நீயே என் இதய தேவதை 21

1
1133
Neeye En Idhaya Devathai

குழந்தை அழுகைச் சத்தம் கேட்டவுடன் தான் அவனையும் அறியாமல் ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது அன்புவிடம்.சஞ்சலங்கள் அத்தனையும் தீர்ந்து நிம்மதி தன்னை தழுவியது போல உணர்ந்தான்.அந்த நேரமும் வழிகின்ற கண்ணீருக்கிடையில் விழி மூடி முருகனுக்கு நன்றி சொல்ல மறக்கவில்லை சிவகாமி.

சிறிது நேரத்தில் செவிலி குழந்தையை தூக்கிவந்து புவனேஷிடம் கொடுக்கவர அவனோ முதலில் சந்தியாவை பார்த்தாக வேண்டுமென்று பிடிவாதமாய் இருக்க இத்தனை நேரம் இவனை சமாளித்ததே அதிகமென்று நினைத்த அன்பு  அந்நேரம் அறையை விட்டு வெளியேறிய மருத்துவரை அனுமதிவேண்டி பார்க்க அவர் ஒரு புன்னகையுடன் உள்ளே போய் பாருங்க என்றார்.

  குழந்தையை யாரிடம் கொடுப்பது  என்பது போல செவிலி பார்க்க அன்பு தானே முன்வந்து வாங்கினான்.சிவகாமி அவன் அருகில் வந்து குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தார்.ரோஜா இதழில் வார்த்த குட்டி சிலை போல் இருந்த குழந்தையை வாங்கியவுடன் அத்தனை பரவசம் அவன் முகத்தில்.மனம் இலகுவாகி வானில் பறப்பது போல் உணர்வு.தூக்கத்தில் இருந்த குழந்தை சற்றே அசையும் போது குழந்தையின் கால் தன்னிச்சையாக உரச உள்ளுக்குள் சிலிர்த்து அடங்கியது.

“ம்மா…..பிடிம்மா…” அடுத்த நிமிடம் பயத்துடன்  தவித்தபடியே கூறினான்.ஏதோ ஆசையில் வாங்கிவிட்டான்.இதுவரையில் சின்ன  குழந்தைகளை தூக்கியதே இல்லை.

கொஞ்ச நேரம் வச்சிரேன்…. டா எனக் கூற ஹ்ஹ்கூம்…..பயமாருக்கு….ம்மா  பிடியேன் என சத்தமிட்டான். அவனது அவஸ்தையை ரசித்தபடியே சிரித்துக்கொண்டே குழந்தை வாங்கியவர் அம்முமா …..  மாமா  உன்னப் பார்த்து பயப்படுறானாம் தங்கம் ம்மா……எருமைமாடு மாதிரி வளர்ந்திருக்க என்ன கொஞ்சம் நேரம் தூக்கி வச்சிக்க முடியலையா  கேளுடா தங்கம் …..என கொஞ்சிக் கொண்டிருக்க அதையெதுவும் பொருட்படுத்தாத அன்புவோ குழந்தையின் பிஞ்சு கரங்களுக்குள் தன் ஒற்றை விரலை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.இப்படியாக சிறிது நேரம் கழிந்த பிறகு குழந்தை பிறந்துவிட்டதை தன் சொந்த பந்தங்களுக்கு தெரிவித்துவிட்டு, புவனேஷை வலுகட்டாயாமாக இழுத்து வந்து சாப்பிடவைத்து  அம்மாவுக்கும் தங்கைக்கும்  உணவு வாங்கி தந்து விட்டு குழந்தைக்கு உடை வாங்கி வந்து  அம்மாவுடன் வீட்டிற்கு அவருக்கும் தங்கைக்கும் தேவையானவற்றை எல்லாம் பேக் செய்ய உதவி  என எல்லாம் வேலைகளை முடித்துவிட்டு திரும்பவும் வீட்டிற்கு வந்து தூங்க செல்ல 11 மணி ஆகியது.இருந்தும் உற்சாகம் இன்னும் மீதமிருப்பது போல உணர்வில் சுகமாக தூங்கினான்.

அடுத்தடுத்த மூன்று நாட்கள் அலுவலகம் மருத்துவமனை வீடு என்று மூன்று நாள் கழிய அடுத்தநாள்  சந்தியாவிற்கு சீராட வர
அன்று ஆரம்பித்தது அன்புவின் கொட்டம்.
மாலை வீடுதிரும்பும் போதே குழந்தையை பார்க்கப்போகும் உற்சாகம் முகத்தில் தாண்டவமாடும்.அந்த பிஞ்சின் முகம் எல்லா மனக்கவலைகளையும் விலக்குவது போல் உணர்ந்தான்.குழந்தை பெயர் சூட்டு விழாவும் அன்புவின் இல்லத்திலே எளிமையாக நடந்தது.புவனேஷின் பரிந்துரையில் சுபத்ரா என்ற பெயர் வைக்க  இவன் மட்டும் சுபி என்றழைப்பான்.மாலை வீட்டிற்குச் சென்றவுடனே குளித்து விட்டு பாப்பாவிடம் சென்று  கை முட்டி தரையில் பதிய கைகளிரண்டையும் கண்ணத்தில் வைத்தபடி  அமர்ந்துக் கொள்வான்.தரையில் குழந்தைக்களுக்கென செய்யப்பட்ட மெத்தையில் படுக்க வைத்தபடி கை கால்களை வீசிக்கொண்டிருக்கும்.அது ஏதோ உலகமகா அதிசயம் போல ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பான்.இன்னும் கொஞ்சம் குழந்தை வளர வளர மடியில் கிடத்தி விளையாட்டு காட்டுவான்.தோளில் தட்டி தூங்க வைப்பான்.விடுமுறை நாட்களில் குழந்தை பால் அருந்த மட்டுமே சந்தியாவிடம் செல்லும்.குழந்தையை அம்மா  குளிப்பாட்டி  வந்தவுடன் அப்படியே பவுடர் பூசி மை வைத்தல் போன்ற வேலைகளை ரசித்து பொறுமையாக செய்வான்.டேய் குழந்தையை தூக்கி தூக்கி வச்சிக்காத டா.அவ புகுந்த வீட்டிற்கு போனாலும் குழந்தை எப்பவும் தூக்கி வச்சிக்க சொல்லு வாடா

.சந்தியாவுக்கு தான் கஷ்டம்….”என்று கண்டித்தாலும் அதையெல்லாம் லட்சியம் செய்யவில்லை.
அவன். அப்படி வளர்த்து வந்தான்.அலுவலகத்தில் யாராவது குழந்தையை பற்றி கேட்டுவிட்டாலே முகமலர்ந்து போய் கதை சொல்லுவான்.சுபி முதன்முதலில் சிரித்தது, சத்தம் போட்டது,கவிழந்தது,சந்தியாவைப் போலவே அவனை அண்ணா என்றழைத்தது,அதை அவன் அம்மா மாமா என்று சொல்லிக்கொடுத்து திருத்தியது,முட்டிப் போட்டது, நடக்க பழகி கீழே விழுவது என்று சுபியை பற்றி பேச அவனுக்கே நிறையவே கதைகள் இருக்கும்.

9 மாதம் முடிந்தவுடன் புவனேஷ் தன்  நல்ல நாள் பார்த்து குழந்தையையும் சந்தியாவையும் அனுப்பி வையுங்கள் என்று சொல்லிவிட்டு போக இத்தனை நாள் தன்னுடன் இருந்த குழந்தை பிரியப்போகும் ஏக்கம் மனதை வாட்டியது அன்புவுக்கு.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here