நீயே என் இதய தேவதை_33_பாரதி

0
413

நைட் ஷிப்ட் முடித்த களைப்பில் விடிந்த பிறகும்  அன்பரசன் அசந்து தூங்கியிருக்க மொபைல் போன் அலறியது.அவன் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் அந்த சத்தம் விடுவதாய் இல்லை.”ச்சைக் எவன்டா அவன்  இந்த நேரத்துல” என முனுமுனுத்துவிட்டு ஆன் செய்து காதில் வைத்தான்.


அண்ணா நீங்க சொன்ன கடைக்கு வந்துட்டோம்.நீங்க எங்க இருக்கீங்க எனக் கேட்ட  ப்ரியாவின் குரலில் அவலறியடித்து எழுந்து மணியைப் பார்த்தால் அது 9 மணி என்றது.


போனை ஸ்பீக்கர் மோடில் போட்டுவிட்டு  ஏய்…..நான் உங்களை 10 மணிக்குத்தான அங்க வர சொன்னன். என முகம் கழுவப் போனான்.
இல்லைண்ணா 9 மணிக்குத்தான் வரச் சொன்ன ஞாபகம் 
உன் ஞாபகத்துல தீய வைக்க.நான்  10 மணின்னு தான் சொன்னன்.உன் சித்தி கூட வந்திருக்காங்களா ?


அவங்களுக்கு வேலை இருக்காம் ண்ணா.அன்பு கூடத்தான போறீங்க போய்ட்டு வாங்க னு சொல்லி அனுப்பிட்டாங்க.
வந்து பேசிக்கறேன்.கால் மணி நேரத்துல அங்க வந்திருப்பேன்.அதுவரை பத்திரமா இருங்க என்றுவிட்டு அவசர அவசரமாய் கிளம்பி பைக்கில் விரைந்தான்.


ப்ரியா,ஷர்மியை கண்டவுடன் தனியா வர்ரீங்கனு முன்னாடியே சொல்லமாட்டிங்களா ? .ஆர்வக் கோளாறுங்களா?  ஏன் இப்படி படுத்துறீங்க? சரி வாங்க உள்ளே போலாம் என அழைத்துச் சென்றான் 


ப்ரியாவிடம் சுபிக்கு தேவையான ட்ரெஸ் பற்றி சொன்னான்.அந்த பெரிய கடையில் மாறுவேடப் போட்டிகளுக்கான ட்ரெஸ் என்று தனி செக்ஷனே இருந்தது. ஆனாலும் அவர்கள் தேர்ந்தெடுத்த துணியின் தரம், டிசைன் பிடித்திருந்தால் அளவு சரியாக அமையவில்லை.அளவு சரியாக இருந்தால்  நினைத்த கலர் இல்லை.அன்புவுக்கு ஒரு மாதிரி ஆகிப் போனது.வெகுநாள் கழித்து சுபி ஒன்றைக் கேட்க அது சரியாக அமையாமல் போகிறதே என்று.
இப்படியாக நேரம் தள்ளிப்போக கடைசியாக பிரியா ஒரு ட்ரெஸை தேர்ந்தெடுத்து அன்புவிடம் காட்டினாள்.பார்க்க அழகாக நன்றாக இருந்தது.அளவு மட்டும் கொஞ்சம் பெரிதாக இருக்கவும் லூசா இருக்குமோ  ? எனக் கேட்க ஆல்டர் பண்ணிக்கலாம் ண்ணா என் தங்கச்சிக்கும் போன வருசம் இப்படி எடு்த்துதான் பிடிச்சுக் கொடுத்தோம்.


சரி நான் நாளைக்கு பாப்பா அளவு  ட்ரெஸ் எடுத்துட்டு வரன்.இல்ல பாப்பாவயே கூட்டிட்டு வரன்.உங்க சித்தியை ஆல்டர் பண்ணித் தர சொல்றியா ?வெள்ளிக்கிழமை பாப்பா ஸ்கூல் போட்டு போகணும்.ப்ரியா சித்தியும் டைலர் என்பதால் அவன் இப்படி ஒரு கோரிக்கை வைக்க 
கண்டிப்பா பண்ணித் தர சொல்றன் என்றாள்.


அடுத்ததாய் குழந்தைகளுக்கான உடை பிரிவில் ஒரு வயசு குழ்ந்தைக்கான ட்ரெஸ் காட்டுங்க என்று அங்கிருந்த பணியாளரிடம் சொல்லிவிட்டு ப்ரியாவையும் ஷர்மியையும் பிடித்த மாதிரி  தேர்ந்தெடுக்க சொல்லிவிட்டு ஓரமாய் நின்று மொபைலை பார்த்துக்கொண்டிருந்தான்.


ரொம்ப நேரம் ஆகிவிட்டது போல் தோன்றவும் ஒரு ட்ரெஸ் செலக்ட் பண்ண இவ்வளவு நேரமா? என்றபடி அவர்களை நெருங்கி என்ன செய்கிறார்கள் என்றுப் பார்க்க பிரியா தேர்ந்தெடுத்த சிவப்பு வண்ண ட்ரெஸை ஷர்மி ”  நல்லாவேயில்லை…. ஆடி மாசம் கூழ் ஊத்துற மாதிரி மஞ்சளும் சிவப்புமா …..” என நிராகரிக்க ப்ரியா அவளை முறைத்தாள்.


பின் ஷர்மி இது நல்லாருக்குல என்று கருப்பு வண்ணத்தில் அழகாக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட உடையை காண்பிக்க ” உன் மூஞ்சி போலவே இருக்கு.பர்த் டேக்கு யார்னா கருப்பு கலர் ட்ரெஸ் ப்ரசண்ட் பண்ணுவாங்களா” என்று பிரியா கிண்டல் செய்ததில் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்க அங்கு வேலை செய்யும் பெண்மனி தான் இவர்களிடம் திண்டாடிப் போனார்.


செலக்ட் பண்ணியாச்சா இல்லையா என்று அன்பு கேட்க இதோ பாத்துட்டே இருக்கோம் ண்ணா என்று இருவரும் கோரஸ் பாட உங்கள விட்டா இன்னைக்கு முழுக்க பாத்துட்டே இருப்பீங்க தள்ளுங்க நானே செலக்ட் பன்றேன் என்று விட்டு அங்கிருந்த உடைகளை ஒரு  பார்வை வேற டிசைன்ல இல்லையா என்றான்.
கொஞ்சம் விலை அதிகமாகும் சார் பராவாயில்லையா சார் என அந்த பெண்மனி  கேட்க அது பராவாயில்லை பர்ஸ்ட் காட்டுங்க என உடை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த அவனது கவனத்தை மொத்தமாய் ஈர்த்தது அந்த வயலட் நிற ப்ராக்.அளவான வேலைப்பாடுகளுடன் கண்ணை கவரும் படி இருந்தது. அதை எடுத்து ப்ரியாவிடம் ஷர்மியிடம் காட்ட அவர்களுக்கும் பிடித்திருமுடிந்து பின்பு காஸ்மெட்டிக்ஸ் பிரிவில் ஏதாவது வாங்கிக் கொள்ள சொல்லி அனுப்பி விட்டு அங்கு சிறிது நேரம் காத்திருந்தான்.எல்லாம் முடிந்து பில்லை வாங்கி பணம் கொடுக்கப் போனான்.எல்லாமே fixed price னா அந்த கடையில் ஷர்மி பேரம் பேசுகிறேன் என்று கலாட்டா செய்ய ப்ரியாவும் அன்புவும் அவளை இழுத்துக் கொண்டுதான்  வர வேண்டியாதாய் போயிற்று.


வெளியே வந்ததும் செல்போனின் டைம்  பார்த்தவன் கிட்டதட்ட மணி 1 ஆகியிருக்க என் தூக்கம் போச்சு இன்னைக்கு.என சொல்ல 
நம்ம ஆபிஸ் ண்ணா.நீ அங்க வந்து தூங்கு.யார் என்ன கேட்கப் போறாங்க.அப்படியே எதாச்சும் கேட்டாலும் சும்மா விட்ருவோமா? என ஷர்மி டையலாக் பேசினாள்.


அதை கேட்டு காதுகளைப் பொத்திக் கொண்ட அன்பு  குட்டிச்சாத்தானே ப்ளீஸ் கொஞ்ச நேரம் பேசாமத்தான்  இரேன் என கெஞ்சினான்.


ப்ரியா ட்ரெஸ் உன்கிட்டயே இருக்கட்டும் நாளைக்கு பாப்பாவ கூட்டிட்டு வந்து வாங்கிக்கிறேன் என்று இரண்டு பேருக்கும் கொஞ்சம் ஸ்னாக்ஸ் வாங்கி கொடுத்து பஸ் ஏற்றிவிட்டு தன் வீட்டுக்கு வந்தான்.

ReplyForward

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here