நீயே என் இதய தேவதை_ 28_ பாரதி

0
624
Neeye En Idhaya Devathai
Neeye En Idhaya Devathai

அன்பு டிரிம்மிங் செக்ஷன்ல ஆள் கம்மியா இருக்கு.  ஒரு ஆறு பேர அனுப்பி வை ” எனும் போது படு தெனாவட்டாக ஒலித்தது அந்த குரல்.


அவர்கள் இருவரும் கம்பெனியின் சீனியர்கள்.கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாய் அதே கம்பெனியில்  வேலை செய்து பின் பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்ள்.ஆகவே குரலில் கொஞ்சம் கட்டளைத் தொணி இருந்தது.அப்படித்தான் இருக்கும்.அன்பு அதையெல்லாம் கண்டு கொள்ளாது பொறுமையாக பதில் சொன்னான்.


ஆறு பேர்லாம் அனுப்ப முடியாதுக்கா.இங்க நிறைய பேர் புதுசா சேர்ந்தவங்க.டிரிம்மிங் லாம் தெரியாது அவங்களுக்கு.வேலை நல்லா தெரிஞ்சவங்க கொஞ்சம் பேரு தான் இருக்காங்க அவங்களயும் அங்க அனுப்பிட்டா…. இங்க இருக்கிற வேலையை செய்ய நான் எங்க போய் ஆள் தேடுவேன்? டேய் மணி, பாபு இங்க வாங்கடா. இவங்க ரெண்டு பேருக்கும் நல்லா டிரிம்மிங் தெரியும் கூட்டிட்டு போங்க”.


அவனை விட உயர் பதவியில் இருப்பவர்களே இவர்களை இப்படி மறுத்துப் பேச கொஞ்சம் பயப்படுவார்கள்.அன்புவோ அலட்சியமாக எதிர்கொள்ள 


“ஆறு பேர் அனுப்ப சொன்ன இரண்டு பேர அனுப்பி வைக்கிற அப்போ டிரிம்மிங் செக்ஷன் ல…. இருந்து மெட்டீரியல் வரலைனாலும் பரவாயில்லை… நீங்க  அசெம்பிள் (assemble) முடிச்சுடுவிங்க ல “என்று ஒருத்தி ஏளனமாக கேட்க 


“இன்னொருத்தியோ எப்படியோ போங்க, எங்களுக்கென்ன உங்களுக்கு மேனேஜர் ஏன் மெட்டிரியல் சீக்கிரம் வரல னு கேள்வி கேட்கட்டும்.அப்போ இருக்கு பாரு உனக்கு” என மிரட்டினாள்


அக்கா அக்கா கோவப்படாதீங்க க்கா.நான் வேற என்ன பண்றது…? 
சரி…பிரியாவையும் இதோ இந்த பெண்ணையும் (கவியை காண்பித்து) அனுப்பு என சொல்ல “அக்கா இங்க வேலை இருக்குக்கா நீ க்ரவுண்ட் ப்ளோர்ல போய் கேளு ” என  எதையோ சொல்லி துரத்திவிட்டான்.


கவியின் மனதில் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது போல கோபம் மூண்டது.முன்பிருந்த குற்றவுணர்ச்சி எல்லாம் எங்கோ தொலைந்துவிட்டது. ஏனெனில் இன்றைக்கு சற்று  வேலைக் குறைவு தான் என்பதை அவளால் உணர முடிந்தது.இருந்தும் வேறு பிரிவில் ஆள் குறைவாக இருப்பதாக சொன்னாலும் அனுப்பவில்லை.அங்கு சென்றால் தானும் பிரியாவும் சிறிது பேசலாம் என்றும் அவளது கோபத்தை சரிசெய்யலாம் என்றும் நினைத்திருந்தாள்.இவனோ அங்கு அனுப்ப முடியாது என்றுவிட்டதால் அவள் முன்பு பேசிய வார்த்தைகளுக்காக தான் அன்பு தன்னை பழிவாங்குவதாக எண்ணிக்கொண்டாள்.


அவளுக்கு தெரியவில்லை.அன்பு பழிவாங்குதாய் இருந்தால் அந்த பெண்கள் வந்து கேட்கும் முன்னமே அவர்கள் பிரிவுக்கு தான்  அனுப்பி வைத்திருப்பான்.அலுவலக விதிகளுக்குட்பட்டே அவனால் இதை செய்திருக்க முடியும்.அந்த பெண்கள் சென்று ஒரு மணி நேரம் கூட ஆகியிருக்காது.அதற்குள் அதே பெண்களிடம் பக்கத்து லைனின் சூப்பர்வைசர் செல்வம் காட்டு கத்தலாக கத்திக் கொண்டிருந்தார்.காரணம் மெட்டீரியல் சரியான நேரத்திற்கு வரவில்லை.வேலை தாமதாகிறது.


அந்த லைனில் வேலை தாமதாமானால் அன்பு மேற்பார்வையிடும் லைனில் அசெம்பிள் செய்யப்பட வேண்டிய பொருட்களின் வேகம் தடைபெறும்.அங்கு ஒழுங்காக வேலை நடைபெறவில்லை என்றால் அடுத்த நிலைக்கு அனுப்ப முடியாது.ஆக இப்படி ஒரு முழு வேலையும் தடைபடும்.இப்போதைக்கு இதுதான் இந்த சச்சரவுக்கு காரணம்.


வேலை நடைபெறவில்லை என்று செல்வம் கத்த இத்தனை ஆட்களை வைத்து இத்தனை மெட்டீரியல் கவுண்ட்டிங் தான் வாங்க முடியும் என்று அந்த பெண்களும் கறாராகப் பேச பிரச்சனை சிறிய வாக்குவாதத்தில் ஆரம்பித்து  பெரிய பிரச்சனையாகிப் போனது.

மேனேஜர் தலையில் அடித்துக் கொண்டு அவர்களிடம் சென்றார்.
இது என்ன கம்பெனியா? இல்லை சந்தைக் கடையா ? வளர்ந்திருக்கீங்க தானே அறிவில்ல உங்களுக்கு ?என்ன செல்வம் சார் நீங்க கூடவா? உங்க வயசென்ன அனுபவமென்ன ? இப்படி சின்ன குழந்தை மாதிரி நடந்துப்பீங்க?நீங்களே இப்படி ஒருத்தர ஒருத்தர் சண்டை போட்டு கேவலமா பேசிக்கிட்டா ? உங்களுக்கு கீழ வேலை பாக்குறவன் உங்களை எப்படி மதிப்பான்? என்று பொதுவாய் திட்டுவிட்டு பிரச்சனை என்னவென்று விசாரித்தார்.


டிரிம்மிங் செக்ஷனில் வழக்கத்தை விட வெகு குறைவான ஆட்கள்  வேலைக்கு வருகை தந்திருப்பது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்பதை அறிந்து கொண்டவர்
என்ன விமலா? இத்தனை பேரும் ஒரே நாள்ல ஆப்ஸென்ட் ஆகியிருக்காங்க? என்னன்னு போன் பண்ணி கேட்க மாட்டீங்களா?  என்று கேட்டார்.


யாரும் போன் அட்டெண்ட் பண்ணல சார் என தலையை தொங்கப் போட

ஓ அவ்ளோ திமிராய்டுச்சா எல்லோருக்கும்?  நாளைக்கு அவங்க எல்லாரையும் என்னை வந்து பார்த்த பிறகு தான் வேலைக்கு அனுமதிக்கறீங்க? என்று கட்டளையாய் சொல்லி விட்டு சரி அவங்கதான் வேலைக்கு வரலனு காலையிலே தெரிஞ்சது தானே வேற செக்ஷன்ல இருந்து ஆள் கூட்டிட்டு வந்து வேலை பாக்க வேண்டியதுதானே என சரியாக அந்த நேரந்தில் அன்புவிடம் பேசியதை போட்டுடைத்தாள் விமலா.

பின்பு உங்க சூப்பர்வைசர்ங்க ஆள் மட்டும் அனுப்ப மாட்டாங்க.ஆனா வேலை மட்டும் சரியா நடக்குனும்னா எப்படி சார் ? என்றவளை இடைமறித்தவர் ப்ப்ச்ச மறுபடியும் சண்டையை ஆரம்பிக்காதே என்று கண்டித்து விட்டு இப்போ உனக்கு எத்தனை ஆள் வேணும் அத மட்டும் சொல்லு என்று கேட்டுக் கொண்டவர் செல்வம் லைனில் இருந்து இரண்டு பையன்களையும் அனுப்பிவிட்டு அன்புவிடம் வந்தார்.

பிரியா, அப்புறம் இந்த பொண்ணு ( கவிதா )இரண்டு பேரையும் டிரிம்மிங் செக்ஷன் அனுப்பி விடு அன்பு என அவனோ பிரியா ஓகே சார்.ஆனா அந்த பொண்ணு வேலைக்கு புதுசு. டிரிம்மிங் லாம் தெரியாது என மறுக்க பார்க்க

சற்று முன்னர் நடந்த களேபரத்தில் பொறுமையை பறக்கவிட்ட அவரோ புதுசா இருந்தா என்ன?  போய் கத்துக்கட்டும்.மத்தவங்கலாம்  இங்க சேரும் முன்னாடி ட்ரைனிங் எடுத்துக்கிட்டா வந்தாங்க. போ அன்பு நான் சொன்னதை செய் என்று எரிச்சலாய் சொல்ல ? அன்புவுக்கு வேறு வழியில்லை .இரண்டு பேரையும் டிரிம்மிங் செக்ஷன் போய் வேலைப் பாருங்க என்று அனுப்பி வைத்தான்.

பிரியா அமைதியாக முன்னே செல்ல,அவள் கூட வேலைத்தானே  செய்யப் போகிறோம் என்று மகிழ்ந்த கவியோ உற்சாகமாக அவளை தொடர்ந்தாள்.

அந்த நேரத்தில் அன்புவுக்கு கவியைப் பார்க்க பலிகொடுக்க போகும் முன் அலங்காரம் செய்யப் படும் ஆடு ஞாபகம் தான் வந்தது.கூடவே கொஞ்சம் பாவமாகவும் இருந்தது.ஆனால் மேனேஜர் உத்தரவிட்ட பிறகு அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here