நீயே என் இதய தேவதை 7

0
822
Neeye En Idhaya Devathai
அந்த வேனில் நேரே சுகுணா வீடு சென்றிரங்கினாள் கவி. சற்று தூரத்திலிருந்து பார்க்க வீட்டு வாசலில் யாரோ ஒரு பெண்மனி குழந்தைக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருப்பதும் சுகுணா அவர் எதிரில் நின்று ஏதோ பேசியபடியும் இருப்பது தெரிந்தது.

இவளைப் பார்த்ததும் முகம் மலர்ந்து சுகுணா கேட்டாள்.  “வாடி….. வேலை எல்லாம் எப்படி இருக்கு…?  ஈசியா இருக்கா…? “
பாப்பா கவியைப் பார்த்தவுடன் “ம்மா….” என்றபடியே அவளிடம் தாவியது.


உடனே அந்த குழந்தை வைத்திருந்த பெண்மணி “பாத்தியா..? இவ்வளவு நேரம் என் கூட விளையாடிட்டு இருந்த அம்மா வந்த உடனே அப்படியே தாவிட்ட….”என்று குழந்தையிடம் பேசினார்.

கவியின் முகத்தில் குழப்பத்தைக் கண்ட சுகுணா “என்னடி…. சோகமா இருக்க வேலை அவ்வளவு கஷ்டமா..?” என்று வினவினாள்.


“அப்படியெல்லாம் இல்லை சித்தி”
அப்பறம் ஏன் ஒரு மாதிரியா இருக்க…? உடம்பு சரி இல்லையா
“இல்லை சித்தி… அது வந்து” என்று தயங்கினாள்.
“சொல்லு டி.”
“அங்க ஷிப்ட்…முறைல தான் வேலையாம்.1st ஷிப்ட் பரவாயில்லை 6-2. ஆனா 2nd ஷிப்ட் 2- 10 மணிக்கு. பாப்பா அதுவரைக்கும் எப்படினு…?


ஓ…. பரவாயில்ல கவி நான் பாத்துகிறேன் என்று தயங்கியபடி சொன்னாள். அவளது மாமியாரை நினைத்து அவளுக்கும் பயம்தான். இருந்தாலும் கவி பாவமாயிற்றே. ஊரில் அவளுண்டு அவள் குழந்தையுண்டு என்று  இருந்த பெண்ணை
தைரியமூட்டி வரவழைத்துவிட்டு இப்போது அம்போவென வி்ட்டுவிட முடியாதே.


“வேணாம் சித்தி.. உங்க மாமியார் எதாவது சொல்ல போறாங்க. ரெகுலர் ஷிப்ட்ல போற மாதிரி வேறு வேலை தேடிக்குறேன்…” என்றாள் அரைமனதாய்.
‘இவங்க வீட்ல ஒத்துக்கலனா என்னம்மா இந்த தங்ககட்டிய நான் பாத்துக்கிறேன்..” என்றாள் அருகிலிருந்த பெண்மனி.
கவி இப்போதுதான் அவளை உற்று கவனித்தாள்.  அந்த பெரியவளுக்கு கவியின் அம்மா வயதிருக்கும். இதுவரை அவரை பார்த்தது கூட இல்லையே. இவரிடம் எப்படி குழந்தையை வி்ட்டுவிட்டு செல்வது…? சற்றே சங்கடத்துடன் சுகுணாவைப் பார்த்தாள்.

“இவங்க பேரு காமாட்சி. இங்க நம்ம வீட்டு பக்கத்துல தான் இருக்காங்க. சின்னதா ஒரு மளிகை கடை வச்சிருக்காங்க.  இந்த தெருவில பாதி குழந்தைகளை இவங்க தான் வளர்த்தாங்க. நம்ம சுரேஷ் கூட பாதி நேரம்  இவங்க வீட்ல தான் விளையாடிட்டு இருப்பான்.”

என்னம்மா யோசிக்கற….? அதோ அதுதான் எங்க வீடு. எங்களோட ஒரு பையன் வெளிநாட்டுல வேலைக்காக போய் அங்கே குடும்பமா செட்டில் ஆயி்ட்டான். நானும் என் வீட்டுக்காரரும் மட்டும் தான் இருக்கோம். கடைய அவர் பாத்துப்பாரு. நான் வீட்டுல சும்மாதான் இருக்கேன்…நான் பாத்துகிறேன் குழந்தையை” என்றாள்.

கவி யோசிப்பதற்குள் சுகுணா சரி அத்தை என்றாள்.அவளுக்கு தெரியும் காமாட்சி அத்தைக்கு குழந்தைகள் மேல் அதீத ஆசை.அவரது ஒரே மகனும் குடும்பத்துடன்
வெளிநாடு சென்று தங்கிவிட பேரக்குழந்தைகளுடன் இருக்கும் வாய்ப்பில்லாமல் போனது வருத்தம்தான்.அந்த தெருவில் இருக்கும் வீடுகளில் பாதி குழந்தைகள் அவளிடம் தான் வளர்ந்திருக்கும். பிறந்த குழந்தையை  பதமாக குளிப்பாட்டுதல், உரம் எடுத்தல், போன்ற குழந்தை வளர்ப்பின் அத்தனை வேலைகளும் அத்துப்படி அவருக்கு.

சரி நான் வரேண்டீ…… என்றபடி காமாட்சி சுகுணாவின் விடைபெற்று கிளம்பினார்.அவர் சென்றபின் யோசிக்காத கவி அவங்க பாப்பாவ நல்லா பாத்துப்பாங்க. நான்தான் சொல்றேன்ல. என்றாள் சுகுணா.
கவிக்கு சற்று நெருடலாக இருந்தாலும் வேறுவழியின்றி கவி ஒத்துக் கொண்டாள்.

“சரி…பாப்பாவ பிடி.கொஞ்சோண்டு சாதம் ஊட்டினேன்.  பிளாஸ்க்.. ல பால் இருக்கு எடு்த்துட்டு போ.”

நேரம் மாலை: 5. 30

சாதாரணமாக இந்த நேரம் அன்பு வீட்டுக்கு கிளம்பியிருக்க வேண்டும். ஆனால் விடுப்பில் இருந்த மேனேஜரின் வேலைகளை முடிக்கும் பொருட்டு கம்பெனியில் இருந்தான்.

இதில் வேறு இந்த பசங்க அண்ணா இந்த மெட்டீரியல் காலியாயிடுச்சு. எடுத்துக் கொடுங்க.
அண்ணா கௌவுண்டிங் நோட்ல சைன் பண்ணுங்க  என அலைக்கழிக்க “ச்சே…. இதே நாம லீவு போட்ருந்தா நம்ம வேலையும் ஒரு நாயும் பாக்காது. என் தலையில மட்டும் இளிச்சவாயன்னா எழுதி வச்சிருக்கு ……

“எரிச்சலுடனே வேலையில் ஈடுபட்டவன் அதை முடித்து வெளிவர 8. 30 மணி ஆனது. நேரே வீட்டிற்கு சென்றவன் அலுப்பு தீர சிறு குளியல் போட்டுவி்ட்டு  வந்தவன் அப்படியே படுக்கையில் சரிந்தான். வயிறு பசிக்கத்தான் செய்தது. இருந்தாலும் இருக்கும்  களைப்பில் கடைக்கு சென்று ஏதாவது வாங்கி சமைக்கவெல்லாம் முடியாது. வரும்போது ஹோட்டலில் உணவு வாங்கி வர  ஞாபகம் இல்லை.

கண்ணில் சிறுதுளி நீர்  வெளிவந்தது . அழுகிறான் தான். ஆம் அம்மாவின் ஞாபகம் .சிவகாமி இருக்கும்போது ஒரு நாள் கூட பசியுடன் உறங்க விட்டதில்லை. தங்கை அணிதாவும் அம்மாவின் 16ம் நாள் காரியம் முடிந்து புகுந்த வீடு சென்றவள் இரண்டு வருடங்களில் ஒருநாள் கூட எட்டிப்பார்க்கவில்லை. காரியம் முடிந்த நாளில் அணிதாவின் மாமியார்  பேச்சில் மனம் நொந்தவன் அவரை கடுமையாக பேசிவிட்டான். அதன் தாக்கம் தான் அணிதாவை வீட்டுக்கு அனுப்புவதில்லை.

என்றைக்காவது போனில் அழைத்து நலம் விசாரிப்பாள். சுபிக்குட்டியை( தங்கை மகள்) பார்க்க வேண்டும் போலிருந்தது. சென்ற மாதம் அவளது 3வது பிறந்தநாள் விழாவிற்கு சென்றவன் யாரோ ஒருவன் போல தூரமிருந்து பார்த்துவிட்டு வந்திருந்தான்.மற்றபடி அவ்வப்போது வீடியோ காலில் சிறிது நேரம் மருமகளோடு பேசுவதோடு சரி. நன்கு வளர்ந்துவிட்டாள். பெரிய மனுசி போல பேச ஆரம்பித்து விட்டாள்.பள்ளியிலாவது சென்று சந்திக்க வேண்டும்.
இப்படி எதையெதையோ யோசித்துக் கொண்டிருந்தவன் எப்போது தூங்கினான் என தெரியவில்லை. ஆழ்ந்த நித்திரைக்கு சென்றான்.

                                  – தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here