நீயே என் இதய தேவதை_36_பாரதி

0
561

வீட்டிற்க்குச் சென்று அலுவலகத்திற்கான யூனிபார்ம் மாற்றிவிட்டு மறுபடி கம்பெனிக்கு வந்துவிட்டான்.ப்ரியாவும் ஷர்மியும் அவனுக்குப்பிறகு தான் வந்து சேர்ந்தார்கள்.

இரண்டு மணிநேரம் எல்லாரும் மும்முரமாக வேலைபார்த்துக் கொண்டிருக்க திடிரென மேனேஜர் எல்லாரையும் அழைத்து மீட்டிங் என்று சொல்லி ஓரிடத்தில் கூட்டம் கூட்டி ஜெனரேட்டர் பழுதாகிவிட்டதால் வேலையை இன்று தொடர முடியாது என்று விளக்கிவிட்டு எல்லாரும் .இது கம்பெனி லீவுதான்றதால இன்னைக்கு சம்பளம் கட் பண்ண மாட்டாங்க.எல்லாரும் பத்திரமா வீட்டிற்கு போங்க” என்று சொல்லி முடிக்கவில்லை ப்ரியாவும் ஷர்மியும் ஓஓஓஓஓ என்று சந்தோச கூச்சல் போடமேனேஜர் அன்புவை பார்த்தார். அன்பு அவர்களை முறைத்து வைத்தான்.கூச்சல் நின்றது.

உங்க கான்ட்ராக்ட் சூப்பர்வைசர்ஸ் கிட்ட இன்பார்ம் பன்னிட்டேன். வேன் அரேன்ச் பண்ணித் தருவாங்க அங்க இங்க சுத்தாம வீட்டிற்கு போங்க.
அந்த தளத்தின் பணியாளர்கள் பெரும்பாலும் 23 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் இதை சொல்ல வேண்டியதாயிற்று.

ஆனால் சொல்வதை எல்லாம் கேட்டுவிட முடியுமா? என்ன?

கவி ப்ரியா ஷர்மி மூன்று பேரும் கீழே வேனுக்காக காத்திருக்க கான்ட்ராக் சூப்பரவைசர் பாலா அங்கு வந்தான்.

பாப்பா நம்ம   வேன் வர லேட் ஆகுமாம்.நீ பக்கதுல தான இருக்க நடந்து போய்டுவியா ? இல்லை வெயிட் பண்ணி 6 மணிக்கு  போறீயா? என கவியிடம் கேட்க

இல்லைண்ணா.நின் நடந்து போய்டுவன்.கம்பெனியில யூனிபார்ம் கேட்டு திட்றாங்க.எப்போ தான தருவீங்க?

அடுத்த வாரம் தரேன் சொன்னன் ல பாப்பா ?

போன வாரமும் இதத் தான சொன்னீங்க.

வார வாரம் இதையேத் தான் சொல்வான் அவன் என்று சொல்லியபடி அன்பு இவர்களை நோக்கி வர

இவன் கண்ணில் படாமல் மறைந்து மறைந்து கம்பெனிக்கு வந்து சென்ற பாலா இன்று வசமாக மாட்டிக் கொண்டான்.

டேய்….புதுசா சேர்ந்த ஒருத்தர்க்கு கூட யூனிபார்ம் தரலை. மேனஜர் ல இருந்து செக்யூரிட்டி வரை கழுவி கழுவி ஊத்துறானுங்க அந்த பசங்கள.

அது இல்லைண்ணா பைசா கொஞ்சம் டிமான்ட் ஆ இருக்கு என இழுக்க

அன்பு கோவம் அதிகமானது.ஏனெனில் பாலா கான்ட்ராக்ட் பாலாவுடைய  அப்பாவுடையது தான்.

கம்பெனி குடுக்குற காச அப்படி என்ன தாண்டா பண்ணுவீங்க அப்பனும் பையனும்.யூனிபார்ம்க்கு சேர்த்து தான
காசு தர்றோம் என வறுத்து எடுக்க

சரிண்ணா சரிண்ணா கண்டிப்பா இந்த வாரம் கண்டிப்பா  குடுத்துர்ரேன் என சொல்லவும் அன்பு அமைதியாகிப போனான்.

அதற்குள் பீ்ச் போலாம் வாண்ணா என இளைஞர்கள் பட்டாளம் அன்புவையும் பாலாவையும் அழைக்க மறுக்க தோன்றவில்லை.எப்போதாவது கிடைக்கிற வாய்ப்பில் கொஞ்சம் ஊர் சுத்த யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும்.

சரி வர்ரேன்டா. பக்கத்துல தான ரூம் இருக்குனஎல்லோரும் போய் யூனிபார்மை  மாத்திட்டு வாங்க.அப்புறம் எதுனா ப்ரசசினை வரப் போகுது.நானும் வீட்டுக்கு போய்ட்டு வரேன் என பேசிக் கொண்டு நின்றிருந்தான்.

கவி ப்ரியாவிடம் ஷர்மியிடமும்  விடைபெற்று வீட்டிற்கு நடையை கட்டினாள்.பத்து நிமிடம் நடந்தால் வீடு வரப்போகுது.இதற்கு போய் இரண்டு மணிநேரம் வேனுக்கு காத்திருக்க வேண்டுமா ? என்று நினைத்து தான் நடந்தாள்.ஆனால் போகும் வழியில் அவள் கண்ட காட்சியில் அப்படியே நின்றுவிட்டாள்.காத்திருந்து வேனிற்கே வந்திருக்கலாமோ என்று தோன்றியது.

.பாதி வழியில் டாஸ்மார்க் முன்பு சிலர் குடித்துவிட்டு  அவர்களுக்குள் சாலையில் சண்டை போட்டு கொண்டிருந்தனர். அது மெயின் ரோட்டிலிருந்து குறுக்கே பிரிந்த தெரு.அதில்  நடுவழியை  வழியை மறித்தப்படி அவர்கள் கலாட்டா செய்து கொண்டிருக்க அதைப் பார்த்தவள் அதிரந்து    தெரு முனையிலே நின்றுவிட்டாள்   .அவர்களில் யாரும் இவளை கவனிக்க கூட இல்லை.இருந்து  அவர்களை கடந்து செல்ல பயமாக இருக்க அங்கேயே சண்டை எப்போது முடியுமோ ? என்று அங்கேயே  நின்று கொண்டிருந்தாள்.அருகில் வேறு எந்தப் பெண்ணும் இல்லை.அது இன்னும் பயமாக இருந்தது.

அச்சமயம் கவிதா என்றொரு பழகிய குரல் கேட்க திரும்பி பார்க்க அங்கே அன்பு பைக்கிலிருந்த படியே அவளை குழப்பமாக பார்த்தான்.  முன்பே வீட்டுக்கு கிளம்பியவள்.அன்பு வீட்டுக்கு போய்  உடை மாற்றி திரும்பவும் கம்பெனி செல்லும் வரை அந்த இடத்தில் நின்றுக கொண்டிருந்தாள்.

யாருமில்லாது தனித்து நிற்கும் நேரம் அன்பரசனைப் பார்த்ததில் கொஞ்சம் ஆசுவாசமாக உணர்ந்தாள்.

இங்க ஏன் நின்னிட்டு இருக்க. வீட்டுக்கு போகலை என்று அவன்  கேட்க அங்கிருந்தவர்களை கை காட்டினாள்.

ஓஓஓ….என புரிந்து கொண்டவன் சரி வா  வீடு எங்க இருக்கு சொல்லு, நான் ட்ராப் பண்றேன் என்றான்.

அவனுக்கு இது சாதாரண விஷயம் தான்.ஆனால் அவளுக்கு அப்படி இல்லையே.பிறந்ததிலிருந்து கிராமத்தில் வளர்ந்தவள் வேறொரு ஆடவனுடன் பைக்கில் செல்ல தயங்கினாள்.ஆதலால் “இல்லை நீங்க கெளம்புங்க சார். நான் போய்க்கிறேன் என்று சொல்ல அவள் என்ன நினைக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன் பைக்கை ஓரமாக நிறுத்தி லாக் செய்து விட்டு வா என்றபடி அவளுடன் இணைந்து நடக்க ஆரம்பித்தான்.

அந்த குடிகாரர்கள் ஆள் வருவதை பார்த்தவுடன் எதுவும் சொல்லாது வழி விட்டனர்.அவர்கள் கடந்த பின்பு மீண்டும் சண்டை போட துவங்கினர்.

இங்க எந்த இடத்துல இருக்கு உன் வீடு ?
என்று கேட்க

அவள் அவளது மேன்சன் பெயரை சொன்னாள்.

அவனுக்கு குழப்பம்.மேன்சன் ரூமில் வேலைக்காக வந்தவர்கள் தனியாகத் தான் தங்குவார்கள்.குடும்பத்திற்கு அந்த இடம் போதாது.

உன் ஹஸ்பெண்ட் என்ன பண்றாரு….?

பதில் ஏதுமில்லை அவளிடம்.

தேங்க்ஸ் சார்.நான் வரேன் எனறுவிட்டு வேகமாக வீட்டுக்கு விரைந்தாள்.

அவளது குரல் உடைந்தாற் போல தோன்றியது.அப்படி அழுகிறாளோ ?  அப்படி என்ன தவறாக கேட்டுவிட்டேன் என்று அன்பு புரியாமல் நிற்க போன் ஒலித்தது.

சீக்கிரம் வாண்ணா…  டைம் ஆச்சு என்று பையன்கள் அவசரப்படுத்த வரேன் டா என்று சொல்லி அணைத்துவிட்டு  பைக்கில் விரைந்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here