நீயே என் இதய தேவதை_ 70_பாரதி

0
334

திருமணம் முடிந்து காலை மதியம் விருந்து ஏற்பாட்டை சந்தியா கவனித்துக் கொண்டாள்.மதிய உணவு புவனேஷ் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பிறகு அன்பரசன் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் மணமக்கள்.

சுகுணா புதுமண தம்பதிருக்கு தனிமை தர வேண்டி மாயாவை இன்றொரு நாள் தான்  பார்த்துக் கொள்வதாக சொல்ல அன்பரசன் மென்மையாக மறுத்துவிட்டான்.

வீட்டில் அன்பரசன் மாயாவோடு விளையாடிபடியிருக்க கவிக்கு கண்கள் சொக்கியது. அலைந்து திரிந்த சோர்வு மற்றும் விருந்தில் வயிறு நிறைய உண்டதின் தாக்கம்.
அவளைக் கண்டு சிரித்த அன்பரசனுக்கு கொஞ்சம் பாவமாகவும் இருக்க மாயாவை நான் பாத்துக்கிேறன் நீ போய் தூங்கு என அவளை அவனது அறைக்கு அனுப்பி வைத்தான்.

பிறந்ததில் இருந்தே அவளது தந்தையை பார்த்தேயிராத மாயா அன்பரசனை அப்பா என்று சுகுணா சொல்லிக் கொடுத்ததில் இருந்து அப்பா அப்பா என்று அவனையே சுற்றி வந்தது.அந்த அழைப்பு அவன் மனதை மிகு இலகுவாக்கியிருந்தது.

மீண்டும் கவி எழுந்து வந்து சந்தியா கொடுத்தனுப்பிய சாதத்தை பிசைந்து மாயாவுடன் அரைமணி நேரம் போராடி கவி  ஊட்ட அன்பு மாயாவுக்கு விளையாட்டிக் காட்டிக் கொண்டிருந்தான்.பிறகு அன்பு பிளாஸ்க்கிலிருந்து பாலை ஊற்றிக் கொடுக்க மழலை மொழியில் ஏதேதோ கதைகள் பேசியபடி அதை பருகிவிட்டு தூங்கிப்போனது.

தொலைக்காட்சியில் ஏதோ ஒரு பாடல் ஓடியபடியிருக்க ஹாலில் ஷோபாவில் அமர்ந்திருந்த கவிக்கும் அன்புவுக்கும் கவனம் அதில் இல்லை.

தொண்டையை செருமி அமைதியை கலைத்த அன்பு கவியை நெருங்கி அமர்ந்து என்ன ரொம்ப அமைதியா இருக்க  ஏதாவது பேசேன் என்று அவளது கைவிரல்களை தன் கையோடு கோர்த்துக் கொண்டான்.

அவனது இச்செய்கையில் கவிக்கு நெஞ்சம் படபடத்தது.அன்று மருத்துவமனையில் நடந்தது நினைவு வந்தது.

அவனை மேலும் நெருங்கி அவளது நெஞ்சில் வாகாக சாய்ந்து கொண்டவள் நீங்க சொல்லுங்க என்று புன்னகைத்தாள். அவளுக்கே புரியவில்லை.அன்பரசனிடம் அவளால் மனதளவிலும் மிக நெருக்கமாக உணர முடிந்தது.திருமணம் ஆகி ஒரு நாள் கூட ஆகவில்லை ஆனாலும் அவனிடம் உரிமையாய் சாய்ந்து கொள்ள முடிகிறது.

அவளை மிக மென்மையாக அணைத்தபடி என்ன சொல்லணும்…? என்று புரும் உயர்த்த

என்னை எப்படி  உங்களுக்கு  பிடிச்சிதுனு  சொல்லுங்க.ஆரம்பத்துல பாத்த நாள்ல இருந்து என்கிட்ட கடுகடுன்னு தான் இருப்பீங்க.நீங்க திடீர்னு கல்யாணம் பண்ணிக்கிறியா ன  கேட்கவும் என்னால நம்பவே முடியல தெரியுமா…? என்று வியப்பை காட்டியவள்

மீண்டும் அதே கேள்வியில் முடிக்க

சொல்றேன்.ஆனா என்னை நீ தப்பா நினைக்க கூடாது.சரியா என்று சொல்லிவிட்டு முதல் நாள் பாக்கும்போது நீ ஷர்மி போல சின்ன பிள்ளையாத் தான் தெரிஞ்ச.  ஷர்மி லாம் என்கிட்ட எவ்ளோ திட்டு வாங்கியிருக்கு தெரியுமா…? எவ்வளவு கழுவி ஊத்தினாலும் கண்டுக்காது.அடுத்த நிமிஷம் என்ட்ட வந்து சாக்லேட்டூக்கு காசு கொடுண்ணா ன்னு  கேக்கும்.அங்க நிறைய பசங்க அப்படித்தான்.நான் திட்டும் போது மட்டும் பெருசா எடுத்துக்க மாட்டானுங்க.ஏன்னு தெரியாது.

அது என்னவென்று கவிகக்குத் தெரியுமே அதைக் கொண்டு புன்னகைத்தவள் தொடரும்படி பார்க்க

ம்ம் சொல்றேன்.உன்னையும் அதுபோலத்தான் கொஞ்சமா தான் திட்டுனேன்.ஆனா நீ ரொம்ப சென்சிட்டிவ் ஆ இருப்ப.எது சொன்னாலும் அழ ஆரம்பிச்சிடுவியா…உன்னை எப்படி ஹேண்டில் பண்றதுன்னே தெரியலை அப்போ.

கம்பெனியில உன்ன திட்டுட்டு வந்திடுவேன்.வீட்டுக்கு வந்தா உன் அழுமூஞ்சி முகம் வந்து டிஸ்டர்ப் பண்ணும்.உன்ன அழ வச்சுட்டோம்னு கில்ட்டியா இருக்கும்.சரி இனி உன்னை திட்டக் கூடாதுனு முடிவெடுத்துட்டு கம்பெனி வந்தா அன்னைக்குத்தான் மறுபடி கோபப்படுத்துறா மாதிரி எதாவது செஞ்சு வைப்ப.மறுபடி நான் திட்டி, நீ அழுது வீட்டுக்கு வந்தா உன் ஞாபகம்.

இப்படி நீ கம்பெனி சேர்ந்த முதல் நாள்ல இருந்தே என்னையே அறியாம உன்னை பத்தின நினைப்புத்தான்.

அன்னைக்கு நான் எதிர்ல தான் இருக்கேன் னு தெரியாம ப்ரியா கிட்டே என்னைப் பத்தி பேசிட்டிருந்தியே என்று அவன் ஆரம்பிக்கவும் இதுவரை ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தவள் அவன் எதைப் பற்றி பேசுகிறான் என்று புரிந்துகொண்டு அவசரமாக சாரி சாரி என்றுரைத்தாள்.இ்ப்போ நினைச்சுப் பார்த்தா எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது.ஆனா புல் நைட் குடிச்சிட்டு ஒரே அழுகை என்று  அவன் மறுபடி தொடர நினைக்க அவனது வாயை தன் கைகளால் மூடியவள் அது மட்டும் வேணாம் ப்ளீஸ்….என்று கெஞ்ச

அவளது உள்ளங்கையில் அழுத்தமாக முத்தம் வைத்தான் அன்பு.எதிர்பாராத செயலில் அதிர்ந்தவள் தனது கையை விலக்கிக்கொண்டாள்.அவள் அன்றைய நிகழ்வை பற்றி பேசுதலை விரும்பவில்லை என்றுணரந்தவன் வேறு பேசினான்.

அது என்னைக்கு….எதுக்காக உன்னை கூப்ட்டு வச்சு பேசுனேன் என்று யோசித்தவன் ஹான்…யூனிபார்ம் இல்லாததுக்கு தானே அதேதான்.அன்னைக்கு தான் அந்த வயலட் கலர் சுடிதார்லதான் உன்னை முதல் முதலா சைட் அடிச்சேன் சொல்லும்போதே அந்தநாளின் நினைவு நெஞ்சுக்குள் குறுகுறுத்தது. ஆனாலும் அப்ப மனசாட்சி இது தப்புடா னு சொல்லுச்சு.

அதையும் தாண்டி ஏதோ ஒன்னு உன்ன பத்தி தெரிஞ்சுக்கணும் னு தோணுச்சு.அதுக்குத்தான் அன்னைக்கு ரோட்ல போகும்போது ரொம்ப சாதாரணமா தான் கேட்டேன்.
நீ அழுதுட்டு போய்ட்ட.அப்புறம் ப்ரியாகிட்ட உன்னைப் பத்தி பேசுனா
அது சந்தேகமா பாத்திச்சு.அதுவே உள்ளுக்குள்ள கொஞ்சம் ஒரு மாதிரி ஆகிடுச்சு.அதற்கு அப்புறம் தான் உன்னை நினைக்க கூடாது.தேவையில்லாம உன்கிட்ட பேசக் கூடாதுனு லாம் நினைச்சேன்.

அப்போதான் நான் உங்க கிட்ட  பேசவே ஆரம்பிச்சேன்…தான என்று கவி சிரிக்கவும்

செல்லமாக அவள் மூக்கை திருகியவன் ஆமா.அப்ப இருந்து தான் இன்னும் இம்சை பண்ண ஆரம்பிச்ச.
இங்க என்று தனது நெஞ்சை தொட்டு காண்பித்தான்.

பாப்பா பர்த் டே அன்னைக்கு தான்  முதல்முறை உன்னை சாரில பாத்தேன்.ஷாக் அடிச்சது போல ஆகிடுச்சி.தேவதை மாதிரி இருந்த அன்னைக்கு என்று இரசித்து சொன்னவன் அவள் கன்னத்தில் முத்தம் பதிக்க,

அதன் இதத்தில் கவி  ஒரு கணம் சொக்கி விழி திறக்க அவன் தொடர்ந்தான்.

எல்லாம் பர்த் டே வரை நல்லாத்தான் இருந்துச்சு.உன்னைப் பாக்கும் போதுலாம் பேசும் போதெல்லாம்  மனசு ரொம்ப சந்தோசமா உணர்ந்தது.இந்த சந்தோசம் மட்டும் இதை மட்டுமே பற்றிக்கொண்டு அவளை பார்த்துக்கிட்டே நாட்களை கடத்தி போய்டலாம் னு மனசு நினைக்கும்.அதே மனசு இன்னொரு முறை இல்லை இது எனக்கு போதுமானதாக இல்லை.இன்னும் அவளை நெருங்கணும் னு சொல்லும்.
ஒரு மாதிரி எதும் புரியாம திண்டாடிட்டு இருந்தேன்.அப்ப கூட அது காதல் லாம் தோணலை.அடுத்தநாள் நேரடியாக உன்கிட்ட கல்யாணம் பண்ணிக்கலாமா னு கேட்க நினைச்சேன்.நீ ஓகே சொன்னா கல்யாணம்.இல்லைனா இல்லை னு நம்ம வேலையைப் பாப்போம் னு சாதாரணமா தான் நினைச்சேன்.

ஒரு வாரம் வரைக்கும் உடம்பு சரியில்லைனு லீவுல இருக்க நினைச்சிட்டேன். அதற்கு பிறகு தான்என்று ஆரம்பித்தவன் உடல் இறுகியதை கவியால் உணர முடிந்தது.

ஏன்னே தெரியல.எல்லார் மேலேயும் கோவம்.ப்ரியா ஷர்மி லாம் ரொம்ப பாவம் .உன்னை பாக்க முடியலைன்ற கடுப்பில அவங்களையெல்லாம் கத்திட்டேன்.சேலரி வாங்க கூட நீ வரலையா…

பாலாகிட்டேயும் கேட்டு பாத்தேன்.உன் நம்பர் வொர்க் ஆகலைனு சொன்னான். கழுவி கழுவி ஊத்துனேன்.

எனக்கு என்மேலே கூட ரொம்ப கோவம்.உனக்குலாம் வாழ்க்கையில நல்லதுனே ஒன்னு நடக்காதுடா.கடைசி வரை தனியா  இருந்து சாகுடா னு கண்ணாடி முன்ன பாத்து கத்திப்பேன்.

எங்க தாண்டி போய் தொலைஞ்ச னு ….? உன் மேல ஆத்திரம் இருந்தாலும் கூடவே கொஞ்சம் பயமும்.உனக்கு ஏதாச்சும் ஆகிடுச்சோ னு ரொம்ப பயந்துட்டன்.உன்ன தினம் பாக்க முடியலைனாலும் பராவாயில்லை நீ எங்கேயாச்சும் ஒரு இடத்துல பாதுகாப்பா இருக்கேன்னு தெரிஞ்சா மட்டும் போதும்னு தோணுச்சு.தினம் வேலைக்கு வரும்போதெல்லாம் இன்னைக்காச்சும் அவ வந்திடுவாளா னு உன் நினைப்புத்தான்.கிட்டதட்ட பைத்தியம் மாதிரி தான் சுத்திட்டிருந்தேன். உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவன் பேச கவிக்கு கொஞ்சம் குற்றவுணர்வாய் போனது.

தன்னைக் காணாது இவன் இத்தனை தவித்திருககிறானோ என்று.அப்போது அதை உணரும் நிலையில் அவள் இல்லையே.

அவனே சமாதானப்படுத்த எண்ணி சாரி…அன்னைக்கு என்று ஏதோ சொல்ல வந்தவளை இடைமறித்தவன்

எனக்குப் புரியுதுடா….அன்னைக்கு உன் சுச்சுவேசன் அப்படினு.அந்த நாட்கள் தான் எனக்கு உள்ள இருந்த உன் மீதான காதலையும் நேசத்தையும் எனக்கு சொல்லிச்சு.அப்போ முடிவு பண்ட்டேன்.நீயும் மாயாவும் தான் இனி என் லைப் னு என்று  அதே உணர்ச்சி பொங்கிய குரலில் கூறியவன்

அப்பவே நம்ம கல்யாணத்துல என்னென்ன பிரச்சனை வரும்.அதை எப்படி சரி செய்யணும்லாம் யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.

அப்பவே வாஎன்று வியந்தவளுக்கு ஆமென்று தலையசைத்தவன்

பின் விஷமமாய் புன்னகைத்து அந்த நேரம் தான் ரீவொர்க்கு னு நாள் முழுக்க  உன் பக்கத்துல வேலை.அந்த நாள்ல லாம் நான் பூமிலயே இல்லைனு தான் சொல்லனும்.மனசு அப்படி ஒரு சந்தோசத்துல இருந்துச்சு.

அதற்கு அப்புறம் நான் உன்ட்ட ப்ரோப்போஸ் பண்ணி நீ சண்டை போட்டதும்   உன்னை அவாய்ட் பண்ணுற மாதிரி நடந்துகிட்டதுலாம் கூட  சும்மா தான்.எப்படியும் நீ கல்யாணத்துக்கு சம்மதிப்ப னு எனக்கு தெரியும்.நீ என்னை சைட் அடிக்கிறது லாம் எனக்குத் தெரியும்.தெரியாத மாதிரியே நடந்துப்பேன்.நீ பாக்காத நேரம் உன்னையேத் தான் பாத்திட்டிருப்பேன். ப்ரியாக்கு கூட நம்ம விஷயம் தெரியும்.என்று

நீ என்கிட்ட பேச என்னென்ன வேலைலாம் செஞ்ச என்று வாய் விட்டு சிரித்தவனை

முறைத்த கவி திடீரென அவனை அடிக்க ஆரம்பிக்க ஏய்…ஏய்…வேணாம்
என்று அவளை அனாயாசமாக தடுத்து நிறுத்தி உன் புருசன் ரொம்ப  பாவம் மா.கல்யாணம் ஆன முதல் நாளே இப்படிலாம் அடிக்க கூடாது என சொல்ல

அடிக்கிறதா உன்னை…என்று மறுபடியும் கைஓங்கியவளை தடுத்து  இறுக்கி அணைத்தவன் ரொம்ப கஷ்டப் பட்டுட்டியா என

பின்ன..நான் ப்ரியா  சகஜமா எல்லோருக்கிட்டேயும் பழகுற விதம் இல்லை.இத்தனை நாள் அங்க  வேலை பாத்தும்  கூட ப்ரியா,ஷர்மி உங்களைத் தவிர யாரோடவும் ஒட்டுதல் இல்லை.அப்படியிருக்க ஆறுமாசம் நீங்க  என்கிட்ட ஒத்த வார்த்தை கூட பேசலை.எனக்கு எப்படியிருக்கும்…?

எல்லார்கிட்டேயும் நல்லா பேசுவீங்க.என்னை மட்டும் ஒதுக்கி வச்சிட்டீங்க…ல  எத்தனை நாள் அழுதிருக்கேன் தெரியுமா…? என்று அணைப்பிலிருந்தபடியே தோள் சாய்ந்து  தேம்பியவளை விலக்கி நெற்றியில் முத்தமிட்டவன் சாரி..டா என

ஒன்னும் வேண்டாம் போங்க.எல்லாரும் சேர்ந்து என்னை மட்டும் ஏமாத்தியிருக்கிங்க.நீங்க, சித்தி,ப்ரியா.எல்லாரும்  என்று முறுக்கிக் கொண்டவன் தன் போக்கில் தொடர்ந்தாள்.

உங்களை எனக்கு பிடிக்காம லாம் இல்லை.அப்போ இருந்த மனக்குழப்பதுல என் உலகத்துல  எனக்கு மாயா மட்டும் போதும்னு இருந்திச்சு.இன்னொரு கல்யாணம் ன்றதையே நான் நினைச்சு பாக்கலை.நீங்க திடீர்னு கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்டதும் ரொம்ப அதிர்ச்சி.நான் எதிர்பாக்கவேயில்லை.
அதுல தான் உங்களை திட்டியிருப்பேன்.

அதுக்காக மொத்தமாவே என்னை ஒதுக்கி வச்சிட்டீங்க ல்ல…? கால் கூட அட்டென்ட் பண்ண மாட்டீங்க.சரி நீங்க பேசலைனாலும் பரவாயில்லை.தினமும் உங்களை பாக்குறது மட்டும் போதும் னு நெனச்சா
ஒரு நாள் சொல்லாம கொள்ளாம வேற என்னை விட்டு போய்ட்டீங்க.அப்போ ப்ரியாவும் வேலையை விட்டு நின்னுட்டா.உலகமே என்னை மட்டும் ஒதுக்கி வச்ச மாதிரி தோணுச்சி.எனக்குன்னு வாழ்க்கைல ஒன்னுமே இல்லை னு தோணுச்சி.அந்த நாட்கள் லாம் எவ்வளோ ரணமானதுனு தெரியுமா…?
உயிரே இல்லாம வெறும் உடலா உலவிட்டு வந்த மாதிரி இருந்துச்சி.

மறுபடியும் நீங்க போன் அட்டென்ட் பண்ணலைனா……..என்று அவன் மார்பில் புதைந்து அழுபவளை கண்டு என்ன செய்வது என தெரியாது விழித்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here