நீயே என் இதய தேவதை_35_பாரதி

0
620

அடு்த்தநாளும் அன்புவுக்கு நைட் ஷிப்ட் தான்.சுபி பள்ளியில் அரைநாள் விடுப்பு கேட்டு அங்கிருந்து ப்ரியா வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

முன்னதாக இருந்த அறையில் தையல் இயந்திரத்தின் சத்தம் கேட்க அக்கா என குரல் கொடுத்தான்.

அன்பரசனா வாப்பா….உள்ளப் போய் உட்காரு.ப்ரியா நீ வருவன் னு  சொன்னா என்று எழுந்து வந்தவர் சமையலைக்குப் போனார்.

அக்கா க்கா….என்ன பண்றீங்க.எதுவும் வேணாம் என சொல்லசொல்லக் கேட்காது அவனுக்கு காபி கொடுத்துவிட்டு பாப்பாவை அவரது அறைக்கு கூட்டி போய் அளவெடுத்து அதை குறித்துக் கொண்டார்.பின்னர் அவளுக்கு ஸ்னாக்ஸை கொடுத்து உட்கார வைத்து விட்டு ப்ரியா…இங்கப் பாரு…யாரு வந்திருக்கா னு என்று உள்ளே குரல் கொடுத்துவிட்டு அவர் வேலையைப் பாராக்க ஆரம்பித்தார்.

பிரியா வந்து அன்புவைப் பார்த்ததும்  வாங்க அண்ணா…..என்றுவிட்டு சுபியிடம் விளையாடிக் கொண்டிருந்தாள்.

பாப்பா இங்க வாம்மா…  ட்ரெஸை போட்டு பாரு என்றதும் சுபி அந்த அறைக்கு சென்றுவிட,

அன்பு பிரியாவிடம் சாதாரணமாக பேச்சு கொடுத்து விட்டு கவியோட ஹஸ்பெண்ட் என்ன பண்றாரு? எனவும்

சாதாரணமாக யாரைப் பற்றி விசாரிக்காத அண்ணன் கவி குடும்பம் பற்றி ஆர்வமாக கேட்டதில் அவனை குறுகுறுவென பார்த்து வைக்க

ஹே….லூசு எதுக்கு அப்படி பாக்குற.நேற்று என்று ஆரம்பித்து கவி வீட்டுக்கு செல்லும்போது என்ன நடந்தது என்பதை சொன்னான்.

அழுதாளா…?

அப்படித்தான் இருந்துச்சு.

ஓஓஓ…அவ அவங்க வீட்டுக்காரரோட இல்லை தனியாத் தான் இருக்கா மேன்சன் ரூம்ல.

ஏன் என்னாச்சு? ஏன் தனியா இருக்கா? குழந்தை வேற இருக்கு சொன்ன

அவங்க பிரிஞ்சிட்டாங்களாம்.

டிவோர்ஸ் ஆகிடுச்சா….

தோளை குலுக்கிவிட்டு அதெல்லாம் எனக்குத் தெரியாது.அவ இப்படித்தான் சொன்னா.

நீ அதுக்கு மேல ஏதும் கேட்காம இருந்துருப்பியா?

நான் கேட்டதுக்கு இன்னொரு நாள் சொல்றன் சொன்னா.அவளை கஷ்டப்படுத்துற மாதிரி இருக்கவே அப்புறம் நாங்க இத பத்தி பேசிக்கவேயில்லை.என்று சொ்லிக்கொண்டிருக்க சுபி குட்டி ப்ரியா க்கா இங்க வந்து பாரேன் என்று குரல் கொடுத்தது.இதோ வரேண்டா என்று அவளும் அந்த அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

இந்த பாழாய்ப் போன மனது எதற்கு ஒரு பெண்ணி பற்றி தெரிந்து கொள்ள, அதுவும் மணமான பெண்ணைப் பற்றி அறிந்து கொள்ள இத்தனை ஆர்வம் காட்டித் தொலைக்கிறது என்று தன்னையே வைதபடி அமர்ந்திருந்தான்.

கவி வேனிலிருந்து இறங்க அதே நேரம் ப்ரியா அன்புவுடன் பைக்கில் வந்து இறங்கினாள்.அதை கவனித்த கவி அவளிடம் சென்று ஷர்மி லீவா? எனக் கேட்க வருவா வருவா பஸ்ல வர்ரேன் சொல்லியிருக்கா. நான் அன்பண்ணா வீட்டுக்கு வரவும் அவர்கூட வந்துட்டன்.
வெயிட் பண்ணுவோம் என அங்கிருந்த காம்பவுண்டிலே சாய்ந்து நிற்க கவியும் அவளருகிலே நின்றுவிட்டாள்.

சந்தியாக்கா வருவாங்களா ண்ணா என ப்ரியா அன்பரசனை கேட்க

அவளுக்காக தான் வெயிட் பண்றேன் என்றவன் கவனமாக கவியைப் பாரப்பதை தவிர்த்தான்.ஆனால் கவி அப்போதுதான் பார்த்தாள் அவன் பைக்கின் முன்புறம் சமத்தாக அமரந்து வாயிலே வண்டி ஓட்டிக் கொண்டிருந்த குழந்தையை.

கவியிடம் கண்ணால் சைகை  காண்பித்து யார் இந்த குட்டிப் பாப்பா என அண்ணனோட தங்கச்சி குழந்தை என என்று மெதுவாக சொன்னாள்.

அதே நேரம் சுபியும் ப்ரியா க்கா யாரு இவங்க ? என்று கவியை கைகாட்டி கேட்க  ப்ரியா அவள் தோளை அணைத்து என் ப்ரெண்ட் மா என்று பெருமையாக சொன்னாள்.

எனக்கும் ப்ரெண்ட் இருக்கு என போட்டி போட

அவளும் விடாது உன் ப்ரென்ட்லாம் குட்டியா குட்டியா இருக்கும்.என் ப்ரென்ட் பாத்தியா எவ்ளோ ஹைட் டா இருக்கா என்றாள்.

மாமா ப்ரியாக்கா ப்ரென்ட்  மட்டும் ஹைட்டா இருக்காங்க.எனக்கு ஹைட்டான ப்ரென்ட் வேணும் என

உதடு பிதுக்கி அழத் தொடங்கிய குழந்தை தன் மாமாவிடம் புகார் சொல்ல ஆயத்தமானது.

மாமா உனக்கு ப்ரென்ட் தான

ஆமா

மாமா அவங்கள விட ஹைட்டா இருக்கன்ல என சமாளிக்கப் பார்க்க

குழந்தையோ புத்திசாலித் தனமாக ஆனா நீ பாய் ல.. எனக்கு கேர்ள் ல தான் ப்ரென்ட் வேணும் என்று கேட்க  அன்பு என்ன சொல்வது எனத் தெரியாமல் முழிக்க

அழுகிற குழந்தையை சமாதானப்படுத்த தானே முன்வந்த கவி ப்ரெண்ட்ஸ் என்று சுபியிடம் கைநீட்டி குழந்தை அவளது கரங்களை பற்றி குலுக்கிவிட்டு ப்ரென்ட்ஸ்  என சிரித்தது.

பார்த்தாயா எப்படி சமாளித்தேன்? என்று கவி அன்பரசனைப் பார்க்க அவனுக்கு சங்கோஜமாய் இருந்தது.இவளிடம் அலைபாய்கிற மனதை கட்டுப்படுத்த தான் தேவையில்லாது இவளைப் பார்ப்பதையே தவிர்க்க முடிவெடுத்திருந்தான்.ஆனால் கவியோ முன்பை விட இப்போதுதான் அன்புவிடம் சகஜமாக பழக ஆரம்பிக்கிறாள்.என்ன சொல்வது…?

அன்பு சுபியிடம் குழந்தையோடு குழந்தை போல் விளையாடுவதை பார்க்க பார்க்க ஆச்சர்யமாக இருந்தது கவிதாவுக்கு. கம்பெனியில் எப்போதும் கண்டிப்போடு வளைய வரும் அவனின் இந்த முகம் புதிது அவளுக்கு.இப்படி இருக்கும்போது அவன் இன்னும் வசீகரமாக இருப்பதுப் போல தோன்றியது.மேலும் அழையா விருந்தாளியாக தன்னுடைய அண்ணன் நினைவு வர பிறந்தது முதல் தன் குழந்தையை பார்க்க பிரியப்படாத அண்ணனின் மீது கோபத்தை வரவைத்துக் கொண்டாள்.

தாமதமாக வந்த ஷர்மியை  இழுத்துக்கொண்டு கம்பெனியில் நுழைந்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here