நீயே என் இதய தேவதை_31_பாரதி

0
430

கவி கேட்ட விதத்தில் நீ என்ன லூசா என்பது போல் பார்க்க

சொல்லுடி….

பின்ன சின்ன பசங்க பர்த் டே னா கொண்டாடாம இருக்க முடியுமா? அதும் பர்ஸ்ட் பர்த் டே லாம் க்ரான்ட்டா கொண்டாடுவாங்க. நீ ஏன் கேட்ட

மாயாக்கு அடுத்த வாரம் பர்த் டே

ஹையோ…. பாப்பூக்கு 1 வயசு ஆகப் போகுது  சொல்லியிருக்க. நான் தான் மறந்துட்டன்.அப்போ நீ அண்ணன கூட்டிட்டு எங்க வீட்டுக்கு வந்து சொல்லிட்டு போ.நான் ,சித்தி ,தங்கச்சி எல்லாரும் வருவோம்.ஜாலியா செலிபரேட் பண்றோம்.என

அவள் சொன்ன அண்ணன என்பதை அன்பரசனை மனதில் கொண்டு  நான் ஏன்  உங்க அண்ணன கூட்டிட்டு  வரணும்….?

அண்ணனா …? எனக்கு அண்ணனே இல்லையே ….? யாரை சொல்ற

நீதானே இப்ப சொன்ன ? என

எரும….எரும…என்று கவியின் கைகளில் கிள்ளிய ப்ரியா என்னடி என்று அவள் பார்க்கவும் நான் அண்ணன் சொன்னது உன் ஹஸ்பண்ட் அ எனறு சிரித்துக் கொண்டே சொல்ல
முகம் வெளுத்தாள் கவி.

அவர் என்கூட இல்லை…. பட்டென்று சொல்லிவிட்டாள்.

ஏன்…ஏன்…ஊருக்கு எங்காச்சும் போய் இருக்கிறாரா ? என கேட்க

இல்லை நானும் அவரும் பிரிஞ்சிட்டோம் என்றதில் பிரியா அதிர்ச்சியாகி ஏதோ சொல்ல வாயெடுக்க என்னை இப்போ எதுவும் கேக்காத ப்ரியா. ஒரு நாள் நானே எல்லாத்தையும் சொல்றேன் என்றுவிட்டு கவித் தன்  வேலையைப் பார்க்கலானாள்.

ப்ரியாவிற்குத் தான் ஒரு மாதிரி ஆகிப் போனது.கவி வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து ப்ரியா தான் அவள் குடும்பம் ஊர் எல்லாவற்றையும் பற்றி கவியிடம்  பேசியிருக்கிறாள்.கவியின் குழந்தையை தவிர அவளிடம்  அவள் குடும்பம் பற்றி எதையும் கேட்டதில்லை.
தான் கேட்டிருக்க வேண்டுமோ ?
இப்போது கவியைப் பார்க்க எதையோ  சொல்லமுடியாத சோகத்தில் இருப்பது போல தோன்றியது. உள்ளுக்குள்ளே எல்லாத் துயர்களையும் போட்டு மறைத்தபடி இத்தனை நாளும் தங்களுடன் சிரித்து பேசி கொண்டிருந்ததை நினைத்துப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது.
அதே சமயம் சம்பள தேதிக்கு முன்னமே மாயாவுக்கு பிறந்தநாள் வருவது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. பாப்பா பிறந்த நாளுக்கு சிறியதாக கூட ஏதாவது வாங்கி தரவேண்டுமே.யாரிடம் கடன் கேட்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

இச்சமயம் இவர்களை கடந்து போன கம்பெனியின் பெண் பாதுகாவலர் (lady security) கவியை முறைத்துவிட்டு அன்புவிடம் ஏதோ முனுமுனுத்துவிட்டு
செல்ல கவி குழம்பி போனாள்.
தான் எந்த தவறுமே செய்யவில்லையே என்று.அன்பு எதாவது சொல்வானா எனப் பார்க்க அவன் கண்டுகொள்ளாது சென்று விட்டான்.
இரவு 10   மணிக்கு  ஷிப்ட்  முடிந்து அனைவரும் வீட்டுக்கு செல்ல தயாராக இருக்க அன்பு  ஹலோ….  மேடம், பேரு வேற மறந்திடுச்சு  ஹான் ….கவிதா இங்க வா என்றான்.

கவி கொஞ்சம் இயல்பாய் இருந்தாலும் அன்பரசனின் குரல் கொஞ்சம் பயமுறுத்திக் கொண்டுதான் இருந்தது.லேடி செக்யூரிட்டி வேறு ஏதோ சொல்லிவிட்டு போனது  மனதில் உறுத்திக்  கொண்டே இருந்தது.ப்ரியாவையும் கையை பிடித்து இழுத்துக் கொண்டு போய் அவனிடம் என்ன சார் ….எனக் கேட்க உடனே ஷர்மியும் அவர்களுடன் ஒட்டிக் கொண்டு வந்துநின்றாள்.

நீலா க்கா திட்டிட்டு போறாங்க..என்று தொடர்ந்து பேச வந்தவனை மறித்த ஷர்மி

அது ஓவரா சீன்  போடும் ண்ணா. .ரொம்ப திமிரு அதுக்கு.சும்மா இருக்கவங்களலாம் குறை சொல்லுது.எல்லாரைப் பத்தியும் மேனேஜர் போட்டுக் குடுக்குது கம்பெனி ஸ்டாப் னா என்ன கொம்பா முளைச்சிருக்கு என அடுக்கிக் கொண்டே போக அவள் காதை பிடித்து திருகியவன் நானும் கம்பெனி ஸ்டாப் தான்.ஆக என்னைப் பத்தியும் பின்னாடி இப்படித்தான் பேசிட்டு திரியுறியா என கேட்க

இல்லைண்ணா இல்லைண்ணா வலிக்குது விடு.நீ யெல்லாம் அப்படி கிடையாது.அதனால உன்னைப் பத்தி பேச மாட்டேன் என

யாரா இருந்தாலும் வயசுக்கு தகுந்த மாதிரி மரியாதை கொடுத்து பேசணும் பாப்பா என கண்டிப்பாக சொல்ல

ம்ம்…சரிண்ணா சரிண்ணா. பை என்று ப்ரியாவையும் கவியையும் இழுத்துக் கொண்டு நகர முயன்றவளை முறைத்தான்.

சரி, என்ன சொல்ல வந்திங்களோ சொல்லுங்க எனக் கூறி கைகட்டி நிற்க
கவியைப் பார்த்து நீ ஏன் இன்னும் யூனிபார்ம் போட்டுட்டு வரல ?உன் காண்ட்ராக்ட் ல என்ன சொ்லறாங்க.என வினவினால் அதற்கும் பதில் ஷர்மியிடம் தான் வந்தது.

நான் நினைச்சன்.அதுக்கு அத விட யாரும் அழகா தெரிஞ்சுரக் கூடாது.பொறாமைல பொங்கிரும்.அது மட்டும் அன்னைக்கு டைட் ஜீன்ஸ் போட்டு வந்து…..

இப்போதான் தான சொன்னன்.அமைதியா இரு

அப்போதுதான் கவியை கவனித்தான். சாதாரண வயலட் நிற சுடிதார் அணிந்திருந்தாள்.வெகு சாதாரண உடை.ஆனால் அவளது நிறத்திற்கும் உடல்வாகிற்கும் பொருந்தி அவளை அழகாய் காட்டியது.ஷர்மியை முறைத்துக் கொண்டாலும் அவள் கூறியது உண்மைப் போலத் தான் தோன்றியது.டேய்…வார்ன் பண்ண சொன்னா அடுத்தவன் பொண்டாட்டியை ரசிச்சிட்டு இருக்க த்தூ… மனக்குரல் ஒலிக்க

சரி.இன்னும் நாலு நாள் தான் டைம்.யூனிபார்ம் போட்டு வர என கண்டிப்போடு சொல்ல எனக்கு கொடுத்தாத் தானே போட்டு வர முடியும் என கவி வெகுளியாய் சொன்னாள்.

உன் கான்ட்ராக்ட் சூப்பர்வைசர கேளு

கேட்டேன்.அடுத்த வாரம் தர்றேன் னு சொல்றாரு.

அந்த மூதேவி அடுத்த வாரமும் இதத்தான் சொல்லும்.

அதுக்கு நான் என்ன பண்ண…?

சண்டை போட்டு கேக்கணும். மேனேஜர் திட்டுறாரு.சூப்பர்வைசர் வெளிய நிக்க வைக்கிறாரு னு எதாச்சும் சொல்லி கேளு.இங்க வெட்டி அரட்டை அடிக்க மட்டும் வாய் வருதுல …?என காட்டமாய் கேட்க இனிமேல் வாதாட முடியாதென சரி என்றுவிட்டு ப்ரியாவுடனும் ஷர்மியும் கீழிறங்கி தன் வேனில் ஏறி பத்ரமா போய்ட்டு வாங்க டீ என்றுவிட்டு தனக்கு முன்பு இருந்த சீட்டில் தலைசாய்த்துக் கொண்டாள்.

ப்ரியாவும் ஷர்மியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மீண்டும் கம்பெனி நோக்கி ஓடினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here