நீயே என் இதய தேவதை 9

0
898
Neeye En Idhaya Devathai

இருவாரம் கடந்திருந்திருந்தது. மாறிய உணவு நேரம் மற்றும் எட்டு மணி நேரம் தொடர்ந்து நிற்பதால் பின்னியெடுக்கும் கால்வலி இதுவெல்லாமும் கொஞ்சம் கொஞ்சமாக பழகி இருந்தது.. கவி, ஷர்மி, பிரியா நட்பு இன்னமும் நெருக்கமானது.2nd ஷிப்ட்டில் காமாட்சி அம்மாள் மாயாவை நன்கு கவனித்துக் கொண்டார். அவருக்கு சிறு பிள்ளைகள் என்றாலே உயிர்.  மாயா வேறு மைதா மாவில் செய்த பொம்மை  போல அழகிய கோலிக்குண்டு கண்கள் குழந்தைக்களுக்கே உரிய புசு புசு கண்ணங்கள்  என பார்ப்பவர்களை சட்டென கவனம் ஈர்க்கும் வசியக்காரி. கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டார்.ஆகையால் கவிக்கு எந்த பிரச்சனையுமில்லை.

பிரச்சனை அதிகரித்தெல்லாம் அன்புவுக்குதான். ஷர்மியும் பிரியாவும் இணை பிரியா தோழிகள் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் வாலில்லா வாணரங்கள். ஷர்மி வேலைக்குச் சேர்ந்து இரண்டு வருடம் ஆகியும் இன்னும் வேலையின் லாவகம் வரவில்லை. அவளது
கைகள் வஞ்சகம் இல்லாது மெட்டீரியலை நாசம் செய்து அதிகம் ரிஜக்ட் ஆக்கும். பிரியாவிற்கு  இயந்திர வேலைகள் எல்லாம் அத்துபுடி. ஆனாலும் வாய் அதிகம். இரண்டு வாணரங்களும் அந்த கம்பெனியின் பிரபலங்கள்.   எந்நேரமும் இணைந்தே திரிபவர்கள். வேலை நேரங்களில் ஆங்காங்கே சென்று வாயாடுவது, சூப்பர்வைசர்களிடம் சண்டை போடுவது,  உணவு இடைவேளைகளிலும், டீ  க்கான இடைவேளைகளிலும் ரெஸ்ட் ரூம் செல்கிறேன் பேர்வழியென்று அரை மணி நேரத்தை வீணடிப்பது எல்லாம் இவர்களுக்கு கை வந்த கலை. ஆரம்பத்தில் ஒரே பிரிவில் இருந்த இருவரையும் இவர்கள் செய்யும் அட்டகாசம் தாங்காமல்
ஷர்மியை உள்ளேயிருந்த ரூமுக்குள் மாற்றினார் மேனேஜர்.பின்னே எத்தனை தடவை திட்டினாலும் திருந்தினால் தானே.

வேறு பிரிவு மாற்றிய போதும் இருவரும் திருந்தினார்களா என்றால் நிச்சயமாக இல்லை. பெரிதாக இரண்டு அறைகளுக்கும் தூரம் இல்லை பக்கத்து அறைதான் ஷர்மியுடையது. அதுவும் கண்ணாடி அறை. சைகை வழியாக பேசுகிறேன் பேர்வழி என்று அட்டகாசம் நடக்கும். இவர்களுடன் இப்போது கவியும் இணைந்து விடவே இவர்களின் அராஜகம் எல்லை மீறியது. கவி  அமைதியான பெண் தாணுன்டு தன் வேலை உண்டு என்ற கொள்கை உடையவள் தான். ஆனால் இந்த வாணரங்கள்அப்படி இருக்க விட்டால் தானே.

பிரியாவின் பக்கத்தில் தான் கவிக்கு வேலை. பிரியா எப்போதும் ஏதாவது உரையாடல் நிகழ்த்திக் கொண்டே இருப்பாள். கவனித்து கூட பேசும் வரையில் கவிக்கு நல்லது. இல்லையென்றால் அவள் கொடுக்கும் தண்டனை வித்தியாசமாக இருக்கும். அவர்களின் மேனேஜரோ அல்லது சூப்பர்வைசர் போல மிமிக்ரி செய்து அவர்கள் பேசும் வசனங்களை கலாய்க்கும் விதமாக  சற்றே மாற்றி பேசி அவள் சிரியாமல் கவியை சிரி்க்க வைத்துவிடுவாள்.

ஒருமுறை அப்படி செய்கையில் கவி சத்தமாக சிரிக்க அது அங்கு பணி புரியும் மற்றவர்களும் திரும்பி பார்க்க அன்பு அவளை முறைத்தான். மேலும் என்ன அங்க சிரிப்பு வேலையைத் தவிர
பேசுறது சிரிக்கிறதுனு எல்லாமே பாருங்க. உங்களுக்கு என்ன அந்தாளு (மேனேஜர்)  என்னைத்தான் கூப்பிட்டு கேள்வி கேப்பான். ஒழுங்கா வேலை பாக்கிறதா இருந்தா மட்டும் வேலைக்கு வாங்க. பேசுறதுக்கும் அரட்டையடிக்கிறதுக்கும் இது உங்க வீடு இல்ல  என கோபமாய் திட்டிவிட்டு நகர்ந்தான். கவிக்கு கண்ணில் நீர் துளிர்த்து விட்டது.

பிரியாவின் சமாதானங்களுக்கு பிறகு கவி அவளிடம் வழமை போல உரையாடினாள். ஏனெனில் கவி்க்கு அந்த கம்பெனியில் பிரியா ,ஷர்மி தவிர நண்பர்கள் யாரும் இல்லை. யாருடனும் அவ்வளவாக பேசமாட்டாள்.

அடுத்து இவர்கள் அரட்டையடிக்கும் இடம் கேண்டீன். அங்கு பேச சிரிக்க அவர்களுக்காக நிறைய கதைகள் இருக்கும். முதலில் அனைவரின் கவனம் ஈர்க்கும் என அங்கு சத்தமாக பேச கூச்சப்பட்ட கவி கொஞ்சமாக கொஞ்சமாக தயக்கம் விலகி அரைட்டையடிக்க ஆரம்பித்தாள்.

2nd ஷிப்ட்க்கு பயந்த கவிக்கு இப்போது அது மிகவும் பிடித்திருந்தது. 2- 10 மணி நேர வேலையில் 5. 30 க்கு மேனஜரும் அன்புவும் வீட்டுக்கு கிளம்பிவிடுவார்கள். அது போதுமே. சூப்பர்வைசர்கள் மட்டுமே சுற்றி சுற்றி மேற்பார்வை பார்க்க வேண்டும்.  அவர் அந்த பக்கம் சென்றவுடன் இந்த பக்கம் பிரியாவுடன் பேசிக் கொள்ளலாம். இந்த சலுகைகள் 1st ஷிப்ட்டில் இல்லை.

அன்று 2nd   ஷிப்ட் முடிந்து மீண்டும் 1st ஷிப்ட் தொடங்கியிருந்தது. வழக்கம் போல் காலையில் எழுந்து கிளம்பியவள் குழந்தையை நேராய் காமாட்சி அம்மாள் வீட்டிலே கொடுத்துவிட்டு சென்றாள். இப்போதெல்லாம் காமாட்சி அம்மாள் வீட்டில் தான் குழந்தை அதிக நேரம் தங்குகிறது.

கம்பெனி நோக்கி நடந்த கவி அறியவில்லை இன்று மீண்டும் அன்புவின் கடும்கோபத்திற்கு தான் ஆளாகப் போவது குறித்து

                                  – தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here