நீயே என் இதய தேவதை_26_பாரதி

0
634
Neeye En Idhaya Devathai
Neeye En Idhaya Devathai

அந்த நிகழ்விற்கு பின்பு எல்லாமே சரிவுதான். சிவகாமியின் உடல்நலத்தில் சரிவு. அன்புவின் நேர்மறை எண்ணத்தில் சரிவு.அந்த வீட்டில் இருந்த மகிழ்ச்சியில் சரிவு. எதிர்காலம் குறித்து எழுந்த நம்பிக்கையில் சரிவு.இப்படியாக எல்லாமும் சரிவு.


அன்று சந்தியாவின் மாமியார் என்ன நினைத்து அப்படி சொன்னாரோ ஏற்கனவே காழ்ப்புணர்ச்சியில் இருந்த சொந்த பந்தங்கள் அதை பலவாறு இட்டுக் கட்டி பேசி மகிழ்ந்தனர். இன்னும் ஒருபடி மேலேபோய் விசாலி அத்தை அன்புவின் ஆண்மையை இழிவுபடுத்தி ஊருக்குள் பரப்பி வந்தாள்.அலுவலகத்திலும் அவனது வளர்ச்சியை கண்டு பொறாமைப் பட்டவர்களுக்கு மென்று அரைக்க அவல் போல இந்த விஷயம்.பலரது ஏளனப் பார்வைக்கும், கேலி கிண்டலக்கும் உள்ளானான்.”இதுவும் கடந்து போகும்” என்று சகித்துக் கொள்ள பழகியவன் மொத்தமாய் தகரந்து போனது தனது தாயின் மரணத்தில் தான்.


.எல்லா விடயத்தில் மகனிடம் சொல்லி தீர்வு காண்பார்.எந்த பிரச்சனையானாலும் “இதுதானே நான் பாத்துக்கிறேன்ம்மா என்று சொல்லி உதடுகளோடு சேர்ந்து புன்னகைக்கும் கண்களை பார்க்கும்போதே தான் ஏதோ வரம் பெற்றவராக உணர்வார். அதே கண்களை, தற்போது புன்னகை சந்தோசம் என் எதுவுமற்று வெறுமை சுமந்து திரியும் அந்த  கண்களை பார்க்கும் போது இறைவனால் கைவிடப்பட்டது போல உணர்ந்தார்.எப்பேர்பட்ட தன்னம்பிக்கை கொண்ட மனிதனும் ஏதோ ஓர் நேரத்தில் தோற்றுப் போய்விட்டதாய் உணர்வார்கள்.அந்த நிலை சிவகாமிக்கு.
“மகனை பற்றி ஊரார் சொந்த பந்தங்கள் இல்லாது பொல்லாதயையும் பேச  தனக்குள்ளே குமைந்து கொண்டிருந்தவரது ஆன்மா ஒருநாள் தூக்கத்திலே விடைபெற்றுக் கொண்டது.ஆம் அவனுக்கு இருந்த சகிப்புத் தன்மை அந்த வயதான தாய்க்கு இல்லை.


அம்மா இறந்ததை அறிந்த அன்பு அழக் கூட இல்லை.சந்தியாவும் ஆனந்தும் வற்ப்புறுத்தியும் கூட அத்தனை அழுத்தமாய் நின்றிருந்தான்.சோகத்தையும் மீறியதொரு கோவம்.தனக்கென வாழ்வில் இருக்கும் ஒரே நிழலையும் பறிகொடுத்த ஆதங்கம்.இப்படிபட்ட நிலையும் அம்மாவும் தன்னை நிர்கதியாய் விட்டுச் சென்ற ஆத்திரம்.ஒரு மகனாய் தனது தாயின் ஈமக் காரியங்களை செய்து முடித்தான்.


அம்மாவின் இறப்புக்கு பின்பு அன்புவின் குணநலன்கள் மெதுமெதுவாய் மாற ஆரம்பித்தன.எதையும் கேட்க ஆளில்லாத நிலை என்பது வாழ்வின் மிகப்பெரும் சாபம்.சாபம் என்பதை மாற்ற முயற்சித்தான்.அந்த முடிவுதான் அவனுக்கு முன்பிருந்த எல்லா நற்பெயர்களையும் அழித்துவிட்டு மோசமானவன் என்ற முத்திரையை வழங்கியது.அதன் பொருட்டு அவன் கவலைப்படவில்லை.

“என்னதான் கஷ்டம் இருந்தாலும் இப்படி குடிச்சு உடம்ப கெடுத்துக்காத தம்பி” என்று சொன்ன சக அபார்ட்மென்ட் வாசி  ஒருவரை


இங்க வாய்யா.எனக்கு கஷ்டம்  இருக்குனு உன்கிட்ட சொன்னனா? இல்ல குடிக்கணும் காசு கொடுன்னு உன்ட்ட  வந்து பிச்சை எடுத்தனா? அதுவும் இல்லாம  குடிச்சிட்டு உன் வீட்டுக்கு வந்து பிரச்சனை வந்து பிரச்சனை பன்றேனா? வந்துவிட்டாரு ப்ரீ அட்வீஸை தூக்கிட்டு என்று சொல்லி நகர அவரது முகம் கன்றிப்போனது.


இன்னொரு முறையாக அலுவலக நண்பன் ஒருவன் சரி என்னாச்சுடா ? எத்தனை நாளைக்கு இப்படி இருக்கப் போற உன் வைப் திரும்பி வருவாங்களா? வர மாட்டாங்களாமா ? என்று கேட்டவனிடம்


ஏன் அவ வரலைனா உன் பொண்டாட்டியை அனுப்பி வைக்கப் போறியா? என தெனவாட்டாக சொல்லஅவன் அன்புவை அடிக்க அன்பு அவனை அடிக்க அங்கு ஒரு கலவரம் நடந்து ஒரு வாரம் முழுக்க அதைப் பற்றிய விவாதம் அலுவலகம் எங்கும் ஒலித்தது.
இப்படித்தான்உன் வாழ்வில் அடுத்ததாய் என்ன செய்யப் போகிறாய் என்று கேள்விக்கனைகளை தொடுப்பவர் யாவரையும் அலட்சியப்படுத்தினான்.இவர்கள் காட்டும் அக்கறைகளோ ஆர்வமோ  தன்னை இதே நிலையில் தேங்கச் செய்துவிடும் என்று நம்பினான்.


போலி பரிதாபத்தோடு நெருங்கும் உறவினர்களிடம் முந்தைய காலத்து நண்பர்களிடமும் மிக மோசமாக பேசி அவமானப்படுத்தி அவர்களின் முககன்றலை இரசிப்பான். அப்போது எச்சில் வடிய கடித்து குதற வரும் வெறிநாயை கல்லால்  அடித்து துரத்துவிட்ட ஆனந்தம் கொள்வான்.இதனாலேயே எல்லோரும் அவனை நெருங்க  பயந்து “வில்லங்கம் பிடிச்சவன்” என்று  விலகினர்.அவனுக்கோ அவர்களின் பரிதாபதத்தை விட விலகல் பெரிதாய் பாதிப்படைய செய்யவில்லை.இதுதான் பிடித்திருந்திந்தும் கூட.எதன் மீது பற்றற்ற நிலை என்பது ஒருவகையில் அவனது நிம்மதி.


அவன் கீழ் பணிபுரியும்  வேலையாட்களில் சிலர் மட்டும் அவனை புரிந்துகொண்டு மற்றும் சகித்துக் கொண்டு உடனிருந்து நட்பை தந்துகொண்டிந்தனர்.


உறவினான இருந்த ஆனந்த் அந்த நிலைக்கு மேலாய் உயிர் நண்பனாகி போனான்.ஆனந்த் அன்புவை பழைய நிலைக்கு கொண்டுவர எவ்வளவு முயற்ச்சித்தும் அதுவெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல்தான் வீணாய் போனது.வேறு வழியின்றி ஆனந்த்தும் அவனை அப்படியே ஏற்றுக் கொள்ள பழகிவிட்டான்.

மிகப் பெரிய உயரத்தில் இருந்து விழுந்து பிழைத்தவன் வரப்பு தடுக்கி செத்தானாம்.இப்படியாக எல்லாவற்றையும் சல்லிசாக தள்ளிவிட்டு கடந்தவன் தான் ஒரு சிறுபெண் பேசிய வார்த்தைகளுக்காக ஒரு இரவு முழுக்க கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறான்.
கண்ணீருடன் நினைவலைகளையும் துடைத்துவிட்டு நிகழ்காலத்திற்கு திரும்பினான்.விடியல் பல்லிளித்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here