நீயே என் இதய தேவதை 22

0
769
Neeye En Idhaya Devathai
Neeye En Idhaya Devathai

அன்புவுக்கு எல்லாமே கனவு போலிருந்தது.
இதுவரையில் அவனுக்கு  கடவுள்  அதிர்ஷ்டம் போன்ற எதிலும் நம்பிக்கை கிடையாது.உழைப்பையும் புத்திசாலிதனத்தையும் மனித சக்தியை மட்டுமே நம்பியிருந்தான்.இந்த நம்பிக்கை ஓர் இனிய சம்பவத்தால் லேசாக தளர்ந்தது
எனலாம்.

அவனது வயதில் உள்ள ஒரு ஆணிற்கு ஓர் அழகிய பெண்மீது ஈர்ப்பு வருவது என்பது இயல்புதான்.அதன் பின்னான காலங்களில் அவளைப் பார்த்தேயிராவிட்டாலும் அவளது மேலான சலனம் கொஞ்சம் கூட நீர்த்து போகமலிருக்குமா? .அவளது முகத்தை மட்டும் அகத்திரையில் அவ்வப்போது வரைந்து பார்த்துவிட்டு மனம் தித்திக்குமா?
ஒரே நாளில் சில மணித்துளிகளை மட்டுமே கண்களையும் மனதையையும் நிறைத்தவளோடு ஆயுள் முழுதும் வாழ்ந்து பார்க்கத் தோணுமா…?
தோன்றியதே

சரி அது கூட லவ் அட் பர்ஸ்ட் சைட் என்று எளிமையாக சொல்லிவிடலாம்.உருகி உருகி காதலித்தவர்களாய் இருந்தாலும் காதலித்தவளை கரம்பிடிக்க எத்தனை எதிர்ப்புகள் வரும் என்று அறிவான்.ஆனால் எந்த தடையுமின்றி தான் நேசித்த பெண்ணை கரம்பற்றுதல் என்பது எத்தனை
பேருக்கு வாய்த்திருக்கிறது? அந்த வகையில் தன்னை அதிர்ஷ்டக் காரனாக நினைத்துக் கொண்டான்.

சுபிக்கு 11 மாதமானதும் புவனேஷ் வீட்டு வழக்கப்படி அவர்களது குல தெய்வக் கோவிலில் மொட்டையடித்து காதுகுத்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.அன்பு வீட்டு பக்கம் அவனது சித்தப்பா பெரியப்பா குடும்பம் மட்டுமே கலந்து கொண்டிருக்க புவனேஷ் வீட்டு பக்கம் அவனது தூரத்து உறவினர்கள் கூட வந்திருந்தனர்.அபபடித்தான் சங்கீதாவின் அப்பாவும் விழாவில் கலந்து கொண்டிருந்தார்.குழந்தைக்கு தாய்மாமனான அன்புவின் மடியில் அமர்த்தி காதணி அணிந்த பின் குழந்தை வீறிட்டு அழத்தொடங்கியது.காதணி விழா முடிந்ததும் உறவினர்கள் பந்தியை நோக்கி நகர அங்கு கவனிக்க புவனேஷ் சந்தியா சென்றுவிட அன்பு வோ குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்ட நகர சிவகாமி உடன் வந்தார்.

அப்போதுதான் சங்கீதாவின் அப்பாவை கண்டவர் புன்னகை புரிந்தார்.மன்னிசிருங்க தம்பி  “வேலையில உங்களை நான் கவனிக்கவேயில்லை” என
இல்ல பரவாயில்லைங்க  என்றவரை என்றவரை அன்புவுக்கு அறிமுகம் செய்தார்
சிவகாமி.அன்புவுக்கு சங்கீதாவை தவிர அவள் வீட்டில் வேறு யாரையும் தெரியாது.
வந்தவர் சற்று நேரம் பொதுவாய் சில விஷயங்களை பேசிவிட்டு நாசுக்காய் திருமணத்தைப் பற்றிய பேச்செடுக்க சிவகாமிக்கு என்ன சொல்வதென தெரியாத நிலை.சந்தியாவின் திருமணம் முதல் தற்போதான சுபியின் காதணிவிழா வரையான காலம் நிறைய செலவுகள் வந்துவிட்டதால் இப்போது திருமணத்தை நிகழ்த்த முடியுமா என யோசிக்க ஒரு தீர்வாய் சொல்ல முடியவில்லை சங்கீதாவின் அப்பாவிடம்.தனது நிலையைத் தானும் நாசூக்காய் எடுத்துச் சொல்ல அவரோ முகம் மாறிப்போனார்.
ஆனாலும் விடவில்லை செலவுகளை குறைத்துக் கொண்டு திருமணத்தை எளிமையாக நடத்திக் கொள்ளலாம் என்று சொல்லிப் பார்த்தார்.இப்படியாக இவர்களுக்குள் ஒரு உரையாடல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க அன்பு அமைதியாய் வந்தான்.

இறுதியில் “சங்கீதாவின் அப்பா நல்லா யோசித்து சொல்லுங்க.என் உடம்பு கொஞ்சம் சரியில்லை.அதான் இரண்டாவது பொண்ணு கல்யாணத்தையும் சீக்கிரமா முடிச்சிட்டா நல்லுதுனு படுது. நீங்க அப்புறம் ஃபோன் பண்ணுங்க..” என்று தனது கைபேசிஎண்ணை பகிர்ந்து கொண்டு விடைபெற்றார்.சிவகாமிக்கு என்ன செய்வதென புரியாத குழப்பம்.ஒரு தந்தை நிலையிலிருந்து பார்த்தால்  அவர் சொல்வது  சரிதான்.நோயுற்றது போல்  முன்பு பார்த்ததை விட சற்று இளைத்து கருத்து தான் போயிருக்கிறார்.நடையிலும் சற்று தடுமாற்றம்.இதுபோல இவரைப் பார்க்கவும் பாவமாகயிருந்தது.ஆனால் மகளது திருமணத்தை சிறப்பாக நடத்திவிட்டு மகனுக்கு மட்டும் எளிமையாக செய்வது மனதுக்கு ஒத்துக்கொள்ளவில்லை.தன்மேல் வருங்காலத்தில் மகனோ மகளோ எந்த ஒரு குறையும் சொல்லும்படி வைத்துக்கொள்ள கூடாது என நினைத்தார்.அதே போல் கடன் வாங்கி திருமணத்தை நடத்தவும் மனம் வரவில்லை.காதணி விழா சிறப்பாக முடிந்ததும் அன்றிரவு வீட்டுக்குச் சென்று அன்புவிடம் இதுபற்றி பேச அவனோ ஒருத்தர்கிட்ட கொஞ்சம்  பணம் வரவேண்டியிருக்கு.அதனால 6 மாசம் கழித்து கல்யாணத்தை வச்சிக்கலாம் அதற்கு முன்னாடி நிச்சயதார்த்தத்தை சிம்பிளா நடத்திக்கலாம் என்று சொல்ல அவன் கூறியது போலவே நடந்தது.அத்தனை நிகழ்வுகளிலும் சங்கீதா இயல்பாகவே இருந்தது போலவே தோன்றியது.

ஆனால் இன்று ,

முதலிரவில் தனித்து விடப்பட்டனர் மணமக்கள்.சங்கீதாவின் முகத்தில் பதற்றம் மிகவும் அதிகமாயிருந்தது. இந்த நிகழ்வுக்கே உரிய கூச்சமாய் இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான்.மிதமான ஒப்பனையில் விண்ணிலிருந்து பூமிக்கு வந்த தேவதை வழிமறந்து புவியில் தங்கிவிட்டது போலவே தோன்றினாள் அன்புவின கண்ணகளுக்கு.சில முறை தொலைபேசியில் உரையாடியிருந்தாலும் இப்பொழுது அவளின் அகன்ற விழிகளைப் பார்த்து பேசுவதற்கு தயக்கமாகவே இருந்தது.மலர் ஒன்றினை ஏந்துவது போல மென்மையுடன் மெதுவாக அவளின் கைகளை தொட்டவன் சற்று அழுத்தமாய் தன் கைவிரல்களோடு அவள் கைவிரல்களை பிணைத்படி அழுத்தியவன் தனது தடுமாற்றத்தினை மறைத்துக் கொண்டு “ரிலாக்ஸ்”என்று புன்னகைத்தான்.அவளும் புன்னகைக்க முயன்றாள்.ஓரளவு சகஜநிலைக்கு திரும்பினான். பின்னர் அவளை முதல் முதலில் பார்த்தது காதல் வயப்பட்டதெல்லாம் பின்னர் திருமணம் நடந்ததை பற்றியெல்லாம் உரையாடினான்.அவளோ மென் புன்னகையுடன் கேட்டுக்கொண்டவள் ஓரிரு வார்த்தைகள் பேசினாள்.அவள் இயல்பாக உரையாட ஆரமபித்த பிறகு தன் மனதில் இருப்பதை அவளிடம் கூற அவளிடம் இருந்த தடுமாற்றம் பிறகு இல்லை.

ஏற்பாட்டு திருமணம் ( அவளை பொறுத்தவரையில்)என்றாலும் கணவன் என்கிற உரிமையில் மட்டுமே அவளிடம் கூட மனம் விழையவில்லை. அவள் மீது தான் உணர்ந்த காதலை அவளும் தன் மீது உணர வேண்டும்.அதே நேசம்  அவனுக்கும் வேண்டுமென எண்ணினான்.அதையே அவளிடம் கூறவும் செய்தான். அவளும் அதை ஆமோதிக்கவும் அன்புவின் மனம் கனிந்தது.ஆனால் அப்போது அவள் முகத்தில் தோன்றிய மாறுதலை கவனிக்க தவறிவிட்டான்.

அடுத்தநாள் அதிகாலையில் எழுந்த அன்பு  குளித்து முடித்து இன்னமும் தூங்கி கொண்டிருந்தவளை லேசாக தொட்டு கீதா என்றாள்.இமைகளை கூட “இன்னும் 5 நிமிஷம் ம்மா” என்றவளை பார்த்து மேலும் ரசிக்கத்தான் முடிந்தது அவனால்.பத்து நிமிடத்திற்கு பிறகு கொஞ்சம் சத்தமாய் கீதா என்றழைக்க அடித்து பிடித்து எழுந்தவளுக்கு அப்போதுதான் இது அம்மா வீடு இல்லை என்பது உரைக்க சங்கடமாய் அன்புவைப் பார்த்தாள்.பயந்திட்டியா மா.ரொம்ப நேரமா கூப்பிட்டேன்.உனக்கு தூக்கம் தெளியலை போல.அதான் கொஞ்சம் சத்தமா கூப்டேன்.என அவன் சொல்ல கடிகாரத்தைப் பாரத்தால் மணி எட்டு எனக் காட்டியது.மறுபடி அன்புவைப் பார்க்க டென்சன் வேண்டாம் போய் குளிச்சிட்டு வா என்று பொறுமையாய் சொல்லி அனுப்பினான்.

சிவகாமியை நினைத்து பயந்து கொண்டே சமையலறைக்குள் நுழைந்தவளது கைகளில் வாம்மா….. மிதமான  சூட்டுடன் காபி டம்ளர் திணிக்கப்பட்டது.

அத்தை என்றபடி காபி கப்பை  வாங்கிய சங்கீதா திரு திருவென விழித்தாள்.சின்ன க் குழந்தையை போல் தோன்றியது சிவகாமிக்கு காபி சூடு ஆறதுக்குள்ள குடி டா என்றபடி கன்னம் தட்டிவிட்டு சென்றார்.
அன்றைய நாள் மட்டுமல்ல அடுத்து வந்த நாட்களிலும் அதே நிகழ்வுதான் தொடர்ந்தது.சங்கீதாவிற்கு அவ்வளவாக வீட்டு வேலைகள் எதுவும் தெரியாது என்பதை அவளது அப்பா முன்பே கூறியிருந்தார்.அதையெல்லாம் பொருட்படுத்தாத சிவகாமி பொறுமையாய் எல்லாவற்றையும்  சொல்லிக் கொடு்த்தார்.சொல்லப் போனால் கணவன் மனைவி உறவைவிட மாமியார் மருமகளது உறவில் நெருக்கமாய் ஒரு பாசம் பிணைந்திருந்தது.  சிவகாமிக்கு சங்கீதாவிற்கும் சந்தியாவையும் வித்தியாசப்படுத்தி பார்க்கவெல்லாம் தோன்றவில்லை.

அன்புவிற்கோ வானில் பறப்பதைப்போன்ற தொரு மாய எண்ணம்.உடல் அளவில் அவர்களது உறவில் எந்த முன்னேற்றமும் இல்லையெனினும் சங்கீதாவின் அருகாமையும் உடனிருப்புமே அப்படி ஒரு மகிழ்ச்சியைத்  தோற்றுவித்தது.சங்கீதா தன் அன்னையுடன் இயல்பாகவும் உரிமையுடனும் நடந்துகொள்வதும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீட்டின் சூழலுக்கேற்ப தன்னை பழக்கிக் கொள்வதும் வெகுவாய் நிம்மதியளித்தது.

அப்படியாக அவன் அதே உற்சாகத்துடன் ஒருநாள் அலுவலகத்திற்குள் வரும்போதுதான்  அவனுக்காகவே காத்திருந்தாற் போல் சந்தியா அவனை நோக்கி வந்தாள்.இவன் கண்டுகொள்ளாது கடந்துவிட முற்படவும் அண்ணா….என்றழைக்க வந்தவள் சுதாரித்துக்கொண்டு அன்பு கொஞ்சம் நில்லுங்க….. உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும் என்று சொல்லிக் கொண்டே அவனை தொடர்ந்தாள்.

ப்ப்ச்ச்…. உன்கிட்ட பேசுறதுக்கு எனக்கு ஒன்னும் இல்லை. போய் வேலையைப் பார் என  அவன் சொல்ல

ஐயோ இது முக்கியமான விஷயம். ஒரே ஒரு நிமிஷம்…

சரி சொல்லு என்ன விஷயம் என அவளை நோக்க

கலங்கிய கண்களுடன் இருந்தவள்.அந்த சங்கீதாவ விட நான் எந்த விதத்தில உங்களுக்கு குறைஞ்சு போய்ட்டேன்? சொல்லுங்க.

இவ திருந்த மாட்டா.என அவன் நகரப் போக  அவனிற்கு முன் ஓடி சென்று நீங்க அவளை நம்புனா உங்களை விட பெரிய முட்டாள் வேற யாரும் இல்லை. அவ ஒரு ப்ராடு.அவ ஏற்கனவே ஒரு பையன் கூட ஊர்மேஞ்சிட்டு  இருந்தவ.குடும்பமே சேர்ந்து ஏமாத்தி அவள உங்க தலையில கட்டி வச்சிருக்காங்க.அவலாம் உங்களுக்கு பொருத்தமே இல்லை…… இன்னும் ஏதேதோ சொல்லப் போனவள் அன்புவின் முகத்தில் தெரிந்த ரௌத்திரத்தில் இத்தோடு நிறுத்திக் கொண்டாள்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here