைக்கவும், சந்தியாவின் குழந்தை நல்லபடியாக  பிறக்கவும் வேண்டிக்கொண்டு பிரகாரம் சுற்றினர்.
அடுத்தடுத்த நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது என்றே சொல்ல வேண்டும். அலுவலக வேலை கொஞ்சம் அதிகமாக  அங்கு அதிகவனம் செலுத்த வேண்டியிருந்ததது.  அங்கு நல்லபெயர், பாராட்டு வாங்குவதை விட கடினம் அதை நிலைநிறுத்திக் கொள்வது. தனக்கு மேலிருப்பவர்கள் தன் மீது கொண்ட  நம்பிக்கையை  தக்கவைத்துக் கொள்ளவும்  எதிர்ப்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவும் பொருட்டு  சிறு பிசிறும் இல்லாது வெகுவாக உழைத்தான்.

ஒருநாள் அலுவலகத்தில் தேநீர் இடைவேளையில் அன்பு மட்டும்  கணினியின் முன்பு அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு பெண் தயங்கி தயங்கி வந்தவள் அவன் அருகில் வந்தாள்.ஆள்அரவம் உணர்நது கணினியில் இருந்து தலைதிருப்பி அந்த பெண்ணிடம் என்னமா என்ன வேணும்…? நீ டீ சாப்பிட போகலை…?
என மறுப்பாய் தலையசைத்தவள் இல்ல…… அதுவந்து என திக்கி திணற…

சொல்லு

உங்களுக்கு கல்யாணமா…?பொண்ணு பாத்தாச்சாமே ஒரு வழியாய் கேட்டுவிட்டாள்.

அவனுக்கோ அதிர்ச்சி.இதை அலுவலகத்தில் யாரிடமும் சொல்லி வைக்கவில்லையே.இவளுக்கு எப்படி தெரிந்திருக்குமென்று .
அப்டினு உனக்கு யார் சொன்னது.?

உங்க அம்மா கோவில் ல சொன்னாங்க.அபபோதுதான் புரிந்தது. சிவகாமிக்கு அந்தபெண்ணின் அம்மா
ஓரளவுக்கு பழக்கம்.சொல்லியிருக்கலாம்.
இன்னும் முடிவாகலை பேசி வச்சிருக்காங்க. அவ்ளோதான்.ஏன் கேக்குற..? என்றான் வளவளவென்று பேச்சை வளர்க்க பிடிக்கவில்லை.

அடுத்த அந்த பெண் சொன்ன வார்த்தையில் வெறுப்பும் கோபமும் போட்டி போட அதிர்ச்சியில் கண்கள் தெறித்தது அன்புவுக்கு.

நான் உங்களை விரும்புறேன்.i love u  அன்பு

.                                        தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here