நீயே என் இதய தேவதை_30_பாரதி

0
462
Neeye En Idhaya Devathai
Neeye En Idhaya Devathai

சமாதான உடன்படிக்கைக்காக சும்மா ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு கொடுத்துவிடலாம் என நினைத்த அன்பு ருசியாக இருக்கவே தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க

சண்டை போடுவானோ  தவறாக நினைத்துக் கொண்டு வருந்துவானோ என்று தான்  நினைத்தவனே கவி கொண்டு வந்த பிரியாணியை ஒரு கை பாரத்துக் கொண்டிருந்தான். தனக்கு மட்டும் எதற்கு இந்த வெட்டி வீராப்பு  என பிரியாவின் மனது பிரியாணிக்காக குரல் கொடுக்க நொடியில்   வீம்பையெல்லாம் விட்டுவிட்டு ஏய்…. அண்ணா எனக்கும் கொஞ்சம் விட்டு வை என்றபடி பாக்சை பிடுங்கினாள்.

ஏய்….நீயே கொண்டுவந்து நீயே சாப்பிடுவியா? உனக்கு தான் எடுத்து வச்சிருப்பாங்கல.வீட்டுக்கு போய் கொட்டிக்கோ.இதைக் கொடு என்று அவனும் அவன் மறுபடியும் பிடுங்கி சாப்பிட “நான் எங்கே கொண்டுவந்தன்.இத கவி எனக்காக எடுத்துட்டு வந்தா”.

சாப்பிடுவதை ஒரு கணம் நிறுத்திவிட்டு கவியையும் பிரியாவையும் அதிர்ச்சியாக பார்த்தவன் ஓஓ…..அப்படியா சரி….சரி் யாருக்கு எடுத்துட்டு வந்தா என்ன  எனக்கு சோறு தான முக்கியம்  என்றவன் திரும்பவும் சாப்பிட ஆரம்பித்தான்.

நான் இன்னும் ஒரு வாய் கூட சாப்பிடலை குடு….. கொஞ்சோண்டு கொடு …என கெஞ்ச மல்லுக்கட்ட பாவம் அவனின் வலுவான கரங்களிலிருந்து
லன்ச் பாக்ஸ் வருவதாய் இல்லை.இது வேலைக்காகாது என புரிந்து கொண்டவள் அருகில் அமர்ந்திருந்த கவியின் பாக்சை பிடுங்கினாள்.

கொஞ்சம் ஏமாந்தா போதுமே.எல்லாத்தையும் காலி பண்ணிடுவீங்க என கவியிடம் முறைத்துக் கொண்டு பிரியாணியை ஆசையாக சாப்பிடலானாள்.கவிக்கோ  பிரியா பேசிவிட்டாள் என்பது அத்தனை சந்தோசமாக இருந்தது.அதுவே மனது நிறைந்து போனது.

அன்று கவி வீட்டுக்கு செல்லும் முன்பு  அன்புவுக்கு நன்றி சொல்ல சிறு தலையசைப்போடு ஏற்றவன்  பதிலுக்கு “பிரியாணி செம்ம” என புன்னகைக்க அவளுமே புன்னகைத்து சென்றாள்.

அதன் பின்பு வந்த நாட்களில்   பழைய விஷயங்கள் எதையும் கிளறாமல் பிரியா இயல்பாக பேசினாள்.முன்போல மூன்று பேரும் சேர்ந்து அலுவலகத்தை கலங்கடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அடுத்த வாரம்  நைட் ஷிப்ட்டில் சூப்பர்வைசர்கள் தவிர மேனேஜர், ஹெச் ஓ டி, க்வாலிட்டி கன்ட்ரோல் மேனேஜர் எல்லோரும் வழக்கம்போல் மாலை 5.30 மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பியிருந்தனர். அன்பரசன் க்வாலிட்டி கன்ட்ரோல் துறை என்பதால் அவனும்  ரெகுலர் ஷிப்ட்தான் .இருந்தும் வினோத் அரவிந்தன் இருவரும் விடுமுறை என்பதால் செல்வம் சாரால் ஒரே ஆளாய் மூன்று லைனை சமாளிப்பது கடினம் என்று தானே ஓவர் டைம் கேட்டு வாங்கி பணியில் இருந்தான்.இரண்டு பேர் இருந்துமே அத்தனை பேரையும் சமாளிக்க முடியவில்லை.அரட்டை அதிகமாய் இருந்தது.

கம்பெனியே கலகலப்பாக இருந்தது 
கவி, ப்ரியா, ஷர்மி கூட்டணிக்கு சொல்லவா வேண்டும்.எப்போதும் போல கவி ப்ரியாவை  கடக்கும் போது “பேச்சைக் குறை…. பேச்சைக் குறை…. வேலையப் பாரு”என கத்திவிட்டு சென்றது செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான் இருந்தது.

கெஞ்சி, ௧ொஞ்சி மிரட்டி எப்பாடு பட்டாவது இவர்களிடமிருந்து மினிமம் கவுண்டிங்கை வாங்க போராடி கொண்டிருந்தான்.

இப்போது ஷர்மிக்கு அருகில் வந்து அவள் அசெம்பிளில்  செய்து வைத்த தவறை சரி  செய்தவன் அவளுக்கு பொறுமையாக  சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்க அவளோ தன் வேலையை ஒரு இளிச்ச வாயன் தலையில் கட்டிவிட்ட நிம்மதியில்   கண்ணாடி சுவரை தாண்டி நின்றிருக்கும் கவியிடம் சைகையில் ஏதே ஏதேதோ பேச ஆரம்பித்தாள்.இதை கவனித்த அன்பு   நறுக்கென ஷர்மியின்  தலையில் கொட்டியவன் ” இங்க கவனிக்காம அங்க என்ன பேச்சு” என கேட்டுவிட்டு கவியிடம் ஒற்றை விரல் நீட்டி பத்திரம் காட்டி எச்சரிக்க கவி திரும்பவும் ப்ரியாவுடனே பேச ஆரம்பித்தாள்.

வேலை செய்யற அந்த எட்டு மணிநேரமும் என்னத்தான் பேசுவாங்களோ ? இதுங்கள திருத்தவே முடியாது என எண்ணிக் கொண்டவன்  வலியில் தலையை தேய்த்து விட்டுக் கொண்டிருந்த  ஷர்மியிடம் என்ன புரிஞ்சதா? ஒழுங்கா அசெம்பிள் பண்ணுவியா ? எனக் கேட்டான்.

அவளோ அதற்கு பதில் சொல்லாமல் அண்ணா ரெஸ்ட் ரூம் என்க

ஒரு நாளைக்கு எத்தனை முறை தான் ரெஸ்ரூம் போவ?  போய்த் தொலை போ போ என சொல்லியதை முழுதாய் கேட்க கூட ஷர்மி அங்கில்லை.

ப்ரியாவின் சொந்த ஊர் பெருமைகளை
அவள் பேசியபடியே இருக்க கவி இடையிடையே கேள்விகளோடு அதை கவனித்துக் கொண்டிருந்தாள்.மின்னல் வேகத்தில் அவர்களது கரங்களில் பைவ் ஸ்டார் சாக்லேட்டை திணித்துவிட்டு ரெஜ்ட் ரூமிற்கு சென்றிருந்தாள் ஷர்மி.
அவள் திரும்பி வரும்போது அன்பு அருகில் இல்லாததை உறுதிபடுத்திக் கொண்டு ப்ரியா “ஏதுடி… பைவ் ஸ்டார் சாக்லேட்”  என கேட்க “லட்சுமி அக்கா பையனுக்கு பர்த் டே வாம்.அது ஒரு சாக்லேட் கொடுத்திச்சி.நான்தான்  உங்களுக்கும் சேர்த்து கேட்டு வாங்கி வச்சன்”  என்றவள் என்னம்மா அங்க சத்தம் நீ எந்த லைன் இங்க என்ன பண்ற என்ற செல்வத்தின் குரலில்   திரும்பவும்  தனது இடத்திற்கு ஓடினாள்.

கவியின் கைகளிருந்த சாக்லேட்டை வாங்கிய ப்ரியா நான் பாக்கெட் ல வச்சிருக்கேன்.செல்வம் சார்  சாப்பிடுறத பாத்தா திட்டுவாரு.அவர் போகட்டும்.அப்புறமா சாப்பிடலாம்.என மெதுவாக சொன்னாள்.கவியிடம் எந்த பதிலுமில்லை.முகமும் சற்றே மாறியிருந்தது போல தோன்றியது.

செல்வம் கொஞ்சம் தூரம் தள்ளிப் போனதும் அய்யே….இந்தா உன் சாக்லேட்.இதுக்கெல்லாம் மூஞ்சி தூக்கி வச்சுக்கற.நான் என்ன உன் பங்கையும் சேர்த்து சாப்பிடவா போறன் என உதடு சுளிக்க அப்போதும் கவியின் முகம் மாறவில்லை.

நல்லாத்தான பேசிட்டு இருந்தா திடீர்னு என்ன ஆச்சு இவளுக்கு என்று குழம்பியவள் அதை கவியிடம் கேட்கவும் செய்தாள்.

குழந்தைங்க பர்த்டே னா எல்லாரும் பெருசா கொண்டாடுவாங்க ல ப்ரியா…?

                                        தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here